وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ
الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَآءَكَ
فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)
கடந்த கால வரலாறுகளைப் படிப்பதும் அலசுவதும் ரொம்பவே முக்கியமானது. வரலாறுகள் கடந்த கால நிகழ்வுகளின் வரிசை முறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது.
வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி
வரலாற்று வல்லுநர்கள் விவாதித்ததில், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை
வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக வரலாற்றைக் கருதுகின்றனர்.
கடந்த கால வரலாறுகள் தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்
ஒரு தேசத்தின் வரலாறு என்பது எந்தவொரு பயனும் இல்லாதது
என்று விளங்கி விட முடியாதது. ஒரு தேசத்திற்கு எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ,
அதேபோல இறந்தகால வரலாறும்
முக்கியம். மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றை தாங்களே படைக்கிறார்கள். ஆனால் அவர்கள்
அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள் நிகழ்கால சூழ்நிலையையும்,
முன்னோர்கள் அவர்களுக்களித்த
இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள். ஒரு தேசிய கருத்தியல் மக்களின்
வரலாற்று நினைவுடன் எவ்வளவு ஒத்துப்போகிறதோ, அதற்கேற்றவாறே கருத்தியலின் வேகம் இருக்கும். அவ்வாறு
இருக்கும் பொழுது மக்களின் பேரெழுச்சி நடக்கும். தங்களின் அன்றாட கவலைகளை மறந்து,
பயத்தினை துறந்து பொது நன்மைக்கு
போராடத் தயாராகுவார்கள்.நபி ﷺ
அவர்கள் எதிரிகள் மூலமாக மனதளவில் காயப்படும் பொழுதெல்லாம்
அவர்களுக்கு அறுமருந்தாக இருந்தது கடந்த கால நபிமார்களின் வரலாறுகள்.ஸஹாபாக்களின்
நிலையும் அவ்வாறு தான். இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் இறைவசனம் அந்த
கருத்தைத் தான் உள்ளடக்கியிருக்கிறது.
வரலாறுகளை வைத்தே மொழியைக் காக்க முடியும்.
யூதர்கள் தங்களின் மொழியை மறந்தாலும், இன்று நாட்டை அடைந்த பின் இறந்து போன மொழியை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
அதேபோல இந்துத்துவாவும் முனைகிறது. இறந்து போன வடமொழியை உயிர்ப்பிக்க ஏராளமான பணத்தைக்
கொட்டுகிறது. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் வரலாற்றைத் தக்கவைத்து தங்களை அழியாமல்
பாதுகாத்துக் கொண்டதால் தான், வரலாற்றால் இறந்து போன மொழியையும் மீட்க முடியும்.ஆனால் வரலாற்றைக் கற்பிக்காமல்
மொழியை மட்டும் கற்பித்தால், மொழியும் அழியும் இனமும் அழியும்.
இப்படி வரலாறுகளால் மனித சமூகம் அடையும் நன்மைகள் ஏராளம். எனவே தான் குர்ஆனில் அநேகமான இடங்களில் அல்லாஹ் முந்தைய நபிமார்களின் வரலாறுகளையும் நல்லோர்களின் சரித்திரங்களையும் கோடிட்டுக் காட்டுகிறான்.
لم يعتمد القرآن الكريم أسلوباً واحداً
لإيصال رسالته إلى الناس، بل تعددت أساليبه وتنوعت، فهو حيناً يعتمد أسلوب الحوار،
وحيناً آخر يعتمد أسلوب ضرب المثل، وتارة يعتمد أسلوب التربية النفسية والتوجيه الخلقي
மக்களை நல்வழிப்படுத்த மக்களுக்கு நேரான வழிகளை
காட்ட அல்லாஹ் அருள்மறை வேதத்தை நமக்களித்திருக்கிறான். குர்ஆனில் அல்லாஹுத்தஆலா
தன் அடியார்களுக்கு தன் செய்திகளைச் சொல்வதற்கு பல்வேறு வழிகளைப்
பயன்படுத்துகிறான். வாக்குறுதி, எச்சரிக்கை,வெளிப்படையாகச் சொல்லுதல்,மறைமுகமாகச்
சொல்லுதல், உதாரணங்கள். இப்படி எண்ணற்ற விஷயங்கள் குர்ஆனில் உண்டு. அதில் ஒன்று
தான் வரலாறுகள்.
والقصص القرآني على ثلاثة أنواع
الأول: قصص الأنبياء، وقد تضمنت دعوتهم
إلى قومهم، والمعجزات التي أيدهم الله بها، وموقف المعاندين منهم، ومراحل الدعوة وتطورها
وعاقبة المؤمنين والمكذبين. كقصة نوح، وإبراهيم، وغيرهم من الأنبياء والمرسلين ، عليهم
جميعاً أفضل الصلاة والسلام.
الثاني: قصص تتعلق بحوادث غابرة، كقصة الذين
أخرجوا من ديارهم وهم ألوف حذر الموت، وطالوت وجالوت، وابني آدم، وأهل الكهف، وذي القرنين،
وقارون، وأصحاب السبت، ومريم، وأصحاب الأخدود، وأصحاب الفيل وغيرهم.
الثالث: قصص تتعلق بالحوادث التي وقعت في
زمن رسول الله صلى الله عليه وسلم، كغزوة بدر، وأُحد، وحُنين، وتبوك، والأحزاب، والهجرة،
والإسراء، ونحو ذلك. ولا يخرج القصص القرآني عن هذه الأنواع الثلاثة
குர்ஆனில் அல்லாஹ் மூன்று விதமான வரலாறுகளை குறிப்பிடுகிறான்.
ஒன்று நபிமார்களுடைய வரலாறுகள். அவர்கள் சமுதாயத்தை இஸ்லாத்தின் பக்கம் அழைத்த விதம்,
அவர்களின் மூலமாக அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதங்கள், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களைப்
பற்றிய செய்திகள், அவர்களை நிராகரித்த மக்களுக்கு ஏற்பட்ட அல்லாஹ்வின் வேதனைகள்.
இரண்டாவது பெருமானார் ﷺ
அவர்களுடைய காலத்திற்கு முன்னால்
நடந்த நிகழ்வுகள். ஆதம் நபி அலை அவர்களுடைய
இரண்டு மகன்களைப் பற்றிய செய்திகள்,கஙஃப் வாசிகளுடைய வரலாறு, தாலூத் மன்னரின் வரலாறு,
துல்கர்னைன் அவர்களுடைய வரலாறு, காரூனுடைய வரலாறு, மர்யம் அலை அவர்களின் வரலாறு.
மூன்றாவது நபி ﷺ அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்த வரலாறுகள். பதர் போர்,உஹது போர், ஹிஜ்ரத் மிஃராஜ்
போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மனிதர்கள் கூறும் வரலாறுகளுக்கும் இறைவன்
கூறும் வரலாறு களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
1, குர்ஆனுடைய வரலாறுகள் உண்மையானது.
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ لَيَجْمَعَنَّكُمْ
اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை.
அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை.
அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்? (அல்குர்ஆன் : 4:87)
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَـقُّ
وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத்
தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான்
(அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:62)
2, அல்லாஹ் கூறும் வரலாறுகள் அழகிய வரலாறுகள்.
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ
بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ
الْغٰفِلِيْنَ
(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க
அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை
அறியாதவராகவே இருந்தீர்கள். (அல்குர்ஆன் : 12:3)
3, அல்லாஹ் கூறும் வரலாறுகள் மக்களுக்கு பயன்
தரக்கூடியவை.
لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ
لِّاُولِى الْاَلْبَابِ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ
بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில்
நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக
இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு
நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)
குர்ஆனின் வசனங்களால் எண்ணற்ற நன்மைகள்
இருக்கிறது.
فاقصص القصص لعلهم يتفكرون
எனவே அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
சரித்திரத்தை ஓதிக் காட்டுங்கள். (அல்குர்ஆன் : 7 ; 176)
وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ
الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَآءَكَ
فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே,
நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து
இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும்,
நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு
நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)
நபி ﷺ
அவர்களுக்கு ஏற்படும்
சிரமங்களில் அவர்களுக்கு ஆறுதல் கிடைப்பதற்கும் மனஅமைதி ஏற்படுவதற்கும்
அல்லாஹுத்தஆலா குர்ஆனில் எண்ணற்ற நபிமார்களின் வரலாறுகளைச் சொல்கிறான்.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَا نَشُدُّ
بِهِ قَلْبَكَ. وَقَالَ ابْنُ جُرَيْجٍ: نُصَبِّرُ بِهِ قَلْبَكَ حَتَّى لَا تَجْزَعُ. (قرطبي)
வரலாறுகள் உள்ளத்தை உறுதிபடுத்தும்.
சிரமங்களின் போது பொறுமை ஏற்படும் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
تَثْبِيتُ الفُؤادِ عَلى أداءِ الرِّسالَةِ
وعَلى الصَّبْرِ واحْتِمالِ الأذى، وذَلِكَ لِأنَّ الإنْسانَ إذا ابْتُلِيَ بِمِحْنَةٍ
وبَلِيَّةٍ فَإذا رَأى لَهُ فِيهِ مُشارِكًا خَفَّ ذَلِكَ عَلى قَلْبِهِ، كَما يُقالُ:
المُصِيبَةُ إذا عَمَّتْ خَفَّتْ، فَإذا سَمِعَ الرَّسُولُ هَذِهِ القِصَصَ، وعَلِمَ
أنَّ حالَ جَمِيعِ الأنْبِياءِ صَلَواتُ اللَّهِ عَلَيْهِمْ مَعَ أتْباعِهِمْ هَكَذا،
سَهُلَ عَلَيْهِ تَحَمُّلُ الأذى مِن قَوْمِهِ، وأمْكَنَهُ الصَّبْرُ عَلَيْهِ. (رازي)
பொதுவாக ஒரு சோதனை ஒருவருக்கு மட்டும் வந்தால்
அது பெரிய வேதனையாக இருக்கும். அதுவே பொதுவாகி விட்டால் கொஞ்சம் ஆறுதல் ஏற்படும்.
இது மனித இயல்பு. அந்த அடிப்படையில் முந்தைய நபிமார்கள் சந்தித்த சோதனைகளைக்
கூறுவதின் மூலம் நபி ﷺ
அவர்களுக்கு ஏற்படும் சோனையை அவர்கள் இலேசாக கருதி அதன் மூலம் அவர்கள் ஆறுதல்
அடைவார்கள். எனவே தான் அல்லாஹ் குர்ஆனில் நிறைய நபிமார்களின் வரலாறுகளைப் பதிவு
செய்திருக்கிறான். (தஃப்ஸீர் ராஸீ)
عَنِ الْأَعْمَشِ ، قَالَ : سَمِعْتُ أَبَا
وَائِلٍ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَسَمَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ : إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ
مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ
قَالَ : " يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ ".
நபி ﷺ அவர்கள் ஒருமுறை போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள்.
அப்போது ஒருவர் நிச்சயம் இதில் அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட வில்லை என்று அதிருப்தியுடன்
கூறினார். நான் நபி ﷺ அவர்களிடம் சென்று அதை தெரிவித்தேன். அதைக் கேட்டு
அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அடையாளத்தை நான் அவர்களின்
முகத்தில் கண்டேன். பிறகு மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக. இதை விட மிக
அதிகமாக அவர்கள் புண்படுத்தப்பட்டார்கள். இருந்தாலும் அவர்கள் சகித்துக் கொண்டார் என்று
கூறினார்கள். (புகாரி ; 3405)
தன் சமூகத்தில்
ஒருவரால் தனக்கு நோவினை ஏற்பட்ட போது மூஸா நபி அலை அவர்களை நினைத்துப் பார்த்து
ஆறுதல் அடைகிறார்கள்.
عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ قَالَ :
شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ
بُرْدَةً لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ، قُلْنَا لَهُ : أَلَا تَسْتَنْصِرُ لَنَا، أَلَا
تَدْعُو اللَّهَ لَنَا ؟ قَالَ : " كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ
لَهُ فِي الْأَرْضِ فَيُجْعَلُ فِيهِ، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ،
فَيُشَقُّ بِاثْنَتَيْنِ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ
الْحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ
دِينِهِ، وَاللَّهِ لَيُتِمَّنَّ هَذَا الْأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ
إِلَى حَضْرَمَوْتَ لَا يَخَافُ إِلَّا اللَّهَ أَوِ الذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ
تَسْتَعْجِلُونَ
அல்லாஹ்வின் தூதர் ﷺ
அவர்கள் கஅபாவின் நிழலில்
தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின்
எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை
ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலை மீது வைக்கப்பட்டு
அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அது அவரை அவரது மார்க்கத்திலிருந்து
பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள
எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து
பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும்.
எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ‘விலிருந்து “ஹளர மவ்த்‘ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத்
தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும்
அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை
தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள். (புகாரி ; 3612)
எதிரிகளால் அவர்கள்
சந்தித்த துன்புறுத்தல்களை ஸஹாபாக்கள் நபி ﷺ
அவர்களிடத்தில் வந்து கூறிய போது அவர்கள் ஈமானுக்கு முன்னோர்கள் சந்தித்த
கொடுமைகளை நினைவுபடுத்துகிறார்கள்.
எனவே வரலாறுகள் நமக்கு
ஆறுதல்களைத் தருகிறது. ஈமானுக்கு உறுதியைத் தருகிறது.
No comments:
Post a Comment