அல்ஹம்து லில்லாஹ்,அல்ஹம்து லில்லாஹி ரப்பில்
ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
இறைவா! தொடக்கையிலும் உன்னினைவு, தூய உன் நபிநாதர் பாதையில் நடக்கையிலும்
உன்னினைவு, நோயுற்று பாயில் கிடக்கையிலும் உன்னினைவு, இறுதியில் எடுத்து
அடக்கையிளும் உன்னினைவு , திருப்புகழ்
பாடி துவக்கையிலும் உன்னினைவு!தூயவனாம் அல்லாஹ்வை புகழ்ந்து என் உரையை
தொடங்குகிறேன்.
கண்ணுக்கு மை அழகு. கவிதைக்கு பொய் அழகு. அவரைக்கு
பூ அழகு. இந்த அவைக்கு அவைத்தலைவரான நடுவர் தான் அழகு.அன்பான நடுவர் அவர்களே சத்தியத்தை
சத்தமாக பேசி அமர்ந்திருக்கும் சத்திய மங்கை பசீலா அவர்களே. எடக்கு மடக்கா
குண்டக்க மண்டக்க உலரிட்டுப் போன எதிரணி ஆனா ஈனாக்களே! மூவன்னா ஈனாவுக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்ச
மாதிரி இதுக்கும் என்ன அர்த்தம்னு எல்லாத்துக்கும் புரிஞ்சிருக்கும்னு
நெனக்கிறேன்.
மற்றும் இந்த நிகழ்ச்சியை ஆவலோடு பார்த்துக்
கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாம் கூறி என் வாதத்திற்கு வருகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நடுவர் அவர்களே எதிரணி ஆனா ஈனாக்கள் வந்து
எங்களப் பாத்து புல்லப் பூச்சிங்க,LKG புள்ளைங்க அப்டி இப்டின்னு சொன்னாங்க.நடுவர்
அவர்களே கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்வாங்க.நாங்க கடுகு மாதிரி.
சின்னதான் தெரிவோம்.ஆனா எங்களோட கார சாரமான பேச்சக் கேட்டீங்க..... நீங்க தாங்க
மாட்டீங்க பாத்துக்கோங்க.
முதல்ல எதிரணிலயிருந்து இருபான் வந்தாரு.வந்து
அவரால முடிஞ்ச வரைக்கும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ உளரிட்டு போனாரு.இப்ப நான் பேசுறத
கேட்ட பிறகு இருபான் மேடைல இருப்பாராங்குறது சந்தேகந்தான்.
சனாமி வந்துச்சி.அப்ப எல்லோரும் உதவி செஞ்சாங்க இதுலாம் மனித நேயம் இல்லயா
அப்டின்னு இருப்பான்
கொதிச்சாரு.நடுவர் அவர்களே அந்த சுனாமியோட ஒரு பக்கத்த மட்டும் தான் அவர்
பாத்துருக்காரு போல. நடுவர் அவர்களே சுனாமியோட மறு பக்கம் என்ன தெருயுமா ? இவங்கள மாதிரி ஒரு சில மனித நேயம் இல்லாதவங்க அந்த சுனாமில சிக்கி இறந்து கிடக்குறவங் களோட நகைகள திருடுனாங்க.
மோதுரம் வரலன்னு விரலையே வெட்டி எடுத்தாங்க, வசூலிக்கப்பட்ட பணத்த பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்காம
சுருட்டுனாங்க.இப்டி எக்கச்சக்கமான அநியாயங்கள பன்னுனாங்களே. இதுக்கு பேருதான்
மனித நேயமா ?
அடுத்து பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தாங்க,ஆர்பாட்டம் செஞ்சாங்க, இந்த மாதிரி அநியாயங்களுக்காக குரல் கொடுக்குறவங்க இல்லயான்னு கேட்டாரு.
நடுவர் அவர்களே நான் கேக்குறேன்... இந்த மாதிரியான போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் மனத் தூய்மையோட செய்றது எத்தன பேர் ? கட்சிக்கு பேர் கிடைக்கனும்,
தங்களோட கட்சிய யாரும் தப்பா நினச்சிறக்கூடாது அப்டின்னு செய்றவங்க தானே
அதிகம்.இதுல சுயநலம் தான் இருக்குதே தவிர மனித நேயம் எங்க இருக்குது ? சொல்லுங்க இருபான் சார். சும்மா மைக் கெடச்சிதுன்னு
வாயிக்கு வந்த படி அடிச்சி வுடக்கூடாது என்ன......நீங்க அடிச்சி வுடுறதலாம் பாத்து
ஏமாந்து போறதுக்கு எங்க நடுவரும் உங்கள
மாதிரி ஆனா ஈனான்னு நெனச்சீங்களா.எங்க நடுவர் அறிவுச் சுரங்கம். புத்தியின்
சிகரம். அவங்களலாம் அவ்ளோ ஈசியா ஏமாத்த முடியாது.அதனால பாத்து பேசுங்க என்ன....
அடுத்து
நம்ம பயாஸ் அண்ணன் வந்தாரு.வந்து இவங்க தெளிவில்லாம இருக்காங்க. அதனால ஏதாவது ஓதி
இவங்க மேல தண்ணீ தெளிங்கன்னு சொன்னாரு.நடுவர் அவர்களே முதல்ல அவர் மேல தான் தண்ணீ
தெளிக்கனும். ஏன்னு கேக்குறீங்களா. இங்க பட்டி மன்றம் நடக்குது.வந்து ஏதாவது
கருத்த சொல் வாருன்னு பாத்தா.வானம் பெருசுடா பூமி பெருசுடா அதுக்கு மேலயும் நட்பு
பெருசுடா அப்டின்னு ஒரு பாட்ட படிச்சிட்டு நீங்க படிச்சதுலாம் ஓல்ட்.இதான்
கோல்டுங்குறாரு.நடுவர் அவர்களே இங்க என்ன பாட்டு மன்றமா நடக்குது.இங்க பட்டி
மன்றம் நடக்குது.ஆனா அவரு பாட்டு படிச்சிட்டு போறாரு.ஒரு வேள பட்டி மன்றத்த பாட்டு
மன்றம்னு நெனச்சிட்டாரா என்னன்னு தெரியல. ஒருத்தன் மெட்ராஸ்ல இருந்து
திருவள்ளிக்கேனி பஸ் ஏறுதனுக்கு பதிலா திருநெல்வேலி பஸ்ல ஏறிட்டு திரு திருன்னு
முழிச்சானான்.அந்த கதையாவுல இருக்குது நம்ம பயாஸ் அண்ணன் கத.
விபத்துல ஒரு ஆள் அடிபட்டுட்டா ஆம்புலன்ஸுக்கு போன் பன்னி அவர
காப்பாத்துறதில்லையா ? முதலுதவி கொடுக்குறதில்லையா ? அப்டின்னு கேட்டாரு. நடுவர் அவர்களே போன் பன்னி
காப்பாத்துறது எங்கள மாதிரி ரண்டு பேரு தான்.ஆனா அத நின்னு வேடிக்க பாக்குறது இவங்கள
மாதிரி 100 பேரு. உண்மையா இல்லயா. உலகத்துல எல்லா இனமும் தங்களோட இனத்துக்கு ஏதாவது
ஆபத்துன்னா உடனே போய் உதவும்.ஆனா நீங்க என்ன செய்வீங்க. நின்னு போட்டா புடிப்பீங்க. ஒரு காக்கா கூட இன்னொரு காக்காவுக்கு ஏதாவது ஆபத்துன்னா
கா...கா...ன்னு கூவி தன் இனத்தையெல்லாம்
ஒன்னு கூட்டும்.ஆனா உலகத்துலேயே ஆபத்து நடக்கும் போது காப்பாத்தாம நின்னு போட்டா
புடிக்கிறது இந்த மனுஷன் மட்டுந்தான். இது தான் உங்களோட மனித நேயமா
ஒருத்தன் ஆத்துல வுழுந்து தற்கொல பன்ன முயற்சி செஞ்சிகிட்டு இருந்தான்.
அதப்பார்த்த இன்னொருத்தன் டேய் ஏன்டா இந்த கடுமையான குளுருல ஆத்துல வுழுந்து
கஷ்டப்பட்டு சாவுற.பேசாம வீட்ல போய் விஷத்த குடிச்சு சாவுடா அப்டின்னு சொன்னானாம்.
இதான் மனித நேயமா
அடுத்து, இன்னைக்கு இவங்க பெத்தவங்கள அம்போன்னு தனியா விடுறதுக்கு நாங்க தான் காரணமாம்.நாங்க
சொன்னவுடன இவங்க மந்திரிச்சி வுட்ட ஆடு மாதிரி தலைய ஆட்டுவாங்களாம்.நான் கேக்குறேன். நாங்க
அப்டி சொன்னா உங்களுக்கு எங்க போச்சி
புத்தி.நீங்க புத்தியில்லாம நடந்துகிட்டு எங்கள கொற சொல்ல வந்துட்டீங்க ஆ....
அதே போல எல்லாரும் சொல்வாங்களாம். ஒரு நேரத்தில் என் நண்பன் மட்டும் இல்லன்னா,
என் மாமா மட்டும் இல்லன்னா அவர் மட்டும் இவர் மட்டும் இல்லன்னா இன்னிக்கு என்ன
நீங்க பாத்திருக்கவே முடியாது அப்டி இப்டின்னு அளந்து விட்டாரு.நடுவர் அவர்களே
நீங்களே சொல்லுங்க.இன்னைக்கு இந்த மாதிரி சொல்றவங்க அதிகமா. இல்ல படுபாவி இப்டி
பன்னிட்டானே படுபாவி ஏமாத்திட்டானே படுபாவி மோசம் பன்னிட்டானே அப்டின்னு
பொலம்புறவங்க அதிகமா.இந்த மாதிரி பொலம்புறவங்க தானே அதிகம்.இங்க மனித நேயம் எங்க
வாழுது
அதுமட்டுமில்ல நடுவர் அவர்களே என் சகோதரி பசீலா சொன்ன மாதிர இன்னைக்கி
எல்லாருட்டயுமே சுயநலம் அதிகமாகிடுச்சி.எல்லாரும் தன்னப் பத்தி தான் யோசிக்கிறாங்களே
தவிர மத்த ஆளுங்கள பத்தி யோசிக்கிறதும் கிடையாது சிந்திக்கிறதும் கிடையாது.
ஒரு காலம் இருந்துச்சி. ஒவ்வொரு வீட்டுலேயும் மக்கள் ஓய்வெடுக்குறதுக்காக திண்ண கட்டுவாங்க.ஆனா இப்ப வாசல்லேயே 'நாய்கள் ஜாக்கிரதை' அப்டின்னு போர்ட் வச்சிர்ராங்க. அதாவது பரவாயில்லை. ஒரு வீட்டு வாசல்ல 'பேய்கள் ஜாக்கிரதை' அப்டின்னு போர்ட் இருந்திச்சாம். என்னன்னு விசாரிச்சிப் பார்த்தா அந்த வூட்டுக்காரருக்கு 2 பொண்டாட்டியாம்.இந்த மாதிரி கால கட்டத்துல மனித நேயத்த எங்க
போய் பாக்குறது
அடுத்து நம்ம பயாஸ் அண்ணன் மாதிரி ஒருத்தன், கடினமான முறையில தவம் செஞ்சானாம்.ஒரு நாள் அவனுக்கு முன்னால ஒரு அசரீரி கேட்டுச்சி. பக்தா! உனக்கு என்ன வேணும். நீ எது கேட்டாலும் நான்
கொடுப்பேன். ஆனா ஒரு நிபந்தன. நீ என்ன கேக்குறியோ அதுல உனக்கு ஒன்னும், உன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு மடங்கும் கொடுப்பேன் அப்டின்னு சொல்லிச்சாம். உடனே
அவன் என்ன கேட்டான் தெரியுமா இறைவா! எனக்கு ஒரு கண்ண எடுத்துடு.
அப்பத்தானே பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண் போகும் அப்டின்னு சொன்னானாம்.
நடுவர் அவர்களே!இதான் இன்னைக்குள்ள மனித நேயம்.
அதுமட்டுமில்ல நடுவர் அவர்களே இன்னைக்கி எதுல எடுத்தாலும் கலப்படம். பால்ல
கலப்படம்.அரிசியில கலப்படம்,கோதுமையில கலப்படம்.மருந்துல கலப்படம்னு
எல்லாத்துலயும் கலப்படம் அதிகமாயிடுச்சி.மனித நேயம் செத்து மண்ணுக்குள்ள
அடக்கிமாயிடுச்சிங்குறதுக்கு இந்த கலப்படமே பெரிய ஆதாரம் நடுவர் அவர்களே
இறந்து போன ரண்டு ஆவிங்க பேசிக்கிச்சாம். அதுல ஒரு ஆவி, விஷம் குடிச்சி சாகலான்னு முயற்சி
செஞ்சேன்....அதுல கலப்படம்...பன்னியிருந்தாங்க அதனால பொழச்சிட்டேன் அப்பின்னு
சொல்லுச்சு. பின்ன எப்படி இறந்து போன ? அப்டின்னு இன்னொரு ஆவி கேட்டுச்சு.அதுக்கு அந்த ஆவி, காப்பாத்த
மருந்து கொடுத்தாங்க. அதுல கலப்படம் பன்னிட்டாங்க. அதனால இறந்துட்டேன்னு பதில்
சொல்லுச்சாம். பாத்தீங்களா நடுவர் அவர்களே இதான் இவங்க சொல்ற மனித நேயத்தோட
லட்சணம்
நடுவர் அவர்களே இன்னைக்கி உதவி செய்யாட்டாலும் உபத்தரம்
செய்யாம இருக்கணும். ஆனா இன்னைக்கி
அப்டியா நடக்குது.இந்த பயாஸ் இருபான் மாதிரி ஆளுங்க உதவி செய்றாங்களோ இல்லயோ
உபத்துரம் நல்ல செய்வாங்க.
அப்படித்தான் இந்த இருபான் மாதிரி ஒருத்தன் பைக்ல வேகமா
போய்க்கிட்டு இருந்தான். அவனுக்கு முன்னால ஒரு வேன் போயிட்டு இருந்துச்சி.அதுலயிருந்து
ஒரு பார்சல் திடீர்னு கிழே விழுந்துச்சி. அடடா.. கவனிக்காம போறாங்களேன்னு பரிதாபப்
பட்டு அந்த பார்சல எடுத்து பைக்ல வச்சிக்கிட்டு வேகமா அந்த வேனை follow பண்ணான். கொஞ்ச நேரத்துல
இன்னொரு பார்சல் கீழே விழுந்துச்சு. அதையும் எடுத்து வச்சிக்கிட்டு வேகமா போனான்.
இப்படியே ஒரு நாலஞ்சு இடத்துல ஒவ்வொரு பார்சலா விழுந்துச்சு. எல்லா பார்சலையும்
எடுத்து வச்சிக்கிட்டு அந்த வேனை ஓவர்டேக் பண்ணி முன்னாலே வந்து நிறுத்துனான். “யோவ் என்னய்யா.. ஏகப்பட்ட பார்சலை விட்டுட்டுப் போறீங்க.. எதோ நான்
நல்லவனா இருக்கப்போய் எடுத்துட்டு வந்து கொடுத்தேன். இல்லைனா என்னா ஆயிருக்கும்? அப்டின்னு சொன்னான்.அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா : “அடப்பாவி அடப்பாவி நான் ஒவ்வொரு இடமா பேப்பர் பார்சல் போட்டுட்டு வர்றேன்.
அத ஏன்டா எடுத்துட்டு வந்தே? அப்டின்னு. நடுவர் அவர்களே இந்த மாதிரி உதவிய யாரவது கேட்டாங்களா.இப்படி
உபத்துரம் செய்றவங்க தான் உலகத்துல அதிகம்.
இந்த நிதர்ஸனமான உண்மைகளையெல்லாம்
விளங்கிய பின்புமா இந்த எதிரணியினர் தமக்கு சாதகமா தீர்ப்பு வரும்னு நப்பாச அடைறாங்க.
பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லி விடை பெறுகிறேன்.
பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லி விடை பெறுகிறேன்.
No comments:
Post a Comment