Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 52 الا تستعملني كما استعملت فلانا

 

فعن أبي يحيى أسيد بن حضير أن رجلاً من الأنصارِ جاء رسولَ اللهِ صلى الله عليه وسلَّم فقال: ألا تستعملني كما استعملتَ فلانًا؟ قال إنكم ستلقون بعدي أثَرَةً فاصبروا، حتى تلقوني على الحوضِ. متفق عليه

அன்சாரிகளில் ஒருவர் நபி ஸல் அவர்களிடத்திலே வந்து இந்த மனிதருக்கு நீங்கள் பொறுப்பைக் கொடுத்தது போன்று எனக்கும் நீங்கள் தரக்கூடாதா என்று கேட்டார். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நீங்கள் எனக்கு பின்னால் உரிமை மீறலை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் என்னை சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7057)

நபி ஸல் அவர்கள் மதீனாவிற்கு சென்ற ஆரம்ப நேரத்தில் இஸ்லாம் மதினாவில் மட்டும் இருந்தது. எனவே நபியவர்கள் மட்டுமே சமூக மக்களுக்கான தலைவராக இருந்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல இஸ்லாம் பக்கத்து ஊரிலும் பக்கத்து நாடுகளிலும் பக்கத்து மாகாணங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்தது. எனவே அவ்வாறு இஸ்லாம் பரந்து விரிந்த அந்த நாடுகளிலும் அந்த மக்களுக்கு ஆட்சி செய்வதற்கும் அவர்களது குறை நிறைகளை கவனிப்பதற்கும் அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கும் அவர்களை வழி நடத்திச் செல்வதற்கும் தலைவர்களும் பொறுப்பாளர்களும் தேவைப்பட்டார்கள். எனவே நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருவரை பொறுப்பாளராக, ஆட்சியாளராக, ஆளுநராக தேர்வு செய்து அனுப்பினார்கள். அந்த வகையில் இந்த நபித்தோழர் எனக்கும் அவ்வாறு ஒரு பொறுப்பை தரக்கூடாதா என்று கேட்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை அல்லது ஒரு பொறுப்பை ஆசைப்படுவதோ தேடுவதோ கூடுமா என்ற ஒரு கேள்வி இங்கே முன்வைக்கப்படுகிறது.பொதுவாக ஆட்சி அதிகாரம் என்பது அது மக்களுடைய உரிமைகள் சம்பந்தப்பட்டது. அது இறைவனுடைய அமானிதம். அதை சரியான முறையில் பேண வேண்டும். இல்லை என்றால் இறைவனிடத்திலே பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே தான் நபியவர்கள் நீங்கள் ஆட்சி அதிகாரத்தை ஆசைப்படுகிறீர்கள் அது மறுமை நாளில் கைசேதம் ஆகிவிடும் என்றார்கள். தன்னிடத்தில் ஆட்சிப் பொறுப்பை ஒருவர் கேட்ட போது யார் இதை தேடுகிறாரோ அவருக்கு நான் இந்த பொறுப்பை தர மாட்டேன் என்று கூறி விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தை அல்லது பொறுப்பை தேடுவது, ஆசைப்படுவது கூடாது என்கின்ற கருத்து இது போன்ற ஹதீஸ்கள் வழியாக நமக்கு கிடைக்கிறது.

ஆனால் அவ்வாறு தேடுவதற்கான அனுமதியும் சில ஹதீஸ்கள் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. யூசுப் அலை அவர்கள்

اجعلني علي خزائن الارض

பூமியினுடைய பொருளாதாரத்தின் மீது என்னை அதிகாரியாக ஆக்குங்கள். நான் பாதுகாப்பாளனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறேன் என்று கூறினார்கள்.

قال عثمان بن ابي العاص الثقفي لرسول الله صلي الله عليه و سلم اجعلني امام قومي قال انت امامهم

உஸ்மான் பின் அபுல் ஆஸ் ரலி அவர்கள் என்னை என் சமூகத்தினுடைய தலைவராக ஆக்குங்கள் என்று நபியிடத்தில் கேட்ட பொழுது நீ உன் சமூகத்திற்கு தலைவராக இருந்து கொள் என்று கூறினார்கள்.

இதுபோன்ற ஹதீஸ்கள் ஆட்சி அதிகாரத்தை தேடுவது கூடும் என்ற கருத்தைத் தருகின்றது.

 

எனவே இதற்கு விளக்கம் தரும் மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள் ;

إذا رأى المصلحة للمسلمين والخير للمسلمين في أن يطلبها؛ لأنه يرى نفسه أهلًا لها، ويرى أن الأمور ضائعة، وأن الذين فيها ليسوا أهلًا لها، أو أنها متروكة هذه المسألة أو هذه الوظيفة فلا بأس أن يسألها للمصلحة،

ஒருவர், தான் அந்த பொறுப்புக்கு தகுதியானவராக இருந்து வேறு எவரும் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தகுதி இல்லாதவர்களாக இருந்தால், மேலும் இவரும் அந்த பொறுப்புக்கு வர வில்லையென்றால் அந்த பொறுப்பு வீணடிக்கப்பட்டு விடும். மட்டுமல்ல அவர் அந்த பொறுப்புக்கு வருவது இஸ்லாமியர்களுக்கு  நலவைத் தரும் என்று இருந்தால் அந்த நேரத்தில் அந்த பொறுப்பை கேட்டுப் பெறுவது குற்றமல்ல என்று கூறுகிறார்கள்.

இருந்தாலும் ஒரு பொறுப்பை கேட்டுப் பெறுவதை விட கேட்காமல் ஒருவருக்கு அது கிடைத்தால் அதில் தான் நன்மை அதிகம் ஏனென்றால்,

يا عبدَ الرحمن بنَ سمرة، لا تسأل الإمارة؛ فإنكَ إنْ أُوتِيتَهَا عن مسألة وُكِلْتَ إليها، وإنْ أوتيتَها من غير مسألة أُعِنْتَ عليها

 

அப்துர் ரஹ்மானே ஆட்சிப் பொறுப்பை நீ கேட்காதே. நிச்சயமாக நீ கேட்டு அது உனக்கு தரப்பட்டால் அதன் பக்கம் நீ சாட்டப்பட்டு விடுவாய். கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால் அதன் மீது அல்லாஹ்வின் உதவி உனக்கு கிடைக்கும் என்றார்கள்.

No comments:

Post a Comment