அல்லாஹ்வின் பெரும் கிருபையால்
தியாகத்திருநாளை சந்தித்து தியாகத்தின் அடையாளமான குர்பானிகளைக் கொடுத்து விட்ட
மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் அமர்ந்திருக்கிறோம்.
அல்லாஹுத்தஆலா நாம் கொடுத்த
குர்பானிகள் அத்தனையையும் ஏற்றுக் கொள்வானாக, நம் பாவங்கள் அத்தனையும் மன்னிக்கப்படுவதற்கு
அந்த குர்பானிகளை காரணமாக ஆக்குவானாக,நம்மை சுமந்து சுவனத்தில் விடக்கூடிய
வாகனங்களாக அந்த குர்பானிப் பிராணிகளை ஆக்குவானாக.
பெருநாளைக்கு அடுத்து வருகின்ற மூன்று
தினங்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று சொல்லப்படும்.பெருநாளைப் போன்றே இந்த நாட்களும்
மகிழ்ச்சியான நாட்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நாட்கள், சந்தோஷத்தை
வெளிப்படுத்த வேண்டிய நாட்கள், ஒருவொருக் கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்
குதூகலத்தையும் பரிமாரிக் கொள்ள வேண்டிய மகத்தான நாட்கள். அய்யாமுத்தஷ்ரீக் என்று
சொல்லப்படுகிற பெருநாளைக்கு அடுத்து வருகிற இந்த மூன்று நாட்களும் பெருநாளைக்கு
ஒப்பாக பெருநாளைக்கு நிகராக இருக்கிற காரணத்தினால் தான் பெருநாளைப் போன்றே இந்த
மூன்று தினங்களிலும் நோன்பு வைப்பதை மார்க்கம் தடை செய்திருக்கிறது.இந்த நாட்களைக்
குறித்து நபி ﷺ
அவர்கள் சொல்வார்கள்.
أيام التشريق أيام أكل وشرب
அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் உண்ணக்கூடிய
குடிக்கக்கூடிய நாட்கள். (அல்முஃஜமுல்
அவ்ஸத் ; 7/188)
இந்த மகத்தான நாட்களில் குர்பானிக்கு அடுத்து
நாம் செய்து கொண்டிருக்கிற, செய்ய வேண்டிய
மிக முக்கியமான அமல்களில் ஒன்று தக்பீர்.
ما من أيَّامٍ أفضلُ عند اللهِ ولا العملُ فيهنَّ أحبُّ
إلى اللهِ عزَّ وجلَّ من هذه الأيَّامِ يعني من العشرِ فأكثِروا فيهنَّ من
التَّهليلِ والتَّكبير
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை விட
அல்லாஹ்விடம் மிகச்சிறந்த நாட்கள் வேறெதுவும் இல்லை.இந்த நாட்களில் செய்கின்ற அமலை
விட அல்லாஹ்விற்கு பிடித்தமான வேறெந்த அமலும் இல்லை.எனவே இந்த நாட்களில்
கலிமாவையும் தக்பீரையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 2 /191)
இந்த நாட்களில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்குப்
பிறகும் தக்பீர் சொல்வது வாஜிபு என்று மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள்.இந்த
நாட்களில் ஒருவர் ஜமாஅத்தாக தொழுதாலும் சரி, தனியாக தொழுதாலும் சரி, அவர் ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தக்பீர் சொல்ல வேண்டும்.மட்டுமல்ல இந்த நாட்களில்
தொழாமல் விட்டுவிட்ட ஒரு தொழுகையை பின்னால் ஒருவர் களா செய்தால் அந்த தொழுகைக்குப்
பிறகும் தக்பீர் சொல்ல வேண்டும்.மற்ற நேரங்களில் ஜும்ஆவின் குத்பாக்கள் அல்ஹம்து
லில்லாஹ் என்று சொல்லி தொடங்கப்படும்.ஆனால் பெருநாள் தொழுகையின் குத்பாக்களை
தக்பீர் சொல்லித்தான் தொடங்க வேண்டும். இந்த அளவுக்கு இந்த நாட்களில் தக்பீர்
சொல்வதை மார்க்கம் வலியுறுத்திச் சொல்கிறது. எனவே இந்த நாட்கள் தக்பீருக்குரிய
நாட்கள்,தக்பீரை முழங்க வேண்டிய நாட்கள், அல்லாஹ்வின் மகத்துவத்தை உரக்கச்
சொல்லும் நாட்கள்.
எல்லா நாட்களிலும் நாம் தக்பீர் சொல்லத்தான்
செய்கிறோம்,தக்பீரை முழங்கத்தான் செய்கிறோம்.பாங்கிலே தக்பீர்
இருக்கிறது, தொழுகையில் தக்பீர் இருக்கிறது,நாம் ஓதக்கூடிய திக்ருகளில் தக்பீர்
இருக்கிறது.எல்லா நாட்களும் நாம் தக்பீரோடு இணைந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் மற்ற
நாட்களில் இல்லாத அளவு இந்த பெருநாள் தினங்களில் மட்டும் அதிகமாக தக்பீர் சொல்ல
வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட காரணம் என்ன? பெருநாளுக்கும் இந்த தக்பீருக்கும் எந்த
தொடர்பு? என்ற கேள்வி, என்ற ஐயம் நம் மனதில் இருக்கிறது.அதற்கான
விளக்கத்தைத் தேடுகிற போது மார்க்க அறிஞர்கள் அழகான விளக்கத்தைத் தருகிறார்கள்.
பெருநாள் என்பது மகிழ்ச்சியான தினம். பெருநாள்
என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியும் சந்தோஷமும் குதூகலமும் நம்மிடம் ஒட்டிக்
கொள்ளும். வாழ்க்கையில்
எத்தனை கவலைகள் இருந்தாலும் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அந்த அத்தனை கவலைகளும்
அத்தனை துன்பங்களும் மறந்து நம்மை குதூகலப்படுத்துகிற தினங்கள் பெருநாள் தினங்கள்.
பொதுவாக மனிதன் தன் வாழ்வில் மகிழ்ச்சியான
தருணங்களையும் சந்தோஷமான தருணங்களையும் சந்திக்கிற போது படைத்த இறைவனை மறந்து
விடுவான்.தன் மனைவி மக்களோடு தன் குடும்பத்தோடு தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக
இருக்கும் நேரங்களில் இறைவன் நினைவுக்கு வருவதில்லை. குர்ஆனில் இந்த கருத்தை
சொல்லும் வசனங்கள் நிறைய உண்டு.
واذا مس الانسان الضر دعانا لجنبه او قاعدا او
قائما فلما كشفنا عنه ضره مر كان لم يدعنا الي ضر مسه
மனிதனை ஒரு துன்பம் தொட்டு விட்டால் படுத்துக்
கொண்டு உட்கார்ந்து கொண்டு நின்று கொண்டு (அதை நீக்கும்படி) நம்மிடம்
பிரார்த்திக்கிறான்.ஆனால் அவனை விட்டும் அவன் துன்பத்தை நீக்கி விட்டால் அவன்
தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாக) சென்று விடுகிறான். (அல்குர்ஆன் : 10;12)
நமக்கு வரும் மகிழ்ச்சியான நிமிடங்கள் இறைவன்
நினைவை நம்மிலிருந்து தூரமாக்கி விடும். கஷ்டம் வரும் போது அல்லாஹ் அல்லாஹ்னு
கூப்புடுவோம், கஷ்டம் தூரமாகி விட்டால்
அல்லாஹ்வை மறந்து விடுவோம். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் அல்லாஹ்வை
நினைப்போம், கஷ்டம் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். வியாபாரத்தில்
நஷ்டம் என்றால் அல்லாஹ்வை நினைப்போம், வியாபாரம் நல்லா நடக்கும் போது அல்லாஹ்வை
மறந்து விடுவோம், நோய் வரும் போது அல்லாஹ் அல்லாஹ் என்று புலம்புவோம், நோய் நீங்கி
விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். இது மனித இயல்பு.
ஒரு கதை கூட அழகாகச் சொல்வார்கள்.ஒரு கட்டிட
எஞ்சினியர் கட்டிடத்தின் 7 வது மாடியில் நிற்கிறார்,அவருடைய உதவியாளர் அதில் 5 வது
மாடியில் நின்று கொண்டிருந்தார்.மேலேயிருந்து அவர் இவரை அழைத்தார்.இவர் பார்க்க வில்லை.
ஒரு 10 ரூபாயை எடுத்து அவருக்கு பக்கத்தில் எறிந்தார்.அவர், அதை எடுத்து வைத்துக்
கொண்டார்.மேலே பார்க்க வில்லை,மறுபடியும் 100 ரூபாயை கீழே போட்டார்.அதையும்
எடுத்து வைத்துக் கொண்டார்.மேலே பார்க்க வில்லை. அதற்குப் பிறகு 500 ரூபாயை
போட்டார்.அப்போதும் எடுத்து வைத்துக்
கொண்டாரே தவிர மேலே பார்க்க வில்லை.கடைசியில் ஒரு சிறிய கல்லை எடுத்து அவர்
தலையில் போட்டார்.அப்போது தான் மேலே பார்த்தார்.
இப்படித்தான் மனிதன். கஷ்டம் வரும் போது தான்
மேல பார்ப்பான், நல்லா இருக்கும் போது அவன் பார்வை மேலே போகாது.
إن ثلاثةً في بني
إسرائيلَ . أبرصَ وأقرعَ وأعمَى . فأراد اللهُ أن يبتلِيَهم . فبعث إليهم ملَكًا .
فأتَى الأبرصَ فقال : أيُّ شيءٍ أحبُّ إليك ؟ قال : لونٌ حسنٌ وجلدٌ حسنٌ ويذهبُ عني
الذي قد قذرني الناسُ . قال فمسحه فذهب عنه قذرُه . وأُعطِيَ لونًا حسنًا وجلدًا حسنًا
. قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : الإبلُ ( أو قال البقرُ . شك إسحاقُ ) - إلا
أن الأبرصَ أو الأقرعَ قال أحدُهما : الإبلُ . وقال الآخرُ البقرُ - قال فأُعطِيَ ناقةً
عشراءَ . فقال : بارك اللهُ لك فيها . قال فأتَى الأقرعَ فقال : أيُّ شيءٍ أحبُّ إليك
؟ قال : شعرٌ حسنٌ ويذهبُ عني هذا الذي قذرني الناسُ . قال فمسحه فذهب عنه . وأُعطِيَ
شعرًا حسنًا . قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : البقرُ . فأُعطِيَ بقرةً حاملًا
. فقال : بارك اللهُ لك فيها . قال فأتَى الأعمَى فقال : أيُّ شيءٍ أحبُّ إليك ؟ قال
: أن يردَّ اللهُ إليَّ بصرِي فأبصرُ به الناسَ . قال فمسحه فردَّ اللهُ إليه بصرَه
. قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : الغنمُ . فأُعطِيَ شاةً والدًا . فأُنتج هذانِ
وولَّد هذا . قال : فكان لهذا وادٍ من الإبلِ . ولهذا وادٍ من البقرِ . ولهذا وادٍ
من الغنمِ . قال ثم إنه أتَى الأبرصَ في صورتِه وهيئتِه فقال : رجلٌ مسكينٌ . قد انقطعت
بِيَ الحبالُ في سفري . فلا بلاغَ لي اليومَ إلا باللهِ ثم بك . أسألُك ، بالذي أعطاك
اللونَ الحسنَ والجلدَ الحسنَ والمالَ ، بعيرًا أتبلغُ عليه في سفرِي . فقال : الحقوقُ
كثيرةٌ . فقال له : كأنِّي أعرفُك . ألم تكنْ أبرصَ يقذرُك الناسُ ؟ فقيرًا فأعطاك
اللهُ ؟ فقال : إنما وَرِثت هذا المالَ كابرًا عن كابرٍ . فقال : إن كنت كاذبًا ، فصيَّرك
اللهُ إلى ما كنتَ . قال وأتَى الأقرعَ في صورتِه فقال له مثل ما قال لهذا . وردَّ
عليه مثل ما ردَّ على هذا . فقال : إن كنت كاذبًا فصيَّرك اللهُ إلى ما كنت . قال وأتَى
الأعمَى في صورتِه وهيئتِه فقال : رجلٌ مسكينٌ وابنُ سبيلٍ . انقطعت بي الحبالُ في
سفري . فلا بلاغَ لي اليومَ إلا باللهِ ثم بك . أسألُك ، بالذي ردَّ عليك بصرَك ، شاةً
أتبلغُ بها في سفري . فقال : قد كنتُ أعمَى فردَّ اللهُ إلي بصري . فخذْ ما شئت . ودعْ
ما شئت . فواللهِ ! لا أجهدُك اليومَ شيئًا أخذته للهِ . فقال : أمسكْ مالَك . فإنما
ابتليتم . فقد رضِيَ عنك وسخِطَ على صاحبَيك .
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய்
பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும்
இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அவர் தொழு நோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும்
விருப்பமானது எது?”
என்று
கேட்க அவர்,
“நல்ல
நிறம்,
நல்ல
தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்)
என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார்.
உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை
விட்டுச் சென்று விட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு
அவ்வானவர்,
“எந்தச்
செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடுதான்…(எனக்கு மிகவும்
விருப்பமானதாகும்)”
என்று
பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத்
(வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.
பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும்
விருப்பமானது எது?”
என்று
கேட்டார். அவர்,
“அழகான
முடியும், இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும்
விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே
அவ்வானவர்,
அவரது
தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.
அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு
விருப்பமானது?”
என்று
கேட்டார். அவர்,
“மாடு
தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே
வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி
வழங்கப்படும்”
என்று
சொன்னார்.
பிறகு, அவ்வானவர் குருடரிடம்
சென்று,
“உனக்கு
மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை
எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு
மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரது
பார்வையைத் திருப்பித் தந்தான்.
அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம்
விருப்பமானது?”
என்று
கேட்க அவர்,
“ஆடு
தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார்.
உடனே,
அவ்வானவர்
அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம்
வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர்.
இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய்
இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு
ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு
ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.
பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய
தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன்.
என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து
போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும்
தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின்
பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான்
போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.
அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய
இருக்கின்றன. (எனவே,
என்னால்
நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும்
போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக
இருக்கவில்லையா?
பிறகு
அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான
நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என்
முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான்.
உடனே அவ்வானவர்,
“நீ
(இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை
அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.
பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும்
அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார்.
அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்)
பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி
விடட்டும்”
என்று
சொன்னார்.
பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது
தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என்
வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான
வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர
வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத்
தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.
(குருடராயிருந்து பார்வை
பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான்
இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச்
செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி
அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.” என்று சொன்னார்.
உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே
வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து
திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது
கோபம் கொண்டான்”
என்று
சொன்னார். (புகாரி ; 3464)
மகிழ்ச்சியான நேரங்களில் சந்தோஷமான தருணங்களில்
வசதியான காலங்களில் படைத்தவனை மறப்பது மனித இயல்பு.ஆனால் ஒரு முஃமின் எப்படி
இருக்க வேண்டுமென்றால் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும்
இறை நினைவோடு இருக்க வேண்டும்.இறை நினைவு தான் ஈமானுக்கான அடையாளம். ஒருவரிடத்தில்
இருக்கிற இறைநினைவை வைத்து அவரது ஈமானை அளந்து விடலாம். காரணம் அல்லாஹ் குர்ஆனில்
முனாஃபிக்களின் அடையாளங்களைப்பற்றி சொல்லும் ஒரு இடத்தில்
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ
وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ
وَلا يَذْكُرُونَ اللَّهَ إِلا قَلِيلا
முனாஃபிக்கள்
அல்லாஹ்வை குறைவாகத்தான் நினைவு கூறுவார்கள். (அல்குர்ஆன் : 4 ; 142)
لقِيني أبو بكرٍ فقال : كيف أنت ؟ يا حنظلةُ
! قال قلت : نافق حنظلةُ . قال : سبحان اللهِ ! ما تقول ؟ قال قلتُ : نكون عند رسولِ
اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . يُذكِّرنا بالنار والجنةِ . حتى كأنا رأيَ عَينٍ
. فإذا خرجنا من عند رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ ، عافَسْنا الأزواجَ والأولادَ
والضَّيعاتِ . فنسِينا كثيرًا . قال أبو بكرٍ : فواللهِ ! إنا لنلقى مثل هذا . فانطلقتُ
أنا وأبو بكرٍ ، حتى دخلْنا على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . قلتُ : نافق
حنظلةُ . يا رسولَ اللهِ ! فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " وما ذاك
؟ " قلتُ : يا رسولَ اللهِ ! نكون عندك . تُذكِّرُنا بالنارِ والجنةِ . حتى كأنا
رأىُ عَينٍ . فإذا خرجْنا من عندِك ، عافَسْنا الأزواجَ والأولادَ والضَّيعاتِ . نسينا
كثيرًا . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " والذي نفسي بيده ! إن لو
تدومون على ما تكونون عندي ، وفي الذِّكر ، لصافحتْكم الملائكةُ على فُرشِكم وفي طرقِكم
. ولكن ، يا حنظلةُ ! ساعةٌ وساعةٌ " ثلاثَ مراتٍ
. .
ஹன்ளலா (ரலி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள்
என்னைச் சந்தித்து, ''ஹன்ளலாவே! நீங்கள்
எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.அதற்கு
நான், ''ஹன்ளலா நயவஞ்சகராக
ஆகிவிட்டார்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள்,
''அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.அதற்கு
நான், ''நாம் அல்லாஹ்வின்
தூதர் நபி ﷺ
அவர்களிடம் இருக்கும் போது
அவர்கள் நமக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால்
கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின்
தூதர் ﷺ
அவர்களிடமிருந்து பிரிந்து
வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம்.வியாபாரம் போன்ற காரியங்களில்
ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) அவர்கள்,
''அல்லாஹ்வின் மீது சத்தியமாக
நாமும் இப்படித் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி)
அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம்.
நான், ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகி விட்டான்''
என்று கூறினேன். அதற்கு அவர்கள்,
''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும்
நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில்
உங்களிடம் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டால் மனைவி மக்களுடன்
விளையாட ஆரம்பித்து விடுகிறோம்.
வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான
(மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், ''எனது உயிர் எவனது
கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறை தியானத்தில்
எப்போதும் திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும்
இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடம் கை கொடுப்பார்கள்.
எனவே ஹன்ளலாவே! சிறிது நேரம் (மார்க்க விஷயங்களில்
கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்)''
என்று மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம் ; 2750)
மனித வாழ்க்கையில் இரண்டு புறங்களும்
உண்டு,இரண்டு சூழ்நிலைகளும் உண்டு. பள்ளியில் இருக்கும் போது மறுமை சிந்தனையோடு
இருப்பதும் வீட்டிக்கு போன பிறகு அந்த சிந்தனையில் கொஞ்சம் மாற்றம் வருவதும்
எல்லாருக்கும் இருக்கிற நிலை.ஆனால் அதைக்கூட ஸஹாபாக்கள் தங்களிடம் நயவஞ்சகத்தன்மை
வந்து விட்டது என்று கருதினார்கள் என்றால், பள்ளிக்குள் இருந்து கொண்டே உலகத்தை
சிந்தித்துக் கொண்டிருக்கிற நம்மை என்னவென்று சொல்வது?
பெருநாள் என்பது மகிழ்ச்சியைத் தரும்
நாள்,சந்தோஷத்தைத் தரும் நாள்.அந்த மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் படைத்தவனை
மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பெருநாட்களில் தக்பீர் சொல்ல வேண்டும் என்று
மார்க்கம் சொல்லியிருக்கிறது.
நம் வாழ்வில் எந்த நேரமும் அல்லாஹ்வின்
நினைவில்லாமல் படைத்தவனின் நினைவில்லாமல் கழிந்து விடக்கூடாது.இறை சிந்தனையோடு இறை
நினைவோடு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வை நாம் எப்போது
நினைக்கிறோமோ அப்போது அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.அல்லாஹ்வை மறக்கிற போது
அல்லாஹ்வும் நம்மை விட்டு தூரமாகி விடுகிறான்,
قال موسى: يا ربّ، أقريب أنت فأنا جيك أم
بعيد فأُناديك؟ فإنّي أُحسّ صوتك ولا أراك، فأين أنت؟ فقال الله انا خلفك وامامك
وعن يمينك وعن شمالك يا موسي انا جليس عبدي حين يذكرني وانا معه اذا دعاني
இறைவா! நீ எங்கே இருக்கிறாய்? பக்கத்திலா? தூரத்திலா? பக்கத்தில் இருந்தால் உன்னை முன்னோக்கி
பேசுவேன்.நீ தூரமாக இருந்தால் உன்னை அழைப்பேன். உன் சப்தத்தை உணர்கிறேன்.ஆனால்
உன்னை பார்க்க முடிய வில்லை. நீ எங்கே இருக்கிறாய்? என்று மூஸா அலை அவர்கள் கேட்டார்கள்.அதற்கு
அல்லாஹ், நான் உனக்கு முன்னாலும் பின்னாலும் வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இருக்கிறேன். மூஸாவே! என்னை என்
அடியான் நினைக்கிற போது அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்.என்னை அவன்
அழைக்கிற போது அவனோடு இருக்கிறேன் என்று கூறினான். (கன்ஜுல் உம்மால் : பக்கம் ; 433)
நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விடம்
கேட்டு நம்மை கேட்கும்படி சொன்ன துஆக்களில் ஒன்று ;
اللهم اعني علي ذكرك وشكرك وحسن عبادتك
உன்னை நினைப்பதின் மீதும் உனக்கு நன்றி
செலுத்துவதின் மீதும் உன்னை அழகான முறையில் வணங்குவதின் மீதும் எனக்கு உதவி
புரிவாயாக! (அபூதாவூத் ; 1522)
சொர்க்கவாசிகளுக்கு எந்தக் கவலையும்
இருக்காது.எந்த சிந்தனையும் இருக்காது.எந்த கைசேதமும் இருக்காது என்பது குர்ஆன்
பதிவு செய்திருக்கும் செய்தி.ஆனால் அந்த சொர்க்கவாசிகளுக்கும் ஒரே ஒரு கவலை
இருக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ليس يتحسَّرُ أهلُ الجنَّةِ إلَّا على ساعةٍ
مرَّتْ بهم لم يذكُروا اللهَ تعالَى فيها
அல்லாஹ்வை நினைக்காமல்
கழித்த நேரத்தை தவிர வேறு எதன் மீதும் சுவனவாசிகள் கைசேதப்பட மாட்டார்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 2/331)
எனவே அல்லாஹ் இந்த நாட்களில் மட்டுமில்லாமல்,
எல்லா நாட்களிலும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.அல்லாஹ் என்றும் அவனை நினைத்து
வாழும் நல்லடியார்களில் நம்மை சேர்த்தருள்வானாக
No comments:
Post a Comment