Thursday, November 8, 2018

நண்பர்களே !



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா நண்பர்களா சூழ்நிலைகளா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு முக்கியமான காரணம் நண்பர்கள் தான் என்று நான் பேச வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய நடுவர் என் நண்பர் என் அண்ணன் அனஸ் அவர்களே பாசத்திற்குரிய பெரியோர்களே தாய்மார்களே ஒரு மனிதன நல்லவனா மாத்துறதும் இந்த நட்பு தான் அதே மனிதன தீயவனா மாத்துறதும் இந்த நட்பு தான். ஒரு மனிதன சிறந்தவனா மாத்துறதும் இந்த நட்பு தான் ஒன்னும் இல்லாதவனா மாத்துறதும் இந்த நட்பு தான்.ஒரு மனிதன அல்லாஹ் ரசூலுக்கு பிடித்தமானவனா மாத்துறதும் இந்த நட்பு தான்.அதே மனிதன் அல்லாஹ்வோட கோபத்துக்கு ஆளாகுறதுக்கு காரணமா இருக்குறதும் இந்த நட்பு தான்.
நட்பு ஒரு மனிதனை எப்படியும் மாத்திடும்.நல்லவனாகவும் மாத்தும் தீயவனாகவும் மாத்தும்.ஒரு பையன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் அவனுக்கு இருக்குற நண்பர்கள பொறுத்து தான்.
வானத்துல இருந்து மழை பெய்யுது. அந்த தண்ணீ ர்  கடல்ல  விழுந்தா உப்பா  மாறிடும்,  கடல்ல  விழுந்த  தண்ணீர் சிப்பிக்குள்ள  நுழைந்தா  முத்தாக மாறிடும்,  அதே  தண்ணீர்  சாக்கடைல விழுந்தா  நஜீஸாக  மாறிடும்.கீழ விழுற தண்ணீர் ஒரே தண்ணீர் தான்.ஆனா எப்படி மாறுதுன்னு பாத்தீங்களா. அதேமாதிரி தான் ஒருத்தன் அவன் யாரோடு சேருறானோ அவனப்போலவே மாறி விடுகிறான்.
அன்னை தெரசாவப் பத்தி உங்க எல்லாத்துக்கும் தெரியும்.அன்னை தெரசா சின்ன புள்ளையா இருந்த நேரத்துல அவருடைய தோழிகள்ள ஒரு தீய தோழி இருக்குறத அவருடைய தாய் கவனிச்சாங்க. ஒரு தீய நட்பு நல்லவங்களையும் கெடுத்துடும், அதனால அந்த நட்ப எப்படியாச்சும் துண்டிக்கனுன்னு தெரசாவின் தாய் முடிவெடுத்தாங்க.

ஒருநாள் அந்த அம்மா தெரேசாவ கூப்புட்டாங்க. அவருடைய கையில ஒரு பெரிய பெட்டியில நிறைய அப்பிள் பழங்கள் இருந்துச்சு. அழகான ஆப்பிள் பழங்கள பார்த்தவுடன தெரேசாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதில இருந்து ஆர்வத்தோட ஒரு பழத்த எடுக்கப்போன திரேசாவ அவங்க தாய் நிறுத்துனாங்க. அதுல இருந்து நல்ல பழங்களா பொறுக்கி  இரண்டு கூடைல வைய்யுன்னு சொன்னாங்க. அப்டியே தெரேசாவும் நல்ல பழங்கள பூரா பொறுக்கி  இரண்டு கூடைல நிரப்புனா.உடனே அந்த அம்மா தனியா வைச்சிருந்த ஒரு அழுகிய பழத்த எடுத்து நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையில வச்சாங்க.
ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீங்கன்னு திரேசா கேட்டா.
எல்லாம் ஒரு காரணமா தான் என்று சொல்லிட்டு, இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்துட்டு வரனும்அப்டின்னு சொன்னாங்க. தெரேசாவும் அப்படியே செஞ்சா.
கொஞ்ச நாள் கழிச்சி தாய் தெரேசாவ கூப்புட்டு அந்த பழக் கூடைகள எடுத்து வரச் சொன்னாங்க. தெரேசாவும் பழக் கூடைகள எடுத்து வந்து தாயிக்கு முன்னால வச்சா.
அப்ப அழுகிய பழம் வச்ச கூடையில இருந்த எல்லா பழமும் அழுகிப்போய் இருந்துச்சு. இன்னொரு கூடையில இருந்த பழங்கள் கெட்டுப் போகாம அப்படியே இருந்துச்சு. அதப் பார்த்த தெரேசா நல்ல இருந்த பழம் பூரா கெட்டுப் போச்சேன்னு சொல்லி வருத்தப்பட்டு அழுதா.
அப்ப அந்த தாய் தெரேசாவ பக்கத்துல உக்கார வச்சி பார்த்தியாமா? ஒரு அழுகிய அப்பிள் பழம் கூடையில இருந்த எல்லா நல்ல பழத்தையும் கெடுத்துடுச்சி.அந்த மாதிரி தான் தீய நட்பும். ஒரு தீய நட்பு ஒரு நல்ல கூட்டத்தையே நாசமாக்கிடும் அப்டின்னு சொல்லி புள்ளைக்கு புரிய வச்சாங்க.அப்பத்தான் கெட்டவங்களோட பழகுறது எவ்ளோ பெரிய ஆபத்துன்னு தெரேஸாவுக்கு புரிஞ்சிச்சு.
அதனால நடுவர் அவர்களே எல்லாத்துக்குமே நட்பு நல்ல விதமா அமைறது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு பையன் எப்படிப்பட்டவன், அவனோட குணங்கள் என்ன அவனோட பழக்கவழக்கங்கள் என்ன, அவன் நல்லவனா கெட்டவனா, இப்படி ஒரு பையனோட மொத்த HISTORY யும் நாம தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ஒன்னும் செய்யத் தேவை இல்ல. அவன் யாரு கூட பழகுறானோ அவன பாத்தாவே போதும். (அதான் நீங்க இருக்குறீங்களே உங்கள பாத்தாவே போதுமே)
நபி ஸல் அவங்க சொன்னாங்க
الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل
ஒரு மனிதன் அவன் நண்பனின் வழியில் இருக்கிறான்.எனவே அவன் யாரோடு நட்பு கொள்கிறானோ அவனைப் பார்க்க வேண்டும் என்று நபி ஸல் அவங்க சொன்னாங்க. நண்பன வச்சே ஒருத்தன் எப்படிப்பட்டவன் என்பத நாம தெரிஞ்சிக்கலாம். நட்பு ஒருத்தன எப்டியும் மாத்திடும்.
அதனால நாம நல்ல நட்ப உருவாக்கிக் கொள்ளனும். முக்கியமா நம்ம புள்ளைங்களுக்கும் நல்ல நட்ப உருவாக்கித் தரனும்.
ஆனா இன்னைக்கு நாம அதுல கவனம் செலுத்துறதே இல்ல.நம்ம புள்ளைங்க யாரு கூட நட்பு வச்சுருக்காங்க, யாரோடு பழகுறாங்கன்னு பாக்குறதும் இல்ல, கவனிக்கிறதும் இல்ல.இப்டி நாம புள்ளைங்க விஷயத்துல கவனக்குறைவா இருக்குறதுனால அவங்க கெட்டவங்க கூட பழகுறாங்க,கடைசில அவங்களும் கெட்டவங்களா மாறிப் போயிடுறாங்க.
எனவே புள்ளைங்க கெட்டுப் போறதுக்கு முக்கியமான காரணம் நண்பர்கள் தான்.நடுவர் அவர்களே நான் சொன்ன எல்லா விஷயமும் உங்களுக்கு புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.ஒழுங்கு மரியாதையா தீர்ப்ப கரைக்டா சொல்லுங்க.தீர்ப்ப மட்டும் ஒழுங்கா சொல்லல அப்றம் நீங்க யாரு கூட பழகுறீங்க,நீங்க என்னலாம் செய்றீங்கன்னு உங்க வண்ட வாலத்த தண்ட வாலத்துல ஏத்திருவேன் பாத்துக்குங்க. 



                                                                                         

No comments:

Post a Comment