Sunday, December 14, 2025

அருளாளன்... அன்பாளன்...

 

1. அருளாளன் அன்பாளன் நீயே தான் அல்லாஹ்

 

பெருமானார் நபி நாதர் உன் தூதர் அல்லாஹ்

 

 

2. புவிமீதில் புகழெல்லாம் உனக்கே தான் அல்லாஹ்

 

நபி மீது சலவாத்தை உரைத்தோனே அல்லாஹ்

 

 

3. ஜிப்ரியின் குரல் மூலம் குர்ஆனை அல்லாஹ்

 

வஹியாக நபி மீது விதித்தோனே அல்லாஹ்

 

 

4. ரமலானும் விரைவாக வருதே யா அல்லாஹ்

 

முறையாக நிறைவேற்ற அருள்வாய் நீ அல்லாஹ்

 

 

5. முடிவான ஒரு நாளின் முதல்வோனே அல்லாஹ்

 

அடியார்தம் பிழையெல்லாம் பொறுப்பாய் நீ அல்லாஹ்

 

 

6. அன்னை சுமைய்யா கல்விக்கூடம் யா அல்லாஹ்

 

சிறப்பாக நடந்தேற அருள்வாய் யா அல்லாஹ்

 

 

7. மார்க்கத்தை போதிக்கும்  உஸ்தாதுமார்களுக்கு

 

நிறைவான பெருவாழ்வை தர வேண்டும் அல்லாஹ்

 

 

8. மத்ரஸாவின் விதையான நிர்வாக மக்களுக்கு

 

நற்கூலி தர வேண்டும் ரஹ்மானே அல்லாஹ்

 

 

9.பொருளாக பணமாக கொடுக்கும் மக்களுக்கு

 

பரக்கத்தை தர வேண்டும் இறையோனே அல்லாஹ்

No comments:

Post a Comment