Thursday, August 28, 2025

மாநபியின் குழந்தைப் பருவம்

  


اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)

நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.

 

لماذا ولد نبيك يتيما فقال الله انا له ولي وحافظ ونصير

உன்னுடைய தூதரான நபி அவர்கள் தந்தையில்லா எதீமாக பிறந்ததன் காரணம் என்ன என்று மலக்குகள் கேட்ட போது, நானே அவர்களுக்கு பொறுப்பாளனாகவும் பாதுகாப்பவனாகவும் உதவி செய்பவனாகவும் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்பிதாயா வன் நிஹாயா)

அல்லாஹுத்தஆலா நபி அவர்களை தனது முழு பொறுப்பில் எடுத்துக் கொண்ட காரணத்தால் தந்தை இல்லை என்ற குறை இல்லாத அளவிற்கு பெயர் சூட்டுவதிலிருந்து வளர்ந்து உருவாகும் வரை எல்லாவற்றையும் அல்லாஹ் அவர்களுக்கு சிறப்பாகவே அமைத்துத் தந்தான்.

 

உலகில் யாருக்கும் சூட்டப்படாத பெயர்  

فعن ابن عباس رضي الله عنهم قال: «لما ولد رسول الله صلى الله عليه وسلم عقّ عنه: أي يوم سابع ولادته جده بكبش وسماه محمدا؟ فقيل له: يا أبا الحرث ما حملك على أن تسميه محمدا ولم تسمه باسم آبائه. وفي لفظ: وليس من أسماء آبائك ولا قومك؟ قال: أردت أن يحمده الله في السماء وتحمده الناس في الأرض السيرة الحلبية

நபியவர்கள் பிறந்து ஏழாம் நாள் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் அவர்களுக்காக ஆட்டை அறுத்து அகீகா கொடுத்து விட்டு, அவர்களுக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டினார்கள். அப்போது மக்காவின் தலைவர்கள் நம் மூதாதையர்களின் பெயர்களைச் சூட்டாமல் நம்மிடம் அறிமுகம் இல்லாத ஒரு பெயரை உங்கள் பேரக் குழந்தைக்கு சூட்டி உள்ளீர்களே என்று கேட்டபோது இவரை வானத்தில் அல்லாஹ் புகழ வேண்டும். பூமியில் மக்கள் புகழ வேண்டும். வானத்திலும் பூமியிலும் புகழப்படுபவராக இவர் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவருக்கு முஹம்மத் என்று பெயரைச் சூட்டினேன் என்று கூறினார்கள். (அஸ்ஸீரதுல் ஹலபியா)

ويروى أن عبد المطلب إنما سماه محمدا لرؤيا رآها: أي في منامه، رأى كأن سلسلة خرجت من ظهره لها طرف في السماء وطرف في الأرض وطرف في المشرق وطرف في المغرب، ثم عادت كأنها شجرة على كل ورقة منها نور، وإذا أهل المشرق وأهل المغرب يتعلقون بها فقصها فعبرت له بمولود يكون من صلبه، يتبعه أهل المشرق والمغرب، ويحمده أهل السماء والأرض، فلذلك سماه محمدا: أي مع ما حدثته به أمه بما رأته على ما تقدم. السيرة الحلبية

அப்துல் முத்தலிப் அவர்கள் கனவு ஒன்றைக் கண்டார்கள். அதிலே ஒரு மரத்தை பார்த்தார்கள். பூமியில் உள்ள அனைவரும் அதை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கனவுக்கான விளக்கத்தைக் கேட்ட போதுஉங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். பூமியில் உள்ள அனைவரும் அக்குழந்தையை பின்பற்றுவார்கள். வானத்திலும் பூமியிலும் அவர் புகழப்படும் மனிதராக இருப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த கனவில் பின்னணியில் தான் அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு முஹம்மது என்று பெயர் சூட்டினார்கள். (அஸ்ஸீரதுல் ஹலபியா)

وفي الشفاء أن في هذين الاسمين محمد وأحمد من بدائع آياته: أي المصطفى وعجائب خصائصه أن الله تعالى حماهما عن أن يسمى بهما أحد قبل زمانه: أي قبل شيوع وجوده. أما أحمد الذي أتى في الكتب القديمة وبشرت به الأنبياء عليهم الصلاة والسلام، فمنع الله تعالى بحكمته أن يتسمى به أحد غيره، ولا يدعى به مدعو قبله منذ خلقت الدنيا وفي حياته.

அஹ்மத், முஹம்மது என்ற இரு பெயர்களும் நபி அவர்கள் இந்த உலகில் பிறப்பதற்கு முன்பு வேறு யாருக்கும் வைக்கப்படாத அளவிற்கு அல்லாஹ் அந்த பெயர்களை பாதுகாத்து விட்டான்.

 

 

பால் குடி தாய்மார்கள்

நபி ஸல் அவர்கள் மூன்று தாய்மார்களிடம் பால் குடித்திருக்கிறார்கள்.

1.       அபூலஹபின் அடிமைப் பெண்ணான சுவைபா அவர்கள். நபியவர்களுக்கு முதன்முதலாக பால் கொடுத்த பெண்மனி இவர்கள் தான்.இவர்கள் சில நாட்கள் மட்டும் பால் கொடுத்தார்கள்.

2.       பனு ஸஅத் கிளையைச் சார்ந்த ஒரு பெண்மனி கண்மனி ரஸூலுல்லாஹி ஸல் அவர்களுக்கு ஒரு நாள் மட்டும் அமுதூட்டியிருக்கிறார்கள். இந்த இரண்டு தாய்மார்களிடத்தில் ஹம்ஜா ரலி அவர்களும் பால் குடித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஹம்ஜா ரலி அவர்கள் நபியவர்களுக்கு பால் குடி சகோதரர் ஆவார்கள்.

3.       பனூ ஸஅத் கிளையைச் சார்ந்த ஹலீமா ஸஅதிய்யா ரலி அவர்கள்.  நபி ஸல் அவர்கள் தங்களுடைய பால்குடி பருவம் முழுவதுமாக இவர்களிடமே இருந்தார்கள். (ஜாதுல் மஆத்)

 

அக்காலத்தில் நகர்ப்புற அரபியர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக் கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய் தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று நரம்புகள் வலிமை அடையவும், தூய அரபி மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல் முத்தலிப் தேடினார். இறுதியாக ‘ஹலீமா பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்' என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார்.

 

நபியவர்களின் மூலமாக ஹலீமா ஸஅதிய்யா ரலி அவர்களின் குடும்பத்தினருக்கு கிடைத்த பரக்கத்   

كانت حليمة بنت أبي ذؤيب السعدية أم رسول الله صلى الله عليه وسلم التي أرضعته ، تحدث : أنها خرجت من بلدها مع زوجها ، وابن لها صغير ترضعه في نسوة من بني سعد بن بكر ، تلتمس الرضعاء ، قالت : وذلك في سنة شهباء لم تبق لنا شيئا . قالت : فخرجت على أتان لي قمراء ، معنا شارف لنا ، والله ما تبض بقطرة ، وما ننام ليلنا أجمع من صبينا الذي معنا ، من بكائه من الجوع . ما في ثديي ما يغنيه ، وما في شارفنا ما يغديه - قال ابن هشام : ويقال : يغذيه - ولكنا كنا نرجو الغيث والفرج فخرجت على أتاني تلك فلقد أدمت بالركب حتى شق ذلك عليهم ضعفا وعجفا ، حتى قدمنا مكة نلتمس الرضعاء فما منا امرأة إلا وقد عرض عليها رسول الله صلى الله [ ص: 163 ] عليه وسلم فتأباه ، إذا قيل لها إنه يتيم ، وذلك أنا إنما كنا نرجو المعروف من أبي الصبي ، فكنا نقول : يتيم وما عسى أن تصنع أمه وجده فكنا نكرهه لذلك ، فما بقيت امرأة قدمت معي إلا أخذت رضيعا غيري ، فلما أجمعنا الانطلاق قلت لصاحبي : والله إني لأكره أن أرجع من بين صواحبي ولم آخذ رضيعا ، والله لأذهبن إلى ذلك اليتيم فلآخذنه ، قال : لا عليك أن تفعلي ، عسى الله أن يجعل لنا فيه بركة . قالت : فذهبت إليه فأخذته ، وما حملني على أخذه إلا أني لم أجد غيره . قالت : فلما أخذته ، رجعت به إلى رحلي ، فلما وضعته في حجري أقبل عليه ثدياي بما شاء من لبن ، فشرب حتى روي وشرب معه أخوه حتى روي ، ثم ناما وما كنا ننام معه قبل ذلك ، وقام زوجي إلى شارفنا تلك . فإذا إنها لحافل ، فحلب منها ما شرب ، وشربت معه حتى انتهينا ريا وشبعا ، فبتنا بخير ليلة . قالت : يقول صاحبي حين أصبحنا : تعلمي والله يا حليمة ، لقد أخذت نسمة مباركة ، قالت : فقلت : والله إني لأرجو ذلك . قالت : ثم خرجنا وركبت ( أنا ) أتاني ، وحملته عليها معي ، فوالله لقطعت بالركب ما يقدر عليها [ ص: 164 ] شيء من حمرهم ، حتى إن صواحبي ليقلن لي : يا ابنة أبي ذؤيب ، ويحك اربعي علينا ، أليست هذه أتانك التي كنت خرجت عليها ؟ فأقول لهن : بلى والله ، إنها لهي هي ، فيقلن : والله إن لها لشأنا

فلم نزل نتعرف من الله الزيادة والخير حتى مضت سنتاه وفصلته ، وكان يشب شبابا لا يشبه الغلمان ، فلم يبلغ سنتيه حتى كان غلاما جفرا . قالت : فقدمنا به على أمه ونحن أحرص شيء على مكثه فينا ، لما كنا نرى من بركته . فكلمنا أمه وقلت لها : لو تركت بني عندي حتى يغلظ ، فإني أخشى عليه وبأ مكة ، قالت : فلم نزل بها حتى ردته معنا

பால் குடிக்காலங்களில் ஹலீமா ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக் கண்டார்கள். அதை அவர்களே கூறுகிறார்கள் ;

‘‘நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம் ‘‘அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்'' என்று கூறியதற்கு அவர் ‘‘தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்'' என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம். காலையில் எனது கணவர்: ‘ஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்' என்றார். அதற்கு நான் ‘அப்படித்தான் நானும் நம்புகிறேன்' என்றேன்.

பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி ‘‘அபூ துவைபின் மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா இது?'' என்றனர். ‘‘நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது'' என்றேன். அவர்கள் ‘‘நிச்சயமாக என்னவோ நேர்ந்துவிட்டது'' என்றனர்.

எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியில் எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப் பால் கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!' என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.

இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம் ‘இந்த அருமைக் குழந்தை இன்னும் திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய் அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்' என்று கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து விட்டார்.''   இறுதியாக, எங்கள் விருப்பம் நிறைவேறியது, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை எங்களுடன் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

 

நெஞ்சு திறக்கப்படும் நிகழ்வு

أنَّ رَسولَ اللهِ ﷺ أتاهُ جِبْرِيلُ ﷺ وهو يَلْعَبُ مع الغِلْمانِ، فأخَذَهُ فَصَرَعَهُ، فَشَقَّ عن قَلْبِهِ، فاسْتَخْرَجَ القَلْبَ، فاسْتَخْرَجَ منه عَلَقَةً، فقالَ: هذا حَظُّ الشَّيْطانِ مِنْكَ، ثُمَّ غَسَلَهُ في طَسْتٍ مِن ذَهَبٍ بماءِ زَمْزَمَ، ثُمَّ لأَمَهُ، ثُمَّ أعادَهُ في مَكانِهِ، وجاءَ الغِلْمانُ يَسْعَوْنَ إلى أُمِّهِ، يَعْنِي ظِئْرَهُ، فقالوا: إنَّ مُحَمَّدًا قدْ قُتِلَ، فاسْتَقْبَلُوهُ وهو مُنْتَقِعُ اللَّوْنِ، قالَ أنَسٌ: وقدْ كُنْتُ أرى أثَرَ ذلكَ المِخْيَطِ في صَدْرِهِ

அனஸ் ரலி கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகை தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றி விட்டு ‘இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்' என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்து விட்டார். இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம் ஓடோடி வந்து ‘‘முஹம்மது கொலை செய்யப்பட்டார்'' என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார்.

அனஸ் ரலி கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.'' (முஸ்லிம்)

 

வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின் நான்காவது வயதில் இந்நிகழ்வு நடை பெற்றதாக குறிப்பிடுகிறார்கள்.

 

 

இந்நிகழ்ச்சியால் அதிர்ந்து போன ஹலீமா அவர்கள் நபி (ஸல்) அவர்களை அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள்.

 

அன்புத் தாயாரின் மரணம்

وكانت السيدة آمنة بنت وهب تزور قبر زوجها في كلّ عام، وتزور أهلها بني النجار حيث يُقيمون هناك، ولمّا بلغ سيدنا محمّد -صلى الله عليه وسلم- من العمر ستّ سنوات اصطحبته معها في رحلتها، وكان برفقتهما حاضنته أم أيمن، وركبتا على بعيرين، ونزلت آمنة في دار النابغة، وظلّت هناك شهراً كاملاً.[١] وفي طريق عودتها وصلت آمنة إلى مكان يسمّى الأبواء؛ وهو مكان بين مكة والمدينة المنورة، وهي إلى المدينة أقرب، وتبعد عن الجحفة أميالاً،[٢]ومرضت مرضاً شديداً لم تستطع السير معه؛ فتوفيت هناك، ودفنت هناك، ورجعت أم أيمن بمحمّد -صلى الله عليه وسلم- إلى مكة، ومعها البعير الذي كانت تركبه آمنة بنت وهب فارغاً،[١] وكانت آمنة بنت وهب تبلغ من العمر حين توفت عشرين عاماً

ஆமினா அம்மையார் அவர்கள், மதீனாவில் மரணமடைந்த தனது அன்புக் கணவரின் கப்ரை ஒவ்வொரு வருடமும் ஜியாரத் செய்ய செல்வது வழக்கம். மேலும் அங்கே இருக்கிற அவர்களின் குடும்பத்தினரான பனு நஜ்ஜார் மக்களையும் சந்தித்து வருவார்கள். தனது குழந்தையான முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு 6 வயது இருந்த போது அவர்களையும், அவர்களின் ஊழியப் பெண் உம்மு அய்மனையும் அழைத்துக் கொண்டு மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு புறப்பட்டார்கள். மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு தங்கி விட்டு மக்காவுக்கே மீண்டும் பயணமானார்கள். வழியில் ஆமினா அம்மையார் நோய்வாய்ப்பட்டார்கள். பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே ‘அப்வா' என்ற இடத்தில் மரணமடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

 

பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களிடத்தில்

ஆமினா அம்மையார் மரணித்த பிறகு அப்துல் முத்தலிப் அவர்கள் நபியவர்களை மக்காவிற்கு அழைத்து வந்தார். ``அப்துல்-முத்தலிப் அவர்கள் தனது சொந்தக் குழந்தைகளை விட தனது பேரனிடம் அதிக அன்பைக் கொண்டிருந்தார். தாயின் பிரிவால் குழந்தை ஏங்கி விடக்கூடாது என்பதற்காக எப்போதும் தனது சொந்த குழந்தைகளை விட அவர்களிடமே நெருக்கமாக இருந்தார்கள்.

وَكَانَ يُوضَعُ لِعَبْدِ الْمُطَّلِبِ فِرَاشٌ فِي ظِلِّ الْكَعْبَةِ، فَكَانَ بَنُوهُ يَجْلِسُونَ حَوْلَ فِرَاشِهِ ذَلِكَ حَتَّى يَخْرَجَ إلَيْهِ، لَا يَجْلِسُ عَلَيْهِ أَحَدٌ مِنْ بَنِيهِ إجْلَالًا لَهُ، قَالَ:

فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي وَهُوَ غُلَامٌ جَفْرٌ، حَتَّى يَجْلِسَ عَلَيْهِ، فَيَأْخُذَهُ أَعْمَامُهُ لِيُؤَخِّرُوهُ عَنْهُ، فَيَقُولُ عَبْدُ الْمُطَّلِبِ، إذَا رَأَى ذَلِكَ مِنْهُمْ: دعوا ابْني، فو الله إنَّ لَهُ لَشَأْنًا، ثُمَّ يُجْلِسُهُ مَعَهُ عَلَى الْفِرَاشِ، وَيَمْسَحُ ظَهْرَهُ بِيَدِهِ، وَيَسُرُّهُ مَا يَرَاهُ يَصْنَعُ.

''அப்துல் முத்தலிப் அவர்களுக்காக கஃபாவின் நிழலில் ஒரு மெத்தை போடப்பட்டிருக்கும். அவரது குழந்தைகள் தங்கள் தந்தையின் மரியாதைக்காக அந்த மெத்தையைச் சுற்றி அமர்ந்தனர், ஆனால் குழந்தையாக இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதில் அமர்வார்கள். அவரது மாமாக்கள் அவரை அந்த இடத்திலிருந்து அகற்றுவார்கள், ஆனால் ``அப்துல் முத்தலிப் கூறுவார்: "என் பேரனை விட்டு விடுங்கள். இந்த சிறுவன் ஒரு குறிப்பிடத்தக்க பதவியை வகிப்பான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்." [இப்னு ஹிஷாம்)

 

நபியவர்களின் மீது பாட்டாருக்கு இருந்த பாசம்

وفي يوم من الأيام  أرسل عبدالمطلب النبي – صلى الله عليه وسلم – للبحث عن ناقة ضائعة ، فتأخر في العودة حتى حزن عليه جده حزنا شديدا ، فجعل يطوف بالبيت وهو يقول :

             رب رد إلي راكبي محمدا     رده رب إلي واصطنع عندي يدا

ولما عاد النبي – صلى الله عليه وسلم – قال له : " يا بني ، لقد جزعت عليك جزعا لم أجزعه على شيء قط ، والله لا أبعثك في حاجة أبدا ، ولا تفارقني بعد هذا أبدا

ஒரு நாள் தொலைந்து போன ஒரு ஒட்டகத்தை தேடும்படி கூறினார்கள். தேடிச் சென்ற நபியவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. மிகவும் பதறிப் போய் விட்டார்கள். ரொம்ப நேரம் கழித்து திரும்பி வந்த போது நீ எங்கே போனாய். நான் மிகவும் பயந்து விட்டேன். இனிமேல் உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன். நீ என்னை விட்டு எப்போதும் விலகிச் செல்லக்கூடாது என்று கூறினார்கள்.

 

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயது ஆன போது அவர்களது பாட்டனார் அப்துல் முத்தலிப் மக்காவில் காலமானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு இப்போது அவர்களது பெரிய தந்தை அபூதாலிபிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

நபியவர்களின் மூலமாக அபூதாலிப் அவர்களுக்கு கிடைத்த பரக்கத்

لما مات عبد المطلب جد النبي -صلى الله عليه وسلم- وكان قد عهد إلى أبي طالب برعاية ابن أخيه محمد‏،‏ وكان أبو طالب رجلا فقيرا وله أولاد كثر ولا يكادون يشبعون جميعا من طعام، فلما كفلوا رسول الله محمد صلى الله عليه وآله وسلم بينهم صارت البركة في بيتهم وفي حياتهم وفي كل شيء حتى الطعام‏، وأحس أبو طالب ببركة محمد فكانوا لا يأكلون إلا وهو بينهم‏، لأنهم حينئذ فقط يأكلون ويشبعون ويفيض الطعام عليهم‏.

அபூதாலிப் அவர்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தார்கள்.அவர்களுக்கு குழந்தைகளும் அதிகம்.எனவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையிலும் தன் சகோதரன் மகனை எடுத்து வளர்க்க முன் வந்தார்கள். நபியவர்கள் அவர்களின் வீட்டிற்கு வந்த பிறகு பரக்கத் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு வரை அவர்களின் குடும்பத்தினர் வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை. நபியின் வருகைக்கு பிறகு அனைவரும் வயிறு நிரம்ப சாப்பிட ஆரம்பித்தார்கள்.

 

في حادثة أخرى لما أقحطت مكة سنة من السنين وواجه الناس جفافا شديدا‏، فأهرع الناس إلى أبي طالب يطلبون منه أن يستسقي لهم‏،‏ فأمرهم أن يأتوه بابن أخيه محمد،‏ فأتوه به وهو رضيع في قماطه‏، فوقف تجاه الكعبة‏،‏ وفي حالة من التضرع والخشوع أخذ يرمي بالطفل ثلاث مرات إلى أعلى ثم يتلقفه وهو يقول‏:‏ يا رب بحق هذا الغلام اسقنا غيثا مغيثا دائما هطلا‏،‏ فلم يمض إلا بعض الوقت حتى ظهرت غمامة من جانب الأفق غطت سماء مكة كلها‏، وهطل مطر غزير كادت معه مكة تغرق‏

ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன். ‘‘கணவாய்கள் வரண்டு விட்டன. பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள்! மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்' என்று குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை சேர்த்து வைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின் தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன. பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. (மஜ்மவுஜ்ஜவாயித்)

 

அபூதாலிப் அவர்களுடன் சிரியா பயணம்

وقال أبو الحسن الماوردي: خرج به عليه الصلاة والسلام عمه أبو طالب إلى الشام في تجارة له وهو ابن تسع سنين. وذكر ابن سعد بإسناد له عن داود بن الحصين: أنه كان ابن اثنتي عشرة سنة.

قال ابن إسحاق: ثم إن أبا طالب خرج في ركب إلى الشام فلما تهيأ للرحيل صب به رسول الله صلى الله عليه وسلم فيما يزعمون فرق له أبو طالب، وقال: والله لأخرجن به معي ولا يفارقني ولا أفارقه أبدا أو كما قال. فخرج به معه، فلما نزل الركب بصرى من أرض الشام، وبها راهب يقال له بحيرا في صومعة له، وكان انتهى إليه علم أهل النصرانية، ولم يزل في تلك الصومعة منذ قط راهب، إليه يصير علمهم عن كتاب فيها - فيما يزعمون - يتوارثونه كابرا عن كابر. فلما نزلوا ذلك العام ببحيرا وكانوا كثيرا ما يمرون به قبل ذلك فلا يكلمهم ولا يعرض لهم، حتى كان ذلك العام، فلما نزلوا به قريبا من صومعته صنع لهم طعاما كثيرا، وذلك فيما يزعمون عن شيء رآه وهو في صومعته، يزعمون أنه رأى رسول الله صلى الله عليه وسلم في الركب حين أقبلوا وغمامة تظله من بين [ ص: 106 ] القوم، ثم أقبلوا فنزلوا في ظل شجرة منه، فنظر إلى الغمامة حتى أظلت الشجرة وتهصرت أغصان الشجرة على رسول الله صلى الله عليه وسلم حتى استظل تحتها، فلما رأى ذلك بحيرا نزل من صومعته، وقد أمر بذلك الطعام فصنع، ثم أرسل إليهم: إني قد صنعت لكم طعاما يا معشر قريش وأحب أن تحضروا كلكم صغيركم وكبيركم، وعبيدكم وحركم، فقال له رجل منهم: والله يا بحيرا إن بك اليوم لشأنا، ما كنت تصنع هذا بنا وقد كنا نمر بك كثيرا، ما شأنك اليوم؟ قال له بحيرا: صدقت، قد كان ما تقول، ولكنكم ضيف، وقد أحببت أن أكرمكم وأصنع لكم طعاما فتأكلوا منه كلكم، فاجتمعوا إليه وتخلف رسول الله صلى الله عليه وسلم من بين القوم لحداثة سنه في رحال القوم، فلما نظر بحيرا في القوم لم ير الصفة التي يعرف ويجد عنده، فقال: يا معشر قريش لا يتخلفن أحد منكم عن طعامي. قالوا له: يا بحيرا ما تخلف عن طعامك أحد ينبغي له أن يأتيك إلا غلام، وهو أحدث القوم سنا، فتخلف في رحالهم. قال: لا تفعلوا، ادعوه فليحضر هذا الطعام معكم. فقال رجل من قريش: واللات والعزى إن كان للؤما بنا أن يتخلف ابن عبد الله بن عبد المطلب عن طعام من بيننا. ثم قام إليه فاحتضنه وأجلسه مع القوم، فلما رآه بحيرا جعل يلحظه لحظا شديدا، وينظر إلى أشياء من جسده قد كان يجدها عنده من صفته، حتى إذا فرغ القوم من طعامهم وتفرقوا، قام إليه بحيرا، فقال له: يا غلام! أسألك بحق اللات والعزى إلا ما أخبرتني عما أسألك عنه - وإنما قال له بحيرا ذلك لأنه سمع قومه يحلفون بهما - فزعموا أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تسألني باللات والعزى شيئا، فوالله ما أبغضت شيئا قط بغضهما. فقال له بحيرا: فبالله إلا ما أخبرتني عما أسألك عنه. فقال له: سلني عما بدا لك. فجعل يسأله عن أشياء من حاله: من نومه، وهيئته، وأموره. ويخبره رسول الله صلى الله عليه وسلم فيوافق ذلك ما عند بحيرا من صفته. ثم نظر إلى ظهره فرأى خاتم النبوة بين كتفيه على موضعه من صفته التي عنده. فلما فرغ أقبل على عمه أبي طالب فقال: ما هذا الغلام منك؟ قال: ابني. قال: ما هو بابنك وما ينبغي لهذا الغلام أن يكون أبوه حيا. قال: فإنه ابن أخي. قال: فما فعل أبوه؟ قال: مات وأمه حبلى به. قال: صدقت، فارجع بابن أخيك إلى بلده واحذر عليه يهود، فوالله لئن رأوه [ ص: 107 ] وعرفوا منه ما عرفت ليبغنه شرا، فإنه كائن لابن أخيك هذا شأن عظيم، فأسرع به إلى بلاده. فخرج به عمه أبو طالب سريعا حتى أقدمه مكة حين فرغ من تجارته بالشام، فزعموا أن نفرا من أهل الكتاب قد كانوا رأوا من رسول الله صلى الله عليه وسلم مثل ما رأى بحيرا في ذلك السفر الذي كان فيه مع عمه أبي طالب، فأرادوه فردهم عنه بحيرا في ذلك، وذكرهم الله تعالى، وما يجدون في الكتاب من ذكره وصفاته، وأنهم إن أجمعوا لما أرادوا لم يخلصوا إليه، حتى عرفوا ما قال لهم وصدقوه بما قال، فتركوه وانصرفوا عنه.

நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ‘ஷாம்' தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா' என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்' என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘‘இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்'' என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘‘இது எப்படி உமக்குத் தெரியும்?'' என வினவினர். அவர் ‘‘நீங்கள் கணவாய் வழியாக வந்த போது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியாது. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)

சுமார் எட்டு வயதில் நபியவர்கள் அபூதாலிப் அவர்களிடம் வந்தார்கள். அவர்களின் மரணம் வரை நபி ஸல் அவர்களுக்கு பெரும் துணையாகவும் பக்கபலமாகவும் காவலாகவும் உருதுணையாகவும் இருந்தார்கள்.

 

No comments:

Post a Comment