الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة
والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ?
பெற்றோர்களா ஆசிரியர்களா
நண்பர்களா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து
கொண்டிருக்கிறது.கருத்தரங்கத்திற்கு நடுவராக இருக்கும் நடுவர் அவர்களே என்னோடு பேச
இருக்கிற என் நண்பர்களே இந்த நிகழ்ச்சிக்கு ஆணிவேராக இருக்கிற எங்கள் மதரஸாவின்
ஹள்ரத்மார்களே இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிற எங்கள்
பள்ளியின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகளே மற்றும் இதற்கு எல்லா வகையிலும்
ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிற ஜமாஅத்தார்களே பெரியோர்களே தாய்மார்களே சகோதர
சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் ஸலாமை எத்தி வைக்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பெத்தவங்களுக்கு AGAINST டா தான் பேச வந்துருக்கேன்.இங்க இருக்குற
தாய்மார்கள் யாரும் கோவிச்சிக்க கூடாது.தவறு இருந்தா திருத்திக் கோங்க, நான் தவறா
பேசுனா எனக்கு திருத்திக் கொடுங்க என்று சொல்லிக் கொண்டு என் வாதத்திற்கு
வருகிறேன்.
நடுவர் அவர்களே இன்னைக்குள்ள பெத்தவங்க எப்படி
இருக்காங்க தெரியுமா இன்னைக்கு
ஒட்டுமொத்தமா புள்ளைங்க கெட்டு போறதுக்கும் அவங்க வீணாப் போறதுக்கும் முக்கிய
காரணமா இருக்குறதே இந்த பெத்தவங்க தான்.புள்ளைங்களுக்கு முதல் ரோல் மாடலா முதல்
வழிகாட்டியா பெத்தவங்க தான் இருக்கனும். இன்னைக்குள்ள பெத்தவங்க ரோல் மாடலா
இருக்காங்க.நான் இல்லன்னு சொல்லல. ஆனா எந்த விஷயத்து தெரியுமா நல்ல விஷயத்துக்கு
இல்ல கெட்ட விஷயத்துக்கு.
புள்ளைங்க கெட்ட வார்த்தை பேசுவதில்லை.கேட்ட
வார்த்தை தான் பேசுவார்கள் அப்டின்னு சொல்வாங்க. எங்கயிருந்து கேக்குறாங்க.....
பெத்தவங்க கிட்டயிருந்து தான். இன்னைக்கு பெத்தவங்க அவங்களுக்குள்ள ஏற்படுற சண்ட
பிரச்சன எல்லாத்தையும் புள்ளைங்க முன்னால தான் போடுறாங்க.அதப்பார்த்து
புள்ளைங்களும் கத்துக்குறாங்க. அப்படித்தான் ஒரு கணவன் மனைவி சண்ட போட்டுட்டு
இருந்தாங்க.இவரு அந்த அம்மாவ பேயின்னு சொல்றதும் அந்த அம்மா இவர நாயின்னு
சொல்றதும். இவரு அந்த அம்மா தெண்டம்னு சொல்றதும் அந்த அம்மா இவர முண்டம்னு
சொல்றதும் இப்டி சண்ட நடந்துகிட்டு இருந்துச்சி. சண்டய பையன் பாத்துட்டே இருந்தான்.சண்ட
முடிஞ்ச பிறகு, அம்மா நாய் பேய் தெண்டம் முண்டம்னா என்னமானு கேட்டான்.இப்பவுள்ள
புள்ளைங்க தான் ரொம்ப Prilliant ஆச்சே. அதனால எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சிட்டு அதுக்கு விளக்கம்
கேட்டான்.
எல்லாத்தையும் விளக்கமா சொல்ல
முடியாது,சொல்லாட்டி விடவும் மாட்டான் அப்டின்னு அந்த அம்மா நாயின்னா அப்பா பேயின்னா அம்மா
தெண்டன்னா விருந்தாளி முண்டன்னா நாக்காளின்னு சொல்லிக் கொடுத்துச்சி. அத அவன்
கேட்ஜ் பன்னிட்டான். முன்னாடிலா புள்ளைங்க பாலத்தான் கேட்ஜ் பன்னுவாங்க. இப்ப
எல்லாத்தையும் கேட்ஜ் பன்னிர்ராங்க. அவன் அம்மா சொன்னத கேட்ஜ் பன்னி
வச்சிகிட்டான். கொஞ்ச நாள் கழிச்சி வீட்டுக்கு விருந்தாளி வந்தாரு.அப்ப தான் ஒரு
வேடிக்க நடந்துச்சி.என்னடா வீட்ல அம்மா அப்பா யாரையும் காணோம், எங்க
போயிட்டாங்கன்னு கேட்டாரு. அதுக்கு அவன் நாயி கடைக்கு போயிருக்கு, பேய் சமையகட்டுல
நிக்குது, வாங்க தெண்டம் இந்த முண்டத்துல உக்காருங்க.
அதுக்கு அப்பறம் அவரு அந்த வீட்டு பக்கம் தல
வச்சி படுப்பாரா. ஓடியே போயிட்டாரு. இதுக்குலாம் யார் காரணம், பெத்தவங்க தான....
பெத்தவங்க புள்ளைங்களுக்கு நல்ல வார்த்தைய கத்துக்கொடுக்கனும். இல்லாட்டி கெட்ட
வார்த்தைய அவங்களுக்கு தெரியாமயாவது பேசனும். ரண்டும் செய்றது இல்ல. அப்ப
புள்ளைங்க கெட்டுப்போகாம என்ன செய்வாங்க.அதனால நடுவர் அவர்களே புள்ளைங்க
கெட்டுப்போறதுக்கு முதல் காரணம் பெத்தவங்க தான்.
ஒரு ஆள் மனைவிட்ட என்னம்மா நம்ம பையன் எப்ப
கேட்டாலும் கல்யாணம் வேண்டா வேண்டான்னு சொல்றான்.அவன் மனசுல யாராவது இருக்காளான்னு
கேட்டாரு. அதுக்கு அந்த அம்மா, அவன் மனசுல வேற யாரும் இல்ல நாம தான் இருக்கோம்.நாம தினமும் போடுற
சண்டைய பாத்து தான் கல்யாணம் வேண்டான்னு சொல்றான் அப்டின்னு சொன்னாங்களாம். பெத்தவங்க
வளர்ப்பு இன்னைக்கி இப்டித்தான் இருக்குது.புள்ளைங்களுக்கு தவறான ரோல்மாடலாக தான்
இன்னைக் குள்ள பெத்தவங்க
இருக்காங்க.
நடுவர் அவர்களே இன்னைக்கு பெத்தவங்கள மதிக்காத
புள்ளைங்க பெத்தவங்கள கண்டுக்காத புள்ளைங்க அதிகமாயிட்டாங்க. இதுக்கும் யார்
காரணம்னு பாத்தீங்கன்னா பெத்தவங்க தான் காரணம்.(ஏன்னே உங்களுக்கு வீட்ல எதுவும் அடி விழும்னு
பயப்படுறீங்களா)
நாம இன்னைக்கு நம்ம பெத்தவங்கள
கண்டுக்குறதில்ல. அதப்பாத்துட்டு தான் நம்ம புள்ளைங்களும் நம்மள கண்டுக்காம
இருக்குறாங்க. அப்டித்தான் ஒரு ஆள் தன் மனைவி சொல்ல கேட்டுட்டு தன்னோட பெத்த தாய வீட்ட
வுட்ட வெளிய அனுப்புனாரு. வயசான காலத்துல அந்த அம்மாவும் கண் கலங்கி போறாங்க.அவங்க
போன பிறகு அந்த வீட்ல இருந்த புள்ளைங்க சொன்னாங்களா... நம்ம தாத்தா பாட்டிய நம்ம
அப்பா அம்மா வீட்ட வுட்டு அனுப்புன மாதிரி நாமலும் நம்ம அப்பா அம்மாவ அனுப்பனும்
சரியா... அந்த பிஞ்சு உள்ளத்துல நஞ்ச போட்டது யாரு பெத்தவங்க தான.
அதுமட்டுமில்லாம நடுவர் அவர்களே பொதுவா
புள்ளைங்க பெத்தவங்கள பாத்து தான் வளருவாங்க.அவங்க என்ன செய்றாங்களோ அதத்தான்
புள்ளைங்களும் செய்வாங்க.இன்னைக்குள்ள நிறைய பெத்தவங்க, என் பையன் ஒழுங்கா
ஓதுறதில்ல,ஒழுங்கா தொழுறதில்ல, எப்ப பார்த்தாலும் டீவி பாத்துட்டே இருக்கேன்.அப்டி
இப்டின்னு சொல்றாங்க.நான் கேக்குறேன்... இப்டி சொல்லக்கூடிய பெத்தவங்க முதல்ல
அவங்க சரியா இருக்காங்களா....
அவங்க குர்ஆன் ஓதுறாங்களா... அவங்க
தொழுவுறாங்களா, அவங்க வீட்ல டீவி பாக்காம இருக்குறாங்களான்னா இல்ல. அப்ப புள்ளைங்க
எப்டி இருப்பாங்க.அவங்களே வீட்ல குர்ஆன் ஓதுறதில்ல. அப்ப புள்ளைங்க எப்டி ஓதுவாங்க.அவங்களே
பள்ளிக்கு தொழ வர்ரதில்ல. அப்ப புள்ளைங்க எப்டி வருவாங்க.அவங்களே உக்காந்து டீவி
பாக்குறாங்க அப்ப புள்ளைங்க எப்டி பாக்காம இருக்காங்க.அதனால முதல்ல பெத்தவங்க
சரியா ஆகனும் அப்ப தான் புள்ளைங்க சரியா ஆவாங்க.இன்னைக்கு பெத்தவங்க சரியா இல்ல,
அதனால புள்ளைங்களும் சரியா இல்ல, எனவே இன்றைக்கு பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு
காரணம் பெற்றோர்கள் தான் என்று கூறி விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment