Friday, December 19, 2025

அரபு மொழி அறிவு

 

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் தன்னுடைய அத்தாட்சிகளை வரிசைப்படுத்தி வருகின்ற பொழுது உலகத்தில் பலதரப்பட்ட மொழிகள் இருப்பதை அந்த அத்தாட்சிகளில் ஒன்றாக பதிவு செய்திருக்கிறான். உலகத்தில் வாழுகின்ற எந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் அடிப்படையும் மூலக்கூறும் ஒன்று தான். ஆதம் நபி அலை அவர்களும் ஹவ்வா அலை அவர்களும் தான் உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு தாய் தந்தையின் மக்களாக இருந்தாலும் அவர்களின் பேசும் மொழி வித்தியாசமாக இருக்கிறது.

 وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْعَالِمِينَ

மேலும் வானங்களையும்பூமியையும் படைத்திருப்பதும்உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப் பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக் கின்றன.   (அல்குர்ஆன் :30;22)

உலகத்தில் சுமார் 10 ஆயிரம் மொழிகள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 1977 ஆம் ஆண்டு வெளி வந்த உலக மொழிகளின் பதிவு’ என்ற நூல் 20 ஆயிரம் மொழிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. அவற்றில் மூலமொழிகள் நான்காயிரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

உலகில் 9 மொழிகள் செம்மொழியாக உள்ளன. கிரேக்கம் லத்தீன்சமஸ்கிருதம்பாரசீகம்சீனம்அரேபியம்எபிரேயம்தமிழ் ,கன்னடம் ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும்கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெறும்.

அந்த வகையில் உலகளாவிய மொழிகளில் அரபு மொழி தொன்மையான மொழியாகவும், இன்று வரை உயிரோட்டமுள்ள மொழியாகவும் கருதப்படுகிறது. எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வொன்றில் கண்டெடுக்கப்பட்ட, நான்காயிரம் வருடம் பழமைவாய்ந்த புராதன அரபு கல்வெட்டு "ஸ்கிரிப்ட் - مخطوط عربي  قديم " அதற்கு சான்றாக உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 18 ம் தேதி சர்வதேச அரபு மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அரபி மொழியைக் குறித்து சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும்.

9 செம்மொழிகளில் ஒன்றாக அரபு இருந்தாலும் மற்ற மொழிகளுக்கு இல்லாத தனித்துவங்களும் மேன்மைகளும் அரபு மொழிக்கு உண்டு. அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்துச் செறிவு, உண்மை தன்மை, பிற மொழிகளிடம் இருந்து இரவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களாகும்.

அரபு மொழியைக் கொண்டு நம் சமூகத்திற்கு அல்லாஹ் கண்ணியத்தைக் கொடுத்து விட்டான்.

لا بد من النظرِ إلى اللغة العربية على أنها لغةُ القرآن الكريم والسنة المطهرة، ولغةُ التشريع الإسلامي؛ بحيث يكون الاعتزازُ بها اعتزازًا بالإسلام، وتراثه الحضاري العظيم، فهي عنصرٌ أساسي من مقوماتِ الأمة الإسلامية والشخصية الإسلامية

அல்லாஹ் நமக்கு அருளிய வேதமான அல்குர்ஆனை அரபியில் தான் அல்லாஹ் இறக்கித் தந்திருக்கிறான். அரபி குர்ஆனின் மொழியாகவும் ஹதீஸின் மொழியாகவும் ஷரீஅத்தின் அடிப்படை மொழியாகவும் இருக்கிறது. நாம் பெருமைப்படுவதற்கும் அரபி மொழியின் அந்தஸ்தை புரிவதற்கும் இது ஒன்றே போதுமான சான்றாகும்.


அரபி மொழி அறிவின் தேவை


நாம் பிறப்பால் தமிழர்களாக இருந்தாலும் அரபு மொழியை தெரிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் அவசியம். சரியாக சொல்வதானால் நம் மீது அது கடமை. காரணம், அல்குர்ஆனை அல்லாஹ் அரபு மொழியில் தான் இறக்கியிருக்கிறான். அல்குர்ஆனை ஓதுவதும் மனனமிடுவதும் மட்டுமல்ல, அதை விளங்குவதும் நம் மீது கடமை.


ﻋﻦ أﺑﻲ رﻗﻴﺔ ﺗﻤﻴﻢ ﺑﻦ أوسٍ اﻟﺪاري رﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ: أن اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ

ﻋﻠﻴﻪ وﺳﻠﻢ ﻗﺎل: ))اﻟﺪ ﻳﻦ اﻟﻨﺼﻴﺤﺔ((، ﻗﻠﻨﺎ: ﻟِﻤَﻦ؟ ﻗﺎل: ))ﻟﻠﻪ، وﻟﻜﺘﺎﺑﻪ، وﻟﺮﺳﻮﻟﻪ، وﻷﺋﻤﺔ اﻟﻤﺴﻠﻤﻴﻦ، وﻋﺎﻣﺘﻬﻢ

நபி ஸல் அவர்கள் மார்க்கம் என்பது (பிறருக்கு) நலவை நாடுவது” என்று கூறிய போது, “யாருக்கு?” என நாங்கள் கேட்டோம்அதற்கு நபி ஸல் அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்திற்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 55)

وﻟﻜﺘﺎﺑﻪ:(( ﺑﺤﻔﻈﻪ وﺗﺪﺑﺮه، وﺗﻌﻠﻢ أﻟﻔﺎﻇﻪ وﻣﻌﺎﻧﻴﻪ، واﻻﺟﺘﻬﺎد ﻓﻲ اﻟﻌﻤﻞ ﺑﻪ ﻓﻲ ﻧﻔﺴﻪ وﻏﻴﺮه

மேற்கூறப்பட்ட ஹதீஸில் அவனுடைய வேதத்திற்கு நலவை நாடுதல் என்பதற்கு விளக்கம் கூறும் இமாம்கள், குர்ஆனை ஓதுவது, அதைப் பாதுகாப்பது, அதைப் பற்றி சிந்திப்பது, அதிலுள்ள வார்த்தைகளையும் அதன் பொருள்களையும் விளங்க முற்படுவது, அதைக் கொண்டு அமல் செய்வது என்று அதற்கு பல விளக்கங்களை கூறியுள்ளார்கள்.

 

குர்ஆனை விளங்குவது நம் மீது கடமை

 

اﻓﻼ ﻳﺘﺪﺑﺮن اﻟﻘﺮان ام ﻋﻠﻲ ﻗﻠﻮب اﻗﻔﺎﻟﻬﺎ

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா ? அல்லது அவர்களின் உள்ளங்களில் பூட்டு போடப்பட்டிருக்கிறதா ? (அல்குர்ஆன் 47 24)

كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ

(நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (அல்குர்ஆன் : 38:29)

 

கிராமவாசியிடம் இருந்த குர்ஆனிய ஞானம்

كان الأصمعي من ألمع فحول اللغة العربية ، وكان الناس إذا استشكل عليهم شيء يقولون قل يا أصمعي .. فقوله هو الفصل .. وكان آية من آيات اللغة العربية ، ورغم أنه كان معتزلي العقيدة ؛ إلا انه كان من جهابذة اللغة وكان يحظر حلقات درسه أناس كثيرون ، وفى كل مرة كان يضرب الأمثال سواء من الشعر أو النثر أو القران أو الأحاديث النبوية ،فى ذات يوم وهو يدرس ضرب مثلا من القران الكريم فقال ، قال الله تعالى ( والسارق والسارقة فاقطعوا أيديهما جزاءا بما كسبا نكالا من الله و الله غفور رحيم .. ) فقام رجل من الأعراب كان يحظر هذا الدرس وقال: يا أصمعي كلام من هذا الذي قلت قبل قليل فقال: هذا كلام الله ، فقال الأعرابي: حاشى لله أن يقول مثل هذا الكلام .. فاستغرب الأصمعي من كلامه واستغرب الناس !! وقال الأصمعي ، يا رجل هل تحفظ أنت القران ، فقال: لا ، قال: هل تحفظ سورة المائدة التي بها هذه الآية , فقال: لا .. فقال الأصمعي: ويحك كيف تتجرأ على الله ، فقال الأعرابي: أنت قلت أن السارق والسارقة أقطعوا أيديهما جزاءا .. وقلت نكالا من الله ، فهذا الموقف الإلهي موقف عزة وحكمة وليس موقف مغفرة ورحمة ، فقال الأصمعي: ائتوني مصحفا ، ففتح على سورة المائدة وأخذ يقرأ وإذا به أخطأ فالآية ختمت ( والله عزيز حكيم ) وليس ( والله غفور رحيم ) فابتسم الأصمعي وقال والله إنا لنجهل لغة العرب

இமாம் அஸ்மஈ (ரஹ்)" அவர்கள் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் மிகச் சிறந்த புலமை பெற்ற ஒரு மார்க்க அறிஞர். அவருடைய அரபி மொழி மற்றும் கவிதை குறித்த அறிவு பரவலாகப் புகழப்பட்டது,அவர்கள் ஒரு நாள்

والسارق والسارقة فاقطعوا أيديهما جزاءا بما كسبا نكالا من الله و الله غفور رحيم

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்கள்.

அப்போது ஒரு கிராமவாசி, இமாம் அவர்களே! நீங்கள் சொன்னது யாருடைய வார்த்தை? என்று கேட்டார். இது குர்ஆனுடைய வசனம் என்று சொன்னார்கள். நிச்சயமாக இது குர்ஆன் வசனமாக இருக்க முடியாது. அல்லாஹ் நிச்சயமாக இப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார். அதற்கு அஸ்மஈ ரஹ் அவர்கள், அப்படியானால் நீ குர்ஆனை மனனம் செய்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். இல்லை என்று சொன்னார். அப்படியானால் குர்ஆனில் இருக்கிற மாயிதா சூராவை மனனமிட்டிருக்கிறாயா? என்று கேட்டார்கள் அதற்கு அவர் இல்லை என்றே சொன்னார். அப்படியானால் இது குர்ஆன் வசனம் இல்லை என்று எப்படி நீ துணிந்து சொல்கிறாய் என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் சொன்னார் ; கையை வெட்ட வேண்டும் என்பது திருடியவருக்கு அல்லாஹ் சொல்லுகின்ற தண்டனை. தண்டனையை பற்றி சொல்லுகின்ற அந்த இடத்தில் பாவ மன்னிப்பையும் கிருபையையும் உணர்த்தக்கூடிய வாசகம் பொருத்தம் இல்லாதது. ஏனென்றால் அந்த குற்றத்தை அல்லாஹ் மன்னித்து விட்டால் எதற்கு கைகள் வெட்டப்பட வேண்டும். எனவே இந்த வாசகம் பொருத்தம் இல்லாததாக தெரிகிறது. எனவே தான் இது குர்ஆன் வசனம் இல்லை என்று உறுதியாக நான் சொன்னேன் என்று அவர் கூறிய போது, இமாம் அவர்கள் குர்ஆனை எடுத்துப் பார்த்தார்கள். அப்போது தான் குர்ஆன் வசனத்தை, தான் தவறாக ஓதி விட்டதை உணர்ந்தார்கள்.

 

கலீஃபாவிடம் இருந்த குர்ஆனிய ஞானம்


امرأة دخلت على هارون الرشيد وهي من قوم قد قتل الخليفة رجالها فقالت: أقر الله عينك، وفرحك بما أتاك، وأتم سعدك، لقد حكمت فقسطت. فسأل أصحابه عن قصدها فقالوا : مانراها قالت الا خيرا! قال: ما اظنكم فهمتم ذلك. أما قولها: اقر الله عينيك أي اسكنها عن الحركة واذا سكنت عميت. واما قولها: وفرحك بما اتاك فأخذته من قوله تعالى: حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغية. واما قولها : واتم الله سعدك فأخذته من قول الشاعر: اذا تم امر بدا نقصه...ترقب زوالا اذا قيل تم. واما قولها: لقد حكمت فقسطت فأخذته من قوله تعالى: واما القاسطون فكانوا لجهنم حطبا. هي نباهة هارون وفصاحة امرأة وجمال لغة

மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷாவை ஒரு பெண் சந்திக்க வந்தாள். அந்தப் பெண்ணின் கோத்திரத்தை சார்ந்தவர்களுக்கு குற்றத்திற்கான தண்டனைகளை கலீபா அப்போது தான் நிறைவேற்றி இருந்தார். அந்த பெண்மணி கலீஃபாவைப் பார்த்து உங்கள் கண்களுக்கு அல்லாஹ் குளிர்ச்சியைத் தருவானாக! உங்களுக்கு வழங்கியதைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவானாக! உங்களின் சீதேவித் தனத்தை பரிபூரணப் படுத்துவானாக நீங்கள் நீதமான முறையில் தீர்ப்பளித்து விட்டீர்கள் என்று அந்த பெண் சொன்னாள் அவள் சென்ற பிறகு அவர் சொன்ன வார்த்தைகளுக்கு என்ன பொருள். எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினாள் என்று கலீபா கூடி இருந்த மக்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் நல்ல வார்த்தைகளைத் தான் சொல்லி சென்றிருக்கிறார். உங்களை புகழ்ந்து விட்டு தான் போயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்போது கலீஃபா அவர்கள், அவள் சொன்ன வார்த்தைகளுக்கான பொருளை நீங்கள் சரியாக புரிய வில்லை. அவள் சொன்ன வார்த்தைகளுக்கு பொருள் என்னவென்றால்...

أقر الله عينك

அசைவு இல்லாமல் உங்கள் கண்களை அல்லாஹ் அமைதியாக்குவானாக அதாவது உங்கள் கண்களை குருடாக்குவானாக!

وفرحك بما اتاك

இந்த வார்த்தைக்கு இந்த வசனத்தின் பொருளாகும்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ  حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். (அல்குர்ஆன் : 6:44)

: واتم الله سعدك

உங்களின் சீதேவித் தனத்தை பரிபூரணப் படுத்துவானாக! என்பதும் புகழல்ல. ஏனெனில் ஒரு விஷயம் முழுமை பெற்று விட்டால் அப்போது அதன் குறை வெளிப்படும். என் குறைகளை அல்லாஹ் வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் கூறுகிறாள்.

لقد حكمت فقسطت

இந்த வார்த்தைக்கு நீதம் என்ற பொருளல்ல.... மாறாக இந்த வசனத்தின் பொருளை அந்தப் பெண் நாடியிருக்கிறாள்.

وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۙ‏

வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டைகளாக ஆகிவிட்டனர்'' (இவ்வாறு ஜின்கள் கூறினர்.) (அல்குர்ஆன் : 72:15)

எனவே அந்தப் பெண் என்னை பாராட்ட வில்லை. என்னை திட்டியிருக்கிறாள் என்று கலீஃபா கூறினார்கள்.

குர்ஆனின் வசனங்களை புரிய வேண்டும், சிந்திக்க வேண்டும், அதை ஆராய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அரபி மொழி அறிவின்றி எவ்வாறு குர்ஆனை புரிய முடியும்?


அரபி மொழி தெரியாமல் குர்ஆனை விளங்க முடியாது


அரபி மொழியில் பான்டித்துவம் இல்லாதவர்களால் அவ்வளவு எளிதாக குர்ஆன் வசனங்களின் கருத்துக்களை புரிந்து கொள்ள இயலாது. அரபி மொழி இலக்கண இலக்கியத்தில் கைதேர்ந்தவர்களால் மட்டுமே குர்ஆனை புரிந்து கொள்ள முடியும். மொழி அறிவு இல்லாதவர்கள் குர்ஆனை விளங்க முற்பட்டால் வழிதவறிச் சென்று விடுவார்கள். அத்தகையவர்கள் பிறருக்கு விளக்க முற்பட்டால் அனைவரையும் வழிகெடுத்து விடுவார்கள். ஏனென்றால் குர்ஆன் இலக்கிய நயமானது. சில வசனங்களை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணம் -1

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ ‏அநாதை(ப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அல்குர்ஆன் : 4:3)

இது தான் இந்த வசனத்திற்கான சரியான பொருள். அரபி மொழி அறிவு இல்லாதவர்கள் இந்த வசனத்திற்கு இரண்டு மேலும் மூன்று மேலும் நான்கு. ஆக 9 பெண்களை நிகாஹ் செய்து கொள்ளுங்கள் என்று இதற்கு பொருள் கொடுக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தான கருத்து. ஹதீஸுக்கு முரணான கருத்து.

உதாரணம் – 2

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ

செத்தது, இரத்தம், பன்றி உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. (அல்குர்ஆன் : 5:3)

அரபி மொழிப் புலமை இல்லையென்றால் இந்த வசனத்தில் அல்லாஹ் இறைச்சியைத் தான் கூறியிருக்கிறான். எனவே பன்றியின் கொழுப்பு தடை செய்யப்பட வில்லை. அது ஹலால் என்று கூறி விடுவார்கள். அப்படித்தான் சிலர் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரபியில் لحم லஹ்ம் என்ற வார்த்தை இறையச்சியை மட்டுமல்ல, அதன் கொழுப்பையும் எடுத்துக் கொள்ளும். شحم ஷஹ்ம் என்ற வார்த்தை கொழுப்புக்கு மட்டுமே சொல்லப்படும். அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் லஹ்ம் என்ற வார்த்தையையும் சேர்த்து கூற வேண்டியதிருக்கும். எனவே தான் அல்லாஹ் இரண்டு பொருளையும் தருகின்ற ஒரு வார்த்தையான லஹ்ம் என்பதை பயன்படுத்தியிருக்கிறான். இதை அறியாதவர்கள் தான் இந்த வசனத்தை தவறாக புரிந்து கொண்டு பன்றி கொழுப்பு ஹலால் என்று கூறுகிறார்கள்.

உதாரணம் – 3

وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏

திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான். (அல்குர்ஆன் : 93:7)

ضلال என்ற வார்த்தைக்கு வழிகேடு என்பது அறியப்பட்ட பொருளாகும். ஆனால் அந்த பொருளை இந்த வசனத்திற்கு கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் அறிவோம்.நபித்துவத்திற்கு முன்பு வழிகேட்டில் இருந்தார்கள்  (நவூது பில்லாஹ்) என்று பொருள் கிடைத்து விடும். எனவே அந்த பொருளை கொடுக்கக்கூடாது. மாறாக அந்த வார்த்தைக்கு மறதி, பாதையை தவற விடுதல் என்ற பொருளும் இருக்கிறது. அந்த பொருளைத் தான் இங்கே தர வேண்டும்.

لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى‏

என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவற விடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான். (அல்குர்ஆன் : 20:52)  

இந்த வசனத்தில் ضلال  என்ற வார்த்தைக்கு தவற விடுதல் என்ற பொருள் தரப்பட்டுள்ளது.

وقال ابن عباس - رضي الله عنهما -: "هو ضلاله وهو في صغرِه في شعابِ مكة، ثم ردَّهُ الله إلى جدِّه عبد المطلب، وقيل: ضلاله من حليمةَ السعدية مرضعته، وقيل: ضلَّ في طريقِ الشَّامِ حين خرج به عمه أبو طالب"[63].

நபி ஸல் அவர்கள் சிறு வயதாக இருந்த போது சில சந்தர்ப்பங்களில் சில பயணங்களில் பாதை தெரியாமல் சென்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டி திருப்பி அழைத்து வந்தான். அப்துல் முத்தலிப் அவர்களின் பராமரிப்பில் இருந்த போதும் அன்னை ஹலீமா ரலி அவர்களின் பராமரிப்பில் இருந்த போதும் அபூதாலிப் அவர்களின் பராமரிப்பில் இருந்த போதும் இவ்வாறு நடந்தது. அல்லாஹ் அவர்களுக்கு சரியான பாதையை காண்பித்து திரும்ப இல்லம் திரும்ப உதவி புரிந்தான். அந்த பொருளில் தான் இந்த வசனத்தை அல்லாஹ் அருளியிருக்கிறான் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

அரபி மொழி அறிவின்றி ஹதீஸை விளங்க முடியாது

يقول ابن الأثير رحمه الله: "معرفة اللغة والإعراب هما أصل لمعرفة الحديث وغيره، لورود الشريعة المطهرة بلسان العرب".

அரபி மொழி அறிவு என்பது ஹதீஸை விளங்குவதற்கான அடிப்படை. அந்த அறிவின்றி ஹதீஸை விளங்க முடியாது என்று இப்னு அஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

அரபி மொழி அறிவின்றி மார்க்க சட்டத்தை புரிந்து கொள்ள முடியாது

ولو قال لزوجتِه: أنت طالق إن دَخَلْتِ الدار، بكسر همزة (إن)، لم تطلق حتى تدخلَ الدَّار؛ لأنَّ (إن) للشرط، ولو قال: أنت طالق أن دَخَلْتِ الدار، بفتح همزة (أن)، وقع الطلاق في الحال؛ لأن معنى الكلام: أنت طالقٌ لأن دخلت الدار؛ أي: من أجلِ أنك دخلتِ الدار؛ فصار دخولُ الدارِ علة طلاقها، لا شرطًا في وقوعِ طلاقها[83].

أنت طالق إن دَخَلْتِ الدار இந்த வார்த்தையில் ان என்ற வார்த்தைக்கு ஜேர் வைத்து படித்தால் வீட்டில் நுழைந்தால் நீ தலாக் ஆகி விடுவாய் என்று பொருளாகும். எனவே இன்னும் தலாக் நிகழ வில்லை. அதற்கு ஜபர் வைத்து படித்தால் நீ நுழைந்து விட்டால் எனவே நீ தலாக் என்ற பொருள் கிடைக்கும். எனவே தலாக் நிகழ்ந்து விட்டது. இந்த மாதிரியான வித்தியாசங்களை அரபி மொழியின் மூலம் அறிந்து கொள்ள வில்லையானால் நிறைய சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும்.

இந்த மாதிரியான அரபி மொழி அறிவு சரியாக இல்லாமல் சிலர் இன்று குர்ஆனையும் ஹதீஸையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களும் வழி தவறி மக்களையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அரபி மொழி தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் அரபி மொழி அறிவில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 அரபி மொழியின் தனித்துவம் குறித்த மேலும் தகவல்களை அறிய அரபி எனும் செம்மொழி  இந்த இணைப்புக்குள் சென்று பார்வையிடுங்கள். வஸ்ஸலாம்.

 

No comments:

Post a Comment