Friday, September 18, 2020

நோய்கள் சாபமல்ல ; வரம்


 

உலகில் இன்றைக்கு அதிகம் பேசப்படும் பொருளாக உச்சரிக்கப்படும் பொருளாக விவாதிக்கப்படும் பொருளாக இருப்பது கொரோனா. கடந்த வருடம் டிசம்பரில் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுக்க இதுவரை சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி விட்டது. யாரும் எண்ணிப்பார்க்காத அளவுக்கு இதுவரை உலகம் சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது.

Thursday, September 17, 2020

போனால் வராது

 


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற பருவங்களில் மிக முக்கியமான, பல வகையான சிறப்பம்சங்களைக் கொண்ட, எல்லா வகையான நற்பாக்கியங்களைப் பெற்ற பருவம் வாலிபப் பருவம். மிகவும் துடிப்பும் ஆற்றலும் எழுச்சியும் மிக்க பருவம்.உலகில் உலா வருகின்ற சாதனையாளர்களும் வெற்றியாளர்களும் தங்களுடைய சாதனைக்கான, வெற்றிக்கான பயணத்தைத் தொடங்கிய பருவம்.

Wednesday, September 16, 2020

நம் தோல்விக்கான காரணம்

 


                 (குடியுரிமை மசோதா பிரச்சனையின் போது பேசிய உரை)

120 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நாடு இந்தியா. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாடு இந்தியா. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக பலநூறு உலமாக்கள் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரை கொடுத்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் ரத்தத்தினால் தான் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.

Sunday, September 13, 2020

நீதிபதிகள்

 



என்னுடைய பழைய பதிவு. சிறிய மாற்றங்களோடு......


நம் நாட்டு நீதிமன்றங்களும் அதிலுள்ள நீதிபதிகளும் வித்தியாசமான, விசித்திரமான,அநீதமான தீர்ப்புகளை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ஆதரிக்கும் தீர்ப்பைக் கூறி இஸ்லாமியர்களை மட்டுமல்ல,

Friday, September 11, 2020

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை

 

மோசமான ஒரு காலகட்டத்தில் மிகவும் ஆபத்தான காலச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.குற்றங்கள் பெருகி விட்ட, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து விட்ட, சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக உரிமை மீரல்கள் மலிவாகி விட்ட, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிப் போன, பெண்ணாகப் பிறந்தவர்கள் இங்கு வாழவே முடியாதோ! சுதந்திரமாக இருக்கவே முடியாதோ! தங்கள் மானங்களை பாதுகாக்கவே முடியோதோ! என்று அஞ்சுகிற அளவுக்கு மோசமான நாடாக இந்திய நாடு உருவெடுத்திருக்கிறது.

Thursday, September 10, 2020

இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டும் அதற்கான பதிலும்

 


         (புல்வாமா தாக்குதல் நடந்த போது பேசிய ஜும்ஆ உரை)

ஒரு வாரமாகவே ஒரு விதமான பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. காரணம் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய காஷ்மீர் பகுதியில் நடந்த அந்த பயங்கரமான நிகழ்வு.காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் நம் நாட்டைச் சேர்ந்த CRPF என்று சொல்லப்படுகிற மத்திய ரிஸர்வ் போலீஸ் படை ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சார்ந்த 2 பேர் உட்பட 45 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

Sunday, September 6, 2020

ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றுவோம்


 

                           (மூன்று வருடங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

ஒரு சில நாட்களாகவே ஒரு விதமான பதட்டமும் பரபரப்பும் நம்மிடையே நிலவி வருகிறது.அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் இன்று வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

இறைவனை எப்படி நம்ப வேண்டும்

 


        (குடியுரிமைப் பிரச்சனையின் போது பேசிய ஜும்ஆ உரை)

நம் நாட்டில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் மசோதாக்களையும் கருத்தில் கொண்டு இது மாதிரியான சட்டங்களால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எதிர் கொள்வதற்கு நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த மாதிரியான சட்டங்களால் நாம் பாதிக்கப்படாமல் வரும் காலங்களில் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற நாமென்ன அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்று சிந்திப்பதும் யோசிப்பதும் காலத்தின் கட்டாயம்.

Saturday, September 5, 2020

வாய்ப்புக்களை பயன்படுத்துவோம்

 

அல்லாஹுத்தஆலா நம்மை உலகத்தில் படைத்து நமக்கு அழகானதொரு  வாழ்க்கையைக் கொடுத்து அந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை  விஷயங்களையும் அமைத்துத் தந்திருக்கிறான். அந்த வாழ்கையை அனுபவிப்பதற்குத் தேவையான அறிவையும் தெளிவையும் சாதுர்யத்கையும் வழங்கியிருக்கிறான். மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும்  அவ்வப்போது தருகிறான். அப்படி அல்லாஹ் தருகிற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சரியாக முறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் உண்மையில் புத்திசாளிகள். வெற்றியாளர்கள். கிடைக்கிற சந்தர்ப்பங்களை நவுவ விடுபவர்கள் புத்திசாளிகளாகவும் இருக்க முடியாது. வெற்றியாளர்களாகவும் திகழ முடியாது.

Wednesday, September 2, 2020

ஸலாமின் வழியே ஒற்றுமையை வளர்ப்போம்

 


ஒற்றுமை ஏற்பட இஸ்லாம் வழிகாட்டும் அடுத்த விஷயம் ஸலாம்.ஸலாமைப் பரப்புதல்.

لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم‏؟‏ أفشوا السلام بينكم

நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வீர்களோ அத்தகைய ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (முஸ்லிம் ; 54)

Thursday, August 27, 2020

பணிவின் மூலம் ஒற்றுமையை வளர்ப்போம்

 

சமூகத்தில் ஒற்றுமை மேம்படுவதற்கு இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டுதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமை சிதைந்து போனதற்கும் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் நாம் அலசி வருகிறோம்.அந்த வகையில் ஒற்றுமையை சிதைக்கக்கூடிய ஆபத்தான விஷயங்களில் ஒன்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிற குணம்.

Wednesday, August 26, 2020

அன்பளிப்புகளைக் கொண்டு ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்

 

ஒற்றுமை தான் நமக்கான பலம், ஒற்றுமை தான் நமக்கான அடிப்படை. அந்த ஒற்றுமை சீர்குலைந்து விட்டால் நாம் பலம் குன்றிப் போய் விடுவோம். ஸஹாபாக்களிடம் அந்த ஒற்றுமை இருந்ததினால் அவர்கள் சொற்பமாக இருந்தும் குறுகிய காலத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைக்கு உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் பலத்தில் சிறுபான்மையாகத்தான் இருக்கிறோம். அதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது என்று கடந்த வார ஜும்ஆவில் குறிப்பிட்டோம்.

ஒற்றுமையே நம் பலம்

 


ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு நபி அவர்கள் மதினமாநகரம் சென்றவுடன் அவர்கள் ஆரம்பமாக நான்கு காரியங்களை செய்தார்கள்.1 அல்லாஹ்வை தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்டியெழுப்பினார்கள். 2வது மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மதரஸாவை உருவாக்கினார்கள். இவ்விரண்டும் படைத்தவனோடு தொடர்புடையவை.

Monday, August 24, 2020

தூங்கும் முன் ஓதும் தஸ்பீஹ்

 

 

إذَا أخَذْتُما مَضَاجِعَكُما تُكَبِّرَا أرْبَعًا وثَلَاثِينَ، وتُسَبِّحَا ثَلَاثًا وثَلَاثِينَ، وتَحْمَدَا ثَلَاثًا وثَلَاثِينَ فَهو خَيْرٌ لَكُما مِن خَادِمٍ

இரவு தூங்கும் முன் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும்

அல்ஹம்து லில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 34 தடவையும் ஓதும்படி நபி ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

 

 

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  அலி {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3705

கனவு கண்டால்.......

 

إذا رَأَى أحَدُكُمْ رُؤْيا يُحِبُّها، فإنَّما هي مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عليها ولْيُحَدِّثْ بها، وإذا رَأَى غيرَ ذلكَ ممَّا يَكْرَهُ، فإنَّما هي مِنَ الشَّيْطانِ، فَلْيَسْتَعِذْ مِن شَرِّها، ولا يَذْكُرْها لأحَدٍ، فإنَّها لا تَضُرُّهُ

உங்களில் ஒருவர் தான் விரும்புகிற (நல்ல) கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

ஏறும் போதும் இறங்கும் போதும்

 

 

كُنَّا إذَا صَعِدْنَا كَبَّرْنَا، وإذَا نَزَلْنَا سَبَّحْنَا

உயரமான இடத்தை நோக்கி ஏறும் போது அல்லாஹு அக்பர் என்றும்

பயணத்திலிருந்து திரும்பி வீட்டில் நுழையும் போது

  

تَوْبًا تَوْبًا لِرَبِّنَا اَوْبًا لَا يُغَادِرُ عَلَيْنَا حَوْبًا

தவ்பன் தவ்பன் லிரப்பினா அவ்பன் லா யுகாதிரு அலைனா ஹவ்பன்.

பயணம் செல்பவருக்காக

 


اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ

அஸ்தவ்திவுல்லாஹ தீனக வ அமானதக வ ஹவாதீம அமலிக

பயணம் செல்பவர் தன் வீட்டாருக்காக

 

 

اَسْتَوْدِعُكَ اللهَ الَّذِيْ لَا تُضَيِّعُ وَدَائِعَهُ

அஸ்தவ்திவுல்லாஹல்லதீ லா துழய்யிவு வதாயிஅஹு

ஒரு கூட்டத்தைப் பற்றி அச்சம் ஏற்பட்டால்

 


اَللّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹூரிஹிம் வ நவூதுபிக மின் ஷுரூரிஹிம்.