செல்வமே- 2
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு
அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
செல்வம் தான் உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக
இருக்கும் என்று நான் உரக்க சொல்ல வந்திருக்கிறேன்
நடுவர் அவர்களே எதிரணியிலிருந்து கிணத்து தவளை ஒன்னு வந்துச்சி. யாருன்னு தெரியுதா நம்ம ஆஷிக் தான்.மேடைல நின்னு அழகா பேசச் சொன்னா
கிணத்துக்குள்ள இருந்து கத்துற மாதிரி கத்துறாரு நம்ம ஆஷிக்.ஏம்பா ஆஷிக்....உன்னால
தான் முடியலியே ஏன் இப்டி போட்டு கத்துற.சரி கத்துனியே அதுல ஏதாவது ஒன்னு உருப்படியா
இருந்துச்சா... ஒன்னும் இல்ல.
நடுவர் அவர்களே நம்ம ஆஷிக் வந்து....இந்த மைக் கல்விக்காக,இந்த பள்ளிவாசல் கல்விக்காக, இந்த பரிசு கல்விக்காக, ஏன் நாம சாப்ட பிரியாணி கூட
கல்விக்காக அப்டி இப்டின்னு சொன்னாரு.எல்லாமே கல்விக்காகத்தான் யார் இல்லன்னா.
நான் என்ன கேக்குறேன்....உங்க கல்விய வச்சி இதல்லாம் வாங்க முடியுமா ? நாங்க எங்க பணத்த வச்சி இந்த உலகத்தையே
வாங்குவோம். ஆனா நீங்க உங்க படிப்ப வச்சி ஒரு ரண்டு ரூபா பிளைட வாங்க முடியுமா ? அல்லது ஒரு குண்டூசிய தான் வாங்க முடியுமா ? கீழ கிடந்து பொறுக்கலாமே தவிர உங்க படிப்பால அத
வாங்க முடியாது.உங்க கல்வியால ஒரு ரண்டு ரூபா பிளைட கூட வாங்க முடியலன்னா அந்த
கருமாந்தர படிப்பு எதுக்கு,அந்த எலவெடுத்த கல்வி எதுக்கு.அதனாலத்தான் நாங்க பணத்த பத்தி
பேச வந்துருக்குறோம்.
நடுவர் அவர்களே இன்னைக்கி பணத்தால எவ்வளவு
நன்மைகள் இருக்குது தெரியுமா... அன்னைக்கி சுதேசிக்கப்பல் வாங்குறதுக்கு வ.உ.சி
பணமில்லாம கஷ்டப்பட்டப்ப ஹாஜி பக்கீர் முஹம்மது அவங்க தான் 2 லட்சம் கொடுத்து உதவி
செஞ்சாரு. கப்பல் வாங்க பணம் கொடுத்து நம் நாட்டு மானம் கப்பல் ஏறாம
காப்பாத்துனாரு.அவர் ஹாஜி பக்கீரா இருக்கப்போய் கொடுத்தாரு. உங்கள மாதிரி ஒன்னும்
இல்லாத பக்கீர்ஸாவா இருந்தா கொடுத்திருப்பாரா....
அறிஞர் பெர்னாட்ஷாட்ட பணத்தப் பத்தி
கேட்கப்பட்டுச்சி.அப்ப அவர் பணம் ஒரு பொக்கிஷம். அத நிறைய பேரு தவறா நினைக்கிறாங்க
அதனால தான் காலங்காலமா ஏழையாவே இருக்குறாங்க அப்படின்னு சொன்னார்.அனேகமா அவர் பொழைக்கத்தெரியாத இந்த ரண்டு பேரப்பத்தி தான்
சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்.
அருமையான நடுவர் அவர்களே இவங்க பணத்த பத்தி கொற
சொல்ல வந்துருக்காங்க. ஆனா அல்லாஹ் என்ன சொல்றான் தெரியுமா.... وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللهِ. நீங்கள் தொழுகை முடிந்து விட்டால் பூமியில் பரவிச்சென்று எனது அருளை தேடுங்கள்
இந்த பசங்க மாதிரி முட்டாளா ஊட்ல உக்காராதீங்க அப்டின்னு சொல்றான். பாத்தீங்களா
நடுவர் அவர்களே அல்லாஹ்வே அருளுன்னு சொன்ன விஷயத்த போய் இவங்க நாசம்னு பேச
வந்துருக்காங்களே இவங்கள என்னன்னு சொல்றது.
நம்ம ஆஷிக் வந்து பணம் நாசத்த
ஏற்படுத்தும்,பணம் அழிவ ஏற்படுத்தும் காரூன பாத்தீங்களா அப்டின்னு கத்துனாரு. ஏங்க
நாசத்த ஏற்படுத்துது? ஆடத்தெரியாத
கூத்தாடி... தெருக்கோணலா இருக்குன்னு சொன்னாலாம். அந்த கதையாவுல இருக்குது. பணத்த முறையா பயன்
படுத்துனா ஏன் நாசத்த ஏற்படுத்துது. ஏன் பணத்த முறையா சம்பாதிச்சி, சேமிச்சி வெற்றி பெற்றவங்கள்ளாம் இல்லியா. கண்மனி நாயகம்
ஸல் அவங்களோட அன்பு மனைவி அன்னை கதீஜா ரலி அவங்க மிகப்பெரிய செல்வச்சீமாட்டி.
அவங்க முறையா சம்பாதிச்சி அந்த பணத்த தீனுக்காக செலவழிக்க வில்லயா... அதனாலத்தான
அல்லாஹ்வே அவங்களுக்கு ஸலாம் சொல்லி விட்டான். யாருக்கு கிடைக்கும் இந்த
பாக்கியம். பணத்தக்கொண்டு தானே அவங்க அந்த பாக்கியத்த அடைஞ்சாங்க.அந்த பணத்தப்போய்
குறை சொல்லலாமா...
நடுவர் அவர்களே படிப்பால தான் முன்னுக்கு வர
முடியும் படிப்பால தான் உயரத்துக்கு போக முடியும் அப்டின்னு
சொல்றாங்களே....இன்னைக்கி படிப்பில்லாம வெறும் செல்வத்தக்கொண்டு மட்டும் எத்தனை
பேர் முன்னுக்கு வந்துருக்காங்க தெரியுமா...
அடுத்து என்னமோ இவங்க தான் கல்வியவே கண்டு
புடிச்ச மாதிரி கல்வி கல்வின்னு கத்துறாங்களே.... நான் கேக்குறேன் இன்னைக்கி எங்கள
மாதிரி பல செல்வந்தர்கள் உதவி செய்யலன்னா அந்த ஸ்கூல் வந்துருக்குமா... காலேஜ்
வந்துருக்குமா...நீங்க படிச்சிருக்க முடியுமா,ஒரு வேளைல சேர முடியுமா,அத வச்சி நாளு காசு
சம்பாதிக்க தான் முடியுமா ? நீங்க இன்னைக்கி இந்த நிலமைக்கி வர்ரதுக்கே பணம் தானங்க காரணம். அந்த பணத்தப்போய் அழிவுன்னு சொல்லலாமா...? ஏறி வந்த ஏணியையே எட்டி உதைக்கலாமா ?. இன்னைக்கி LKG சேருறதா இருந்தா கூட 10,000 த்த கொண்டா 15,000
த்த கொண்டான்னு கேக்குறான். உங்க படிப்புக்கே எங்க பணம் தான காரணமா இருக்குது. அந்த
பணத்தப்போய் மிதிக்க வரலாமா இன்னைக்கி 1-ம் க்லாஸ்ல பாஸ் ஆகாதவன்லாம் பதவில
இருக்கான். கையெழுத்து கூட
ஒழுங்கா போடத்தெரியாதவன் லாம் கல்வி அமைச்சரா இருக்கான்னா என்ன
காரணம் துட்டுதாங்க. பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சும்மாவா சொன்னாங்க.
ஏம்பா படிச்ச அறிவாளிங்களா படிப்பு தான் பெருசு
பணம்லாம் வெறும் தூசுன்னு பேச வந்துருக்கீங்களே... உண்மைலயே பணந்தான் பெருசு,
பணத்த வச்சி எத வேண்ணாலும் வாங்கலாங்குறது உண்மையா இருந்தா கையில ஒரு பைசா இல்லாம
உங்க படிப்ப வச்சி கடைல போய் ஒரு டீ குடிச்சிட்டு வாங்க பாப்போம்.சுடு தண்ணிய
புடுச்சி மூஞ்சில ஊத்துவாங் களே தவிர டீ தர மாட்டாங்க.உங்க படிப்ப வச்சி ஒரு
கிளாஸ் டீக்கு வழியில்ல பெருசா படிப்பு கல்வின்னு பேச வந்துட்டீங்க ஆ.....
அது மட்டுமல்ல நடுவர் அவர்களே இன்னைக்கி ஒரு
செல்வந்தரக் கண்டா உலகமே மரியாத கொடுக்குது,எந்த வாசலா இருந்தாலும் அவருக்காக திறக்குது,அவரோட
புன் சிரிப்புக்காக எத்தனயோ உள்ளங்கள் ஏங்குது,அவரோட கனைப்பு சத்தம் கேட்டாலே
எத்தனையோ கால்கள் தானா எழுந்திருக்குது, செல்வந்தர்களுக்கு சமுதாயாத்துல இந்த அளவுக்கு
மரியாத இருக்கு. ஆனா உங்கள மாதிரி படிச்சவங்க ஒரு வேளைய வாங்குறதுக்கு எத்தனை
பேரோட கால்ல போய் விழ வேண்டியதா இருக்குது.நம்மோட மானத்த குழி தோண்டிப் புதைக்கிற
இந்த கல்வி நமக்குத் தேவையா ?
எனவே நடுவர் அவர்களே உயர்ந்த வாழ்க்கைக்கு உருதுணையாக
இருப்பது கல்வியல்ல செல்வம் தான் என்று நல்ல தீர்ப்பை வழங்கி இவர்களுக்கு சாட்டை
அடி கொடுப்பீர்கள் என்று நம்பி விடைபெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
No comments:
Post a Comment