Thursday, November 8, 2018

சூழ்நிலைகளே !



الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ஆசிரியர்களா சூழ்நிலைகளா என்ற தலைப்பில் இங்கே கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.புள்ளைங்க கெட்டுப்போறதுக்கு முக்கியமான காரணம் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலைகள் தான் என்று நான் பேச வந்திருக்கிறேன்.

நடுவர் அவர்களே இன்னைக்கு நாம 2018 ல இருக்கோம். 21 ம் நூற்றாண்டு. இதுக்கு முன்னால இருந்த ஜெனரேசனுக்கும் இப்ப இருக்குற ஜெனரேசனுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.முந்தைய காலத்துல இருந்த புள்ளைங்கள விட இன்னைக்குள்ள புள்ளைங்க ரொம்ப மோசமாயிட்டே வராங்க.அவங்கள்ட ஒழுக்கமில்ல, பேணுதல் இல்ல, நல்ல பழக்க வழக்கங்கள் இல்ல,நல்ல குணங்கள் இல்ல.நல்ல பேச்சு கூட இல்ல.
கிளாஸ்ல ஒரு பையன் முத பீரியட்லயே தூங்குனான்.டீச்சர் பாத்துட்டாங்க.டேய் இப்பத்தான் கிளாஸ் ஆரம்பிச்சிருக்கு.முத பீரியட்லயே என்னடா தூக்கம் உனக்கு அப்டின்னு கேட்டாங்க.அதுக்கு அவன் சொன்னான். காலைல 5 மணிக்கு எழுந்திருச்சி பல் தேச்சு குளிச்சி அரக்க பரக்க டிஃபன சாப்டுட்டு அம்மா கிட்ட திட்ட வாங்கிட்டு அப்பா கிட்ட கொட்ட வாங்கிட்டு 10 கிலோ ஸ்கூல் பேக்க சுமக்க முடியாம சுமந்து கஷ்டப்பட்டு கிளாஸ் வந்து உக்காந்தா நீங்க பாடம் நடத்துறேங்குற பேர்ல எங்கள தூங்க வச்சிட்டு ஏன்டா தூங்குறன்னு கேட்டா என்ன மிஸ் நியாயம்.
யாருட்ட எப்டி பேசனுங்குற மரியாத கூட இன்னைக்குள்ள புள்ளைங்கள்ட இல்லாம போச்சி என்ன பன்றது.
நடுவர் அவர்களே நீங்க சொன்ன மாதிரி இன்னைக்குள்ள புள்ளைங்கள்ட நிறைய அறிவு இருக்குது,நிறைய ஆற்றல் இருக்குது,நிறைய திறம இருக்குது,எதையும் சமாளிக்கிற தைரியம் இருக்குது. எல்லாம் இருக்குது. ஆனா முக்கியமா இருக்க வேண்டிய ஒழுக்கம் தான் சுத்தமா இல்ல. ஒழுக்கம்னா என்னா அதுல எந்த கடைல கிடைக்கும் அப்டின்னு கேக்குற அளவுக்குத்தான் இன்னைக்குள்ள புள்ளைங்க இருக்குறாங்க.
இதுக்குலாம் காரணம் என்னன்னா இன்னைக்குள்ள சூழ்நிலைகள் தான். அந்தளவு இன்னைக்கு சூழ்நிலை ரொம்ப மோசமா இருக்குது.எங்க பார்த்தாலும் ஆபாசங்களும் அசிங்கங்களும் ஒழுக்கக்கேடுகளும் நிறைஞ்ச மோசமான காலகட்டத்துல நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். பத்திரிக்கைய தொறந்தா அதுல அசிங்கம்.டீவிய தொறந்தா அதுல அசிங்கம்.செல்ஃபோன எடுத்தா அதுல அசிங்கம்.இப்படி நம்ம வீட்டுக்குள்ளயே அசிங்கமான விஷயங்கள் வந்துடுச்சி.சரி வீட்டுக்குள்ள தான் இப்டின்னு வெளிய வந்தா அங்க அத விட மோசமா இருக்குது.
இப்டி எங்க பார்த்தாலும் அசிங்கங்களும் ஆபாசங்களும் நிறஞ்சி கிடக்குது.புள்ளைங்கள கெடுத்து குட்டிச் சுவரா ஆக்குற அத்தன விஷயமும் இன்னைக்கு நடந்து கிட்டு இருக்குது.புள்ளைங்களுக்கு நல்லத சொல்லி அவங்கள நல்வழிப்படுத்துற விஷயங்கள் 5 சதவீதம் இருக்குதுன்னா மீதி 95 சதவீதம் அவங்கள கெடுக்குற விஷயங்களா தான் இருக்குது.
அந்தளவு ரொம்ப ரொம்ப மோசமான காலம் இந்த காலம். அன்னைக்கே நபிகள் நாயகம் ஸல் அவங்க சொன்னாங்க 
ياتي علي الناس زمان القابض علي دينه كالقابض علي الجمر
பின்னால ஒரு காலம் வரும்.அது ரொம்ப மோசமான ஆபத்தான காலமா இருக்கும்.எந்தளவு மோசமான ஆபத்தான காலமா இருக்கும் அப்டின்னு சொன்னா அந்த காலத்துல மார்க்கத்தின் படி நடக்குறது கையில நெருப்புக் கங்க புடிச்சிட்டு இருக்குற மாதிரி இருக்கும். கையில நெருப்புக் கங்க வச்சிருக்கிறவன், எப்டி உடனே அத கீழ போடனுன்னு நினைப்பானோ அந்த மாதிரி தான் இந்த மார்க்கம் இருக்கும். மார்க்கம் சொல்ற மாதிரி நடக்குறது சிரமமா இருக்கும்.அல்லாஹ் சொல்ற மாதிரி நடக்குறது சிரமமா இருக்கும்.நபி ஸல் அவங்க சொல்ற மாதிரி நடக்குறது சிரமமா இருக்கும்.ஆக மொத்தத்துல ரொம்ப மோசமான காலமா இருக்குன்னு சொன்னாங்க.
அவங்க சொன்ன அந்த மோசமான காலத்துல தான் நாம இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கோம். ஈமான பாதுகாக்குறதும் அந்த ஈமானின் படி நடக்குறதும் ரொம்ப போராட்டமா இருக்குது. இந்த மோசமான சூழ்நிலைகளால தான் நம்ம புள்ளைங்க கெட்டுப்போறாங்க அவங்க வாழ்க்கை கேள்விக்குறியா ஆகுது.
அதனால என்ன தான் பெத்தவங்க நல்ல படியா வளர்த்தாலும் ஹள்ரத் மார்கள் புத்திமதி சொன்னாலும் இந்த மோசமான சூழ்நிலைகள் புள்ளைங்கள கெடுத்துடும்.
எனவே நடுவர் அவர்களே புள்ளைங்க அதிகமா கெட்டுப்போறதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் இன்னைக்கு இருக்குற சூழ்நிலைகள் தான் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

 

No comments:

Post a Comment