Monday, December 15, 2025

பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்

 

1.       அஸ்ஸலாமு அலைக்கும்

2.       எனக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை அடைய வழி சொல்லுங்க.

3.       நான் பணக்காரனா ஆகனும்

4.       மிகப்பெரிய ஆலிமாகனும்

5.       நான் கண்ணியமான வாழ்க்கை வாழனும்

6.       நான் ஒரு நல்ல மனிதராக ஆகனும்

7.       நான் நீதமுள்ளவானாக ஆகனும்

8.       நான் ஆற்றல் மிக்கவனா ஆகனும்

9.       அல்லாஹ்வுடைய தர்பாரில் எனக்கு விசேஷ அந்தஸ்து கிடைக்கனும்

10.   ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்படனும்

11.   நான் கேக்குற துஆ எல்லாம் கபூலாகனும்

12.   ஈமான்ல பரிபூரணமடையனும்

13.   அல்லாஹ்வ பாவமற்ற நிலைல சந்திக்கனும்

14.   அல்லாஹ் என் குறைகள மறைக்கனும்

15.   அல்லாஹ் ரசூலோட பிரியம் கிடைக்கனும்

 

 

 1.       வ அலைக்குமுஸ் ஸலாம்

2.       கேளுங்க சொல்றேன்.

3.       போதுமென்ற தன்மையோடு இருங்க.நீங்கள் பணக்காரராகிடுவீங்க

4.       இறையச்சத்த கடை பிடிங்க. ஆலிமாகிவீங்க.

5.       ஜனங்களிடம் கையேந்துவத விட்டுருங்க. கண்ணியமா வாழுவீங்க

6.       மக்களுக்கு பயன் தர்ர மாதிரி வாழுங்க. நல்ல மனிதராக ஆகி வீங்க.

7.       நீங்க உங்களுக்கு எத விரும்புறீங்களோ, அத மத்தவங்களுக்கும் விரும்புங்க.நீதமானவரா ஆயிடுவீங்க

8.       அல்லாஹ்வின் மீது நம்பிக்கைய ஏற்படுத்துங்க.ஆற்றல் மிக்கவரா ஆயிடுவீங்க

9.       அதிகமா அல்லாஹ்வ திக்ரு செய்யுங்க. அவனிடத்தில உங்களுக்கு அந்தஸ்து கிடைக்கும்.

10.   எப்பொழுதும் ஒழுவோட இருங்க. ரிஸ்கில அபிவிரித்தி ஏற்படும்.

11.   ஹராமான பொருளாதாரத்த விட்ருங்க. உங்க எல்லா துஆவும் கபூலாகும்.

12.   நற்குணமுள்ளவராக இருங்க. ஈமான்ல பரபூரணம் அடைய முடியும்.

13.   குளிப்பு கடமையானவுடன குளிச்சிருங்க. பாவமில்லாம அல்லாஹ்வ சந்திக்க முடியும்

14.   நீங்க பிறருடைய மறைங்க. அல்லாஹ் உங்க குறைய மறைப்பான்

15.   அல்லாஹ் ரசூல் பிரியப்பட்டவங்கள நீங்க பிரியப்படுங்க. அல்லாஹ் ரசூலோட பிரியம் உங்களுக்கு கிடைக்கும்.

 

No comments:

Post a Comment