Monday, November 11, 2013

இஸ்லாமிய பார்வையில் பரக்கத் ; part -2

                                                                                                                                                                         பரக்கத் என்பது அதிகத்திற்கான பெயர் அல்ல.குறைவாக இருந்தாலும் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத் ஆகும்.
குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியானால் அது வருமானத்தில் பரக்கத்.
குறைவாக வியாபாரம் நடந்தாலும் மனதிற்கு திருப்தியாக இருந்தால் அது வியாபாரத்தின் பரக்கத்.
குறைந்த உணவு அது பல பேருக்குப் போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவின் பரக்கத்  
குறைவான நேரத்தில் அதிகமான காரியங்கள் நடைபெற்றால் அது நேரத்தின் பரக்கத்.
ஒரு மகன் இருந்தாலும் நமது எல்லா தேவைகளும் அவன் மூலம் பூர்த்தியானால் அது குழந்தைச் செல்வத்தின் பரக்கத்.
அபூஹுரைரா {ரலி} அவர்கள் அனுபவித்த பரக்கத் ;
- عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ (ترمذي) بَاب مَنَاقِبِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ- كِتَاب الْمَنَاقِبِ
அபூஹுரைரா {ரலி} அவர்கள் ஒரு சில பேரீத்தம்பழங்களை கையில் எடுத்துக் கொண்டு அண்ணல் நபியிடம் வந்து,யா ரஸூலல்லாஹ்!இந்த போரீத்தம்பழங்களில் பரக்கத் ஏற்பட துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள்.அதை பெற்றுக் கொண்டு நபி {ஸல்} அவர்கள் துஆ செய்து விட்டு,இதை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்.உனக்கு தேவைப்படுகிறபோது அதில் உன் கரத்தை நுழைத்து எடுத்துக்கொள். ஆனால் அதை திறந்து பார்க்கக் கூடாது என்று கூறினார்கள். அதை பெற்றுக் கொண்ட அபூஹுரைரா அவர்களும் அதை பயன் படுத்தி வந்தார்கள்.தான் போகின்ற பயணங்களிலும்,போர்க்களங்களிலும் அதை எடுத்துச்செல்வார்கள்.தானும் சாப்பிடுவார்கள்,தன் தோழர்களுக்கும் கொடுப்பார்கள்.இப்படியே பல வருடங்கள் ஓடின.ஹஜ்ரத் உஸ்மான் {ரலி} அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட தினம் தான் அந்தப் பை அவர்களிடமிருந்து தொலைந்து போனது. {திர்மிதி}
நபி {ஸல்}அவர்களின் காலத்தில் கிடைத்த அந்தப் பை ;
அபூபக்கர் {ரலி}அவர்களின் ஆட்சி காலம் 2 வருடம்.
 உமர் {ரலி}அவர்களின்      ஆட்சி காலம் 10 வருடம்.

உஸ்மான் {ரலி}அவர்களின் ஆட்சி காலம் 12 வருடம்.ஆக சற்று ஏறக்குறைய 25 வருடங்கள் அந்த பேரீத்தம்பழங்களை அவர்கள் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.அத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அது தொலைந்து போனதே தவிர தீர்ந்து போக வில்லை.இது தான் பரக்கத்தின் அடையாளம். அந்த பரக்கத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் பார்ப்போம்.

3 comments:

  1. அருமையான பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  2. என்ன ஷாஃபி, தொடர் அடுத்த வாரத்திற்குள்
    முடித்து விடாதீர்கள்.
    உப்புசப்பற்ற ''கன்னித் தீவு '' அதுவே முடிவில்லாமல்
    போய்க்கொண்டிருக்கும்போது தங்களின் பதிவு
    அதற்குள் முடிந்துவிடக் கூடாது..ஒகே?

    ReplyDelete
  3. இந்த தொடரை அல்லாஹ் பரக்கத் செய்வானாக...ஆமீன்.

    ReplyDelete