Thursday, November 4, 2021

குழந்தை ஒரு அமானிதம்

 

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் மழை காலம் ஆரம்பித்து தமிழகம் முழுக்க பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா பொழிந்து கொண்டிருக்கிற இந்த மழையை யாருக்கும் இடையூறின்றி அனைவருக்கும் பயன் தரும் நன்மழையாக, ஊரை செழிப்பாக்கும் மழையாக ஆக்கி அருள்வானாக!

வருடத்தில் மழைகாலம், குளிர்காலம், கோடைகாலம், இலையுதிர் காலம் என பல பருவங்கள் இருப்பது போன்று மனித வாழ்விலும் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என  மூன்று பருவங்கள் உண்டு. இந்த மூன்று பருவங்களில் மிக முக்கியமான பருவம் இளமைப்பருவம். قوة بين الضعفين குழந்தைப்பருவம் பலகீனமான பருவம், முதுமைப்பருவமும் பலகீனமான பருவம். இந்த இரண்டு பலகீனமானத்திற்கு மத்தியில் பலம் பெற்ற சக்தி வாய்ந்த பருவம்  இந்த இளமைப்பருவம் என்று அல்லாஹ் திருமறையில் சான்று பகர்கிறான்.

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُم مِّن ضَعْفٍۢ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍۢ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍۢ ضَعْفًا وَشَيْبَةً ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۖ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْقَدِيرُ

அல்லாஹ் தான் உங்களை பலவீனமாக நிலையில் படைத்தான். பின்பு பலவீனத்திற்குப் பின் அவனே பலத்தையும் உண்டாக்கினான். பின்பு பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்கினான். தான் நாடியதை அவன் படைக்கிறான். அவன் எல்லாவற்றையும் அறிந்தவன். பேராற்றலுள்ளவன். (அல்குர்ஆன் : 30 ; 54)

இந்த இளமைப்பருவம் எதையும் சாதிக்கிற பருவம், நினைத்ததை அடைந்து கொள்கிற ஆற்றல் பெற்ற பருவம்.எதையும் எதிர்கொள்கிற திறன் பெற்ற பருவம்.

கடந்த கால இளைஞர்களை விட இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் மிகத் திறமைசாலிகளாக,எதையும் இலகுவாக புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாக,எந்த பிரச்சனை களையும் இலகுவாக சமாளிப்பவர்களாக,கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவர்களாக,வாழ்வின் எல்லாத் துறைகளிலும் தடம் பதிப்பவர்களாக, உலகம் உற்று நோக்கும் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.ஆனால் கலாச்சாரம் என்று வருகின்ற போது, ஒழுக்கம் என்று வருகின்ற போது, நாகரீகம் என்று வருகின்ற போது கடந்த காலத்தை விட இன்றைய காலத்து இளைஞர்கள் மிக மோசமாகத்தான் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த விஷயம்.

தொலைக்காட்சி என்றும் சினிமா என்றும் ஊடகங்கள் என்றும் இணையதளம் என்றும் மோசமான வட்டத்திற்குள் சிக்கி இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தவறான ஆபாச இணைய தளங்களை பார்த்து தங்கள் பொன்னான நேரங்களையும் காலங்களையும் வீணடிக்கும் இளைஞர்கள் இன்று அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தவறான இணைய தளத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்,தவறான ஆபாசமான விஷயங்களுக்கு மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான wepsite கள் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.

இப்படி தவறான இணைய தளங்களுக்குள் நுழைந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்பவர்கள் ஒரு புறம் என்றால் கஞ்சா,மது போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் ஒரு புறம்.சமீபகாலமாக இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற நகரங்கள் கடற்கரை கிராமங்களில் நமது இளைஞர்களின் கையில் கஞ்சா சர்வ சாதாரணமாக புலங்குகிறது. திட்டமிட்டே நமது வருங்கால தலைமுறை குறிவைக்கப்படுகிறார்கள்.

கஞ்சா வியாபாரிகளின் இலக்கு இளைஞர்களும் மாணவர்களும் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் மாணவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாணவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பு நாளடைவில் வன்முறையாகவும் வளர்கிறது. சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கொலைகளுக்கு கஞ்சா  முக்கிய காரணமாக உள்ளது.

இப்படி இன்றைய இளைஞர்களை வழிகெடுக்கும் மோசமான வழித்தடங்களைப் பற்றி அவர்கள் பயணிக்கும் மோசமான பாதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைத்தான் நபி பெருமானார் ஸல் அவர்கள் அன்றைக்கே சொன்னார்கள்.

كيف بكم - أيها الناسُ ! - إذا طغى نساؤكم، وفسق فتيانُكم ؟ قالوا : يا رسولَ اللهِ ! إن هذا لكائن ٌ؟ ! قال : نعم، وأشد منه، كيف أنتم إذا تركتم الأمرَ بالمعروف والنهيَ عن المنكر ؟ ! قالوا : يا رسولَ اللهِ ! إنَّ هذا لكائنٌ ؟ قال : وأشدُّ منه، كيف بكم إذا رأيتم المنكرَ معروفًا، والمعروف منكرًا ؟

மக்களே!  உங்களுடைய பெண்கள் வரம்பு மீறி உங்களில் வாலிபர்கள் பாவங்களில் மூழ்கி விட்டால் உங்களின் நிலை எப்படி இருக்கும் என்று நபியவர்கள் கேட்ட பொழுது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது நடக்குமா என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். ஆம், இதை விட கடினமானதும் நடக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். நன்மையை ஏவுவதையும் தீமையை விட்டு தடுப்பதையும் நீங்கள் விட்டு விட்டால் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று கேட்ட பொழுது அல்லாஹ்வின் தூதர் அவர்களே இது நடக்குமா என்று அவர்கள் கேட்டார்கள்.ஆம், இதை விட கடினமானதும் நடக்கும் என்றார்கள். இறுதியாக, தீமையை நன்மையாகவும் நன்மையை தீமையாகவும் நீங்கள் கருதினால் உங்களின் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார்கள். (அபூயஃலா ; 6420)

إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .

ஸஃலபா என்ற அன்ஸாரி ஸஹாபி ஒருவர்.நபி ஸல் அவர்களின் செய்தி தொடர்பாளர்.அவர்களை நபி ஸல் அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.ஒரு அன்ஸாரிப் பெண் குளிக்கும் காட்சி எதார்த்தமாக இவர்களின் கண்ணில் பட்டு விட்டது.மீண்டும் தங்களின் பார்வையை அப்பக்கமாக திருப்பி பார்த்து விடுகிறார்.அவ்வளவு தான் அச்சம் பிடித்துக்கொ ள்கிறது. அல்லாஹ் என் மீது கோபம் கொண்டு வஹி ஏதும் இறக்கிவிடுவானோ என்ற பயத்தில் மலையை நோக்கி ஓடுகிறார். நாற்பது தினங்களுக்கு பின்னால் ஒரு நாள் ஜிப்ரயீல அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அல்லாஹ்வின் ஸலாமை எடுத்துச்சொல்லி விட்டு உங்களில் ஒருவர் தவ்பாவைத் தேடி நரகை விட்டும் பாதுகாவல் தேடி மலை உச்சியிலிர்ந்து கதறுகிறார் என்ற செய்தியை அல்லாஹ் உங்களுக்கு எத்தி வைக்கச்சொன்னான் என்றார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் தம் தோழர்களில் உமர் ரலி,ஸல்மான் ரலி ஆகிய இருவரையும் அனுப்பி வைத்து ஸஃலபாவை கண்டு பிடித்து தன்னிடம் அழைத்து வரச்சொன்னார்கள்.அவ்விருவரும் மதீனாவின் தெருக்களில் எல்லாம் தேடி அலைந்து இறுதியில் மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் இடையனிடம் விசாரித்தார்கள்.

அந்த இடையன்,நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிற அந்த இளைஞரையா நீங்கள் தேடுகிறீர்கள்?என்றதும்-அவர் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுகிறவர் என்று நீர் எப்படி தெரிந்து கொண்டீர் என அந்த இரு ஸஹாபாக்களும் கேட்டபோது, நடுஇரவில் மலையிலிருந்து இறங்கி வந்து அழுதவராக துஆச் செய்ய பார்த்திருக்கிறேன் என்று பதில் கூறினார். ஒருவழியாக உமர் ரலி அவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து அவருக்காக காத்திருக்கிறார்கள்.அவர் மலையிலிருந்து கீழே இறங்கியதும் அவரைப் பிடித்து விடுகிறார்கள்.

அப்போது அவர்,நரகிலிருந்து நான் தப்பிக்க முடியுமா?என்று கேட்கிறார்கள். அதற்கு உமர் ரலி ஆம் நீ நரகிலிருந்து பாதுகாக்கப்படுவாய் என்றார்கள்.

உமரே!நான் செய்த பாவத்தை பற்றி நபிக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்டார்கள்.அதைபற்றி எனக்கு தெரியாது,உங்களை தேடி கண்டு பிடித்து கொண்டுவரச் சொல்லி பெருமானார்உத்தரவிட்டார்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறியதும், நாயத்தைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது,எனவே நபி ஸல் தொழுது கொண்டிருக்கும் போது என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள்.

நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது பின்னால் சேர்ந்துகொண்ட அவர்கள் தொழுகையின் இடையில் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த நபி ஸல் அவர்கள் அவரின் தலையை தூக்கி தன் தொடையில் வைத்தபோது, மயக்கம் தெளிந்த அந்த ஸஹாபி, தன் தலையை கீழே வைக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரே உங்களின் முபாரக்கான மடியில் தலைவைக்கும் தகுதி எனக்கு இல்லை நான் பெரும்பாவி என்றார்கள். உனக்கு என்ன வேண்டும் நபியவர்கள் கேட்க, அவர் மன்னிப்பு வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அவரின் மன்னிப்பு குறித்து ஜிப்ரயீல் மூலம் அல்லாஹ் செய்தி சொல்லி அனுப்பினான். அதைக்கேட்டதும் சப்தமிட்டார்கள். அவர்களின் ரூஹ் பிரிந்து விடுகிறது.

அவரை குளிப்பாட்டி,கபன் செய்து தொழவைத்து அடக்கம் செய்து முடித்த நபி ஸல் அவர்கள், இந்த ஸஹாபியின் ஜனாஸாவில் ஏராளமான மலக்குகள் கலந்து கொண்டார்கள் என்று கூறினார்கள்..(மஃரிஃபதுஸ் ஸஹாபா 1/498)

நபி ஸல் அவர்கள் உருவாக்கிய ஸஹாபாக்கள் மிகவும் பரிசுத்த மானவர்கள். தூய்மையானவர்கள். ஒரு சிறு பாவத்தைக் கூட மிகப்பெரும் விஷயமாக கருதி அதை நினைத்து இறையச்சத்தால் தங்கள் உயிரையே விட்டவர்கள். அதேபோல் நன்மையை ஏவ வேண்டும் தீமையைத் தடுக்க வேண்டும் என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொணடவர்கள். ஈட்டியினால் குத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கிற அந்த நேரத்தில் கூட கரண்டைக் காலுக்கு கீழே ஆடை உடுத்தியிருந்தவரை எச்சரிக்கை செய்த உமர் ரலி அவர்களின் வரலாறை இதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.  இவ்வளவு பரிசுத்தமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாக இருந்ததினால் தான் நபி ஸல் அவர்கள் அவ்வாறு சொன்ன போது இப்படியும் நடக்குமா என ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

நபி ஸல் அவர்கள் அன்றைக்கு எச்சரித்த அந்த காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்கள் வரம்பு மீறி விட்டார்கள், வாலிபர்களின் குற்றங்கள் அதிகரித்து விட்டது.மனப்போராட்டத்தை விட்டு விட்டு மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்மைகளை ஏவுவதில்லை.தீமைகளை தடுப்பதில்லை.நன்மைகள் பாவங்களைப் போன்று மாறி விட்டது. பாவங்கள் நன்மைகளாக காட்சி தருகின்றது.ஆக மிக மிக மோசமான காலத்தில் நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

மிக முக்கியமான பருவம் என்றும் பலம் பெற்ற பருவம் என்றும் எதையும் சாதிக்கிற பருவம் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த இளமைப்பருவத்தைப் பெற்ற இளைஞர்கள் இந்த மோசமான சூழ்நிலைகளில் வீழ்ந்து கிடப்பதற்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று அதன் ஆழம் வரை போய் சிந்தித்துப் பார்த்த மார்க்க அறிஞர்கள் கூறும் ஒரே காரணம் அவர்களின் முந்தைய பருவமாக இருக்கிற குழந்தைப் பருவம் அவர்களுக்கு சிறப்பாக அமைய வில்லை,அந்த பருவத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒழுக்கங்கள்,சீர்திருத்தங்கள், மார்க்க போதனைகள் சரியாக வழங்கப்பட வில்லை,சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் வளர்ப்பு சரியான முறையில் அமைய வில்லை என்று கூறுகிறார்கள்.குழந்தைப்பருவம் சரியான முறையில் அமையாத காரணத்தால் அவர்கள் வாலிப பருவம் மோசமாகிப்பானது என்று கூறுகிறார்கள்.

உண்மையும் யதார்த்தமும் அதுதான்.ஒருவரின் குழந்தைப்பருவம் சீர்திருத்தப்பட வில்லையென்றால் அவரின் இளமைப்பருவம் கேள்விக்குறியாகி விடும்.

எனவே சிறப்பானதொரு இளைய சமுதாயத்தை இன்றைய கலாச்சார சீரழிவுகளுக்குள் சிக்காத ஒழுக்கமுள்ள இளைய சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டுமென்றால் நமது குழந்தைகளை நமது சிறுவர்களை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அவர்களை இஸ்லாமிய வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இஸ்லாமிய பண்பாடுகளைக் கொடுத்து அவர்களை சரியான முறையில் வளர்த்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7 ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிற இவ்வேளையில் குழந்தை வளர்ப்பு குறித்த இஸ்லாத்தின் வழிகாட்டுதலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நமக்கு நிறைய செல்வங்களைக் கொடுத்திருக்கிறான். பொருட்செல்வம், மனைச்செல்வம்,கல்விச்செல்வம்.இப்படி நமக்களித்த செல்வங்கள் நிறைய உண்டு.ஆனால் அல்லாஹ் நமக்கு கொடுத்த செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த விலை மதிக்க முடியாத செல்வம் குழந்தைச் செல்வம்.

يا زكريا إنا نبشرك بغلام

ஜகரிய்யாவே! குழந்தையைக் கொண்டு உங்களுக்கு நாம் சுபச்செய்தி சொன்னோம் என்று குழந்தையின் பிறப்பை சுபச்செய்தி என்று கூறுகிறான்.

أي رجل مات وترك ذرية طيبة أجرى الله مثل أجر عملهم ولم ينقص من أجورهم شيئا قرطبي

யார் நல்ல சந்ததிகளை விட்டு விட்டு மரணித்து விடுகிறாரோ அல்லாஹுத்தஆலா அவருக்கு அவர்களின் கூலியைப் போன்றதைக் கொடுக்கிறான். அவர்களின் கூலியில் இருந்து எதையும் குறைப்பதில்லை. (குர்துபி)

قالت أم سليم: يا رسول الله، خادمك أنس أدع الله له.فقال: (اللهم أكثر مال وولده وبارك له فيما أعطيته بخاري

உம்மு சுலைம் ரலி அவர்கள் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே இதோ உங்களுடைய பணியாளர் அனஸ் இருக்கிறார். அவருக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள் என்று சொன்ன பொழுது நபி ஸல் அவர்கள் இறைவா இவருடைய பொருளையும் குழந்தைகளையும் அதிகப்படுத்துவாயாக! அவருக்கு நீ வழங்கியதில் பரக்கத் செய்வாயாக என்று துஆ செய்தார்கள். (புகாரி ; 6380)

جاءَ رجلٌ إلى النَّبيِّ - صلَّى اللَّهُ علَيهِ وعلَى آلِهِ وسلَّمَ – فقالَ : إنِّي أصبتُ امرأةً ذاتَ جمالٍ وحسَبٍ وأنَّها لا تَلدُ ، أفأتَزَوَّجُها قالَ : لا ثمَّ أتاهُ الثَّانيةَ فنَهاهُ ثمَّ أتاهُ الثَّالثةَ فقالَ : تزَوَّجوا الودودَ الولودَ فإنِّي مُكاثرٌ بِكُم الأُمَمَ

ஒரு மனிதர் நபி இடத்தில் வந்து ஒரு பெண் நல்ல அழகும் பாரம்பரியமும் மிக்கவள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்க மாட்டாள். அவளை நான் திருமணம் முடித்துக் கொள்ளலாமா என்று கேட்டார். வேண்டாம் என்றார்கள். இரண்டாவது முறை வந்து கேட்ட போது அவரைத் தடுத்து விட்டார்கள். மூன்றாவது முறை வந்த போதும் அவரைத் தடுத்து விட்டார்கள். அப்போது அதிகம் அன்பு கொள்ளக்கூடிய அதிகம் குழந்தையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள். ஏனென்றால் மறுமையில் என் சமுதாயம் அதிகம் இருப்பதைக் கொண்டு நான் பெருமைப் படுவேன் என்றார்கள். (அஸ்ஸஹீஹுல் முஸ்னத் ; 1143)

அல்லாஹுத்தஆலா குழந்தைச் செல்வத்தைக் குறித்து திருமறையில் சொல்லும் போது ஹிபத் என்று சொல்கிறான்.ஒரு gift ஐ ஒருவர் எந்த நோக்கத்திற்காக தருகிறாரோ அந்த நோக்கத்திற்குத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் குழந்தைகளை நல்ல முறையில் பன்படுத்தி வளர்த்தெடுப்பது நம் தலையாய கடமை.

يقول الغزالي رحمه الله: "الصبي أمانة عند والديه، وقلبه الطاهر جوهرة نفيسة ساذجة خالية من كل نقش وصورة، وهو قابل لكل نقش ومائل إلى كل ما يمال إليه، فإن عُوِّد الخير وعُلِّمه نشأ عليه وسعد في الدنيا والآخرة، وشاركه في ثوابه أبواه، وكل معلم له ومؤدب. وإن عُوِّد الشر وأهمل إهمال البهائم شقي وهلك، وكان الوزر في رقبة القيِّم عليه والوالي له" (إحياء علوم الدين:106/4)

குழந்தைகள் பெற்றோர்களிடம் தரப்பட்ட அமானிதமாகும். அவர்களின் உள்ளங்கள் தூய்மையானதும் விலை மதிக்க முடியாத மாணிக்கமும் ஆகும். எந்த பதிவுகளும் இல்லாத காலியான எதையும் ஏற்றுக்கொள்ளும் உள்ளங்களாகும். எதன் பக்கம் திருப்பப்படுகிறதோ அதன் பக்கமே திரும்பும். எனவே நல்லதை பழக்கமாகி நல்லதையே கற்றுக் கொடுத்தால் அதன்படியே அவர்கள் வளர்ந்து உலகத்திலும் மறுமையிலும் பாக்கியம் பெருவார்கள். அவர்களுக்கு கிடைத்த கூலியில் அவர்களுடைய பெற்றோர்களும் அவர்களுக்கு கல்வி போதித்தவர்களும் ஒழுக்கம் கற்பித்தவர்களும் கூட்டாகி விடுவார்கள். அவர்களுக்கு தீமையை பழக்கமாக்கி அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்கள் பாக்கியமற்றவர்களாக அழிந்து போய் விடுவார்கள். அவர்களுடைய குற்றத்தில் அவர்களுடைய பொறுப்பாளர்களும் கூட்டாகி விடுவார்கள் என கஜ்ஜாலி இமாம் அவர்கள் கூறுகிறார்கள். (இஹ்யா)

எனவே ஒரு குழந்தை நல்வழியில் செல்வதும் தீய வழியில் போய் சேருவதும் பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது.பெற்றோர்களின் வளர்ப்பைப் பொறுத்துத்தான் ஒருவன் நல்லவனாகவும் தீயவனாகவும் உருவெடுக்கிறான்.எனவே பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளர்க்க வேண்டும்.கொடுக்க வேண்டியதைக் கொடுக்கத் தவறினால் அவர்களின் மோசமான வட்டத்திற்குள் போய் விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குழந்தைகள் தங்கம்,வெள்ளியைப் போன்றவர்கள்.தங்கமும் வெள்ளியும் விலை மதிப்புள்ள பொருட்கள் தான்.ஆனால் அவைகள் விலை மதிப்புள்ள பொருளாக மாற வேண்டுமென்றால் அவற்றில் சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கினால் தான் அது விலை மதிப்புள்ள ஒரு பொருளாக மாறும்.அதுபோன்று குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டும்.நீக்க வேண்டியதை நீக்க வேண்டும்.

குழந்தைகள் விவசாய நிலத்தைப்போன்றவர்கள்.விவசாய நிலத்திலிருந்து அறுவடை செய்து அதன் மூலம் நாம் பலன் பெற வேண்டுமென்றால் அதில்  விதை தூவுவதோடு நின்று விடாமல் அதற்கு உரம் போட வேண்டும்,அதில் உள்ள பூச்சிக்களை அகற்ற மருந்தை தெளிக்க வேண்டும்.இப்படி செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தால் தான் அது பயன் தரும். அது போன்றே நம் பிள்ளைகள். எனவே நம் பிள்ளைகளின் எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது.

كُلُّ مَوْلُودٍ يُولَدُ علَى الفِطْرَةِ، فأبَوَاهُ يُهَوِّدَانِهِ، أوْ يُنَصِّرَانِهِ، أوْ يُمَجِّسَانِهِ

ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற அடிப்படையின் மீது தான் பிறக்கிறது. என்றாலும் அவனுடைய பெற்றோர்கள் தான் அவனை யூதனாகவும் கிருத்துவனாகவும் நெருப்பு வணங்கியாகவும் ஆக்கி விடுகிறார்கள். (புகாரி ; 1385)

ஒரு குற்றவாளி தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். அவனிடம் உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்ட போது என் தாயைப் பார்க்க வேண்டும் என்றான். தாயைப் பார்த்தவுடன் நான் இன்று இந்த நிலைமைக்கு வந்து நிற்பதற்கு நீ தான் காரணம் என்றான். அதிர்ந்து போன தாய் ஏன் அப்படி சொல்கிறாய் என்று கேட்டாள். நான் சிறுவனாக இருந்த போது அப்பாவின் சட்டையிலிருந்து காசை எடுத்தேன். அதைப் பார்த்த போது அன்றைக்கே நீ என்னை தடுத்து எச்சரித்து நல்வழிப்படுத்தியிருந்தால் நான் அன்றைக்கே திருந்தியிருப்பேன் என்றான். எனவே குழந்தையின் ஒவ்வொரு செயல்களுக்கும் பெற்றோர்கள் தான் பொறுப்பு.

كُلُّكُمْ راعٍ وكُلُّكُمْ مَسْئُولٌ، فالإِمامُ راعٍ وهو مَسْئُولٌ، والرَّجُلُ راعٍ علَى أهْلِهِ وهو مَسْئُولٌ، والمَرْأَةُ راعِيَةٌ علَى بَيْتِ زَوْجِها وهي مَسْئُولَةٌ، والعَبْدُ راعٍ علَى مالِ سَيِّدِهِ وهو مَسْئُولٌ، ألا فَكُلُّكُمْ راعٍ وكُلُّكُمْ مَسْئُولٌ.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் பொறுப்பைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள். ஒரு தலைவர் பொறுப்பாளர். அவரின் பொறுப்பைக் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவரின் குடும்பத்தாரின் மீது பொறுப்பாளர். அவர் அந்த பொறுப்பைக் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு பெண் அவளின் கணவனின் வீட்டின் மீது பொறுப்பாளியாவாள். அவள் அதைக் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு அடிமை அவனின் எஜமானனின் பொருளின் மீது பொறுப்பாளன். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களின் பொறுப்பைக் குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி ; 5188)

وقال ابن عمر رضي الله عنه: (أدِّب ابنك فإنّك مسؤول عنه: ماذا أدّبته، وماذا عَلَّمته؟ وهو مسؤول عن بِرِّك وطواعيته لك)

உன்னுடைய மகனுக்கு நீ ஒழுக்கத்தைக் கற்றுக் கொடு. நிச்சயமாக நீ அவனுக்கு என்ன ஒழுக்கத்தைக் கொடுத்தாய் நீ அவனுக்கு எதை கற்றுக் கொடுத்தாய் என்பதைப் பற்றி விசாரிக்கப்படுவாய். உனக்கு என்ன உபகாரம் செய்தான் என்பதைப் பற்றி அவன் விசாரிக்கப்படுவான் என்று இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال بعض العلماء أنّ الله سبحانه وتعالى يسأل الأب عن ابنه يوم القيامة قبل أن يسأل الابن عن أبيه

மறுமையில் ஒரு மகன் தன் தந்தையைப் பற்றி விசாரிக்கப்படுவதற்கு முன்பு ஒரு தந்தை தன் மகனைப் பற்றி விசாரிக்கப்படுவான் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

எனவே குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதத்தில் அவர்களை வளர்க்க வேண்டும். அவர்களை வளர்க்கும் விதம் என்ன குழந்தை வளர்ப்பு விஷயத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

 

 

No comments:

Post a Comment