Thursday, November 8, 2018

வீழ்கிறதே 2



அல்ஹம்து லில்லாஹ்,அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
இறைவா! தொடக்கையிலும் உன்னினைவு, தூய உன் நபிநாதர் பாதையில் நடக்கையிலும் உன்னினைவு, நோயுற்று பாயில் கிடக்கையிலும் உன்னினைவு, இறுதியில் எடுத்து அடக்கையிளும் உன்னினைவு , திருப்புகழ் பாடி துவக்கையிலும் உன்னினைவு!தூயவனாம் அல்லாஹ்வை புகழ்ந்து என் உரையை தொடங்குகிறேன்.

வாழ்கிறதே 2


பயாஸ் (3)
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
ஆரம்பமாக படைத்த இறைவனாம் அல்லாஹ்வை புகழ்ந்து என் வாதத்தை தொடங்குகிறேன்.

வீழ்கிறதே 1



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
இன்றைய உலகில்  மனித நேயம் வாழ்கிறதாவீழ்கிறதா? என்ற அருமையான தலைப்பில் இங்கே   பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.அல்ஹம்து லில்லாஹ். மனித நேயம் வாழ வில்லை வீழ்ந்து விட்டது என்று இந்த மூவன்னா ஈனாக்களுக்கு மண்டைல உரைக்கும்படி சொல்ல வந்திருக்கிறேன்.நடுவர் அவர்களே இவங்களப் பார்த்து மூவன்னா ஈனான்னு சொன்ன உடனே மூளை இல்லாதவங்கன்னு சொல்றேன்னு நினச்சிராதீங்க.அப்டிலாம் சொல்லல. 

வாழ்கிறதே 1



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் என் உரையை ஆரம்பம் செய்கிறேன்.
மனித நேயம் காக்க வந்த, மா நபி (ஸல்) அவர்களின் வாரிசான நடுவர் அவர்களே,  சத்தியத்தை தயங்காமல் உரைக்க வந்திருக்கிற என் அணி வீரரே, மார்க்கத்தின் ஒளி விளக்கே ! வீரத்தின் விளை நிலமே, வான்மறை வழி நடக்கும் தங்கமே, அஞ்சா நெஞ்சம் கொண்ட இளம் சிங்கமே,அசத்தியத்தையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும், மனித நேய மில்லாமல் பேச வந்திருக்கும் எதிரணி புல்லப்பூச்சிகளே,  

கல்வியே 2


                                                                                கல்வியே – 2                                                        
எல்லாப்புகழும் ஏகனாய் வாழும் வல்லோன் உனக்கே வான் புகழ் அல்லாஹ்,அல்ஹம்து லில்லாஹ். எம்பெருமானார் கண்மனி நாயகம் ரசூலே கரீம் ஸல் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக ஆமீன்.   

செல்வமே 2


                                                                                செல்வமே- 2                    
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.         
செல்வம் தான் உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று நான் உரக்க சொல்ல வந்திருக்கிறேன்    

கல்வியே 1


                                                                கல்வியே-1 ஆஷிக்                                  
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.                    
பசிக்கின்ற மனிதனுக்கு ருசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற இறைவனுக்கே புகழனைத்தும் உண்டாவதாக.சத்திய தூதர்,சன்மார்க்க போதகர் நபிகள் நாயகம் ரசூலே கரீம் ஸல் அவர்கள் மீதும்,அவர்களின் குடும்பத்தார்,தோழர்கள்,மற்றும் நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக ஆமீன்.  

செல்வமே 1


                                                                               
                                                                                  செல்வமே...1          
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.                                                                                              அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி  ஆரம்பிக்கிறேன்.   

நடுவர்



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ஆசிரியர்களா இன்னைக்கு இருக்குற சூழ்நிலைகளா என்ற ஒரு அழகான தலைப்பில் இங்கு கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னைக்கி காலம் ரொம்ப கெட்டுப்போயிடுச்சி, ரொம்ப மோசமாயிடுச்சி. குறிப்பா நம்ம புள்ளைங்களோட நிலம ரொம்பவே மோசமா இருக்குது. நீ மட்டும் ரொம்ப சுத்தமா அப்டின்னு நீங்க எல்லாரும் என்னப் பார்த்து கேக்குறது எனக்கு தெரியுது. இன்னைக்கு அப்டித்தான் யாரும் கண்டுக்காதீங்க.

சூழ்நிலைகளே !



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ஆசிரியர்களா சூழ்நிலைகளா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு முக்கியமான காரணம் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலைகள் தான் என்று நான் பேச வந்திருக்கிறேன்.

நண்பர்களே !



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா நண்பர்களா சூழ்நிலைகளா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு முக்கியமான காரணம் நண்பர்கள் தான் என்று நான் பேச வந்திருக்கிறேன்.

பெற்றோர்களே !



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ஆசிரியர்களா நண்பர்களா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.கருத்தரங்கத்திற்கு நடுவராக இருக்கும் நடுவர் அவர்களே என்னோடு பேச இருக்கிற என் நண்பர்களே இந்த நிகழ்ச்சிக்கு ஆணிவேராக இருக்கிற எங்கள் மதரஸாவின் ஹள்ரத்மார்களே இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிற எங்கள் பள்ளியின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகளே மற்றும் இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிற ஜமாஅத்தார்களே பெரியோர்களே தாய்மார்களே சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் ஸலாமை எத்தி வைக்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நினைவு யாவும் உங்கள் மீது



நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி        (2 தடவை)
அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்

மதினா நகர்க்கொருநாள் நான் வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நபியெனும் அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியன அங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே       (2 தடவை)
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே....  (நினைவு யாவும்)

காணும் வரையில் கண்கள் தூங்காது
காதலில் எந்த உள்ளம் தான் ஏங்காது ???
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும்   மாறுவேன்               (2 தடவை)
உம்மத்தென்ற  பெருமையோடு வந்து சேருவேன்...               (நினைவு யாவும்)

உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
உம்மீ    ரசூலே உங்கள் புகழ் பாடும்
அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
அல்லாஹ் போற்றும் மனித அனுகூலம்
இரண்டு வாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே (2 தடவை)
இறுதித் தூதராக வந்த இறையின் காணமே....            (நினைவு யாவும்)

அல்லாஹு அல்லாஹு


الله الله الله     الله الله الله
الصُّبْحُ بدَا مِنْ طَلْعَتِهِ   والليل دجا من وفرته    
فاقَ الرُّسلا فضلاً وعلا         أَهْدَى السُّبُلاَ لِدَلالَتِهِ
                   كَنْزُ الْكَرَمِ مُوْلِي النِّعَم           هادي الأممِ لشريعتهِ
                     كُلُّ العَرَبِ في خِدمَتِه  أذكى النسبِ أعلى الحسبِ
                     شُقّ القَمَرُ بِإِشَارتِهِ    سَعَتِ الشَّجَرُ نَطَقَ الحَجَرُ
            جِبْرِيلُ أَتَى لَيْلَة َ أَسْرَى     والرب دعا لحضرته
               نال الشرفا والله عفا        عما سلفا من امته  
          فمحمدنا هو سيدنا         فالعز لنا لاجابته  
                  

noor waala aaya hai


Noor  wala  aaya hai, noor  lay  ker aaya hai
Saray  aalam  pay  yeh  daikho  kaisa  nor  chaya  hay

Assalathu  wassalamu  ‘alayka  Ya  Rasulallah
Assalathu  wassalamu  ‘alayka  Ya  Habiballah.

Jab  talak  yeh chand  taray  jhil  milatay  jayein  gay
Tab  talak  jashne  wiladath  hum  manatay  jayein  gay.

Naathe  Mehboobe  Khuda  sunthey  sunathey  jaein  gay
Ya  Rasulallaha  ka  nara  lagathey  jaein  gay.

Chaar  janib  hum  diye  ghee  kay  jalatay  jaien  gey
Ghar  to  ghar  saray  mohallay  ko  sajatey  jaien  gey.

Eide  Miladun  Nabi  ki  shab  charaghan  kar  kay hum
Qabar  noore  Mustafa  say  jagmagatay  jayein ghay.

Tum  karo  jishne  wiladat  ki  khushi  may roshani
Who  tumaari  gor  teera  jagmagatay  jayein  ghay.

Hashr  may  zairay  liwae  hamdaye  Atthar  hum
Naate  Sulatane  Madina  gun’  gunatay  jayein gay.

கண்கள் இரண்டும்


                                                                                                                                                                  கண்கள் இரண்டும் நபி பாதம் காண தேடுதே.                             திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே.                         கண்கள் இரண்டும் நபி பாதம் காண தேடுதே.                                                                                     மக்கா நகர் மண்ணாய் பிறந்தேனா நானும்.                                மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2.                                என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்                                 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2                                                                          [கண்கள் இரண்டும்]                     

மதினாவிலே ஓர் மரமாகினேனா                                            மா நபிக்கு தென்றல் காற்றும் தந்தேனா-2                              அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா                                     அண்ணல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2                                                                      
[கண்கள் இரண்டும்]                     

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா                                            காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2                                    கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில்                                  கட்டிய கல்லில் இடமாகினேனா-2                                                                                   [கண்கள் இரண்டும்]                     

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்                                 உத்தம நபியை சுமந்தேனா நானும்-2               
பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்                   
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனா நானும்-2                                                               
[கண்கள் இரண்டும்]

மாநபியின் மீலாது


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلي خلق عظيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் ரபீவுல் அவ்வல் மாதத்திலே  பிறந்தார்கள்.
மனிதருல் மாணிக்கமான,நபிமார்களின் தலைவரான அல்லாஹ் வின் நேசரான நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அவர்கள் நமக்கு சொன்ன விஷயங்களை காலம் முழுக்க பேசப்படுகிறது.வருடம் முழுக்க பேசப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல், அவர்கள் சொன்ன விஷயங்களை சொல்லாமல் நமக்கு எந்த நாளும் கழியாது. அந்தளவு நபி ஸல் அவர்கள் நம் வாழ்க்கையோடு கலந்திருக்கிறார் கள்.
அதுமட்டுமல்ல ரபீவுல் அவ்வல் 12 நபி ஸல் அவர்களின் பிறந்த நாள்.அவர்கள் பிறந்த  அந்த நாளில் உலகம் முழுக்க அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடப்படுகிறது. நாமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு தான் கொண்டாடப்படும்.ஆனால் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அவர்களுக்காக அல்லாஹ்வே மீலாது விழா கொண்டாடி விட்டான்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு ஆலமுல் அர்வாஹில் அனைத்து நபிமார்களையும் ஒன்று சேர்த்து முஹம்மது என்று ஒரு நபி வருவார்கள்.அவர்களை நீங்கள் ஈமான் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன போது அனைத்து நபிமார்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் இன்றைக்கு உலகில் மீலாது விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் வல்லோன் அல்லாஹ் வானத்திலேயே அண்ணல் நபி ஸல் அவர்களுக்காக மீலாது விழா நடத்தி விட்டான். எனவே இந்த மீலாதை பித்அத் என்றும் அனாச்சாரம் என்றும் மார்க்கத்தில் இல்லாத காரியம் என்றும் குறை சொல்பவர்கள் உண்மையில் அவர்கள் மார்க்கம் தெரியாதவர்களாகத்தான் இருக்கும்.அல்லாஹ் பாதுகாப்பானாக என்று கூறி என் உரைக்கு திரையிட்டு விடை பெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


அவர்களுக்காக  மவ்லிது ஓதுவதும் அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவதும் அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான அன்பின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான பிரியத்தின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான காதலின் வெளிப்பாடு.

அவர்களின் மீது உண்மையான அன்பும் பிரியமும் காதலும் இருப்பவர்கள் தான் அவர்களுக்காக மவ்லிது ஓதுவார்கள். அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவார்கள்.வெறும் உதட்டளவில் மட்டும் நபியை நேசிக்கிறோம், நபியை நேசிக்கிறோம் என்று சொல்லி விட்டு உள்ளத்தில் நபியைப்பற்றி கொஞ்சம் கூட நேசம் இல்லாதவர்களுக்கு இந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக உள்ளத்தால் நபியை நேசிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
நாம் மவ்லிது ஓதுகிறோம்.மீலாது விழா கொண்டாடுகிறோம் என்றால் நாம் உண்மையில் அவர்களின் மீது நேசம் வைத்திருக்கிறோம் என்பதற்கான அடையாளம் தான் அது.இந்த நேசத்தை அல்லாஹ் நம் மரணம் வரை நிலைக்கச் செய்வானாக.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே மவ்லிது என்றாலே அது பித்அத் என்றும், அது அனாச்சாரம் என்றும், மாரக்கத்தில் இல்லாத காரியம் என்றும், நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியம் என்றும் இன்றைக்கு ஒரு சில குழப்பவாதிகள் உளரிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி சொல்லி அப்பாவி மக்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
ஆனால் நபி ஸல் அவர்களின் சிறப்புக்களை அவர்களின் உயர்வுகளை அவர்களின் அந்தஸ்துகளை அவர்களின் நற்குணங்களை அவர்கள் செய்த சாதனைகளைக்கூறி அவர்களைப் புகழ்வதற்குப் பெயர் தான் மவ்லிது. இந்த மவ்லிது பித்அத் அல்ல,அனாச்சாரம் அல்ல.மார்க்கத்தில் இல்லாத காரியம் அல்ல.நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியமும் அல்ல. மாறாக நம்முடைய அந்தஸ்தை உயர்த்தி நம்மை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்கும் மிக உயர்ந்த காரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நபி ஸல் அவர்களே பல சமயங்களில் இந்த மவ்லிதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.அதன் மீது ஸஹாபாக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தன்னை புகழ்ந்து பாடிய ஹஸ்ஸான் ரலி அவர்களுக்காக அண்ணல் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு மேடையை அமைத்துக் கொடுத்து اللهم ايده بروح القدس   வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் அலை அவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை  உறுதிபடுத்துவானாக என்று துஆ செய்தார்கள் என்றால் எந்தளவு நபி ஸல் அவர்கள் மவ்லிது ஓதுவதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


பெண்ணுரிமை


والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
அருள் தந்து பொருள் தந்து அழியாத மாமறை தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உண்டாகட்டுமாக என்று கூறி என் உரையை ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியம் நிறைந்த எனது அருமை சமுதாய மக்களே ஆண்களையும் பெண்களையும் மிக உயர்ந்த நோக்கத்தோடு படைத்த இறைவன்   அல்லாஹுத்தஆலா, அந்த இரு சாராருக்கும் தேவையான உரிமைகள் கடமைகள் அனைத்தையும் குர்ஆனில் இடம் பெறச் செய்திருக்கிறான்.

நோன்பின் மாண்பு


புனிதனம் நிறைந்த பாக்கியம் நிறைந்த அருள் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த மாதம் கிடைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்து, நம்மையும் துஆ செய்யும் படி தூண்டிய மாதம் தான் ரமலான் மாதம்.

நாயகம் ஒரு அருட்கொடை



الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.நாயகம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

சமூக சேவை நமக்குத் தேவை


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதப் புனிதனமாக மாறுவதற்கும் அல்லாஹுத்தஆலா நபிமார்களை உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.அந்த நபிமார்களில் முத்தாய்ப்பாக அந்த நபிமார்களுக் கெல்லாம் தலைவராக அண்ணல் நபி ஸல் அவர்களை அல்லாஹ் உலகத்திற்குத் தந்தான். அவர்களது வாழ்வின் அத்தனை விஷயங்களும் மனித சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

ஈமானிய உறுதி வேண்டும்


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

வரதட்சணை வன்கொடுமை


                                                                                               
 இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன்.                      
கண்ணியமானவர்களே வரதட்சணை என்ற பெயரை சொல்வதற்கே நாவு கூசுகிறது.அந்த அளவுக்கு அது ஒரு கடுமையான வார்த்தை.ஆனால் இன்னைக்கு வரதட்சணை இல்லாத திருமணமே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு இந்த கொடிய உயிர் கொல்லி நோய் சமுதாயம் முழுக்க பரவியிருக்கு.வருவதற்கு தட்சணை, அதாவது ஒரு பெண் கணவன் வீட்டிற்கு வருவதற்கு தட்சணை கேட்கிறார்கள்.அதுக்குத்தான் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. 

இஸ்லாம் மதுவை ஏன் தடுத்தது


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}  அல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.சய்யிதா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.இந்த சிறப்பிற்குரிய விழாவில் மது ஏன் ஹராம் என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக நின்று கொண்டிருக்கிறேன்.

ஒற்றுமை



அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}  அல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.சய்யிதா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன். இந்த சிறப்பிற்குரிய விழாவில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்காக வந்திருக்கிறேன்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا                  
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.