ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப் படுகின்ற மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று பாதுகாப்பு.உயிர், உடமைகள்,பொருளாதாரம்,மானம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனிதன் எதிர் பார்க்கிறான்.காரணம் அதில் தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தும் ஒருவருக்கிருந்தும் அமைதியான வாழ்க்கையும், பாதுகாப்பான சூழலும் இல்லையென்றால் அவரால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போய் விடும்.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
இறைவா இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக (அல்குர்ஆன் 2:126)
இப்றாஹீம் அலை அவர்கள் மக்கமாநகரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள். அதற்கடுத்தபடியாகத்தான் மக்காவாசிகளுக்கு கனிவர்கங்களை வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டியுள்ளார்கள். அதாவது ரிஸ்கைக் கேட்டார்கள். இதற்கு இரு காரணம். 1, ஊரில் பாதுகாப்பான சூழல் இருந்தால் தான் ஒருவரால் அவர் நினைத்த இடத்திற்கு சென்று அவருக்கான ரிஸ்கை தேடிக் கொள்ள முடியும். இல்லையென்றால் அவரால் சம்பாதிக்க முடியாது. 2, பாதுகாப்பு இல்லாமல் எப்போதும் அச்ச சூழ்நிலை இருந்தால் அவரால் நிம்மதியாக உணவை உட்கொள்ள இயலாது.
والابتداء بطلب نعمة الأمن في هذا الدعاء يدل على أنه أعظم أنواع النعم والخيرات وأنه لا يتم شيء من مصالح الدين والدنيا إلا به
இப்ராஹீம் அலை அவர்கள் எல்லா விஷயங்களைக் காட்டிலும் பாதுகாப்பை ஆரம்பமாக கேட்டார்கள். ஏனெனில் பாதுகாப்பு அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மகத்தானது. பாதுகாப்பின்றி ஈருலகிலும் ஒருவரால் எந்த நலவையும் முழுமையாக பெற முடியாது என இமாம்கள் கூறுகிறார்கள்.
பாதுகாப்பான சூழலின்றி ஒருவரால் தொழுகையைக் கூட இயல்பான நிலையில் தொழ முடியாது.
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا فَاِذَآ اَمِنْتُمْ فَاذْکُرُوا اللّٰهَ کَمَا عَلَّمَکُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ
ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். (அல்குர்ஆன் : 2:239)
عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الخَطْمِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا
தனது வீட்டில் பாதுகாப்பாக இருந்த நிலையிலும், தனது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையிலும், அன்றைய நாளுக்குப் போதுமான உணவைப் பெற்றிருந்த நிலையிலும் யார் ஒரு காலைப் பொழுதை அடைகின்றாரோ, அவர் உலகையே பெற்றவர் போன்றவர் ஆவார். (திர்மிதி)
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. அந்த உணவை உட்கொள்வதற்கு ஆரோக்கியமும் பாதுகாப்பும் தேவை. ஆரோக்கியம் பாதுகாப்பு இவ்விரண்டில் ஒன்றில்லையென்றால் ஒருவனிடம் உணவு இருந்தாலும் அதை உட்கொள்ள இயலாது.
وسئل بعض العلماء الأمن أفضل أم الصحة؟ فقال : الأمن أفضل ، والدليل عليه أن شاة لو انكسرت رجلها فإنها تصح بعد زمان ، ثم إنها تقبل على الرعي والأكل ولو أنها ربطت في موضع وربط بالقرب منها ذئب فإنها تمسك عن العلف ولا تتناوله إلى أن تموت وذلك يدل على أن الضرر الحاصل من الخوف أشد من الضرر الحاصل من ألم الجسد .تفسير الرازي
பாதுகாப்பு சிறந்ததா? ஆரோக்கியம் சிறந்ததா? என்று ஒரு அறிஞரிடம் கேட்கப்பட்ட போது ; ஆரோக்கியத்தை விட பாதுகாப்பே சிறந்தது என்று கூறி விட்டு அதற்கு ஆதாரமாக ஒரு உதாரணத்தையும் கூறினார்கள்.
ஒரு ஆட்டுக்கு கால் உடைந்து நோயுற்றால் சில நாட்களில் குணமடைந்து அது பழைய நிலைமைக்குத் திரும்பி தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்து விடும். ஆனால், எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிற ஒரு ஆட்டை ஓரிடத்தில் கட்டி வைத்து அதனருகில் அதன் உணவும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்தில் ஒரு ஓநாய் இருந்தது என்றால் அந்த ஆடு செத்து மடியுமே தவிர அந்த உணவை உண்ணாது. எனவே அச்சத்தால் ஏற்படும் ஆபத்து நோயினால் ஏற்படும் ஆபத்தை விட கடினமானது. ஆகவே ஆரோக்கிய்யத்தை விட பாதுகாப்பே மிகச்சிறந்தது. (தஃப்ஸீர் கபீர்(
اللهم استر عوراتي، وآمِن روعاتي
இறைவா! என் குறைகளை மறைப்பாயாக என் திடுக்கங்களை நீக்கி எனக்கு அமைதியைத் தருவாயாக! (இப்னுமாஜா ;3871) இந்த துஆவை நபியவர்கள் காலையிலும் மாலையிலும் விடாமல் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான, மற்றெல்லா அருட்கொடைகளையும் அனுபவிப்பதற்குக் காரணமாக இருக்கிற பாதுகாப்பு என்பது நம் நாட்டில் அறவே இல்லாமல் போய் விட்டது. எப்போதும் அச்சத்தோடும் பீதியோடும் வாழுகின்ற சூழல் தான் நம் நாட்டில் நிலவுகிறது. சிறுபான்மை சமூகம் இந்த தேசத்தில் எங்கும் எப்போதும் துன்புறுத்தப்படுவதும் எந்தக் காரணமுமின்றி காவல்துறையால் கைது செய்யப்படுவதும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதும் பசுக்குண்டர்களால் கொல்லப்படுவதும் ராம் பக்தர்களால் தாக்கப்படுவதும் அவர்களின் அடையாளங்கள் அழிக்கப் படுவதும் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதும் வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் சூறையாடப்படுவதும் இன்று வாடிக்கையாகி விட்டது.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விஷ்வஹிந்து பரிஷத்தின் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல் குருகிராமின் அஞ்சுமன் ஜும்ஆ மசூதியை 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது.
ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் கட்டார் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுவதற்கும், ஈத்காக்களில் தொழுகையில் ஈடுபடுபடுவதற்கும் எதிராக தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட வெறுப்பு தான் பள்ளிவாசலை கொளுத்துவதற்கும் இமாமை கொல்வதற்கும் வன்முறையாளர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
அதேபோல் ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரான சேத்தன் சிங், வெவ்வெறு பெட்டிகளிகளில் 3 முஸ்லிம் பயணிகளையும், தனது உயரதிகாரியையும் சுட்டுக்கொன்று விட்டு, இந்தியாவில் நீங்கள் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என மற்ற ரயில் பயணிகளிடம் மிரட்டல் விடுத்ததை காணொளியில் பார்க்க முடிந்தது. நாட்டில் இருக்கிற தவறான ஆட்சியாளர்களால் வளர்க்கப்பட்ட வெறுப்பின் உச்சம் தான் இந்த வன்முறை வெறியாட்டங்களும் படுகொலைகளும்.
இவ்வாறு நாட்டில் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் ஒரு பக்கம் இந்த தேசத்தின் அமைதியை சீர்குலைத்து மக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திருக்கிறது என்றால் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் வெறுப்புணர்வை உமிழும் வன்முறைப் பேச்சுக்கள் இன்னொரு பக்கம்.
மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை மக்களிடத்தில் தனக்கான அதிகாரம் கிடைக்கவில்லை என்கிற கோபத்தில் பாசிசம் தனக்கு கொடுத்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்கிற விரக்தியில் ஓட்டு போடாத இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று ஒருவர் சொன்னது இன்று பேசு பொருளாக மாறி இருக்கிறது.
பாசிசத்திற்கு எதிராக இருக்கக்கூடிய கட்சிகள் மீது நமக்கு அவ்வளவு பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லாவிட்டாலும் நம்முடைய இலக்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான். இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தங்களுக்கு எதிராக இருக்கக்கூடிய மக்களை தனித்தனியாக சின்னா பின்னமாக ஆக்கி அவர்களின் ஓட்டை சிதறடித்து அதன் மூலம் குறைந்த சதவீதம் வாக்கைப் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்பது தான் அவர்களின் நோக்கம். அதற்காக திட்டமிடப்பட்டு களம் இறக்கி விடப்பட்டவர் தான் அவர். ஆனால் நீண்ட காலமாகியும் அந்த திட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை என்கிற விரக்தியில் தான் அவ்வாறு சொல்லி இருக்கிறார் என்பது கொஞ்சமேனும் அரசியல் ஈடுபாடு இருக்கிற அனைவருக்கும் தெரியும்.
கொஞ்சமும் மனித நேயமின்றி இரக்கமின்றி காட்டுமிரான்டித்தனமாக வன்முறை வெறியாட்டங்களை நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களும் அதைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு நிம்மதியையும் பாதுகாப்பையும் இழந்து அச்சத்திலும் பீதியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகத்தை தன் வன்மமான பேச்சால் சீண்டிப் பார்ப்பவர்களும் தான் இந்த நாட்டில் உண்மையான சாத்தானின் பிள்ளைகள். சாத்தானிலிருந்தும் சாத்தானின் பிள்ளைகளிலிருந்தும் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
நம் சமூகத்திற்கு எதிராக இந்த நாட்டில் தொடர்ந்து அநீதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.நமக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. நம் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த தேசத்தில் முஸ்லிம்கள் வாழவே முடியாமல் போய் விடுமோ என்ற அச்ச உணர்வை இது ஏற்படுத்துகிறது.
ஒரு காலம் இருந்தது. இந்த உலகம் இஸ்லாமியர்களைக் கண்டு அஞ்சியது.உமர் என்ற ஒற்றை நபரைப் பார்த்து உலகமே நடுங்கியது.
عن عبد الله بن العباس قال: قال لي علي بن أبي طالب: ما علمت أن أحداً من المهاجرين هاجر إلا مختفياً، إلا عمر بن الخطاب، فإنه لما هم بالهجرة تقلد سيفه، وتنكب قوسه، وانتضى في يده أسهماً، واختصر عنزته، ومضى قبل الكعبة، والملأ من قريش بفنائها، فطاف بالبيت سبعاً متمكناً، ثم أتى المقام فصلى متمكناً، ثم وقف على الحلق واحدة واحدة، وقال لهم: شاهت الوجوه، لا يرغم الله إلا هذه المعاطس، من أراد أن تثكله أمه، ويوتم ولده، ويرمل زوجته، فليلقني وراء هذا الوادي. قال علي: فما تبعه أحد إلا قوم من المستضعفين علمهم وأرشدهم ومضى لوجهه.
அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற அத்தனை பேரும் எதிரிகளை விட்டு மறைந்து ஒளிந்து கொண்டு தான் சென்றார்கள். ஆனால் உமர் ரலி அவர்கள் மட்டும் கம்பீரமாக கையில் வாளை ஏந்திக் கொண்டு யாரை அவருடைய தாய் இழக்க விரும்புகிறாரோ யாருடைய பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட விரும்புகிறாரோ யாருடைய மனைவிமார்கள் விதவைகளாக்கப்பட விரும்புகிறாரோ அவர் இந்த பள்ளத்தாக்கின் அருகில் என்னை சந்திக்கட்டும் என்று வீரமுழக்கமிட்டார்கள். (உஸ்துல் காபா)
ما رُويَ عن عبد الله بن مسعود رضي الله عنه قوله: (كَانَ إِسْلامُ عُمَرَ فَتْحًا، وَكَانَتْ هِجْرَتُهُ نَصْرًا، وَكَانَتْ إِمَارَتُهُ رَحْمَةً، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا نَسْتَطِيعُ أَنْ نُصَلِّيَ فِي الْبَيْتِ حَتَّى أَسْلَمَ عمر، فلما أسلم عمر قَاتَلَهُمْ حَتَّى تَرَكُونَا فَصَلَّيْنَا
உமர் ரலி அவர்களின் இஸ்லாம் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது.அவர்களின் ஹிஜ்ரத் சமூகத்திற்கு உதவியாக இருந்தது. அவர்களின் ஆட்சி மக்களுக்கு அருளாக இருந்தது. அவர்கள் இஸ்லாத்திற்கு வரும் வரை எங்களால் ஹரமில் தொழ முடிய வில்லை. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு தான் எங்களால் தொழ முடிந்தது என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் அன்றைக்கு இருந்த இஸ்லாமிய எதிரிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பணமாக இருந்தார்கள். மதீனாவிலிருந்து வெகு தொலை தூரத்தில் எங்கோ ஒரு இடத்தில் போர் நடந்து கொண்டிருக்கிற போது உமர் என்ற பெயரைக் கேட்டால் எதிரி கொலை நடுங்கிப் போவான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களைப் பற்றி எதிரிகளின் உள்ளங்களில் அச்சத்தை அல்லாஹ் ஏற்படுத்தியிருந்தான்.
அதற்கு காரணம், அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்ததால் அவர்களைப் பார்த்து அனைவரும் அச்சப்படுபவர்களாக இருந்தார்கள்.
من اتقى الله عاش قويا وسار في بلاده امنا
அல்லாஹ்வை யார் அஞ்சுகிறாரோ அவர் பலம் மிக்கவராக வாழ்வார். பூமியில் பாதுகாப்பாக பயணிப்பார். (ஹுல்யதுல் அவ்லியா ; 1984)
لما رجع
عمر من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته،
فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام
سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم،
فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن
أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك
أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟
فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم
يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن
أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين.
فوضعت العجوز يدها على رأسها، وقالت:
واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك،
يرحمك الله.
ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها:
"بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا
بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه
بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .
قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله
في كفني؛ ألقى به ربي عز وجل.
உமர் ரலி அவர்கள் சிரியாவிற்கு சென்று விட்டு
மதீனா நோக்கி தம் நண்பர்களோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களை விட்டு
பிரிந்து தனியாக வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வயதான மூதாட்டி ஒருவரை கடந்து சென்றார்கள். அந்த
மூதாட்டி உமர் ரலி அவர்களிடம் அவர்கள் தான் உமர் என்று தெரியாமல் “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் ரலி அவர்கள் சிரியாவிற்கு சென்று
மீண்டும் நலமோடு திரும்புகிறார் என்றார்கள். அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள்
என வினவினார்கள்.அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை
எனக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை என்றாள். உன் நிலைகள் உமருக்கு எப்படி
தெரியும்? என்று உமர் ரலி கேட்ட போது, அம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற
ஒருவர் தன் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தெரியாமல் இருப்பாரா?” என்று கேட்டார்.அதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் அழுதார்கள். அழுது கொண்டே ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில் உண்டு! என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்கள்.பிறகு அல்லாஹ்வின்
அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை
பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள்
உமர் ரலி அவர்கள். அதைக் கேட்ட அம்மூதாட்டி, என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர்
இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார்.அதற்கு உமர் ரலி அவர்கள், இல்லை, நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில்
கொடுத்தார்கள்.அப்போது அந்த இடத்திற்கு வந்த அலி ரலி மற்றும் இப்னு மஸ்வூத் ரலி ஆகிய இருவரும் அமீருல்
முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள். அதை செவியுற்ற அந்த மூதாட்டி, இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார். இதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள். அதில் எழுதப்பட்ட விஷயம் “அளவற்ற அருளாளன், நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல் இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை
விடுதலை செய்கிறேன். மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்த மாட்டேன்
என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி” அலி ரலி மற்றும் இப்னு மஸ்வூத் ரலி ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல்
பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள்.
அபூதல்ஹா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் என்னை அழைத்த உமர் ரலி அவர்கள் அந்த தோல்
பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை
கஃபன் செய்கிற போது “இந்த தோல் பேப்பரையும் என்னோடு
இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்றார்கள். (நவாதிருல் குலஃபா)
இந்த இறையச்சம் தான் மக்களுக்கு அவர்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது.
اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ
நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 16:128)
இறையச்சமுள்ளவர்களோடு அல்லாஹ் இருப்பதினால் அவர்கள் யாரைக் கண்டும் அஞ்ச
மாட்டார்கள். அனைவரும் அவர்களைக் கண்டு அஞ்சுவார்கள்.
خرج موسى عليه السلام يرعى غنمه ؛ فانتهى الى واد كثير الذئاب فأدركه التعب و النوم فبقى متحيرا ان اشتغل بالغنم
عجز عن ذلك من غلبة النوم و ان نام غدرت غدرت الذئاب على الغنم ؛ فرمق بطرفه الى السماء و قال : أحاط علمك و نفذت
ارادتك و سبق تقديرك ثم وضع رأسه و نام
فلما استيقظ وجد ذئبا واضعا عصاه على عاتقه و هو يرعى الاغنام فتعجب موسى من ذلك فأوحى الله اليه ان يا موسى " كن لى كما أريد أكن لك كما تريد
ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்ற மூசா நபி அலை அவர்கள் ஓநாய்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தார்கள். நீண்ட தூரப் பயணத்தினால் அவர்களுக்கு களைப்பும் தூக்கமும் ஏற்பட்டது. ஆனால் தூங்கினால் ஓநாய்களால் ஆடுகளுக்கு ஆபத்து ஏற்பட நேரிடும். அதே சமயத்தில் ஓய்வெடுக்காமல் அவர்களால் இருக்க முடியாது. அந்த நேரத்தில் அவர்கள் தன் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி இறைவா உனக்கு எல்லாம் தெரியும். உன்னுடைய நாட்டப்படியே எல்லாம் நடைபெறும். விதியில் எது இருக்கிறதோ அது நடக்கட்டும் என்று கூறி உறங்கி விட்டார்கள் கண்விழித்துப் பார்த்த பொழுது ஒரு ஆச்சரியத்தைக் கண்டார்கள். அவர்களுடைய தடியை கையில் வைத்துக்கொண்டு ஒரு ஓநாய் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ், நான் விரும்புகிற மாதிரி நீங்கள் இருந்தால் நீங்கள் விரும்புகிற மாதிரி நான் இருப்பேன் என்று கூறினான். (நுஜ்ஹதுல் மஜாலிஸ்)
அவனை அஞ்சி நடக்க
வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான். அவ்வாறு நாம் இருந்தால் நம் விருப்பத்தை
அவன் நிறைவேற்றுவான். அதாவது நம்மைப் பார்த்து அனைவரும் அஞ்சுவார்கள். அந்த நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானாக!
Arumai Mawlana கண்கள் குளமானது
ReplyDeleteகண்களை கலங்க வைத்த பதிவு முஹம்மத் ஷமீம் அஸ்ஹரி
ReplyDeleteالحمد لله
Deleteجزاك الله
அல்லாஹ் கபூல் செய்வானாக
Deleteபாரகல்லாஹ் ஹழ்ரத்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteسبحان الله
ReplyDeleteقد وجل قلبي و كادت تذرف عيناي.
மாஷா அல்லாஹ் அருமை
ReplyDeleteமாஷா அல்லாஹ்... அருமையான பதிவு துவண்டு போன மனதை, துள்ளிக்குதிக்கச் செய்யும் ஒரு பதிவு..
ReplyDeletearumaiya thagaval barAkallahhuuuu
ReplyDeleteجزاك الله خيرا
ReplyDeleteஅழகான தகவல்
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteஅல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுடைய சிந்தனையில் பரக்கத் செய்வானாக!
ஆமீன்
ReplyDelete