பயாஸ் (3)
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து
வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
ஆரம்பமாக படைத்த இறைவனாம் அல்லாஹ்வை புகழ்ந்து
என் வாதத்தை தொடங்குகிறேன்.
நீதியைப்பற்றி
என்னிடம் ஒரு கவிதை எழுதச் சொன்னா நான் நடுவர்னா தான் எழுதுவேன். நீதத்தின்
உருவமான அன்பான நடுவர் அவர்களே ! உண்மையான
கருத்துக்களை உறுதியாகச் சொல்லி அமர்ந்திருக்கும் என் அணியின் துணிச்சலான வீரரே ! குர்பானி கிடாவப் போல திருதிருன்னு முழிச்சிகிட்டு ருக்கும்
எதிர் அணி புள்ளப்பூச்சிங்களே ! மற்றும்
இங்கே கூடியிருக்கும் யங் பாய்ஸ் அன் யங் கேள்ஸ்களே ! மற்றும் ஏக்கமான
தூக்கமான இந்த நேரத்திலேயும் கூட மார்க்கமான விஷயத்தை மூர்க்கமாக கேட்பதற்கு இங்கே
கூடியிருக்கும், கேம்பலாபாத்துக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களே ! தாய்மார்களே ! உங்கள்
அனைவருக்கும் என் பணிவான ஸலாமைக் கூறி என் அதிரடியான வாதத்தைத்
தொடங்குகிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நடுவர்
அவர்களே எதிரிணிலயிருந்து குட்ட கத்திரிக்கா ஒன்னு வந்துச்சி.வந்து வானத்த
பார்த்தேன். பூமிய பார்த்தேன். மனுஷன இன்றும் பார்க்கலே அப்டின்னு காந்தி காலத்து
பாட்டு ஒன்ன பாடுச்சு. அதெல்லாம் ஓல்ட் நடுவர் அவர்களே! எங்களுக்கும் பாட
தெரியும்! வானம் பெருசுடா பூமி பெருசுடா அதுக்கு மேலயும் நட்பு பெருசுடா இது தான்
லேட்டஸ்ட்.
நடுவர்
அவர்களே! இன்னைக்கு நட்பு இல்லாம யாராவது இருக்குறாங்களா?
வாப்பா,உம்மா,அண்ணன்,தங்கச்சி, மனைவி மக்கள் இல்லாதவன கூட நாம பாக்கலாம்.ஆனால் பிரண்ட்ஸுங்க
இல்லாதவன யாருமே பாக்க முடியாது. அந்தளவுக்கு எல்லாத்துகுமே நட்பு
இருக்குது.என்னமோ உலகத்துல மனித நேயமே இல்லன்னு இந்த LKG புள்ளைங்க
பேச வந்துட்டாங்க.ஆனா இன்னைக்கு இந்த நட்புனால எத்தன பேரு வாழ்ந்துகிட்டு
இருக்காங்க தெரியுமா
நடுவர்
அவர்களே ஃபிரண்ட்டுக்கும், கரண்ட்க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. உயிர எடுக்குறது கரண்ட்.உயிர கொடுக்குது ஃபிரண்ட்.
அவசரத்துக்கு
உதவாது கரண்ட்.அவசரத்துக்கு உதவுவான் ஃபிரண்ட்.
இன்னைக்கி நெறய பேரு
உலகத்துல வாழ்றதுக்கே இந்த நட்புதாங்க காரணமா இருக்குது.கொஞ்ச வருஷத்துக்கு முன்னால ஒரு சம்பவம் நடந்துச்சி.
ஒருத்தனுக்கு கிட்னி பிரச்சன ஏற்பட்டுச்சி. அந்த நேரத்துல அவனோட நண்பன் தான் ஓடி வந்து என் நண்பனுக்கு கிட்னி பிரச்சனையா? நான் என்
கிட்னியை தர்ரேன் அப்டின்னு சொல்லி கிட்னிய கொடுத்தான். இது மனித நேய மில்லையா?
நடுவர்
அவர்களே! நண்பனுக்காக கிட்னியையே கொடுத்தான் இன்னொரு நண்பன். ஆஃட்ரால் சட்னிய கூட கொடுக்காத எதிரணி
புள்ளப்பூச்சிங்களுக்கு கிட்னிய பத்தி என்ன தெரியும் ? மனித நேயம் வீழுனுன்னு பெருசா பேச வந்துட்டாங்க! அரண்டவன்
கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்க. நடுவர் அவர்களே அரண்டு பேய் புடிச்ச மாதிரி இருக்கிற இந்த புள்ளப் பூச்சிங்களுக்கு
ஏதாவது ஓதி அவங்க தலைல கொஞ்சம் தண்ணிய தெளிச்சி விடுங்க.அப்பவாவது
தெளிவாகுறாங்களான்னு போப்போம்.
அடுமட்டுமில்ல நடுவர் அவர்களே ஒரு சமயம்
பாகிஸ்தான்லயிருந்து
ஒரு ஃபேமிலி அவங்க
குழந்தைக்கு சிகிச்ச பன்றதுக்காக இந்தியாவுக்கு வந்சுச்சு. அந்த குழந்தய சென்னையில
இருக்கிற ஒரு ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. அந்த சிறுமிக்கு இதயம் பாதிக்கப்பட்டு ஃபுல்லா
டேமேஜ் ஆகிடுச்சி. டாக்டர்கள் சொன்னாங்க, பாகிஸ்தான் சிறுமிக்கு உடனே இதயத்த
மாத்தனும் அப்டின்னு.
அந்த நேரத்துல துர்கான்னு ஒரு குழந்த தீயில கருகி காயமடஞ்சி அந்த ஆஸ்பத்திரில
சேர்த்திருந்தாங்க. தீயில கருகுன அந்தக் குழந்த உயிர் பொழைக்குறது ரொம்ப கஷ்டன்னு
டாக்டருங்க சொல்லிட்டாங்க.அப்ப அந்த டாக்டருங்க வந்து சொன்னாங்க உங்களோட குழந்த
துர்கா பொழைக்குறது ரொம்ப கஷ்டந்தான்.அதனால அவளோட இதயத்தை பாகிஸ்தான் சிறுமிக்கு கொடுக்குறீங்களான்னு
கேட்டாங்க. அப்ப அந்த குழந்தையோட அப்பா அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியுமா ? மனித நேயமே இல்ல மனித நேயமே இல்லன்னு மனசாட்டி இல்லாம பேச வந்துறீங்களே
முதல்ல நீங்க கேளுங்க. அந்த புள்ளையோட அப்பா அம்மா சொன்னாங்க... எங்க குழந்த
செத்தாலும் அவளோட இதயம் இந்த உலகத்துல வாழ்றத நாங்கள் பிரியப்படுறோம்.அதனால
தாராளமா தரோம் அப்டின்னு சொன்னாங்க.
நடுவர் அவர்களே இது சாதாரண விஷயமா ? தங்களோட குழந்த இறந்து போகப்போகுதேங்குற ரொம்ப கவலையான அந்த நேரத்துல கூட
அடுத்த குழந்தையோட உயிர காப்பத்தனும்னு நினச்சாங்களே இந்த மாதிரி மிகப்பெரிய மனித நேயத்த நம்மால பாக்க முடியுமா
பாகிஸ்தான் குழந்தையோட உடலுக்குள்ள நம்ம நாட்டு இதயத்த பொருத்தி இன்னைக்கி அது
வாழ்த்து கிட்டு இருக்குது.இப்டி நாடு விட்டு நாடு போய் மனிதநேயம்
வாழ்ந்துகிட்டு
இருக்கும்போது மனிதநேயம் செத்திடுச்சி, வீழ்ந்துடுச்சி அப்டின்னு
இவங்க போசுறாங்க.என்னமோ எங்கள பாத்து நீங்க பேப்பர் படிச்சா தானே.படம் பாத்தா
எப்படி உலகத்துல நடக்குற செய்தி தெரியுன்னு அந்த குட்ட கத்திரிக்கா கேட்டிச்சி.
நடுவர் அவர்களே இப்ப தெரியுதா யார் பேப்பர் படிக்கிறா யார் படம் பாக்குறான்னு.உங்களுக்கு
எளவெடுத்த அந்த நாடகத்த பாக்கவே நேரம் சரியா இருக்கும்.இதுல நீங்க பேப்பர எங்க
படிக்கப் போறீங்க. செய்திய எங்க பாக்க போறீங்க.
அதுமட்டுமில்லாம அந்த குட்டக்கத்திரிக்கா வந்து இன்னைக்கி டாக்டர் லாம்
சரியில்ல.அவங்க யாரும் ஒழுங்கா நல்ல மனசோட சிகிச்ச செய்றதில்ல. எல்லாம்
பணத்துக்காக தான் செய்றாங்க அப்டி இப்டின்னு தூக்கத்துல இருந்து எழுந்திரிச்ச
மாதிரி ஒலருச்சி.நடுவர் அவர்களே ஒரு சில டார்டருங்க அப்டி இருக்கலாம்.அதுக்காக
எல்லா டாக்டரையும் கொற சொல்ல முடியுமா ?
இந்த சம்பவத்துல கூட பாருங்க உங்க குழந்தையோட இதயத்த அந்த பாகிஸ்தான்
குழந்தைக்கு கொடுக்கன்னு சொன்னது அந்த டாக்டர் தான்.இந்த மாதிரி மனித நேயமுள்ள
எத்தனையோ டாக்டங்க உலகத்துல இருக்கத்தான் செய்றாங்க.நீங்க காமிக்க போன டாக்டர்
அப்டி இருந்திருப்பாங்க.அதுக்காக எல்லாம் டாக்டரையும் கொற சொல்ல முடியுமா ஆ......
அதுமட்டுமில்லாம இன்னைக்கி ஒரு விபத்து நடந்திடுச்சின்னா அந்த வழியா போற எத்தன
பேரு வந்து உதவி செய்றாங்க.ஒரு ஆளு தண்ணிய கொடுப்பாரு. ஒரு ஆளு தன்னோட துணிய
கிழிச்சி அந்த ரத்தத்த தொடப்பாரு.ஒரு ஆளு அவங்க வீட்டுக்கு தகவல் கொடுப்பாரு.ஒரு
ஆளு போன் பன்னி ஆம்புலன்ஸ கூப்புடுவாரு.ஒரு சில ஆளுங்க கூடயே ஆஸ்பத்திரி வரைக்கும்
போய் உதவி செய்வாங்க.இப்டி அவசரத்துல உதவி செய்றவங்களுக்குலாம் மனித நேயம் இல்லன்னு
சொல்ல முடியுமா ?
அதேபோல அந்த குட்டக் கத்திரிக்கா சொல்லுச்சி. இன்னைக்கி பெத்தவங்கள யாருமே
கவனிக்கிறதில்ல.வயசான பிறகு அவங்கள கவனிக்காம தனியா விட்டர்ராங்க அப்டின்னு தாட்
பூட்டுன்னு கத்துச்சி.யாருமா கவனிக்கல.... உங்களாள தான் இன்னைக்கி நெறய பேரு அப்டி
செய்றாங்க.ஒழுங்கா தான் இருக்கான்.மவராசி நீங்க என்னைக்கி வீட்ல கால் எடுத்து
வைக்கிறீங்களோ அனைக்கே மாமியார தொறத்தி விடுறதுக்கு ஐடியா பன்னிர்ரீங்க. ஏங்க உங்க
அம்மா நச நசன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்காங்க.அவங்க தொல்ல தாங்க முடியல.அதனால........
தனியா போயிடலாமா அப்டின்னு புருஷங்காதுல ஊதுவீங்க. அவனும் மந்திரிச்சி விட்ட கெடா
மாதிரி தலைய ஆட்டிருவான். அப்புறம் மாமியார வீட்ட விட்டு தொறத்திருவீங்க.அல்லது
அப்படியே அம்போன்னு விட்டுட்டு நீங்க தனியா போயிடுவீங்க.
நடுவர் அவர்களே இன்னைக்கி முதியோர் இல்லத்துல விடுற புள்ளைங்கள நாம கொற
சொல்றோம்.ஆனா அங்க கொண்டு போய் விட்ட பிறகு அந்த வயசான காலத்துல கூட, யாருன்னே
தெரியாத அவங்கள வச்சி அந்த முதியோர் இல்லத்துல உள்ளவங்க காப்பாத்துறாங்களே அது
மனித நேயமில்லயா ?
நடுவர் அவர்களே எதிரணி குட்டக்கத்திரிக்கா வந்து செத்தவன எழுப்பி கேட்டா கூட
மனித நேயம் வீழ்ந்திடுச்சின்னு சொல்வான் அப்டின்னு சொல்லுச்சி.நடுவர் அவர்களே.
செத்தவன் என்னைக்காவது எழுந்திருச்சி பேசியிருக்கானா ? அப்டி பேசுனாதான் இது கிட்ட நிக்குமா ? ஜனாஸா மூனாந்தெருவுல வந்தா இது ஒன்னாந்தெருவுல போய் நிக்கும்.இது செத்தவன
பத்தி பேசுது.
நடுவர் அவர்களே இந்த குட்ட கத்திரிக்கா சொல்ற மாதிரி செத்தவன எழுப்பிலாம் கேக்க தேவயில்ல.உயிரோட
இருக்குறவங்கள்ட கேட்டாவே அழகா சொல்வாங்க.ஒரு நேரத்துல நான் என் வாழ்க்கையில படாத
கஷ்டமே இல்ல. அந்த நேரத்துல என் நண்பன் மட்டும் இல்லன்னா, என் மாமா மட்டும்
இல்லன்னா அவர் மட்டும் இல்லன்னா இவர் மட்டும் இல்லன்னா இன்னிக்கு என்ன நீங்க பாத்துருக்கவே
முடியாது. நான் இந்த நிலமைக்கு வந்துருக்கவே மாட்டேன் அப்டின்னு சொல்லாதவங்களே
உலகத்துல இருக்க முடியாது.இதுலாம் பாக்கும் போது மனித நேயம் வீழ்ந்திடுச்சி எப்படிங்க
சொல்ல முடியும் ?
எல்லாத்துக்கும் மேலா மனித நேயம் வீழ்ந்திடுச்சி மனித நேயம்
வீழ்ந்திடுச்சின்னு சொல்றவங்க ஒரு நிமிசம்
அமைதியா நம்மோட கடைசி நேரத்த நெனச்சி பார்க்கனும்.நாம இறந்த பிறகு நம்மள அடக்கம் செய்றதுக்காக 4 –ம்
தெருக்கு கொண்டு போகும் போது அதுல நம்மளோட ஃபிரன்ஸுங்க இருப்பாங்க, சொந்தக்காரங்க இருப்பாங்க,
முன்ன பின்ன நமக்கு தெரியாதவங்க கூட ஹெல்ப் பன்னுவாங்க. நான் கொஞ்ச
தூரம் தூக்குறேன்.... நான் கொஞ்ச தூரம் தூக்குறேன் அப்டின்னு எல்லோரும் முன்னாடி
வந்து நிப்பாங்க.தூக்கிட்டு போறதுக்கு மட்டுமில்ல, குளிப்பாட்டுறது,கஃபன்
செய்றது,தஃபன் செய்றது,மய்யவாடியில வந்து மண் அள்ளிப் போடுறது இப்படி எல்லா
காரியங்கள்ளேயும் வந்து நின்னு ஹெல்ப் பன்னுவாங்க. இதலாம் பாத்த பிறகும் மனித
நேயம் இல்லவே இல்லன்னு யாராவது பேசுனாலோ தீர்ப்பு சொன்னாலோ அவங்களுக்கு தான் மனித
நேயம் இல்லன்னு அர்த்தம்.
அதனால எதிரணிக்கும் மேலான நடுவர் அவங்களுக்கும் ஒன்னு
சொல்லிக்கிறேன். பாத்து பேசுங்க.பாத்து தீர்ப்பு சொல்லுங்க.
நடுவர் அவர்களே மனிதநேயங்குறது முழுமையான வெள்ள பேப்பர் மாதிரி.மனித
நேயத்துக்கு எதிரான செயலுங்குறது அந்த பேப்பர்ல உள்ள புள்ளி மாதிரி.ஒரு பியூரான
வெள்ளப் பேப்பர்ல ஒரே ஒரு புள்ளி இருந்தா அந்த புள்ளி தான் பளிச் சின்னு
தெரியும்.அந்த மாதிரி மனித நேயத்துக்கு எதிரான செயல்கள் ஆங்காங்கே கொஞ்ச கொஞ்சம்
நடக்குறதனால அதுதான் பெருசா தெரியுது.நல்ல காரியங்கள் தெரிய மாட்டேங்குது. அதனால
எங்கயாவது கொஞ்ச கொஞ்சம் நடக்குறத வச்சி மனித நேயமே இல்லன்னு சொன்னா அது நானும்
சரி என்னைக்குமே ஏமாறாத நடுவரும் சரி யாரையும்
ஏமாத்தாத ஏமாத்த தெரியாத கேம்பலாபாத் மக்களும் சரி ஒரு போதும் ஏத்துக்க மாட்டோம் அதனால எதிரணி
புள்ளப்பூச்சிங்களே உங்க பாச்சா இனிமே பலிக்காதுன்னு சொல்லி முடிக்கிறேன்
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment