Tuesday, April 4, 2023

நூலைப் போல சேலை

 

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏

பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். (அல்குர்ஆன் : 19:27)

يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ‌ ‏

ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்க வில்லை(யே); உன் தாயும் நடத்தைக்கெட்டவளாக இருக்கவில்லையே!" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 19:28)

மர்யம் மலை அவர்கள் தவறு செய்து விட்டதாக அந்த மக்கள் கருதிய போது ஏன் தவறு செய்தாய்? ஏன் இப்படி செய்தாய் என்பதோடு மட்டும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வில்லை. உன் தந்தை கெட்டவராக இல்லையே! உன் தாயும் நடத்தை கெட்டவளாக இருக்க வில்லையே! என்று கேட்டார்கள். அதாவது அவர்கள் நல்லவர்களாகத்தானே இருந்தார்கள். நீ மட்டும் எப்படி இந்த காரியத்தை செய்தாய் என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

அதற்கு பொருள் என்னவென்றால் ; தாயோ தந்தையோ நடத்தை கெட்டவர்களாக இருக்கும் போது பிள்ளைகளும் அவ்வாறு தான் இருப்பார்கள். தாயும் தந்தையும் நல்லவர்களாக இருந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். தாய் தந்தையினுடைய நடத்தைகள், குண நலன்கள், செயல்பாடுகள், அது பிள்ளைகளுடைய குணங்களிலும் எதிரொலிக்கும் என்பதை இந்த வசனத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று நினைக்கின்ற பெற்றோர்கள் முதலில் அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். எவ்வாறெல்லாம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறெல்லாம் அவர்கள் முதலில் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம் அவர்களுடைய பெற்றோர்கள் தான். நல்லதையும் கெட்டதையும் அவர்கள் ஆரம்பமாக கற்றுக் கொள்வதும் தெரிந்து கொள்வதும் பெற்றோர்களிடத்திலிருந்து தான்.

وان أول مدرسة يتعلم فيها الطفل هي حضن الأم، فالام الصالحة تربي طفلاً صالحاً

பிள்ளைகள் கற்றுக் கொள்கின்ற முதல் வகுப்பரை தாயின் மடி. ஸாலிஹான ஒரு தாயால் ஸாலிஹான குழந்தையை உருவாக்க முடியும் என்று கூறுவார்கள்.

பெற்றோர்கள் நல்லவர்களாக இல்லாமல் பிள்ளைகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. பிள்ளைகள் இறையச்சமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றால் பெற்றோரிடம் இறையச்சம் இருக்க வேண்டும். பிள்ளைகள் தொழுகையாளிகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பெற்றோர்கள் முதலில் அவர்கள் தொழ வேண்டும். பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பெற்றோர்கள் முதலில் அவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாத வரை பிள்ளைகளிடத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

இன்றைக்கு எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் நல்லவர்களாக நல்லொழுக்கமிக்கவர்களாக, தொழுகையாளிகளாக, குர்ஆன் ஓதுபவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. ஏனென்றால் அவ்வாறு அந்த பெற்றோர்கள் இருப்பதில்லை.

பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தால் குழந்தைகள் நிச்சயம் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்பதை வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

 المبارك) يعمل أجيرًا في بستان، فجاء صاحب البستان يومًا، وقال له: "أريد رمانًا حلوًا"، فمضى إلى بعض الشجر، وأحضر منها رمانًا، فكسره فوجده حامضًا، فغضب عليه، وقال: "أطلب الحلو فتحضر لي الحامض؟ هات حلوًا"، فمضى، وقطع من شجرة أخرى، فلما كسرها وجده أيضًا حامضًا، فاشتد غضبه عليه، وفعل ذلك مرة ثالثة، فذاقه، فوجده أيضًا حامضًا، فقال له بعد ذلك: "أنت ما تعرف الحلو من الحامض؟"، ففال: "لا"، فقال: "وكيف ذلك؟"، فقال: "لأني ما أكلتُ منه شيئًا حتى أعرفه"، فقال: "ولِمَ لَمْ تأكل؟"، قال: "لأنك ما أذنتَ لي بالأكل منه"، فعجب من ذلك صاحبُ البستان، وسأل عن ذلك فوجده حقًّا، فعظُم المبارك في عينيه، وزاد قدره عنده، وكانت له بنت خُطبت كثيرًا، فقال له: "يا مبارك، مَن ترى تزوَّج هذه البنت؟"، فقال: "أهل الجاهلية كانوا يزوجون للحسب، واليهود للمال، والنصارى للجمال، وهذه الأمة للدِّين"، فأعجبه عقله، وذهب فأخبر به أمها، وقال لها: "ما أرى لهذه البنت زوجًا غير مبارك"، فتزوجها، فجاءت بعبدالله بن المبارك؛

அப்துல்லாஹ் பின் முபாரத் ரஹ் அவர்களின் தந்தை முபாரக் ரஹ் அவர்கள் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அந்த தோட்டத்திற்கு உரிமையாளர் வந்து எனக்கு இனிப்பான ஒரு மாதுளை வேண்டும். பறித்து வா என்று சொன்னார். அவர்கள் ஒரு மரத்திலிருந்து அதை பறித்துக் கொண்டு வந்த பொழுது அது புளிப்பாக இருந்தது. நான் உன்னிடம் இனிப்பானதைத் தானே கேட்டேன். நீ புளிப்பைக் கொண்டு வந்திருக்கிறாயே என்று கூறி, இனிப்பான பழத்தை எடுத்து வா என்று சொன்னார்கள். மீண்டும் சென்று இன்னொரு மரத்திலிருந்து பழத்தைப் பறித்து வந்த பொழுது அதுவும் புளிப்பாகவே இருந்தது. அவர் கோபமடைந்து மீண்டும் எடுத்து வரச் சொன்னார். மூன்றாவது முறை அவர்கள் கொண்டு வந்த பழமும் புளிப்பாகவே இருந்தது. அதைப் பார்த்த அந்த உரிமையாளர்,இவ்வளவு காலம் இத்தோட்டத்தில் வேலை செய்கிறாய். எந்த பழம் இனிக்கும் எந்த பழம் புளிக்கும் என்று உனக்குத் தெரியாதா? என்று கேட்டார். தெரியாது என்று கூறினார்கள். இங்கு தானே பணி புரிகிறாய். உனக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ? என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது முபாரக் ரஹ் அவர்கள், நான் இங்கிருந்து ஒரு பழத்தைக் கூட எடுத்து சாப்பிட்டதில்லை. சாப்பிட்டால் தானே எந்த பழம் புளிக்கும் எந்த படம் இனிக்கும் என்று தெரியும் என்று கூறினார்கள். ஏன் சாப்பிட வில்லை? என்று கேட்ட போது இங்கிருந்து பழங்களை எடுத்து சாப்பிடுவதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரவில்லை என்று கூறினார்கள். அவர்களின் அந்தப் பேணுதலையும் இறையச்சத்தையும் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த உரிமையாளர் தன்னுடைய மகளை முபாரக் ரஹ் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். அந்த தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள். (வஃபயாதுல் அஃயான்)

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரஹ் அவர்களின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்கிறார்கள். அப்போது ஆற்றின் கரையில் பழம் ஒன்று தண்ணீரில் மிதந்து வருவதைப் பார்த்தார்கள். பசியின் கடுமையால் அந்த பழத்தை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். பசிக்கு பின் ஒரு குற்ற உணர்வாக சிந்திக்கிறார்கள். இது யாருடைய பழம்? எங்கிருந்து வந்தது? நமக்கு இந்த பழம் ஹலாலாக இருக்குமா இல்லையா? என்று கேள்விக்கு மேல் கேள்வியாக சிந்தித்து அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று பார்க்கிறார்கள். இறுதியில் ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் நடந்ததை குறிப்பிட்டு எனக்கு அந்த பழத்தை ஹலாலாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு அந்த தோட்டத்தின் உரிமையாளர் என் மகளைத் திருமணம் செய்தால் ஹலாலாக்கித் தருகிறேன்ஆனால் அவள் குருடி, ஊமை, நொண்டி, இரண்டு கையும் சூகை, என்றார்கள். இப்படி அதிர்ச்சி தரும் தகவலோடு அவரது மகளை திருமணம் செய்தால் தான் ஹலால் என்று சொன்னார்.

அனைத்தையும் நிதானமாக யோசித்து பரவாயில்லை அல்லாஹ் போதுமானவன். என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார் என்று ஒப்புக் கொண்டார்கள்.

பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்களின் சந்ததிகளும் அவ்வாறே இருப்பார்கள் என்பதற்கு இவ்விரு நிகழ்வுகளும் சான்று.

பார்த்துக் கெட்டது புள்ள பாராம  கெட்டது பயிர் என்று சொல்வார்கள்.

பொய் சொல்வது, ஆடம்பரமாக செலவு செய்வது, கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, சண்டையிடுவது, பெற்றோர்களை மதிக்காமல் நடப்பது. இப்படி எண்ணற்ற கெட்ட நடவடிக்கைகளை பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ؟ " ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : { فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதே போன்று எல்லா குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்திலே பிறக்கின்றன. விலங்குகள் அங்க குறையுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போல் பெற்றோர்கள் தான் குழந்தைகளை இயற்கையான மார்க்கத்தை விட்டு திருப்பி யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். பின்பு அபூஹுரைரா ரலி அவர்கள் (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். (அல்குர்ஆன் : 30:30) என்ற வசனத்தை ஓதினார்கள். (புகாரி ; 1359)

 

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
    நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். எனது பெயர் அப்துல் ரஹீம். நான் ஒரு பள்ளியில் கடமையாற்றுகிறேன். எனக்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு ஒரு நம்பரை தாருங்கள்

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த கொத்துபா தொகுப்புக்கள் நன்றாக உள்ளது. நானும் புதிதாக தான் உங்களுடைய இந்த தொகுப்புகளை பார்த்து வருகிறேன். மிக்க பிரயோசனமாக உள்ளது.

    ReplyDelete