Wednesday, April 6, 2022

நம்மிடம் என்ன இருக்கிறது பெருமை கொள்வதற்கு ?

 

فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ  قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي  فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ

தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காட்டுவதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது.{அதைப் பார்த்தஅவர் அந்தோ!  நான் இந்தக் காகத்தைப் போன்று ஆகுவதற்குக் கூட இயலாது போகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனின் பிரேதத்தை மறைத் திருப்பேனே! என்று கைசேதப்படுபவராக ஆகிவிட்டார். அல்குர்ஆன்.  {5 ; 31}

من المهم أن نعرف أن آدم وحواء كانا يولد لهما في كل بطن توءمان؛ ذكر وأنثى، وفي ذلك حكمة بالغة من أجل زيادة أعداد البشر، وسرعة تكاثرهم، والنمو السريع للبشرية، وقد أمر الله تبارك وتعالى آدم أن تكون شريعته أن الذكر والأنثى من البطن الواحدة لا يتزوجان، وإنما يتزوج الأنثى توءم الذكر الآخر.

وتبدأ أحداث القصة بأن وُلِد لآدم قابيل وله أخت، وولد هابيل وله أخت، وكان قابيل أكبر من هابيل، وكانت الأنثى توءم قابيل جميلة، ولكن الأنثى توءم هابيل فتاة عادية، والشرع يقول إن هابيل سيتزوج أخت قابيل الجميلة، وقابيل سيتزوج أخت هابيل الأقل جمالا، فأراد قابيل أن يستأثر بأخته، وأن يتزوجها هو ولا يعطيها لهابيل، ورغم أن آدم أمره أن يقبل شريعة الله، إلا أن قابيل أصر وظل مصرا على موقفه.


أمام هذا الإصرار طلب آدم من ولديه أن يقربا قربانا فأيهما يقدم قربانه وتأكله النار سيتزوج من الأخت الجميلة، فقدم قابيل حزمة من زرع رديء حيث كان مزارعا، أما هابيل -وكان راعي غنم- فقدم بقرة ثمينة من أفضل الماشية لديه، فأكلت النار قربان هابيل، ورفضت قربان قابيل، فقرر قابيل بعدها أن يقتل أخاه..{فطوعت له نفسه قتل أخيه فقتله}.. 


ஆதம் (அலை) அவர்களின் இரண்டு மகன்களில் காபில் என்பவர் ஹாபிலைக் கொலை செய்து விடுகிறார். கொலை செய்து விட்டு அந்தப் பிரேதத்தை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரிய வில்லை. பிரேதத்தை தோளிலே போட்டுக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சுமந்து திரிகிறார்.

عن ابن عباس : مكث يحمل أخاه في جراب على عاتقه سنة ، حتى بعث الله الغرابين ، فرآهما يبحثان ، فقال : ( أعجزت أن أكون مثل هذا الغراب ) فدفن أخاه

தன் சகோதரனின் பிரேதத்தை தன் தோளில் சுமந்து கொண்டு ஒரு வருடமாக திரிந்தார் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 عن مجاهد : وكان يحمله على عاتقه مائة سنة ميتا ، لا يدري ما يصنع به يحمله ، ويضعه إلى الأرض حتى رأى الغراب يدفن الغراب ،

அந்தப் பிரேதத்தை நூறு வருடங்களாக தன் தோளில் சுமந்து கொண்டிருந்தார் என முஜாஹித் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அப்போது அல்லாஹ் இரு காகங்களை அனுப்புகிறான். அதில் ஒரு காகம் செத்த இன்னொரு காகத்தை மண்ணைத் தோண்டி புதைத்தது. அதைப் பார்த்த பிறகு இந்த அறிவு கூட எனக்கு இல்லாமல் போய் விட்டதே என்றெண்ணி காபீல் கைசேதப்படுகிறார்.இறந்த ஒரு பிரேதத்தை என்ன செய்ய வேண்டும் என்ற அறிவை அல்லாஹ் மனித சமூகத்திற்கு ஒரு காகத்தின் வழியே கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு பிரேதத்தைப் புதைக்கும் அறிவை காகம் கற்றுக் கொடுத்தது. இந்த வகையில் காகம் தான் மனிதனுக்கு முதல் ஆசிரியன்.              

عن أبي بن كعب رضي الله عنه أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

إِنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ ، فَسُئِلَ : أَيُّ النَّاسِ أَعْلَمُ . فَقَالَ : أَنَا  فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْه

மூஸா நபி அலை அவர்கள் மக்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது மக்களில் மிக நன்கறிந்தவர் யார் என்று ஒருவர் கேட்டார். அப்போது அவர்கள் நான் என்று கூறினார்கள்.

வேதம் கொடுக்கப்பட்டு இறைச்செய்தியைப் பெறுகிற காரணத்தினால் மக்களில் ரசூல்மார்கள் தான் மிக நன்கறிந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் அவர்கள் கூறிய பதில் சரி தான். என்றாலும் அந்த நேரத்தில் அவர்கள் அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன் என்று சொல்ல வேண்டும் என்று தான் அல்லாஹ் எதிர் பார்த்தான். அவ்வாறு கூறாமல் அதை தன் பக்கம் இணைத்துக் கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு அதை புரிய வைப்பதற்குத்தான் ஹிள்ர் நபி அலை அவர்களிடம் அனுப்பினான். அங்கே அந்த விஷயத்தை அவர்களுக்கு ஒரு சிட்டுக்குருவி புரிய வைத்தது.

أنهما لما ركبا السفينة وجرت، نزل عصفور على جنب السفينة، فنقر في الماء نقرة، فقال الخضر لموسى، ماذا ترى هذا العصفور نقص من ماء البحر؟ فقال موسى قليلاً، فقال: يا موسى ما نقص علمي وعلمك من علم الله إلا ما نقص هذا العصفور من ماء البحر

நபி மூஸா (அலை) அவர்கள் ஞானத்தைத் தேடி கிழ்ர் (அலை) அவர்களிடம் சென்றார்கள். கப்பலிலே அந்த ஆன்மீகப் பயணம் தொடங்குகிறது, அந்தப் பயணத்தில் சிட்டுக்குருவி ஒன்று கப்பலின் விளிம்பில் வந்து அமர்ந்து, அந்த கடலில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை கொத்தியது. அப்போது பாடம் ஆரம்பித்து விட்டது, அங்கே புத்தகம் இல்லை. அங்கு பாடப் புத்தகமே அந்தச் சிட்டுக்குருவி தான். கிழ்ர்{அலை}  அவர்கள் மூஸா (அலை) அவர்களிடத்தில் சொன்னார்கள் ;  கல்வி என்பது இந்தக் கடல் அளவு என்றால் நாம் பெற்றிருக்கும் கல்வி என்பது இந்தக் சிட்டுக்குருவியின் அலகில் ஒட்டியிருக்கும் தண்ணீர் சொட்டின் அளவு தான். (ஹயாதுல் ஹயவான்)

இங்கே சிட்டுக் குருவியின் மூலமாக அல்லாஹ் பாடம் கற்பித்துக் கொடுத்தான்.

இன்று உலக நாடுகளில் பல்வேறு துறைகள் இருந்தாலும், உளவுத் துறை என்பது எல்லா நாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான துறைகளில் ஒன்று. ஒரு நாட்டுக்கு எதிரான செய்திகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான தகவல்களை சேகரிக்கும் அந்த உளவுத்துறை நமக்கு சொந்தமானது என்று நினைக்கிறோம். ஆனால் உலகத்திலேயே முதல் உளவுத்துறை அதிகாரி ஒரு பறவை.

وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ الي اخر قصة بلقيس

அகில உலகத்தையும் கட்டி ஆண்ட சுலைமான் (அலை) அவர்களுக்கு நாம் இன்னும் பிடிக்க வேண்டிய ஒரு நாடு இருக்கிறது,அதன் பெயர் ஸபா. அந்த நாட்டில் ஒரு அரசும் இருக்கிறது,அதை ஆளுபவர் ஒரு அரசி என்ற செய்தியை அந்த ஹுத்ஹுத் பறவை சொன்னது. {அல்குர்ஆன் : 27 ; 22 }

இன்றைக்கு மருத்துவம் மிக உயர்ந்த படிப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனுடைய உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கு என்ன மருத்துவம் செய்தால் குணம் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்து அந்த நோயை குணப்படுத்துகின்ற மருத்துவர்கள் உண்மையில் மிக உயர்ந்தவர்கள் தான். ஆனால் உலகத்தில் முதன் முதலாக மருத்துவக் கலையை மனித சமூகத்திற்கு கற்றுக் கொடுத்தது ஒரு குரங்கு.

தேவ்பந்த தாருல் உலூமின் துணை வேந்தராக இருந்த காரி தைய்யிப் ஸாப் அவர்கள் ஒரு அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்கள். அயோத்தியாவில் குரங்குகள் அதிகம்.வீடுகளில் அது புகுந்து செய்யும் தொல்லைகளும் அதிகம்.{குற்றால குரங்குகளில் நமக்கும் இந்த அனுபவம் உண்டுஉணவுகளை பத்திரமாக பாதுகாக்க முடியாது.அது வந்து எடுத்துச் சென்று விடும். அதற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து  ரொட்டியில் விஷம் கலந்து அதை வீட்டு மொட்டை மாடியில் பரத்தி வைத்தார்கள்.

ஒரு குரங்கு வந்தது.அது அதை எடுத்து சாப்பிடப் போனது. தொடர்ந்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கு அங்கே ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வந்த குரங்கு அந்த ரொட்டியை எடுத்து சாப்பிடாமல் அதை எடுத்து நுகர்ந்து பார்த்தது.பிறகு அதை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டது.

ஆகா.....! திட்டம் தோல்வியுற்று விட்டதே என்று எண்ணிக் கொண்டிருக் கையில் சென்ற குரங்கு அங்கு பெரிய பட்டாளத்தோடு திரும்பி வந்து சேர்ந்தது.வந்த எல்லா குரங்கின் கையிலும் ஒரு செடி இருந்தது. ரொட்டியை ஒரு கடி,செடியில் ஒரு கடி. அது விஷ முறிவு மூலிகைச் செடி.வீட்டுக் காரனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே எல்லா ரொட்டிகளையும் திண்ணுத் தீர்த்து ஏப்பம் விட்டு பை பை சொல்லிச் சென்று விட்டது.வீட்டுக்காரன் அதற்கு புத்தி புகட்ட நினைத்தால் அது அவனுக்கு புத்தி புகட்டிச்சென்று விட்டது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் எதைக் கொண்டெல்லாம் பெருமைப்படுகிறோமோ, நாம் உயர்ந்தவர்கள் என்று கர்வம் கொள்கிறோமோ, அவை அனைத்தையும் நமக்கு கற்றுக்கொடுத்தது சாதாரண பிராணிகள். எவைகளையெல்லாம் நமக்கு சொந்தமானது, நமக்கு மட்டுமே உரியது  என்று நினைக்கிறோமோ அவை அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பது சாதாரண ஜீவராசிகள் எனும் போது பெருமைப் பட்டுக் கொள்வதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை. எனவே நாம் பெருமையை விட வேண்டும்.ஒருவன் அழிந்து போவதற்கு மிக முக்கியமான காரணமே பெருமை தான். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் காரூன்.

قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْ‌ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا‌ وَلَا يُسْـٴَــلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ

அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலி களாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.) (அல்குர்ஆன் : 28:78)

அவனுக்கிருந்த எண்ணிடலங்கா பொருளாதாரங்கள், செல்வங்கள் அனைத்தையும் என்னுடைய சொந்த அறிவினாலும் திறமையினாலும் தான் பெற்றேன் என்று பெருமை கொண்டான். அதனால் அவன் அழிந்து போனான்.ஷைத்தான்,நம்ரூத்,ஃபிர்அவ்ன்,ஆத் கூட்டம் இன்னும் எண்ணற்ற பேரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பெருமைக்குறிய விஷயங்கள் நம்மிடம் இருந்தாலும் அவை இறைவன் கொடுத்தவை என்று உணர வேண்டும். அந்த பணிவு தான் நம்மை உயர்த்தும்.மேற்கூறப்பட்ட வரலாறுகள் நமக்கு கூறும் முதல் செய்தி இது.

இரண்டாவது செய்தி, நமக்கு எண்ணற்ற பாடங்களைக் கற்றுத் தருகிற இது மாதிரியான பிராணிகளை அர்ப்பமாக நினைக்காமல் அவைகளையும் மதிக்க வேண்டும். அவைகள் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும். பிராணிகள் மீது இரக்கம் கொண்டதால் வெற்றி பெற்றவர்களும் உண்டு. பிராணிகளை வதைத்ததால் இறைவனின் கோபத்தைப் பெற்றவர்களும் உண்டு. வல்ல ரஹ்மான் புரிந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக!

(நன்றி : கண்ணியத்திற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய s.s. அஹ்மது ஹழ்ரத் கிப்லா அவர்கள்)

No comments:

Post a Comment