உலகில் கவலைகள் இல்லாத எந்த மனிதரும் இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையில் கவலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலை. தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவனுக்கு கவலை.கல்விப் பயணத்தை முடித்தவனுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை. நல்ல வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே என்ற கவலை ,செட்டில் ஆகி விட்டால் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற கவலை, கல்யாணம் செய்து விட்டால் குழ்ந்தை பிறக்க வேண்டுமே என்ற கவலை,குழந்தை பிறந்தால் அதை நல்ல வளர்க்க வேண்டுமே என்ற கவலை. அதற்குப் பிறகு அவர்களை படிக்க வைக்க வேண்டும், அவர்கள் நல்ல மார்க் வாங்க வேண்டும், அவர்கள் நல்ல பணியில் சேர வேண்டும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இப்படி கவலைகள் மரணம் வரை நம்மை விடாது துறத்திக் கொண்டே இருக்கும்.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Friday, November 28, 2025
Friday, November 14, 2025
Children's Day - குழந்தைகள் தினம்
இன்று நவம்பர் 14. நாடு முழுக்க சில்ட்ரன்ஸ் டே – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும் இருந்தது. குழந்தைகள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 1955 ல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி இந்தியாவை நிறுவினார். குழந்தைகளின் நலனில் தனி கவனம் செலுத்தியதாலும் அந்த கவனத்தை சமூகத்திற்கு உணர்த்தியதாலும் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ம் தேதியை இந்த நாடு குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.
Friday, October 3, 2025
கௌஸ் நாயகத்தின் வரலாற்று பக்கங்களில் சில...
அவர்களின் பிறப்பு
كانت ولادته سنة (٤٧١هـ) كما في معظم تراجمه .
ولد الشيخ - رحمه الله تعالى - بمنتصف شهر رمضان في سنة إحدى وسبعين وأربع مئة بجيلان ، وبها أمضى فترة شبابه الأول إلى أن بلغ الثامن عشرة سنة ، فارتحل إلى بغداد ، ودخلها سنة ثمان وثمانين وأربع مئة " ، واستمر فيها إلى نهاية حياته
அவர்கள் ஹிஜ்ரி 471 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் ஜீலான் என்ற நகரத்தில் பிறந்தார்கள். அங்கேயே அவர்களின் 17 ம் வயது வரைக்கும் இருந்தார்கள். அதற்குப் பிறகு பக்தாத் நகரத்திற்கு பயணப்பட்டார்கள். அவர்களின் இறுதி நேரம் வரை அங்கேயே இருந்தார்கள்.
Thursday, September 11, 2025
இலட்சியங்களை வென்ற இளைஞராக இரசூல் நபி ஸல் அவர்கள்
கனினி பழுதடைந்திருப்பதால் கைபேசியில் தயார் செய்து தந்திருக்கின்றேன். எனவே சில தகவல்களை சரியாக கோர்வை செய்து தர முடிய வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Thursday, August 28, 2025
மாநபியின் குழந்தைப் பருவம்
اَلَمْ
يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
உம்மை
அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க
வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)
நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.
Friday, August 22, 2025
அண்ணல் நபியின் அதிசயப் பிறப்பு
அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின் படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.
Thursday, August 14, 2025
இது சுதந்திர நாடா?
இந்திய நாடு
தனது 79 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான், தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.
Thursday, August 7, 2025
மனித துணை - humen companion
சமீப காலமாக பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. ஆதி காலத்தில் மனிதனின் தேவைக்காகவும் உதவிக்காகவும் சில மிருகங்களை வளர்த்து வந்த மனிதன், பிறகு அவைகளினால் சில இயற்கை நன்மைகளை பெற்ற பொழுது பிராணிகளின் அவசியத்தை உணர்ந்து அவைகளோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். ஆனால் இன்று பிராணிகளை வளர்ப்பது நவீன காலத்து கலாச்சாரமாக மாறி விட்டது. தேவைக்காகவும் உதவிக்காகவும் வளர்த்த காலம் கடந்து இப்போது அதை வளர்ப்பது ஃபேஷனாக மாறிப்போனது.பிராணிகள் விஷயத்தில் சிலர் எல்லை கடந்து அதற்கு அடிமையாகி விட்டார்கள். வித விதமான பறவைகளையும் பிராணிகளையும் வீட்டில் வாங்கி நிரப்புவதை வழமையாக கொண்டிருக்கின்றார்கள்.
Friday, August 1, 2025
வேடிக்கை பார்ப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
من رأى
منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك
أضعف الإيمان)
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும். (முஸ்லிம்: 78)
Friday, July 25, 2025
கனவை வைத்து கனவு காணாதே
நாம் நம் வாழ்வின் 3 ல் ஒரு பங்கை தூக்கத்தில் செலவிடுகிறோம். அந்த அடிப்படையில் நாம் வாழ்வில் அதிகமான கனவுகளை காணுகின்றோம். உலகில் கனவு காணாதவர்கள் இல்லை என்றளவிற்கு கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.
Friday, July 18, 2025
வகுப்பறையில் வகுப்புவாதம்
ஷரீஅத்திலும் உலகத்திலும் வரலாறு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. வரலாறு ஒரு தேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.நிகழ்காலத்தை சரியாக வடிவமைப்பதற்கும் முறையக கட்டமைப்பதற்கும் வரலாறுகள் மிகவும் அவசியம்.
Friday, July 11, 2025
நாட்டு மக்களை நசுக்கும் விலைவாசி உயர்வு
பணவீக்கம் என்பது தற்போது பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருக்கின்றது. நமக்கு கிடைக்கும் பணத்துடன் ஒப்பிடும் போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வை இந்த வார்த்தை குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு பல வருடங்களுக்கு முன்பு நாம் வாங்கிய ஒரு பொருளை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. அதன் விலை அதிகரித்திருக்கும்.இதற்கே பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் விலைவாசி உயர்வை குறிக்கும் வார்த்தை தான் பணவீக்கம்.
Friday, July 4, 2025
ஆஷூராவும் அனாச்சாரங்களும்
அல்லாஹ்வின் அருளால் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினத்தை சந்திக்க இருக்கின்றோம். ஆஷூரா என்றால் பத்தாவது என்று பொருள். எல்லா மாதங்களிலும் பத்தாவது நாள் உண்டு என்றாலும், முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினத்திற்கே இந்த பெயர் சொல்லப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் இந்த நாளில் நடந்திருப்பதாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
Friday, April 25, 2025
வீரம் செறிந்த சிறார்கள்
இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.
Thursday, March 20, 2025
தராவீஹ் 20 - இஃதிகாஃப்
கடைசி பத்தில் குறிப்புகள் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் நாளை ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை அடைய இருக்கிறோம். இந்த பகுதியில் புனிதம் நிறைந்த லைலத்துர் கத்ர் இரவு இடம்பெற்றிருக்கிறது.
Wednesday, March 19, 2025
தராவீஹ் 19 - அனைத்தையும் பெற்றுத்தர வல்லது
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.
(அல்குர்ஆன் : 38:35)
Tuesday, March 18, 2025
தராவீஹ் 18 - வாய்ப்புக்கள் ஒரு முறை தான் கதவைத் தட்டும்
وَهُمْ
يَصْطَرِخُوْنَ فِيْهَا رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ
الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ
تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ
نَّصِيْرٍ
அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)
Monday, March 17, 2025
தராவீஹ் 17 - பத்ர் தரும் படிப்பினைகள்
இன்று பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினமாக இருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போர்க்களம் பத்ர். இஸ்லாம் எழுச்சி பெறுவதற்கும் உலகம் முழுக்க பரவி விரவுவதற்கும் காரணமான ஒரு போர்க்களம். பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் அந்த போர்க்களத்தின் வழியாக ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கினான். அவற்றில் சிலதை நாம் இன்றைக்கு சிந்திக்கலாம்.
Saturday, March 15, 2025
தராவீஹ் 16 - இவ்விரண்டில் எது வேண்டும்?
وَاِنِّىْ
مُرْسِلَةٌ اِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنٰظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُوْنَ
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.) (அல்குர்ஆன் : 27:35)
தராவீஹ் 15 - பார்க்க வேண்டாம்
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ
اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ
اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 24:30)

.jpeg)





