Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 47 من كظم غيظا

 

عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ عَلَى رُءُوسِ الخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَيِّ الحُورِ شَاءَ .رواه الإمام أحمد في "المسند" (24 /

ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த சக்தியிருந்தும் அதை அவர் அடக்கினால் மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முந்நிலையில் அவரை அல்லாஹ் அழைப்பான். இறுதியாக அவர் விரும்பிய ஹூருல்ஈன் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவருக்கு அல்லாஹ் சலுகை வழங்குவான். (திர்மிதி ; 2021)

கோபம் என்பது மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தன்மைகளில் ஒன்று. எல்லோருக்கும் அந்த கோபம் என்பது ஏற்படும். இதில் யாரும் விதிவிலக்கல்ல. உலகத்திலே தீர்க்கதரிசிகளாக அனுப்பப்பட்ட நபிமார்களும் கோபப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நபி ஸல் அவர்களும் கோபப்பட்டிருக்கிறார்கள். நபித்தோழர்கள் கோபப்பட்டிருக்கிறார்கள். எனவே கோபம் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் அவ்வாறு கோபம் வருகிற போது அதன் மூலம் எதிர்வினை ஆற்றி விடாமல் அந்த நேரத்திலே பொறுமையோடு அதை அடக்கிக் கொள்பவர் தான் சிறந்தவர்களாக இருக்க முடியும்.

والكاظمين الغيظ والعافين عن الناس

குர்ஆனில் அல்லாஹுத்தஆலா இறையச்சம் உள்ளவர்களுக்கு இந்த சுவனம் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லி விட்டு இறையச்சம் உள்ளவர்கள் யார் என்பதை குறிப்பிடும் போது கோபத்தை அவர்கள் கடித்து விழுங்குவார்கள். மக்களை மன்னித்து விடுவார்கள் என்று குறிப்பிடுகிறான். எனவே கோபம் வருவது தவறல்ல. அவ்வாறு வருகின்ற பொழுது அதை கட்டுப்படுத்த வேண்டும்.

கோபத்தை அடக்குபவர்கள் மூன்று வகையாக இருக்கிறார்கள். ஒன்று அவர்களுக்கு கோபம் வரும். அதை அடக்கிக் கொள்வார்கள். வெளிப்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அவரிடத்தில் பலவீனம் இருக்கும். கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். எனவே அடக்கிக் கொள்வார்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து அவர்கள் அடக்கிக் கொள்வார்கள். இரண்டாவது, எதிரே இருப்பவர்களின் கண்ணியத்திற்காக கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். உதாரணமாக தன்னை பெற்றெடுத்த அன்னையிடத்தில் கோபப்படுவார்கள். தந்தையிடத்தில் கோபப்படுவார்கள். தனக்கு கற்றுக் கொடுக்கின்றன ஆசிரியரிடத்தில் கோபப்படுவார்கள். ஆனால் அவர்களின் கண்ணியத்தைக் கருதி அதை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். மூன்றாவது, அவர்கள் கோபப்படுவார்கள். அதை வெளிப்படுத்துவதற்கு தகுதியும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு இருக்கும். இருந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொள்வார்கள். இந்த மூன்றாவது வகையினரைத் தான் இஸ்லாம் பாராட்டுகிறது. அவர்களை குறித்து தான் இந்த ஹதீஸில் நபியவர்கள் மறுமையில் கௌரவிக்கப் படுவார்கள் என்று சொல்கிறார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنٍ، فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الْحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ، وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَجْلِسِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ وَمُشاوَرَتِهِ كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا، فَقَالَ عُيَيْنَةُ لِابْنِ أَخِيهِ: يَا بْنَ أَخِي، لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الْأَمِيرِ، فَاسْتَأْذِنْ لِي عَلَيهِ، فاسْتَأْذَنَ، فَأَذِنَ لَهُ عُمَرُ، فَلَمَّا دَخَلَ قَالَ: هِيه يَا بْنَ الخَطَّابِ، فَوَاللهِ مَا تُعْطِينَا الْجَزْلَ، وَلَا تَحْكُمُ فِينَا بالْعَدْلِ، فَغَضِبَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى هَمَّ أَنْ يُوقِعَ بِهِ، فَقَالَ لَهُ الْحُرُّ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ اللهَ تَعَالَى قَالَ لِنَبيِّهِ صَلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ﴿ خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ ﴾ [الأعراف: 198]، وَإِنَّ هَذَا مِنَ الْجَاهِلِينَ، وَاللهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلَاهَا، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللهِ تَعَالَى

உயைனா பின் மிஹ்ஸன் என்பவர் மதினா வந்து தன் சகோதரர் மகனான ஹுர் பின் கைஸ் என்பவரிடம் தங்கினார். இவர் உமர் ரலி அவர்கள் ஆலோசனை பெறும் நபர்களில் ஒருவர். உமர் ரலி அவர்களின் அவையிலும் அவர்களது ஆலோசனைக் குழுவிலும் இளைஞர்களாக இருந்தாலும் முதியவர்களாக இருந்தாலும் குர்ஆனை அறிந்தவர்கள் தான் அங்கே இருப்பார்கள். தன் சகோதரர் மகனிடம் சகோதரன் மகனே உமர் ரலி அவர்களிடம் உனக்கு அறிமுகம் உள்ளது. எனவே அவரை சந்திக்க அவர்களிடம் எனக்கு அனுமதி வாங்கி தா என்று கேட்டார். உடனே அவர் அனுமதி கேட்டார். உமர் ரலி அவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அங்கே சென்றதும் கத்தாபின் மகனே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களுக்கு நீங்கள் அதிகமாக எதுவும் தர வில்லை. எங்களிடம் நீதமாக தீர்ப்பு அளிக்கவும் இல்லை என்று கூறினார். அவரை அடிக்க எண்ணுமளவுக்கு உமர் ரலி அவர்கள் கடும் கோபமடைந்தார்கள். உடனே ஹுர் அவர்கள் மூமின்களின் தலைவரே நிச்சயமாக அல்லாஹ் தன் நபிக்குப் பின் வருமாறு கூறியுள்ளான் ;நீங்கள் மன்னிப்பைக் கடைபிடியுங்கள். நல்லதை ஏவுங்கள். அறிவில்லாதவர்களை புறக்கணித்து விடுங்கள் என்ற வசனத்தை கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனத்தைக் கேட்டவுடன் உமர் ரலி அவர்கள் அதை மீறவில்லை. உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் வேதம் முன் கட்டுப்படுபவராக இருந்தார்கள். (புகாரி ; 4642)

No comments:

Post a Comment