கனினி பழுதடைந்திருப்பதால் கைபேசியில் தயார் செய்து தந்திருக்கின்றேன். எனவே சில தகவல்களை சரியாக கோர்வை செய்து தர முடிய வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய பருவங்களில் மிக முக்கியமான பருவமாகக் கருதப்படுவது, வாலிபப் பருவம். வாலிபர்கள் தான் சமூகத்தின் முதுகெலும்புகள். ஒரு குடும்பமோ அல்லது சமூகமோ அதன் முன்னேற்றமும் பின்னடைவும் வாலிபர்கள் கையில் இருக்கிறது. ஒரு குடும்பத்து வாலிபன் சரியாக இருந்தால் ஒழுக்கமாக இருந்தால் தீனுடைய தொடர்பில் இருந்தால் அந்த குடும்பம் சிறக்கும். இல்லையென்றால் அந்த குடும்பம் சீரழிந்து விடும். ஒரு சமூகத்தின் வாலிபர்கள் சரியாக இருந்தால் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சமூக சேவை உணர்வு கொண்டவர்களாக பெரியோர்களை மதித்து நடப்பவர்களாக உயர்ந்த லட்சியம் உடையவர்களாக இருந்தால் அவர்களைக் கொண்டு அந்த சமூகம் உயர்வு பெறும். இல்லையென்றால் அந்த சமூகம் சீரழிந்து விடும்.
நபி ஸல் அவர்களின் வாலிபப் பருவத்தில் இந்த எல்லா அம்சங்களும் நிறைவாகவே இருந்தன. ஒருவர் சிறந்த இளைஞர் என்பதற்கு அவரிடம் ஐந்து முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். அந்த ஐந்து அம்சங்களுக்கும் நபி ஸல் அவர்கள் முன்னுதாரணமாக இருந்தார்கள்.
1. சமூகப்பணி
ஒரு வாலிபன் எப்படி இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தின் உயர்வுக்கும் பாடுபட வேண்டும். சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். அநீதங்களுக்கு எதிராக போராடும் களப்போராளியாக இருக்க வேண்டும். சமூக அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டும். வாலிபனிடமிருந்து அல்லாஹ் அதைத்தான் எதிர்பார்க்கிறான்.
நபி ஸல் அவர்கள் பங்கெடுத்த ஹில்ஃபுல் ஃபுழூல்
أَن رجلا من زبيد قدم مَكَّة مُعْتَمِرًا فِي الْجَاهِلِيَّة وَمَعَهُ تِجَارَة لَهُ فاشتراها مِنْهُ رجل من بني سهم, فأواها إِلَى بَيته ثمَّ تغيب فابتغى مَتَاعه الزبيدِيّ فَلم يقدر عَلَيْهِ, فجَاء إِلَى بني سهم يستعديهم عَلَيْهِ فأغلظوا عَلَيْهِ, فَعرف أن لَا سَبِيل إِلَى مَاله, فطوف فِي قبائل قُرَيْش يَسْتَعِين بهم فتخاذلت الْقَبَائِل عَنهُ, فَلَمَّا رأى ذَلِك أشرف على جبل أبي قبيس حِين أخذت قُرَيْش مجالسها, ثمَّ قَالَ بِأَعْلَى صَوته:
يَا آلَ فِهْرٍ لِمَظْلُومِ بِضَاعَتُهُ *** بِبَطْنِ مَكّةَ نَائِي الدّارِ وَالنّفَرِ
وَمُحْرِمٍ أَشْعَثٍ لَمْ يَقْضِ عُمْرَتَهُ *** يَا لَلرّجَالِ وَبَيْنَ الْحِجْرِ وَالْحَجَرِ
إنّ الْحَرَامَ لِمَنْ تَمّتْ كَرَامَتُهُ *** وَلَا حَرَامَ لِثَوْبِ الْفَاجِرِ الْغُدَرِ
فَلَمَّا نزل من الْجَبَل أعظمت ذَلِك قُرَيْش فتكالموا فِيهِ, فقام الزبير بن عبد المطلب عم النبي -صلى الله عليه وسلم- ودعا الى نصرة المظلوم وقال: "مَا لِهَذَا مُتَرّكٌ", فَاجْتَمَعَتْ هَاشِمٌ وَزُهْرَةُ وَتَيْمُ بْنُ مُرّةَ فِي دَارِ ابْنِ جُدْعَانَ فِي دَار عبد الله بن جدعَان وصنع لَهُم يَوْمئِذٍ طَعَاما كثيرا, وَكَانَ رَسُول الله -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَوْمئِذٍ مَعَهم قبل أن يُوحى إِلَيْهِ, وَكَانَ الَّذِي تعاقد عَلَيْهِ الْقَوْم وتحالفوا: "ليكوننّ يدا واحدة مَعَ الْمَظْلُومِ عَلَى الظّالِمِ، حَتّى يُؤَدّى إلَيْهِ حقّه وأن لَا يظلم بِمَكَّة غَرِيب وَلَا قريب وَلَا حر وَلَا عبد الا كَانُوا مَعَه حَتَّى يَأْخُذُوا لَهُ بِحقِّهِ ويردوا إِلَيْهِ مظلمته من أنفسهم وَمن غَيرهم" ثمَّ عَمدُوا إِلَى مَاء زَمْزَم فجعلوه فِي جَفْنَة ثمَّ بعثوا بِهِ إِلَى الْبَيْت فغسلت بِهِ أَرْكَانه ثمَّ أَتَوا بِهِ فشربوه, فقالت قريش: "لَقَدْ دَخَلَ هَؤُلَاءِ فِي فَضْلٍ مِنْ الْأَمْرِ" ثم ساروا جميعاً إلى العاص بن وائل وانتزعوا منه سلعة الزبيدي وردوها إليه، وقال في ذلك الزبيدي:
إن الفضول تحالفوا وتعاقدوا *** ألا يقيم ببطن مكة ظالمُ
أمر عليه تعاهدوا وتواثقوا *** فالجار والمعتر فيهم سالمُ
فهذا الحلف بما يقوم عليه من قواعد إحقاق الحق, ونصرة المظلوم, وردع الظالم, وتضافر الجهود في وجه الباطل؛ حضره رسول الله -صلى الله عليه وسلم- قبل النبوة، الأمر الذي يكسبه الدلالة على مشروعية بل ضرورة التعاون مع أي كان فيما يتعلق بإحقاق الحق ونصرة المظلوم، لذلك عاد رسول الله -صلى الله عليه وسلم- ليؤكد على هذا الحلف وصلاحية فكرته في ظل الإسلام، فقد قال -صلى الله عليه وسلم-: " لَقَدْ شَهِدْتُ مَعَ عُمُومَتِي حِلْفًا فِي دَارِ عَبْدِ اللَّهِ بْنِ جُدْعَانَ مَا أُحِبُّ أَنَّ لِي بِهِ حُمُرَ النَّعَمِ، وَلَوْ دُعِيتُ بِهِ فِي الْإِسْلَامِ لَأَجَبْتُ". [رواه البيهقي والبزار], ومعنى حلف الفضول، أي حلف الفضائل, والفضول هنا جمع فضل وقيل لأنهم أخرجوا فضول أموالهم للأضياف.
وبهذا أرسى لنا رسول الله -صلى الله عليه وسلم- تشريعاً في الإسلام أقر من خلاله الوقوف مع المحق ولو كان كافراً, وفي مواجهة الظالم الباغي ولو كان صديقاً حميماً أو أخاً أو قريباً. قال تعالى (يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ) [النساء: 135].
சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்' எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன். (இப்னு ஹிஷாம்)
இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் ‘‘இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்'' என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர். (தபகாத் இப்னு ஸஅது)
2.எதிர் கால இலட்சியம்.
ஒரு இளைஞரிடம் எதிர் காலத்திற்கான திட்டம், இலட்சியம் இருக்க வேண்டும்.
இலட்சியம் இருந்தால் தான் எதையும் அடைய முடியும்.
قال عمر بن عبد العزيز:
إنَّ لي نفسًا توَّاقةٌ، وما حققتُ شيئًا إلا تاقتْ لما هو أعلى منه؛ تاقت نفسي إلى الزواج من ابنة عمي فاطمة بنت عبد الملك فتزوجتُها، ثم تاقت نفسي إلى الإمارة فوليتها، وتاقت نفسي إلى الخلافة فنلتها، والآن تاقت نفسي إلى الجنة. فأرجو أن أكون من أهلها.
கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) தம்மைக் குறித்து அவரே குறிப்பிடுகின்றார்: 'இலட்சியமும் குறிக் கோளும் கொண்ட ஓர் உள்ளம் என்னிடம் இருந்தது. எனது வீட்டை இஸ்லாமிய வீடாக மாற்ற வேண்டுமென்றால், கலீஃபா அப்துல் மலிக் அவர்களுடைய மகள் ஃபாத்திமாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நாள் நாடினேன். அது நடந்தது.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நகரத்தை (மதீனா) நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்யும் ஆளுநராக வேண்டும் என்று விரும்பினேன். அதுவும் நடந்தது.
பின்னர் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களுடைய வழிமுறையைப் பின்பற்றி நீதி செலுத்தும் கலீஃபாவாக இஸ்லாமியப் பேரரசை ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினேன். அதுவும் நடந்தது.
இப்போது என் மனம் இதோ சுவனத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்கின்றது.'
உயர்ந்த இலட்சியத்தோடு வாழ்க்கையில் பயணித்தவர்கள் பெரும் பெரும் சாதனைகளை புரிந்திருக்கிறார்கள்.
இந்தோநேஷியாவில் 40 வயதேயான அஷ்ஷேக் யூஸுஃப் மன்ஸூர் இந்தோனேசியாவில் தாருல் குர்ஆன் என்ற பெயரில் அல்குர்ஆனை மனனம் செய்யும் கல்வி நிலையங்களை நடத்தி வருகின்றார். இவரே அதன் பொறுப்பாளராகவும் தாளாளராகவும் இருக்கின்றார். இவருடைய கல்வி நிலை யங்களில் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சம்.(உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை). இந்தக் கல்வி நிலையத்திற்கு மொத்தம் ஆறாயிரம் கிளைகள் உள்ளன. இலவசமாகத் தங்கிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரம். இதுவரை இவர் எழுதிய நூல்கள் 230. ஆயினும் இவர் வயதோ நாற்பது மட்டுமே!
இமாம் புகாரி (ரஹ்) 14 வயது சிறுவராக இருந்த போது புகாரா என்ற கிராமத்தில் இருந்த பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்கின்றார். அங்கு இரு அறிஞர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை இமாம் புகாரி அல்ல, சிறுவர் புகாரி செவிமடுக்கின்றார்.அந்த அறிஞர்கள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள்: ஹதீஸ்களில் எது பலமானது, எது பலவினமானது என்று பிரித்தறிய முடியாமல் இருக்கின்றதே. எவராவது இதனைச் செய்தால் நன்றாக இருக்குமே.'
சிறுவர் புகாரி நம் மனதுக்குள் அப்போது சொல்லிக் கொண்டார்: 'ஆம். அதற்காக நான் இருக்கின்றேன்.' அன்று தொடங்கியது அவருடைய இலட்சிய வேட்கை. இறுதி மூச்சுவரை ஓயாமல் அதற்காகவே பாடுபட்டார். இன்று இதோ நமது கைகளில் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம் உலகம் கண்ணியம் கொடுக்கும் ஒரு புனித நூலாக புகாரி ஷரீஃப் உள்ளது.
ஸஹீஹுல் புகாரி எவ்வாறு பிறந்தது?
இரவுத் தூக்கத்தில் இருபது தடவைக்கு மேல் விழித் தெழுவார்கள் இமாம் புகாரி அவர்கள். நினைவுக்கு வரும் குறிப்புகளை அப்போதே எழுதுவார்கள்.
10 இலட்சத்திற்கு அதிகமான நபிமொழிகளை மனனம் செய்திருந்தார்கள். அவற்றிலிருந்து 7500 ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார்.
நான்காயிரத்துக்கும் அதிகமான அறிஞர் பெருமக் களைச் சந்தித்துள்ளார். இறுதியாக இதோ நமது கைகளில் புகாரி தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இலட்சியம்! இலட்சியம்.
இஸ்தான்புல் வெற்றி கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்திருந்தார்கள். இஸ்லாமிய உலகம் எத்தனையோ முறை அதற்காக முயன்றது. முடிய வில்லை. ஏறக்குறைய 600 ஆண்டுகால தொடர் முயற்சி. வந்தார் ஒரு முஹம்மத் அல் ஃபாத்திஹ். இந்த நபிமொழி அவருக்குப் படித்துக் காட்டப்பட்டது.
தமது 15வது வயதில் குதிரையில் ஏறி கடற்கரை நோக்கிச் செல்வார். கடல் குறுக்கிடும். திரும்ப வந்துவிடுவார். மீண்டும் செல்வார். மீண்டும் திரும்புவார். கடலைக் கடக்க வேண்டுமெனில் கடற்படை வேண்டும் என்று தீர்மானிக் கிறார். உருவாக்கப்படுகிறது. அவருடைய 15வது வயதில் தொடங்கியது தொடர் முயற்சி. 23ஆவது வயதில் இஸ்தான் புல் நகரை வெற்றிகொள்கிறார். எட்டே ஆண்டுகள். இலட்சிய வேட்கை வெல்கிறது.
நபி ஸல் அவர்கள் மிகப்பெரிய அளவில் இலட்சியங்களைக் கொண்டிருந்தார்கள். அந்த அனைத்து இலட்சியங்களையும் வென்று காட்டினார்கள்.
ஒரு தலைவருக்கான முதல் தகுதியே எதிர்காலத் திட்டமும் இலட்சியமும் தான். தான் தலைமை வகிக்கும் ஸ்தாபனம் அல்லது சமூகம் 10 வருடம் அல்லது 20 வருடத்திற்குப் பின் எங்கு சென்று சேர வேண்டும்? 25 வருடங்களுக்குப் பின் எனது தலைமையில் இந்த சமூகம் அல்லது ஸ்தாபனம் என்ன வளர்ச்சியை, மாற்றத்தை அடைய வேண்டும் எனும் லட்சியம்தான் தலைவருக்கான முதல் தகுதி.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆம்... 'ஹைபர் டென்சன்' என்று கூறப்படும். மிகவும் நெருக்கடியான நேரத்தில்கூட இந்த சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற திட்டமிடல் நபிகளாரிடம் இருந்தது.
ஹிஜ்ரத்தின் போது அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பாலையில் அச்சத்துடன் மதீனாவை நோக்கி நடந்து செல்கின்றார்கள். அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). அந்நேரம் சுராகா இப்னு மாலிக் என்பவர் பெருமானார் (ஸல்லல்லாஹு அவர்களைக் குறிக்கிடுகிறார். உயிருடனோ பிணமாகவோ பிடித்து வந்தால் சிகப்பு ஒட்டகங்கள் கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணலாரை நெருங்கியவர் அது இயலாமல் போது நபிகளாரிடம் பாதுகாப்புக் கோருகின்றார்.
அப்போது சுராகா என்ற அந்த குதிரை வீரரிடம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய வார்த்தைகள்.... "சுராகா...! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்...? உமது தோற்றம் எப்படி இருக்கும்...?"
சுராகா கேட்டார் "கிஸ்ரா என்றால் பாரசீக மன்னரையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?". பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : "ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை அடையும். அதன் அணிகலன்களை நீர் அணிந்து கொள்வீர்."
20 வருடத்திற்குப் பின் இஸ்லாம் எங்கு சென்று சேர வேண்டும் என்ற அண்ணலாருடைய எதிர்காலத் திட்டம் ஹிஜ்ரத்தின் போதே துவங்கி விட்டது. மிகச்சரியாக 20 வருட காலத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் காதிஸிய்யா என்ற போரில் பாரசீகம் வெற்றி கொள்ளப்படுகிறது. மஸ்ஜிதுந் நபவியில் வைத்து சுராகாவிற்கு அந்த அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றைப் படிக்கும் நாம் என்ன நினைக்கிறோம்...? அது அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகத்துவம் மறைவான ஞானம் நபிகளாருக்கு இருந்தது. ஆகவேதான் அப்போது அவ்வாறு கூறினார்கள் என்று இந்நிகழ்வை ஒரு புனிதமாகக் கருதி. இதற்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஒதுக்கி விடுகிறோம்.இது மாபெரும் ஒரு இலக்கை அடைவதற்கான பெருமானாருடைய இலட்சியம் திட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. நற்குணம்.
நாயகத்தின் நற்குணத்திற்கு அன்னை கதீஜா ரலி அவர்களுடனான திருமணத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். அவர்களின் நாணயத்தையும் நற்குணத்தையும் பார்த்துத்தான் கதீஜா ரலி அவர்கள் நபியவர்களை திருமணம் முடிக்க விரும்பினார்கள்.
وحين جاوز النبي صلى الله عليه وسلم العشرين من عمره أُتيحت له فرصة السفر مع قافلة التجارة إلى الشام، ففي مكة كان الناس يستعدون لرحلة الصيف التجارية إلى الشام، وكل منهم يعد راحلته وبضاعته وأمواله، وكانت السيدة خديجة بنت خويلد - وهي من أشرف نساء قريش ، و أكرمهن أخلاقا ، و أكثرهن مالا- تبحث عن رجل أمين يتاجر لها في مالها ويخرج به مع القوم ، فسمعت عن محمد و أخلاقه العظيمة ، و مكانته عند أهل مكة جميعا ، و احترامهم له ؛ لأنه صادق أمين ، فاتفقت معه أن يتاجر لها مقابل مبلغ من المال ، فوافق محمد صلى الله عليه وسلم و خرج مع غلام لها اسمه ميسرة إلى الشام.
وكان ميسرة ينظر إلى محمد ويتعجب من سماحته وأخلاقه والربح الكبير الذي حققه في مال السيدة خديجة.
واستمعت السيدة خديجة إلى ميسرة في دهشة، وقد تأكدت من أمانة محمد صلى الله عليه وسلم و حسن أخلاقه ، فتمنت أن تتزوجه ، فأرسلت السيدة خديجة صديقتها نفيسة بنت منبه؛ لتعرض على محمد الزواج، فوافق محمد صلى الله عليه و سلم على هذا الزواج
அதேபோன்று ஹஜருல் அஸ்வத் கல்லை தூக்கி வைக்கும் விவகாரம். அந்த விவகாரத்தில் சரியான தீர்மானம் எட்டப்படாத போது முதன் முதலாக அவ்வழியாக ஹரமுக்கு வரக்கூடிய ஒருவரை நீதிபதியாக ஆக்கி அவர் சொல்லும் ஆலோசனையின் பிரகாரம் அந்த காரியத்தை செய்யலாம் என்று முடிவெடுத்த போது நபியவர்கள் முதல் நபராக வந்ததை பார்த்தவுடன் அத்தனை குரைஷிகளுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. ஏனென்றால் பெருமானாரின் நற்குணத்தையும் அவர்களின் நீதி நேர்மையையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். எனவே தங்களுக்கு இந்த விவகாரத்தில் சரியான ஒரு தீர்வு எட்டப் போகிறது என்கிற மகிழ்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டது.
ذكر ابن هشام: أنَّ قريشاً قامت بهدم الكعبة وبنائها، وكان عمره صلى الله عليه وسلم خمساً وثلاثين عاماً، ولما بلغ البنيان موضع الحجر الأسود اختلفوا فيمن يمتاز بشرف وضعه في مكانه، واستمر النزاع أربع ليال أو خمسًا، واشتد حتى كاد يتحول إلى حرب ضروس في أرض الحرم، إلاَّ أن أبا أمية بن المغيرة المخزومي عرض عليهم أن يُحكِّموا - فيما شجر بينهم - أول داخل عليهم من باب المسجد فارتضوه، وشاء الله تعالى أن يكون ذلك رسول الله صلى الله عليه وسلم، فلما رأوه هتفوا: هذا الأمين، رضيناه، هذا محمد، فلما انتهى إليهم، وأخبروه الخبر، طلب رداء، فوضع الحجر وسطه، وطلب من رؤساء القبائل المتنازعين أن يمسكوا جميعًا بأطراف الرداء، وأمرهم أن يرفعوه، حتى إذا أوصلوه إلى موضعه، أخذه بيده، فوضعه في مكانه[ سيرة ابن هشام، (2 /192-193). ].
இவ்வாறு நபிகளாரின் நற்குணத்திற்கு பல்வேறு சான்றுகளை கூறலாம்.
4. தூய்மையான வாழ்வு
5. இறையச்சம்
இவ்விரண்டிற்கும் நபிகளாரின் வாழ்வில் உதாரணங்களை சொல்ல வேண்டிய தேவையில்லாத அளவிற்கு அனைவருக்கும் தெளிவான விஷயம்.
அல்லாஹ் அத்தகைய வாழ்வை நமக்கு குறிப்பாக நம் வாலிபர்களுக்கும் அமைத்துத் தருவானாக!
No comments:
Post a Comment