Tuesday, April 12, 2022

குர்ஆன் கூறும் தேனீக்கள்

 

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏ 

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் : 16:68)

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌  يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ 

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:69)

இந்த வசனத்தில் தேனீக்கள் குறித்தும் அவைகள் மூலம் மனித சமூகத்திற்கு கிடைக்கும் தேனைக் குறித்தும் இறைவன் பேசுகிறான். தேன் என்பது எண்ணற்ற நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக இன்றைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இயற்கை நமக்களித்த அற்புதமான பல அருட்கொடைகளில் அதில் தேனும் ஒன்று. தேனை 'வயிற்றின் நண்பன்' என கூறுவார்கள். 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. உடம்புல் செல்லும் மருந்து வேலை செய்வதற்கும் தேன் உதவுகிறது. மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம்  இருப்பதால்,  மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும் போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

நபி ஸல் அவர்களும் தேனை மிகச்சிறந்த மருந்தாக பரிந்துரைத் திருக்கிறார்கள்.

عن أبي سعيد الخدري - رضي الله عنه - قال : جاء رجل إلى رسول الله - صلى الله عليه وسلم - فقال : إن أخي استطلق بطنه . فقال : " اسقه عسلا " . فسقاه عسلا ثم جاء فقال : يا رسول الله ، سقيته عسلا فما زاده إلا استطلاقا ، قال : " اذهب فاسقه عسلا " . فذهب فسقاه ، ثم جاء فقال : يا رسول الله ، ما زاده إلا استطلاقا ، فقال رسول الله - صلى الله عليه وسلم - : " صدق الله ، وكذب بطن أخيك ، اذهب فاسقه عسلا " . فذهب فسقاه فبرئ

ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து, 'என் சகோதரர் வயிற்றுப் போக்கால் சிரமப்படுகிறார்' என்று சொன்னார். முஹம்மது அவர்கள், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்கு அதிகமாகி விட்டது' என்று கூறினார், மீண்டும்  'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து அதேபோல் சொன்ன போது நபி   அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாக குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறு தான் பொய் சொல்கிறது. அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார்கள். அதையடுத்து அவர் குணமடைந்தார். (முஸ்லிம் ; 2217)

பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகிறது. இதற்கு தேன் ஒரு சிறந்த நிவாரணியாகும். இரைப்பையின் மெல்லிய தோலில் ஒட்டிக்கொள்ளும் தாதுக்கள் ஒன்று சேர்ந்து விட்டால், அவை இரைப்பையையும் அதில் வந்து சேரும் உணவையும் கெடுத்துவிடும். இப்போது அந்தத் தாதுக்களை அகற்றித் தூய்மைபடுத்தும் தன்மை கொண்ட மருந்து தேவை. தேனில் இத்தன்மை உண்டு. (தேனிலுள்ள சுண்ணகம் (Calcium) ஒட்டுத் தாதுக்களை அகற்றி இரைப்பையைத் தூய்மையாக்கும் சக்தி உள்ளதாகும்.) அதிலும் குறிப்பாக தேனை வெந்நீருடன் கலந்து பயன்படுத்தும் போது நல்ல பலன் தரும்  என்பது இன்றைய மருத்துவம்.

 

قال بعض العلماء بالطب : كان هذا الرجل عنده فضلات ، فلما سقاه عسلا وهو حار تحللت ، فأسرعت في الاندفاع ، فزاد إسهاله ، فاعتقد الأعرابي أن هذا يضره وهو مصلحة لأخيه ، ثم سقاه فازداد التحليل والدفع ، ثم سقاه فكذلك ، فلما اندفعت الفضلات الفاسدة المضرة بالبدن استمسك بطنه ، وصلح مزاجه ، واندفعت الأسقام والآلام ببركة إشارته - عليه من ربه أفضل الصلاة والسلام - . ابن كثير

அவரின் உடம்பில் கழிவுகள் அதிகமா இருந்திருக்கும். தேன் கழிவுகளை அகற்றி வயிற்றை சுத்தப்படுத்தும். எனவே தான் நபி அவர்கள் அவருக்கு புகட்டும்படி சொன்னார்கள். முதலில் அது வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தியது. கழிவுகள் முழுமையாக வெளியான பிறகு வயிற்றுப் போக்கு நின்று விட்டது. (இப்னுகஸீர்)

وروينا عن أمير المؤمنين علي بن أبي طالب - رضي الله عنه - أنه قال : إذا أراد أحدكم الشفاء فليكتب آية من كتاب الله في صحفة ، وليغسلها بماء السماء ، وليأخذ من امرأته درهما عن طيب نفس منها ، فليشتر به عسلا فليشربه بذلك ، فإنه شفاء . أي : من وجوه ، قال الله : ( وننزل من القرآن ما هو شفاء ) [ الإسراء : 82 ] وقال : ( ونزلنا من السماء ماء مباركا ) [ ق : 9 ] وقال : ( فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ) [ النساء : 4 ] وقال في العسل : ( فيه شفاء للناس ) ابن كثير

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறினார்கள் :  உங்களுக்கு நிவாரணம் வேண்டுமென்றால் ஒரு காகிதத்தில் அல்லாஹ்வின் வசனங்களில் ஒன்று எழுதி அதை வானிலிருந்து பெய்யக்கூடிய மழைத் தண்ணீரைக் கொண்டு கழுவி பின்பு மனைவியிடமிருந்து மனமுவந்து ஒரு திர்ஹமைப் பெற்று அதைக் கொண்டு தேனை வாங்கி அதை நீரில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஏனென்றால் குர்ஆனில் மருத்துவம் இருக்கிறது என்றும் வானத்திலிருந்து பெய்யக்கூடிய மழை நீரை பரக்கத்தானது என்றும் மனைவிமார்கள் மனமுவந்து கொடுப்பதை நீங்கள் சாப்பிடுங்கள் என்றும் தேனில் மருத்துவம் இருக்கிறது என்றும் அல்லாஹ் கூறுகிறான். (இப்னுகஸீர்)

 

அல்லாஹ் நம் வாழ்க்கையின் வழிகாட்டியாக அல்குர்ஆனைத் தந்திருக்கிறான். அது மனித வாழ்வின் எல்லா துறைகளுக்கும் வழிகாட்டலாக விளங்குகின்றது. அல்குர்ஆனில் அத்தனையும் இருக்கிறது.அல்குர்ஆன் எனும் பிரமாண்டமான அறிவுக் கருவூலத்தை, இதுவரை பல்லாயிரக்கணக்கான மாபெரும் அறிஞர்கள், அரபுமொழிப் பண்டிதர்கள், மகான்கள் எல்லோரும் அக்குவேறு ஆணிவேராக வருடக் கணக்கில் அலசி ஆராய்ச்சி செய்து, தத்தமது கருத்துக்களையும், வியப்புக்களையும், தாம் பெற்ற அனுபவங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.இன்றைக்கும் அதைக் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு அறிவியல் விஞ்ஞான கருத்துக்களும் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. அன்றைக்கு சாதாரணமாக குர்ஆன் சொன்ன விஷயங்கள் தான் இன்றைக்கு அறிவியலாகிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் வடிவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு 2 வருடம் தாய்ப்பால் கொடுத்தால் வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் இறப்பைத் தடுக்கலாம் என்று சொல்கிறது ஒரு புள்ளி விபரம். அதைத்தான் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் பகரா சூராவின் 233 ம் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலை கொண்டவர்.குர்ஆனுக்கு எதிராக ஓர் சவாலை முன்வைத்தார்."குர்ஆன் துல்லியமான நூல் இல்லை. ஏனெனில்

ما جعل الله لرجل من قلبين في جوفه

33 : 4  வது வசனத்தில்  'எந்த ஆண்களுக்கும் இரண்டு இதயங்களை வைக்கவில்லைஎன்று அல்லாஹ் கூறுகிறான். ஏன் பெண்களையும் குறிப்பிட வில்லை அப்படியன்றால் பெண்ணிற்கு என்ன இரண்டு இதயங்களா இருக்கிறது ?" என்றார்.

அப்போது அந்த அறையில் இருந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் எழுந்து, "இல்லை சார்குர்ஆன் மிகவும் துல்லியமானது தான். பெண்களுக்குள் இரண்டு இதயம் இருக்க முடியும். அவள் கர்ப்பிணியாய் இருக்கும் போது.... என்று கூறினார்" அதைக்கேட்ட பிறகு பேராசிரியரால் பதில் பேச இயல வில்லை...?

எனவே குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களும் தெளிவானவை. இன்றைய அறிவியலை மிகத்தளிவாக பேசும். அந்த வகையில் இந்த வசனத்திலும் ஒரு அறிவியல் ஒளிந்திருக்கிறது.

இன்றைக்கு பெரும்பாலும் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து தேன் கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால்,  மலர்களிலும்,கனிகளிலும் உள்ள குளுகோஸை தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவை வயிற்றிற்குள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற கழிவு தான் தேன்.இதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து இந்த உண்மையை வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அறிவியல் உண்மையை குர்ஆன் அன்றே சொல்லி விட்டது.

மேற்கூறப்பட்ட வசனத்தில் தேனியின் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல் அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் தேன் என்பது தேனியின் கழிவு தான் என்பது தெளிவாகிறது.

அதேபோன்று தேனீ குறித்து இன்னொரு செய்தி ;

தேனீக்கள் பாதைகளை மிகத்துள்ளியமாக கணித்து சென்று திரும்பும் ஆற்றல் உடையவை. கணினியின் தொடர்புள்ள செயற்கை பூக்களை ஆய்வகத்தில் உருவாக்கி தேனீக்கள் எப்படி  பாதையை தேர்வு செய்கின்றன  என்று கண்காணித்தனர். பூக்கள் இருக்கும் பாதையில் வரிசையாக பயணம்  செய்யாமல், அவைகளை ஆய்வு செய்து விட்டு, மிக விரைவான பாதையை தேர்ந்து எடுக்கின்றன. ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டு பிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். எனவே தேனீக்களின் மிகத் துல்லியமான தனது மோப்பசக்தியால் பூக்களையும் கனிகளையும் கண்டறித்து அதிலிருந்து தனது உணவுகளை சேகரித்து விட்டு மிக எளிதாக தன் இருப்பிடத்திற்கு திரும்பி விடும் என இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையில் தேனீக்கள், தங்களின் பயண தூரத்தைக்   குறைக்கவும், எந்த வித  தடங்கலும் இல்லாமல் வீடு திரும்பவும், போகும் பாதையில் உள்ள நூற்றுக்கணக்கான பூக்களை வரிசைப்படுத்திக் கொள்ளும்", என்று பேராசிரியர் லார்ஸ் சிட்கா (Queen Mary's School of Biological and Chemical Sciences) கூறியுள்ளார்.

மேற்கூறப்பட்ட வசனத்தில் உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்இந்த கண்டுபிடிப்பைத் தான் பேசுகிறது.

5 comments: