Sunday, April 2, 2023

நிம்மதி

 

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌  اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 13:28)

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்;  அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 8:2)

இந்த இரண்டு வசனங்களில் முதல் வசனம் அல்லாஹ்வை நினைவு கூறுவதால் உள்ளம் அமைதி பெறுவதாக சொல்கிறது. இரண்டாவது வசனம் அல்லாஹ்வை நினைவு கூறுவதால் உள்ளம் நடுங்குகிறது  என்று எடுத்துரைக்கிறது. இரண்டும் எதிரெதிரான கருத்தைக் கொண்டிருக்கிறது.

இதற்கு இரண்டு வகையான பதில்களை இமாம்கள் கூறுகிறார்கள். ஒன்று, நாம் செய்யக்கூடிய நற்காரியங்களுக்கு அல்லாஹ் நிச்சயம் கூலிகளை வழங்குவான். சொர்க்கத்தைத் தருவான்.அதை எண்ணிப் பார்க்கின்ற போது உள்ளம் அமைதி பெறுகிறது. மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற தண்டனைகளை நினைத்துப் பார்க்கின்ற பொழுது உள்ளம் நடுங்குகிறது.

இரண்டாவது, அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் வாக்குறுதியில் உண்மையாளர்கள். நாம் செய்கின்ற நற்கருமங்களுக்கு தகுந்த கூலிகள் வழங்கப்படும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது நிச்சயம் கிடைக்கும். அதை நினைக்கும் போது உள்ளம் அமைதி பெரும்.  நாம் செய்கின்ற காரியங்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று நினைக்கின்ற போது உள்ளம் நடுங்கும்.

وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ‏

எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், (அல்குர்ஆன் : 23:60)

عَنْ عَائِشَةَ؛ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ﴿وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ﴾ ، هُوَ الَّذِي يَسْرِقُ وَيَزْنِي وَيَشْرَبُ الْخَمْرَ، وَهُوَ يَخَافُ اللَّهَ عَزَّ وَجَلَّ؟ قَالَ: "لَا يَا بِنْتَ أَبِي بَكْرٍ، يَا بِنْتَ الصِّدِّيقِ، وَلَكِنَّهُ الَّذِي يُصَلِّي وَيَصُومُ وَيَتَصَدَّقُ، وَهُوَ يَخَافُ اللَّهَ عَزَّ وَجَلَّ".

இந்த வசனத்தில் அவர்களின் உள்ளம் நடுங்கி கொண்டிருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் யார்? திருடக்கூடியவர்களா? விபச்சாரம் செய்யக்கூடியவர்களா? மது அருந்தக்கூடியவர்களா? என்று ஆயிஷா ரலி அவர்கள் கேட்ட போது, இல்லை அபூபக்கர் மகளே! அவர்கள் தொழுவார்கள். நோன்பை நோற்பார்கள். தானதர்மங்கள் செய்வார்கள். அவைகள் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை நினைத்து அஞ்சுவார்கள் என்று நபி அவர்கள் பதில் கூறினார்கள். (இப்னு கஸீர்)

 

أنَّ المَوْجُوداتِ عَلى ثَلاثَةِ أقْسامٍ: مُؤَثِّرٌ لا يَتَأثَّرُ، ومُتَأثِّرٌ لا يُؤَثِّرُ، ومَوْجُودٌ يُؤَثِّرُ في شَيْءٍ ويَتَأثَّرُ عَنْ شَيْءٍ، فالمُؤَثِّرُ الَّذِي لا يَتَأثَّرُ هو اللَّهُ سُبْحانَهُ وتَعالى، والمُتَأثِّرُ الَّذِي لا يُؤَثِّرُ هو الجِسْمُ، فَإنَّهُ ذاتٌ قابِلَةٌ لِلصِّفاتِ المُخْتَلِفَةِ والآثارِ المُتَنافِيَةِ، ولَيْسَ لَهُ خاصِّيَّةٌ إلّا القَبُولَ فَقَطْ، وأمّا المَوْجُودُ الَّذِي يُؤَثِّرُ تارَةً ويَتَأثَّرُ أُخْرى، فَهي المَوْجُوداتُ الرُّوحانِيَّةُ؛ وذَلِكَ لِأنَّها إذا تَوَجَّهَتْ إلى الحَضْرَةِ الإلَهِيَّةِ صارَتْ قابِلَةً لِلْآثارِ الفائِضَةِ عَنْ مَشِيئَةِ اللَّهِ تَعالى وقُدْرَتِهِ وتَكْوِينِهِ وإيجادِهِ، وإذا تَوَجَّهَتْ إلى عالَمِ الأجْسامِ اشْتاقَتْ إلى التَّصَرُّفِ فِيها، لِأنَّ عالَمَ الأرْواحِ مُدَبِّرٌ لِعالَمِ الأجْسامِ.

وإذا عَرَفْتَ هَذا، فالقَلْبُ كُلَّما تَوَجَّهَ إلى مُطالَعَةِ عالَمِ الأجْسامِ حَصَلَ فِيهِ الِاضْطِرابُ والقَلَقُ والمَيْلُ الشَّدِيدُ إلى الِاسْتِيلاءِ عَلَيْها والتَّصَرُّفِ فِيها، أمّا إذا تَوَجَّهَ القَلْبُ إلى مُطالَعَةِ الحَضْرَةِ الإلَهِيَّةِ حَصَلَ فِيهِ أنْوارُ الصَّمَدِيَّةِ والأضْواءُ الإلَهِيَّةُ، فَهُناكَ يَكُونُ ساكِنًا، فَلِهَذا السَّبَبِ قالَ: ﴿ألا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ القُلُوبُ﴾ .

(رازي)

நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் மற்ற படைப்பினங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துபவன். ஆனால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவன். மனித உடல் என்பது மாற்றத்தை சந்திக்கும். பிற பொருளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் ரூஹ் என்பது மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை சந்திக்கும்.சோதனைகளை சந்திக்கின்ற போது உள்ளத்தில் பயமும் கவலைகளும் தடுமாற்றங்களும் ஏற்படும். அல்லாஹ்விடம் கிடைக்கும் வெகுமதிகளை எண்ணிப் பார்க்கின்ற உள்ளத்தில் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். (தஃப்ஸீர் ராஸீ)

எனவே அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்ய வேண்டும். அல்லாஹ்விடம் கிடைக்கும் அந்தஸ்துக்களை அதிகம் எண்ணிப் பார்க்க வேண்டும். அது நமக்கு நிம்மதியைத் தரும்.

இன்று அதிகம் மக்கள் தொலைத்து விட்டு,தொலைத்த இடம் தெரியாமல் அலைந்து தேடிக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷம் தான் நிம்மதி.இன்று நம்மிடம் எல்லாம் இருக்கிறது.இல்லாத ஒரே விஷயம் நிம்மதி தான்.மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான,அவசியமான தேவை நிம்மதி தான்.

மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து வஸ்துக்களுக்கும் நிம்மதியும் பாதுகாப்பும் வேண்டும்.அதனால் தான் உலகில் அனைத்து வஸ்துக்களும் தங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதைப் பார்க்கலாம்.

யாரும் தங்களை மிதித்து விடக்கூடாது என்பதற்காக எறும்புகள் மண்ணிற்குக் கீழே தங்களுக்கு இருப்பிடங்களை அமைத்து வாழ்கின்றன.

 

யாருக்கும் தாங்கள் இறையாகி விடக்கூடாது என்பதற்காக பறவைகள் மரங்களிலே தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்கிறது.

காட்டு மிருகங்கள், மனித இனம் தங்களை வேட்டையாடி விடாமல் இருப்பதற்காக மனிதன் வசிக்காத காட்டுப் பகுதியில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்கிறது.

மற்ற படைப்புக்களிலிருந்து எந்த இடையூறும்,ஆபத்துக்களும் நேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாம்,மனிதர்கள் வசிக்கின்ற ஊருக்கு மத்தியில் நமது வீடுகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இப்படி ஒவ்வொன்றும் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.காரணம்,நிம்மதியின் அடிப்படை ஆதாரம் பாதுகாப்பு தான்.

இதன் மூலம் நிம்மதியின் அருமையை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் மனித சஞ்சாரமற்ற,புற்பூண்டு முளைக்காத, வாழ்க்கையின் எந்த வசதி வாய்ப்பும் அமையப் பெறாத பாலைவனத்தில் தன் மனைவியையும்,குழந்தையையும் விட்டு வர வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்கி இப்ராஹீம் [அலை] அவர்கள் தன் குடும்பத்தை மக்காவில் விட்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வரும் போது இரு கரம் ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து கேட்ட விஷயங்களில் முதன்மையானது பாதுகாப்பு ;

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَ‏

இப்ராஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர்கள் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கி வைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக! (அல்குர்ஆன் : 14:35)

இந்த வசனத்தையும் இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்களையும் நாம் உற்று நோக்கினால் இப்ராஹீம் நபி அலை அவர்கள் அல்லாஹ்விடத்தில் அந்த நேரத்தில் ஏழு விஷயங்களைக் கேட்டார்கள். அதில் முதன்மையாக பாதுகாப்பைக் கேட்டார்கள். ஏனென்றால் பாதுகாப்பும் நிம்மதியும் அல்லாஹ்வினுடைய மிகப்பெரும் வெகுமதிகள். பாதுகாப்பு இருந்தால் மட்டுமே உலகத்தினுடைய எல்லா இன்பங்களையும் ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும். அனுபவிக்க முடியும். உலகத்தின் எல்லா வசதிகளும் இருந்தும் பாதுகாப்பும் நிம்மதியும் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஒரு மனிதன் தள்ளப்படுவான். எனவே தான் இப்ராஹீம் அலை அவர்கள் பாதுகாப்பை தன் பிரார்த்தனையில் முதன்மைப்படுத்தினார்கள். (தஃப்ஸீர் ராஸீ)

وسئل بعض العلماء الأمن أفضل أم الصحة؟ فقال : الأمن أفضل ، والدليل عليه أن شاة لو انكسرت رجلها فإنها تصح بعد زمان ، ثم إنها تقبل على الرعي والأكل ولو أنها ربطت في موضع وربط بالقرب منها ذئب فإنها تمسك عن العلف ولا تتناوله إلى أن تموت وذلك يدل على أن الضرر الحاصل من الخوف أشد من الضرر الحاصل من ألم الجسد .تفسير الرازي

நிம்மதி சிறந்ததா? ஆரோக்கியம் சிறந்ததா? என்று ஒரு அறிஞரிடம் கேட்கப்பட்ட போது ; ஆரோக்கியத்தை விட நிம்மதியே சிறந்தது என்று கூறி விட்டு அதற்கு ஆதாரமாக ஒரு உதாரணத்தையும் கூறினார்கள்.

ஒரு ஆட்டுக்கு கால் ஒடிந்து ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு விட்டால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு பழைய நிலைமைக்குத் திரும்பி தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்து விடும். ஆனால், எந்த தங்கடமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிற ஒரு ஆட்டை ஓரிடத்தில் கட்டி வைத்து அதனருகில் அதன் உணவும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்தில் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு ஓநாய் இருந்தது என்றால் அந்த ஆடு செத்து மடியுமே தவிர அந்த உணவை உண்ணாது.எனவே ஆரோக்கியமின்மையால் ஏற்படும் பாதிப்பை விட பாதுகாப்பின்மை யால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று அந்த அறிஞர் கூறுகிறார். (தஃப்ஸீர் ராஸீ)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا سنن الترمدي

 நிம்மதி,உடல் சுகம்,அன்றைய நாளின் உணவு இம்மூன்றும் அமையப் பெற்று யாருக்கு காலைப் பொழுது விடிகிறதோ அவருக்கு உலகமே கிடைத்ததைப் போல என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். [திர்மிதி]

ஆனால் இன்றைக்கு பலரின் வாழ்வு கவலைகளும்,துக்கங்களும், மனக்கஷ்டங்களும் நிறந்ததாகத்தான் அமைந்திருக்கிறது.அந்த கவலைகளைப் போக்குவதற்காக அல்குர்ஆன் கூறும் சிறந்த வழி தான் திக்ர்.

3 comments:

  1. Alhamdhu lillah
    Barakallah

    Nalla karutthukkal

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து அற்புதமாக எழுதிவருகிறீர்கள் ஆழ்ந்தகருத்துக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு நேர்த்தியாக வாசக அமைப்பு அருமை அல்லாஹ் உங்கள் கல்வியறிவை அதிகமாக்கி ஆரோக்கியமான வாழ்வை தந்தருள்வானாக!ஆமீன்

    ReplyDelete