1. கணவன் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! ஆசியா அலை அவர்களுக்கு அவரது கணவன் மோசமானவன் தான்!
2.மனைவி
சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! லூத் நபி, நூஹ் நபி அவர்களின் மனைவி மோசமானவர்கள் தான்..!
3.குழந்தை இல்லையே
என்ற கவலையா.?
கவலைப்படாதீங்க! முஃமின்களின் தாயார் ஆயிஷா_ரலி அவர்களுக்கு குழந்தை இல்லை
4.பிள்ளைகள் சொல்
பேச்சு கேட்க வில்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! நூஹ் நபி அலை அவர்களின் மகன் சொல் கேட்காதவன் தான்!
5.சொந்த வீடு
இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பாலைவனத்தில் தான் வாழ்ந்து வந்தார்கள்!
6.தீராத நோய் என்ற
கவலையா?
கவலைப்படாதீங்க! அய்யூப் (அலை) அவர்கள் பல வருடங்களாக நோயால் கஷ்டப்பட்டார்கள்.
7.பெற்றோர்கள் சரி
இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தகப்பன் அப்படிப்பட்டவர் தான்!
8.படிச்ச
படிப்புக்கு வேலை கிடைக்க வில்லை என்ற கவலையா???
கவலைப்படாதீர்கள்! எல்லா நபிமார்களும் ஆடு தான் மேய்த்தார்கள்!
9.உடன் பிறந்தவர்கள்
துரோகம் செய்து விட்டார்கள் என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! யூசுப் நபிக்கு அவர்களின் சகோதரர்கள் துரோகம் செய்தார்கள்.
10.நம்பியவர்கள்
முதுகில் குத்தி விட்டார்கள் என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! மூஸா நபியின் முதுகில் அவர்களின் சமுதாயம் குத்தியது!
11.உங்கள்
மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி விட்டார்கள்
என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! நபியின் மனைவி ஆயிஷா ரலி அவர்களின் மீதும் அவதூறு சொன்னார்கள்.
No comments:
Post a Comment