Saturday, April 23, 2022

பாவங்களைத் தடுக்க ஒரே வழி

(நேற்று கொஞ்சம் வேலைப் பழுவினால் குறிப்புகள் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அனைத்து உலமாக்களும் உங்கள் மேலான துஆவில் அடியேனையும் இணைத்துக் கொள்ளுங்கள்.)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)

ஓர் இறைநம்பிக்கையாளரின் ஈருலக வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த இறையச்சம் தான். அல்லாஹ் தன் திருமறையில் சுமார் 70 இடங்களில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து வாழுங்கள்என்பதாக முஃமின்களை நோக்கி கூறுகிறான்.

வணக்க வழிபாடு, சமூகம், பொருளாதாரம், தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிற அத்துனை துறைகளிலும் இறையச்சம் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இறையச்சமின்றி செய்யப்படும் அமல்கள் ஏற்கப்படாது.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

وكتب عمر بن عبد العزيز إلى رجل: أوصيك بتقوى الله - عز وجل - التي لا يقبل غيرها، ولا يرحم إلا أهلها، ولا يثيب إلا عليها، فإن الواعظين بها كثير، والعاملين بها قليل،

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் ஒரு மனிதருக்கு கடிதம் எழுதினார்கள். அதிலே இறையச்சத்தைக் கொண்டு நான் உனக்கு வஸிய்யத் செய்கிறேன். இறையச்சம் எப்படிப்பட்டது என்றால் இறையச்சமுள்ளவர்களின் அமல்கள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். இறையச்சமுள்ளவர்கள் மட்டும் தான் இறைவனால் அருள் செய்யப்படுவார்கள். இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் கூலி வழங்கப்படும். இறையத்தத்தைக் கொண்டு உபதேசம் செய்யக் கூடியவர்கள் அதிகம். ஆனால் அதன்படி நடப்பவர்கள் மிகக்குறைவு என்று எழுதினார்கள்.

ஒருவரைய மறைவுக்குப் பின்னால் அவரின் மண்ணரையில் அவருக்கு              துணையாக இருப்பது இறையச்சமும் அதன் மூலம் செய்த அமல்களும் தான்.  

دخل علي رضي الله عنه المقبرة فقال: يا أهل القبور ما الخبر عندكم: إن الخبر عندنا أن أموالكم قد قسمت وأن بيوتكم قد سكنت وإن زوجاتكم قد زوجت، ثم بكى ثم قال: والله لو استطاعوا أن يجيبوا لقالوا: إنا وجدنا أن خير الزاد التقوى)

ஒரு நாள் அலி ரலி அவர்கள் மண்ணறை இருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது அவர்களைப் பார்த்து மண்ணறையில் இருப்பவர்களே உங்களிடம் என்ன செய்தி இருக்கிறது? எங்களிடம் இருக்கிற செய்தி என்னவென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் பங்கு வைக்கப்பட்டு விட்டது. நீங்கள் கட்டிய வீடுகள் அது குடியமர்த்தப்பட்டு விட்டது. நீங்கள் விட்டுச்சென்ற மனைவிமார்கள் வேறு நபர்களால் மணமுடிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி விட்டு அழுதார்கள். பின்பு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இங்கு இருப்பவர்களால் பதில் சொல்வதற்கு முடியுமானால் நிச்சயமாக நாங்கள் சிறந்த தயாரிப்பாக இருக்கிற இறையச்சத்தை பெற்றுக் கொண்டோம் என்று சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.

இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை கூறியிருந்தாலும் பெரும்பான்மையான இமாம்கள் கூறும் விளக்கம்

امتثال أوامر الله واجتناب النواهي فالمتقون هم الذين يراهم الله حيث أمرهم، ولا يقدمون على ما نهاهم عنه.

அல்லாஹ்வுடைய ஏவல்களுக்கு கட்டுப்படுவது, அவன் தடுத்த விஷயங்களை விட்டும் தவிர்ந்து நடப்பது.

இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் தவறுகள் நடக்கிறது. இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பலாத்காரங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உரிமை மீறல்கள் இது போன்ற ஆயிரக்கணக்கான குற்றங்களைத் தடுக்க லட்சக்கணக்கான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் திருத்த முடியவில்லை. அது இயலாது. சட்டங்களைப் போட்டு கால்நடைகளைத் தடுக்கலாம். ஆனால் பல திட்டங்களைப் போட்டு மனிதத் தீமைகளைத் தடுக்க இயலாது.

தவறுகளை தடுப்பதற்கான ஒரே இஸ்லாம் கூறுகிற இறையச்சம் மட்டுமே!

இறையச்சம் தான் அன்றைக்கிருந்த மக்களிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِىِّ عَنْ أَبِيهِ قَالَ قَالَ أَبُو مَسْعُودٍ الْبَدْرِىُّ

كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِى بِالسَّوْطِ فَسَمِعْتُ صَوْتًا مِنْ خَلْفِى « اعْلَمْ أَبَا مَسْعُودٍ ». فَلَمْ أَفْهَمِ الصَّوْتَ مِنَ الْغَضَبِ – قَالَ – فَلَمَّا دَنَا مِنِّى إِذَا هُوَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَإِذَا هُوَ يَقُولُ « اعْلَمْ أَبَا مَسْعُودٍ اعْلَمْ أَبَا مَسْعُودٍ ». قَالَ فَأَلْقَيْتُ السَّوْطَ مِنْ يَدِى فَقَالَ « اعْلَمْ أَبَا مَسْعُودٍ أَنَّ اللَّهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلاَمِ ». قَالَ فَقُلْتُ لاَ أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا

அபூ மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து அபூ மஸ்வூதே!என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், “அபூ மஸ்வூதே! தெரிந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெரிந்து கொள்ளுங்கள்!என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், “இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்க வில்லை. (முஸ்லிம்-3413)

 

جَاءَ مَاعِزُ بنُ مَالِكٍ إلى النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فَقالَ: يا رَسولَ اللهِ، طَهِّرْنِي، فَقالَ: وَيْحَكَ، ارْجِعْ فَاسْتَغْفِرِ اللَّهَ وَتُبْ إلَيْهِ، قالَ: فَرَجَعَ غيرَ بَعِيدٍ، ثُمَّ جَاءَ، فَقالَ: يا رَسولَ اللهِ، طَهِّرْنِي، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: وَيْحَكَ، ارْجِعْ فَاسْتَغْفِرِ اللَّهَ وَتُبْ إلَيْهِ، قالَ: فَرَجَعَ غيرَ بَعِيدٍ، ثُمَّ جَاءَ، فَقالَ: يا رَسولَ اللهِ، طَهِّرْنِي، فَقالَ النبيُّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: مِثْلَ ذلكَ حتَّى إذَا كَانَتِ الرَّابِعَةُ، قالَ له رَسولُ اللهِ: فِيمَ أُطَهِّرُكَ؟ فَقالَ: مِنَ الزِّنَى، فَسَأَلَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: أَبِهِ جُنُونٌ؟ فَأُخْبِرَ أنَّهُ ليسَ بمَجْنُونٍ، فَقالَ: أَشَرِبَ خَمْرًا؟ فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ، فَلَمْ يَجِدْ منه رِيحَ خَمْرٍ، قالَ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: أَزَنَيْتَ؟ فَقالَ: نَعَمْ، فأمَرَ به فَرُجِمَ، فَكانَ النَّاسُ فيه فِرْقَتَيْنِ، قَائِلٌ يقولُ: لقَدْ هَلَكَ، لقَدْ أَحَاطَتْ به خَطِيئَتُهُ، وَقَائِلٌ يقولُ: ما تَوْبَةٌ أَفْضَلَ مِن تَوْبَةِ مَاعِزٍ، أنَّهُ جَاءَ إلى النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فَوَضَعَ يَدَهُ في يَدِهِ، ثُمَّ قالَ: اقْتُلْنِي بالحِجَارَةِ، قالَ: فَلَبِثُوا بذلكَ يَومَيْنِ، أَوْ ثَلَاثَةً، ثُمَّ جَاءَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ وَهُمْ جُلُوسٌ، فَسَلَّمَ ثُمَّ جَلَسَ، فَقالَ: اسْتَغْفِرُوا لِمَاعِزِ بنِ مَالِكٍ، قالَ: فَقالوا: غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بنِ مَالِكٍ، قالَ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: لقَدْ تَابَ تَوْبَةً لو قُسِمَتْ بيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ. قالَ: ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِن غَامِدٍ مِنَ الأزْدِ، فَقالَتْ: يا رَسولَ اللهِ، طَهِّرْنِي، فَقالَ: وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إلَيْهِ فَقالَتْ: أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كما رَدَّدْتَ مَاعِزَ بنَ مَالِكٍ، قالَ: وَما ذَاكِ؟ قالَتْ: إنَّهَا حُبْلَى مِنَ الزِّنَى، فَقالَ: آنْتِ؟ قالَتْ: نَعَمْ، فَقالَ لَهَا: حتَّى تَضَعِي ما في بَطْنِكِ، قالَ: فَكَفَلَهَا رَجُلٌ مِنَ الأنْصَارِ حتَّى وَضَعَتْ، قالَ: فأتَى النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فَقالَ: قدْ وَضَعَتِ الغَامِدِيَّةُ، فَقالَ: إذًا لا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا ليسَ له مَن يُرْضِعُهُ، فَقَامَ رَجُلٌ مِنَ الأنْصَارِ، فَقالَ: إلَيَّ رَضَاعُهُ يا نَبِيَّ اللهِ، قالَ: فَرَجَمَهَا

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக’’ என்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக’’ என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?’’ என்று கேட்டார்கள். அவர், “விபசாரக் குற்றத்திலிருந்துஎன்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?’’ என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?’’ என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபசாரம் செய்தீரா?’’ என்று கேட்டார்கள். அவர் ஆம்என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது’’ என்று கூறினர். வேறு சிலர்,  மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, ‘என்னைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்என்று கூறினார்’’ என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

 

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்’’ என்று கூறினார்கள். ‘‘அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!’’ என்று மக்கள் வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.

பின்பு ஃகாமிதிய்யாகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்’’ என்று கூறினார்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)’’ என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தை’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா’’ என்றார்கள்.

 

பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்’’ என்று கூறினார்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) அவர்களின் முகத்தில் தெறித்தது.

 

அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்’’ என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார். (முஸ்லிம் 3499)

 

அந்த பாவத்திற்கு கல்லால் எறிந்து கொல்லப்படும் என்று தெரிந்தும் செய்து விட்ட அந்த குற்றத்திற்காக திரும்பத் திரும்ப வந்து என்னைத் தூய்மைப்படுத்துங்கள்! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்!என்று முறையிடுகிறார்கள். தான் செய்த பாவத்தை எண்ணி, திருந்தி, இறைவனுக்கு பயந்ததன் காரணத்தினால் தான் திரும்பத் திரும்ப வந்து தண்டனையைக் கேட்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தத் தோழர் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்ததன் காரணத்தினால், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? இவர் போதையில் இருக்கின்றாரா? என்று கேட்ட பிறகும் கூட அவர்களது உள்ளம் தண்டனையைத் தேடுகிறது.

அவர்கள் நினைத்திருந்தால் தான் செய்த தவறை யாருக்குமே தெரியாமல் மூடி மறைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அல்லாஹ்வுக்குப் பயந்து தவறை ஒத்துக் கொண்டு தண்டனையையும் பெறுகிறார்கள். இது இறையச்சத்தின் வெளிப்பாடு.

அதை விட ஆச்சரியம் என்னவென்றால் அப்படியொரு தண்டனையை ஒருவருக்கு நிறைவேற்றப்பட்டதைப் பட்டதை நேரடியாக கண்கூடாக பார்த்த பிறகும் இன்னொரு பெண்மனி தான் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டு அவர்களும் தண்டனையைப் பெருகிறார்கள். இதற்குப் பெயர் தான் இறையச்சம். அவர்கள் தான் மனிதர்களில் சிறந்தவர்கள் என்று மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

No comments:

Post a Comment