இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத்
தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய
வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப்
பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும்
எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.
அந்த
அடிப்படையில் இஸ்லாமியப் பார்வையில் மனிதன் செய்யக் கூடாத விஷயங்களின் வரிசையில் அநியாயமும்
ஒன்று. ஒருவன் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் எந்த அநீதத்தையும் செய்து
விடக் கூடாது.
يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته
بينكم محرما فلا تظالموا».
ஹதீஸே குதுஸி ஒன்றில்
அல்லாஹ் கூறுகின்றான் ; என் அடியார்களே அநீதத்தை
என் மீது நான் தடை செய்து விட்டேன். உங்களிடையேயும் அதை நான் தடுத்திருக்கிறேன்.
எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதம் செய்யாதீர்கள். (முஸ்லிம் : 2577)
அநீதம் என்று வருகின்ற போது
இஸ்லாம் அதை மூன்று வகையாக வகைப்படுத்துகிறது. 1,மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற அநீதம்.
இரண்டாவது மனிதன் தனக்குத் தானே செய்து கொள்கின்ற அநீதம். 3, மனிதன் பிற மனிதர்களுக்கு
செய்கின்ற அநீதம்.
இறைவனுக்கு செய்கின்ற அநீதம்
என்பது இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்வது, இறைவனுக்கு இணை வைக்கும்
செயல்களில் ஈடுபடுவது.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ
يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}
لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {الَّذِينَ
آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالُوا: أَيُّنَا لَمْ يَظْلِمْ نَفْسَهُ؟ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَيْسَ كَمَا تَظُنُّونَ، إِنَّمَا
هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ: {يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ
الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ})[4]
“யார் ஈமான் கொண்டு பின்பு
தங்கள் ஈமானை அநீதத்தைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு
உண்டு.மேலும் அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்” என்ற (6 : 82) இறை வசனம் இறங்கிய போது ஸஹாபாக்களுக்கு அது கவலையை
ஏற்படுத்தியது. எங்களில் யார் தான் தனக்கு அநீதம் செய்யாமல் இருக்கிறார்? (அதாவது எங்களில் யார்
தான் பாவம் புரியாமல் இருக்கிறார்? இந்த வசனத்தின் படி
எங்களில் யாருமே நேர்வழி பெற்றவர்கள் இல்லையா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டு
நபியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள்) அதற்கு நபி ﷺ
அவர்கள் இந்த வசனத்தில் நீங்கள் நினைப்பதைப் போன்ற அநீதத்தை அல்லாஹ் கூற
வில்லை. நிச்சயமாக இணை வைத்தல் பெரும்
அநீதமாகும் என்று லுக்மான் அலை அவர்கள் தன் மகனைப் பார்த்துக் கூறிய
இணை வைப்பைத்தான் குறிப்பிடுகிறான் என்றார்கள். (முஸ்லிம் : 124)
மனிதன் தனக்குத் தானே அநியாயம்
செய்து கொள்வது என்பது இறைக் கட்டளையை மீறுவது, இறைவனுக்கு மாறு செய்வது.
பாவமான காரியங்களில் ஈடுபடுவது. ஒருவன் இறைக்கட்டளையை மீறுகின்ற போது இறைவனுக்கு மாறு
செய்கின்ற போது பாவமான காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற போது இறைவனின் கோபத்திற்கும்
அதிருப்திக்கும் ஆளாகிறான், அதனால் இறைவனிடம் தண்டனையையும்
பெறுகிறான். அந்த அடிப்படையில் தான் தனக்கு தானே அநீதம் செய்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.
இந்த கருத்தைக் குறிப்பிடுகின்ற
வசனங்கள் குர்ஆனில் நிறைய உண்டு.
وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ
حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَه
அவைகள் அல்லாஹ்வின்
வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை எவர் மீறுகிறாரோ அவர் தனக்குத் தானே அநீதம்
இழைத்து விட்டார். (65 : 1)
وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا
مِنَ الظَّالِمِينَ
நீங்கள் இருவரும் இந்த
மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினால் அநீதம் செய்தவர்கள் நீங்கள்
ஆகி விடுவீர்கள். (2 : 35)
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لنكونن
من الخاسرين.
ஆதம் ஹவ்வா இருவரும்
எங்களுக்கு நாங்களே அநீதம் செய்து விட்டோம் என்று கூறினார்கள். (7 : 23)
பிற மனிதர்களுக்கு செய்கின்ற
அநீதம் என்பது அவர்களின் உரிமைகளை பறிப்பது. அவர்களின் மான மரியாதைகளில் கை வைப்பது.
அவர்களது பொருட்களை அபகரிப்பது,குறிப்பாக அநாதைகளின் பொருட்களை
கையாடல் செய்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது. பிற மனிதர்களின் நிலங்களை
கைப்பற்றுவது, முதலாளியிடத்தில் விசுவாசம் இல்லாமல் நடந்து கொள்வது, தொழிலாலர்களுக்கு சரியான
ஊதியம் கொடுக்காமல் மோசடி செய்வது, அநியாயக் காரர்களுக்கு உதவுவது,ஒரு நாடு தன்னை நம்பி தன்னிடத்தில்
நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு துரோகம் செய்வது. இப்படி அநீதத்தின் பட்டியல் நீண்டு கொண்டே
செல்கிறது.
இந்த மூன்று வகை அநீதங்களில்
எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அதை தடுக்கிறது. கூடாது என்று சொல்கிறது. அதை வன்மையாக
கண்டிக்கிறது.
قال ميمون بن مهران: «إن الرجل يقرأ القرآن،
وهو يلعن نفسه، قيل له: وكيف يلعن نفسه؟ قال: يقرأ: {أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى
الظَّالِمِينَ} ، وهو ظالم»[8]
மனிதன் தன்னை சபித்துக்
கொண்டே குர்ஆனை ஓதுகிறான் என்று மைமூன் பின் மிஹ்ரான் ரலி அவர்கள் சொன்னார்கள்.
எப்படி என்று கேட்கப்பட்ட போது அநீதம் இழைத்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
உண்டாகும் என்ற வசனத்தை ஓதுகிறான். அவன் அநீதம் செய்தவனாக இருக்கிற போது அந்த
சாபம் அவன் மீதே ஏற்பட்டு விடுகிறது என்றார்கள். (தன்பீஹுல் ஙாஃபிலீன்)
சாதாரணமாக குர்ஆனை அதன்
முறையில்லாமல் ஓதுபவர்களை, தஜ்வீதின் சட்டங்களை பேணாமல் ஓதுபவர்களை, அதனிடம் கண்ணியம் இல்லாமல்
நடப்பவர்களை, அதை ஓதி அதன் படி அமல் செய்யாதவர்களை குர்ஆன் சபிக்கிறது என்பதை நாம்
ஹதீஸின் வழியாக அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கே குர்ஆன் ஓதக்கூடியவன், தன்னையே பழித்துக்
கொள்கிறான் என்று மைமூன் ரலி அவர்கள் சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும். குர்ஆன்
ஓதுவதற்கும் அல்லாஹ்வின் சாபத்திற்கும் என்ன சமபந்தம் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
இதே கேள்வியைத்தான் அவர்களிடம் கேட்கப்பட்டது. குர்ஆன் அருளுக்குரியது, குர்ஆன் ஓதப்படும் இடத்தில்
வானவர்கள் இறங்கும் அளவிற்கு ரஹ்மத்தையுடையது. அப்படியிருக்கிற போது குர்ஆன் ஓதுவது
எப்படி சாபத்தை ஏற்படுத்தும் என்று கேட்கப்பட்டது.அப்போது அவர்கள் இந்த வசனத்தைத்
தான் சுட்டிக் காட்டினார்கள்.
இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.
குர்ஆன் ஓதக் கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளை மீறுகிறார்கள், பிற மக்களுக்கு அநீதங்களை
செய்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே பழித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று பொருள். அல்லாஹ் பாதுகாப்பானாக. எனவே அநீதம் செய்பவர்களை இறைவன் சபிக்கிறான்
என்பது மட்டுமல்ல அதை அவர்களின் நாவின் மூலமாகவே சபிக்க வைக்கிறான் என்பது தான் இங்கே
கவனிக்க வேண்டிய செய்தி.
அதனால் தான் நபி ﷺ
அவர்கள் யாருக்கும்
அநீதம் செய்து விடக்கூடாது, யாரின் உரிமையையும் பறித்து விடக்கூடாது என்பதில் அதிக
கவனத்தை எடுத்துக் கொண்டார்கள்.
عن عبدِ اللَّهِ بنِ مسعودٍ قالَ كُنَّا
يومَ بدرٍ كلُّ ثلاثةٍ على بعيرٍ كانَ أبو لبابةَ وعليُّ بنُ أبي طالبٍ زميلَي رسولِ
اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ وكانت عُقبَةُ رسولِ اللَّهِ صلَّى
اللَّهُ عليهِ وعلى آلِه وسلَّمَ قالَ فقالا نحنُ نمشي عنكَ قالَ ما أنتما بأقوى منِّي
ولا أنا بأغنى عنِ الأجرِ منكما
பத்ர் பயணத்தின் போது
ஒட்டகங்கள் குறைவாக இருந்ததினால் மூன்று
நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்று பிரித்து கொடுக்கப்பட்டது.மூவரும் முறை வைத்து
அதில் பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் அபூலுபாபா ரலி, அலி ரலி, நபி ﷺ
அவர்கள் ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் ஒதுக்கப்பட்டது.இருவர் ஒட்டகத்தின் மீது அமர
வேண்டும். ஒருவர் ஒட்டகத்தை வழிநடத்த வேண்டும். இது தான் முறை. ஆனால் அந்த இரு
ஸஹாபாக்களும் யாரசூலல்லாஹ்! நீங்கள் இறங்க வேண்டாம்.
நாங்கள் இருவர் மட்டும் மாறி மாறி இறங்கிக கொள்கிறோம் என்று சொன்னார்கள். அதைக்
கேட்ட நபி ﷺ
அவர்கள் நீங்கள் இருவரும் என்னை விட பலசாலிகள் அல்ல.மேலும் நன்மையைப் பெறுவதில்
நான் தேவையற்றவனும் அல்ல என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மது : 841)
ஏதாவது நன்மையான காரியம்
குறித்து ஆர்வப்படுத்தினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நன்மை தானே போனா போயிட்டு
போகுது என்று நாம் சொல்வோம். ஆனால் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிற, அல்லாஹ்வின்
உற்ற நண்பராக இருக்கிற, யார் இல்லையென்றால் இந்த வானங்களையும் பூமியையும்
படைத்திருக்க மாட்டேன் என்று இறைவன் சொன்னானோ அத்தகைய நபி ﷺ
அவர்கள் நன்மையைப் பெறுவதில் உங்களுக்கு இருக்கிற தேவையை விட எனக்கு அதிகமாகவே
தேவை இருக்கிறது என்று அவர்கள் சொன்ன வார்த்தை இங்கே கவனிக்கத்தக்கது.நன்மை என்பது
ஒரு காரணமாக இருந்தாலும் பிறரின் உரிமையைப் பறித்து அவருக்கு அநீதம் செய்து
விடக்கூடாது என்பதும் இங்கே முக்கியமான காரணமாக இருக்கிறது.
மூன்று நபர்கள் முறைவைத்து
பயனிப்பதற்கு ஒரு வாகனம் இருக்கிறது. அதில் இரண்டு நபர்கள் தங்கள் முறையை விட்டுக்
கொடுப்பதற்கு முன் வருகிறார்கள். அவர்களின் முறைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு
தொடர்ந்து பயணிப்பதற்கு நபி ﷺ அவர்களுக்கு எல்லா தகுதிகளும்
உண்டு. இருந்தாலும் அதில் கூட நியாயம் தவறிவிடக்கூடாது அநியாயமாக அவர்களது முறையைப்
பாதித்து விடக் கூடாது என்று யோசிக்கிறார்கள் என்றால் யாருக்கும் எந்த அநீதத்தையும்
செய்து விடக்கூடாது என்பதில் எந்தளவுக்கு கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இந்த
வரலாறு கோடிட்டுக் காட்டுகிறது.
ஆனால் இன்றைக்கு நாட்டிலே
அநீதம் பெருகி விட்டது. நம் நாடு, நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை விட்டு
விட்டு அந்த மக்களுக்கு அநீதங்களையும் துரோகங்களையும் செய்து கொண்டிருக்கிறது. நாட்டு
மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையும் மேலிடத்தின் தூண்டுதலால் மக்களை துன்புறுத்திக்
கொண்டிருக்கிறது. சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக சட்டமன்ற தீர்மானம்
நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் தன் உரிமைகளுக்காக
நியாயமான முறையில் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம் சமூகத்தை அடித்து உதைத்து காயப்படுத்தி
காவல்துறை என்ற பெயரில் ஒரு கூட்டம் அநியாயம் செய்திருக்கிறது.போராடிய மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி
நடத்தி வன்முறையை ஏவியிருக்கிறது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத
வகையில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் காவல்துறை திட்டமிட்டு அராஜக தாக்குதலை நடத்தியது.
குறிப்பாக பெண்கள் மீதும் வன்முறையை ஏவியது.இதனால் நாடு முழுக்க கடுமையான கொந்தளிப்பு
ஏற்பட்டிருக்கிறது.
பிறருக்கு அநீதங்கள் செய்யக்கூடாது
என்று சொன்ன இஸ்லாம் ஒரு இடத்தில் அநீதம் நடக்கிற போது அதை தடுக்க வேண்டும் அந்த அநீதங்களை
எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும்
சொல்லியிருக்கிறது.
إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على
يديه أوشك أن يعمهم الله بعقاب منه
மக்கள் ஒரு
அநியாயக்காரனைப் பார்த்து அவனை அதிலிருந்து தடுக்க வில்லையென்றால் அல்லாஹ் வேதனை
அனைவருக்கும் பொதுவாக இறக்கி விடுவான். (அபூதாவூது : 4338)
கண் முன்னால் நடக்கின்ற
அநீதங்களை தடுப்பதும், அதற்கெதிராக குரல் கொடுப்பதும் ஒரு இஸ்லாமியனின் தார்மீக
கடமை என்ற அடிப்படையில் தான் அதனை எதிரித்து நாடு முழுக்க போராட்டங்கள்
வெடித்திருக்கிறது.
இதை காவல்துறை செய்ததா இல்லை காவல்துறை
என்ற பெயரில் நம் எதிரிகள் செய்தார்களா
என்ற கேள்வியும் சந்தேகமும் ஒரு புறம் இருந்தாலும் நாம் அடிக்கப்பட்டிருக்கிறோம், துன்புறுத்தப் பட்டிருக்கிறோம், அநீதம் இழைக்கப்பட்டிருக்கிறோம்.
நம் உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பது உண்மை.அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலான
செய்தி என்னவென்றால் உடனே அவர்களின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا
لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ
நபி ﷺ
அவர்கள் முஆத் ரலி அவர்களை யமன் தேசத்துக்கு ஆளுநராக அனுப்புகிற போது அநீதம்
இழைக்கப்பட்டவனின் துஆவை அஞ்சிக் கொள். ஏனெனில் அந்த துஆவிற்கும் இறைவனுக்கும்
மத்தியில் எந்தத் திறையும் இல்லை என்றார்கள். (புகாரி : 2448)
شَكَا أَهْلُ الكُوفَةِ سَعْدًا إلى عُمَرَ
رَضِيَ اللَّهُ عنْه، فَعَزَلَهُ، واسْتَعْمَلَ عليهم عَمَّارًا، فَشَكَوْا حتَّى ذَكَرُوا
أنَّهُ لا يُحْسِنُ يُصَلِّي، فأرْسَلَ إلَيْهِ، فَقالَ: يا أَبَا إسْحَاقَ إنَّ هَؤُلَاءِ
يَزْعُمُونَ أنَّكَ لا تُحْسِنُ تُصَلِّي، قالَ أَبُو إسْحَاقَ: أَمَّا أَنَا واللَّهِ
فإنِّي كُنْتُ أُصَلِّي بهِمْ صَلَاةَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ ما
أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلَاةَ العِشَاءِ، فأرْكُدُ في الأُولَيَيْنِ وأُخِفُّ
في الأُخْرَيَيْنِ، قالَ: ذَاكَ الظَّنُّ بكَ يا أَبَا إسْحَاقَ، فأرْسَلَ معهُ رَجُلًا
أَوْ رِجَالًا إلى الكُوفَةِ، فَسَأَلَ عنْه أَهْلَ الكُوفَةِ ولَمْ يَدَعْ مَسْجِدًا
إلَّا سَأَلَ عنْه، ويُثْنُونَ مَعْرُوفًا، حتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ،
فَقَامَ رَجُلٌ منهمْ يُقَالُ له أُسَامَةُ بنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قالَ:
أَمَّا إذْ نَشَدْتَنَا فإنَّ سَعْدًا كانَ لا يَسِيرُ بالسَّرِيَّةِ، ولَا يَقْسِمُ
بالسَّوِيَّةِ، ولَا يَعْدِلُ في القَضِيَّةِ، قالَ سَعْدٌ: أَما واللَّهِ لَأَدْعُوَنَّ
بثَلَاثٍ: اللَّهُمَّ إنْ كانَ عَبْدُكَ هذا كَاذِبًا، قَامَ رِيَاءً وسُمْعَةً، فأطِلْ
عُمْرَهُ، وأَطِلْ فَقْرَهُ، وعَرِّضْهُ بالفِتَنِ، وكانَ بَعْدُ إذَا سُئِلَ يقولُ:
شيخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ، قالَ عبدُ المَلِكِ: فأنَا
رَأَيْتُهُ بَعْدُ، قدْ سَقَطَ حَاجِبَاهُ علَى عَيْنَيْهِ مِنَ الكِبَرِ، وإنَّه لَيَتَعَرَّضُ
لِلْجَوَارِي في الطُّرُقِ يَغْمِزُهُنَّ. .
(கூஃபாவில் அதிகாரியாக இருந்த)
ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார்
கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில்
ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள்.
ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத்
தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.
அதற்கு ஸஃது(ரலி)
'அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நபி(ﷺ) அவர்கள் தொழுது காட்டிய
முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல்
இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும்
தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய
கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார்.
அதன்பின்னர் ஒரு நபரை
அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா
வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல்
அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி
வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும்
உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான்
சொல்கிறேன். ஸஃது அவர்கள் தம்து படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப்
பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார்.
இதைக் கேட்ட ஸஃது(ரலி)
'அல்லாஹ்வின் மேல்
ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த
அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால்
அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப்
பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதன் பிறகு அந்த மனிதரிடம்
எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம்
விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராம்விட்டார்.
ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும்
அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள்
அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி
போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். (புகாரி : 755)
எனவே உலகில் நமக்கெதிராக
நடக்கிற அநீதங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம், அந்த அநீதக்காரர்களுக்கு எதிராக
இறைவனிடம் கையேந்துவோம். இறைவன் நம் சமூகத்தை பாதுகாப்பானாக
No comments:
Post a Comment