Thursday, November 8, 2018

மாநபியின் மீலாது


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلي خلق عظيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் ரபீவுல் அவ்வல் மாதத்திலே  பிறந்தார்கள்.
மனிதருல் மாணிக்கமான,நபிமார்களின் தலைவரான அல்லாஹ் வின் நேசரான நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அவர்கள் நமக்கு சொன்ன விஷயங்களை காலம் முழுக்க பேசப்படுகிறது.வருடம் முழுக்க பேசப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல், அவர்கள் சொன்ன விஷயங்களை சொல்லாமல் நமக்கு எந்த நாளும் கழியாது. அந்தளவு நபி ஸல் அவர்கள் நம் வாழ்க்கையோடு கலந்திருக்கிறார் கள்.
அதுமட்டுமல்ல ரபீவுல் அவ்வல் 12 நபி ஸல் அவர்களின் பிறந்த நாள்.அவர்கள் பிறந்த  அந்த நாளில் உலகம் முழுக்க அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடப்படுகிறது. நாமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு தான் கொண்டாடப்படும்.ஆனால் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அவர்களுக்காக அல்லாஹ்வே மீலாது விழா கொண்டாடி விட்டான்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு ஆலமுல் அர்வாஹில் அனைத்து நபிமார்களையும் ஒன்று சேர்த்து முஹம்மது என்று ஒரு நபி வருவார்கள்.அவர்களை நீங்கள் ஈமான் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன போது அனைத்து நபிமார்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் இன்றைக்கு உலகில் மீலாது விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் வல்லோன் அல்லாஹ் வானத்திலேயே அண்ணல் நபி ஸல் அவர்களுக்காக மீலாது விழா நடத்தி விட்டான். எனவே இந்த மீலாதை பித்அத் என்றும் அனாச்சாரம் என்றும் மார்க்கத்தில் இல்லாத காரியம் என்றும் குறை சொல்பவர்கள் உண்மையில் அவர்கள் மார்க்கம் தெரியாதவர்களாகத்தான் இருக்கும்.அல்லாஹ் பாதுகாப்பானாக என்று கூறி என் உரைக்கு திரையிட்டு விடை பெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


அவர்களுக்காக  மவ்லிது ஓதுவதும் அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவதும் அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான அன்பின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான பிரியத்தின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான காதலின் வெளிப்பாடு.

அவர்களின் மீது உண்மையான அன்பும் பிரியமும் காதலும் இருப்பவர்கள் தான் அவர்களுக்காக மவ்லிது ஓதுவார்கள். அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவார்கள்.வெறும் உதட்டளவில் மட்டும் நபியை நேசிக்கிறோம், நபியை நேசிக்கிறோம் என்று சொல்லி விட்டு உள்ளத்தில் நபியைப்பற்றி கொஞ்சம் கூட நேசம் இல்லாதவர்களுக்கு இந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக உள்ளத்தால் நபியை நேசிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
நாம் மவ்லிது ஓதுகிறோம்.மீலாது விழா கொண்டாடுகிறோம் என்றால் நாம் உண்மையில் அவர்களின் மீது நேசம் வைத்திருக்கிறோம் என்பதற்கான அடையாளம் தான் அது.இந்த நேசத்தை அல்லாஹ் நம் மரணம் வரை நிலைக்கச் செய்வானாக.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே மவ்லிது என்றாலே அது பித்அத் என்றும், அது அனாச்சாரம் என்றும், மாரக்கத்தில் இல்லாத காரியம் என்றும், நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியம் என்றும் இன்றைக்கு ஒரு சில குழப்பவாதிகள் உளரிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி சொல்லி அப்பாவி மக்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
ஆனால் நபி ஸல் அவர்களின் சிறப்புக்களை அவர்களின் உயர்வுகளை அவர்களின் அந்தஸ்துகளை அவர்களின் நற்குணங்களை அவர்கள் செய்த சாதனைகளைக்கூறி அவர்களைப் புகழ்வதற்குப் பெயர் தான் மவ்லிது. இந்த மவ்லிது பித்அத் அல்ல,அனாச்சாரம் அல்ல.மார்க்கத்தில் இல்லாத காரியம் அல்ல.நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியமும் அல்ல. மாறாக நம்முடைய அந்தஸ்தை உயர்த்தி நம்மை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்கும் மிக உயர்ந்த காரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நபி ஸல் அவர்களே பல சமயங்களில் இந்த மவ்லிதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.அதன் மீது ஸஹாபாக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தன்னை புகழ்ந்து பாடிய ஹஸ்ஸான் ரலி அவர்களுக்காக அண்ணல் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு மேடையை அமைத்துக் கொடுத்து اللهم ايده بروح القدس   வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் அலை அவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை  உறுதிபடுத்துவானாக என்று துஆ செய்தார்கள் என்றால் எந்தளவு நபி ஸல் அவர்கள் மவ்லிது ஓதுவதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


No comments:

Post a Comment