கனினி பழுதடைந்திருப்பதால் கைபேசியில் தயார் செய்து தந்திருக்கின்றேன். எனவே சில தகவல்களை சரியாக கோர்வை செய்து தர முடிய வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, September 11, 2025
Thursday, August 28, 2025
மாநபியின் குழந்தைப் பருவம்
اَلَمْ
يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
உம்மை
அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க
வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)
நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.
Friday, August 22, 2025
அண்ணல் நபியின் அதிசயப் பிறப்பு
அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின் படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.
Thursday, September 21, 2023
கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி ﷺ அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது ﷺ என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக, அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் ﷺ அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது ﷺ என்ற பெயர். Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது ﷺ என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.
Friday, September 15, 2023
புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்
அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின் படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.
Friday, October 30, 2020
நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள்
வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனை களுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் எந்த கேள்விக்கும் பதிலாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான்.
Friday, October 23, 2020
நபியே! நீங்கள் எந்தக் குறைகளும் இல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அகிலத்திற்கு வந்த வசந்தமான இந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் மாநபியின் தூய்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
Friday, October 16, 2020
நபியின் வரவால் உலகம் பெற்ற நன்மை
அல்லாஹ்வின் பேரருளால் அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதம் பிறக்க இருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் பரக்கத் பொருந்திய மாதம், அருள் நிறைந்த மாதம், எண்ணற்ற பாக்கியங்களை உள்ளடக்கிய மாதம் இந்த ரபியுல் அவ்வல் மாதம். இஸ்லாத்தின் 12 மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதம் பரக்கத்தானது பாக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு நபி ﷺ அவர்கள் இந்த மாதத்தில் பிறந்தார்கள் என்ற ஒரு காரணமே போதுமானது.
.jpeg)



