Monday, April 25, 2022

அழகிய கடன்

 

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏

அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 64:17)

அழகிய கடன் என்ற வார்த்தை குர்ஆனில் சுமார் 12 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வார்த்தைக்கு இமாம்கள் பல்வேறு விளக்கங்களைக் கூறுகிறார்கள்.

قال الحسن : كل ما في القرآن من القرض الحسن فهو التطوع

குர்ஆனில் வந்திருக்கிற அழகிய கடன் என்பதற்காகன உத்தேசம் உபரியான நற்காரியமாகும் என ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மனத்தூய்மையுடன் நன்மையை எதிர்பார்த்து செய்யும் அனைத்து அமலும் அழகிய கடனாகும் என்று சிலர் கூறுகிறார்கள்.

இன்னும் சில இமாம்கள் குடும்பத்திற்காக செலவு செய்வது என்று கூறுகிறார்கள்.

قال ابن كثير: والصحيح أنه أعم من ذلك فكل من أنفق في سبيل الله بنية خالصة وعزيمة صادقة دخل في عموم هذه الآية

கலப்பற்ற இதயத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யப்படுகின்ற ஒவ்வொன்றும் அழகிய கடனாகும் என்று இப்னுகஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல், தர்மம் செய்தல் என்பது தான் பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கூற்று.

لما نزل : " من ذا الذي يقرض الله قرضا حسنا " قال أبو الدحداح : فداك أبي وأمي يا رسول الله إن الله يستقرضنا وهو غني عن القرض ؟ قال : ( نعم يريد أن يدخلكم الجنة به )

قال : فإني إن أقرضت ربي قرضا يضمن لي به ولصبيتي الدحداحة معي الجنة ؟ قال : ( نعم ) قال : فناولني يدك ; فناوله رسول الله صلى الله عليه وسلم يده : فقال : إن لي حديقتين إحداهما بالسافلة والأخرى بالعالية , والله لا أملك غيرهما , قد جعلتهما قرضا لله تعالى .

قال رسول الله صلى الله عليه وسلم : ( اجعل إحداهما لله والأخرى دعها معيشة لك ولعيالك ) قال : فأشهدك يا رسول الله أني قد جعلت خيرهما لله تعالى , وهو حائط فيه ستمائة نخلة .

قال : ( إذا يجزيك الله به الجنة ) .

فانطلق أبو الدحداح حتى جاء أم الدحداح وهي مع صبيانها في الحديقة فناداها : يا أم الدحداح ; قالت : لبيك ; قال : اخرجي , قد أقرضت ربي عز وجل حائطا فيه ستمائة نخلة .فقال النبي صلى الله عليه وسلم : ( كم من عذق رداح ودار فياح لأبي الدحداح  قرطبي

அழகிய கடன் குறித்த வசனம் இறங்கிய பொழுது அபுத்தஹ்தா ரலி அவர்கள் நபிகள் நாயகம் அவர்களிடத்திலே வந்து என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மனிதர்களை விட்டும் தேவையற்று இருக்கக்கூடிய அல்லாஹ் நம்மிடத்தில் கடன் கேட்கின்றானா என்றார்கள். அப்போது நாயகம் அவர்கள் ஆம் கடன் கேட்கின்றான். அதை கொண்டு அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தைத் தருவான் என்றார்கள். அதற்கவர்கள். நான் அல்லாஹவிற்காக அழகிய கடன் கொடுத்து விட்டால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சொர்க்கம் செல்வதற்கு அவன் பொறுப்பெடுத்துக் கொள்வானா என்று கேட்டார்கள். ஆம் என்று நபி அவர்கள் கூறிய போது, உங்கள் கரத்தைத் தாருங்கள் என்றார்கள். நபியவர்களின் கரத்தைப் பிடித்துக் கொண்டு என்னிடத்தில் இரண்டு தோட்டங்கள் இருக்கிறது. அவ்விரண்டையும் நான் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கொடுத்து விடுகிறேன் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் இல்லை, ஒன்றை மட்டும் நீங்கள் கொடுங்கள். இன்னொன்றை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியென்றால் 600 பேரிச்சம மரங்களைக் கொண்ட அவ்விரண்டில் உயர்ந்த தோற்றத்தை அல்லாஹ்விற்காக நான் கடனாக கொடுத்து விடுகிறேன். அதற்கு உங்களை நான் சாட்சியாக ஆக்கி விட்டேன் என்று சொல்லி அந்த தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கு அவர்களது மனைவி குழந்தைகளோடு தோட்டத்திலே இருந்தார்கள். இவர்கள் தோட்டத்திற்குள் அடியெடுத்து வைக்காமல் வெளியே நின்று கொண்டு சத்தமிட்டு அனைவரும் அங்கிருந்து வெளியே வந்து விடுங்கள். நான் இந்தத் தோட்டத்தை அல்லாஹ்விற்காக அழகிய கடனாக கொடுத்து விட்டேன் என்று கூறினார்கள். (குர்துபீ)

எனவே அல்லாஹ்வின் பாதையில் நல்ல வழிகளில் செலவு செய்வதற்குப் பெயர் அழகிய கடனாகும்.

அழகிய கடனைக்குறித்த பேசுகின்ற இந்த நேரத்தில் மனிதர்களுக்கு வழங்கப்படுகின்ற கடனையும் சற்று யோசிக்க வேண்டும். இன்றைக்கு மனித வாழ்வில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது. சிறு வியாபாரிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அத்தனை அவரவர்களின் தகுதிக்கேற்ற வகையில் கடன் வாங்குகிறார்கள். ஏன்  நாம் வாழக்கூடிய இந்தியா தேசத்தின் மீது 35 லட்சம் கோடி கடன்சுமை இருக்கிறது. இதன் விளைவாக பெருமை மிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் சராசரியாக 30ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடன் அன்பை முறிக்கும் என்ற பதாகை அநேகமான கடைகளில் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். எந்த கடன் முறையின்றி, இஸ்லாமிய வழிகாட்டுதல் இல்லாமல் தரப்படுகின்றதோ அங்கே தான் அன்பு முறிவு ஏற்படும். இஸ்லாம் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி தரப்படும் கடன் உண்மையில் அன்பு அதிகரிப்பதற்கு காரணமாகத்தான் இருக்கும்.

கடன் கேட்பவர்களுக்கு தாராளமாக கொடுத்து உதவ வேண்டும்.அதில் ஏராளம் நன்மைகள் இருப்பதாக மார்க்கம் கூறுகிறது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَضَى لِأَحَدٍ مِنْ أُمَّتِي حَاجَةً يُرِيدُ أَنْ يَسُرَّهُ بِهَا فَقَدْ سَرَّنِي، وَمَنْ سَرَّنِي فَقَدْ سَرَّ اللهَ، وَمَنْ سَرَّ اللهَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ

ஒருவர் என் உம்மத்திலுள்ள ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்ன எண்ணத்தில் அவரின் ஒரு தேவையை நிறைவேற்றி வைப்பாரோ அவர் என்னை மகிழ்வித்து விட்டார். என்னை மகிழ்வித்தவர் அல்லாஹ்வை மகிழ்வித்து விட்டார்.அல்லாஹ்வை மகிழ்வித்தவரை அவன் சுவனத்தில் நுழைவித்து விடுவான். (தைலமி : 5702)

 

رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة

நபி அவர்கள் கூறினார்கள் ; மிஃராஜ் இரவு சுவனத்தின் வாசலில் ஸதகாவிற்கு பத்து மடங்கு கூலி கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்கு 18 மடங்கு கூலி கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. கடன் என்பது ஸதகாவை விட மிகச் சிறந்ததா? என்று ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். ஆம், யாசகம் கேட்பவர், தன்னிடம் வைத்துக் கொண்டே கேட்கிறார். ஆனால் ஒருவர் தன்னிடம் இல்லாத போது தான் கடன் கேட்கிறார். எனவே கடன் கொடுப்பதற்கு கூடுதல் நன்மை  என்றார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் : 4/414)

நிர்பந்தம் இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். திரும்பிக் கொடுத்து விடுவேன் என்ற உறுதியோடு கடன் பெற வேண்டும். தவனை வரும் போது முடிந்த வரை தாமதிக்கமல் கடனைத் திருப்பக் கொடுத்து விட வேண்டும் என்று இஸ்லாம் கடன் வாங்குபவருக்கு அறிவுரை வழங்குகிறது. கடன் வாங்குபவர் இஸ்லாம் கூறுகின்ற இதுமாதிரியான அறிவுரைகளை மனதில் வைத்துக் கொண்டு கடன் பெற்றால் அதை இலகுவாக அடைப்பதற்கான வழியை அல்லாஹ்வே அமைத்துக் கொடுத்து விடுவான்.


من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ، ومن أخذ اموال  الناس  يريد إتلافها أتلفه الله

யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோஅவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2387)

عن أبي هريرة ـ رضي الله عنه ـ عن رسول الله صلى الله عليه وسلم انه ذكر «ان رجلا من بني إسرائيل، سأل بعض بني إسرائيل ان يسلفه ألف دينار، فقال: ائتني بالشهداء أُشهدهم. فقال: كفى بالله شهيدا. قال: فأتني بالكفيل. قال: كفى بالله كفيلا. قال: صدقت. فدفعها إليه الى أجل مسمى، فخرج في البحر، فقضى حاجته، ثم التمس مركبا يركبها يقدم عليه للأجل الذي أجله، فلم يجد مركبا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار، وصحيفة منه الى صاحبه، ثم زجج موضعها، ثم أتى بها الى البحر، فقال: اللهم إنك تعلم اني كنت تسلفت فلانا ألف دينار، فسألني كفيلا، فقلت: كفى بالله كفيلا، فرضي بك، وسألني شهيدا، فقلت: كفى بالله شهيدا، فرضي بك، وأني جهدت أن أجد مركبا أبعث إليه الذي له، فلم أقدر، وإني أستودعكها.

فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يلتمس مركبا يخرج الى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل مركبا قد جاء بماله، فإذا بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبا، فلما نشرها، وجد المال والصحيفة، ثم قدم الذي كان أسلفه، فأتى بالألف دينار، فقال: والله مازلت جاهدا في طلب مركب لآتيك بمالك، فما وجدت مركبا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: أخبرك أني لم أجد مركبا قبل الذي جئت فيه. قال: فإن الله قد أدى عنك الذي بعثت في الخشبة. فانصرف بالألف دينار راشدا».

இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக் காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் சாட்சிகளை எனக்குக் கொண்டுவா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன் என்றார். கடன் கேட்டவர் சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!என்றார் அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்க்கு கடன் கேட்டவர் பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் நீர் கூறுவது உண்மையே!என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தமது வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினர்.எந்த வாகனமும் கிடைக்கவில்லை, உடனே ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, ‘இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன் அவர் பிணையாளி வேண்டுமென்றார், நான் அல்லாஹுவே பிணை நிற்கப் போதுமானவன்!என்றேன், அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக்கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார், ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!என்று கூறினேன், அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார். அவருக்குரிய(பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சிசெய்தும் கிடைக்கவில்லை என்பதெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார், அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படும் என்பதற்காக அதை எடுத்தார். அதை பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது தான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், “எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். கடன் வாங்கியவர் வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே! என்று கூறினார். கடன் கொடுத்தவர், “நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான். எனவே ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக!என்று கூறினார். (புகாரி ; 2291)

கடன் வாங்கியவர்கள் அதை திருப்பித் தருவதற்குரிய தவனை வந்த பிறகும் அதை கொடுக்க முடியாமல் சிரமப்படுவதை அறிந்தால் அவர்களுக்கு அவகாசம் அளிக்க முடியும். முடிந்தால் அதை தள்ளிபடி செய்து விட வேண்டும். கடன் கொடுக்கும் போது அதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடன் கொடுப்பவரைப் பார்த்து இஸ்லாம் கூறுகிறது.

நாட்டிலுள்ள விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி காலம் காலமாக ஆர்பாட்டங்கள் செய்து கொண்டிருக்கிற போது அதை கண்டு கொள்ளாமல் நாட்டிலுள்ள பெரும் பெரும் பண முதலைகள் வாங்கிய கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்கின்ற தனியார் நிறுவனங்களைப் போன்றும் அதற்கு சப்போர்ட்டாக இருக்கும் அரசாங்கத்தைப்  போன்றும் இல்லாமல் உண்மையில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

அவகாசம் வழங்குவது, முடிந்தால் தள்ளுபடி செய்வது. இரண்டிற்கும் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக ஹதீஸில் பார்க்க முடிகிறது.

وقال صلى الله عليه وسلم: من أنظر معسرا أو وضع عنه أظله الله في ظله رواه مسلم.

யார் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கிறாரோ அல்லது தள்ளுபடி செய்து விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் விஷேசமான நிழலைத் தருவான். (முஸ்லிம்)

وقال صلى الله عليه وسلم: من أنظر معسرا كان له كل يوم صدقة، ومن أنظره بعد حله كان له مثله في كل يوم صدقة. رواه أحمد وغيره

யார் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கிறாரோ அதில் ஒவ்வொரு நாளிலும் ஸதகா செய்த நன்மை அவருக்கு கிடைக்கும். (அஹ்மது)

عَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إن الملائكة لتلقّت بروح رجل كان قبلكم فقالوا له: هَلْ عَمِلْتَ خَيْرًا قَطُّ؟ قَالَ: لَا، قَالُوا: تَذْكُرُ؟ قَالَ: لَا إِلَّا أَنِّي رَجُلٌ كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَكُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا الْمُوسِرَ وَيَتَجَاوَزُوا عَنِ الْمُعْسِرِ، قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: تَجَاوَزُوا عَنْهُ»،

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டு விடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!' (புகாரி : 2077)

கடன் வாங்குபவர்களும் கடன் கொடுப்பவர்களும் இஸ்லாம் கூறுகிற இந்த அறிவுரைகளைப் பின்பற்றினால் இருவருக்கும் அன்பு அதிகரிக்குமே தவிர கடன் அன்பை முறிக்காது.

 

1 comment: