Friday, October 16, 2020

நபியின் வரவால் உலகம் பெற்ற நன்மை

 


அல்லாஹ்வின் பேரருளால் அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதம் பிறக்க இருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் பரக்கத் பொருந்திய மாதம், அருள் நிறைந்த மாதம், எண்ணற்ற பாக்கியங்களை உள்ளடக்கிய மாதம் இந்த ரபியுல் அவ்வல் மாதம். இஸ்லாத்தின் 12 மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதம் பரக்கத்தானது பாக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு நபி அவர்கள் இந்த மாதத்தில் பிறந்தார்கள் என்ற ஒரு காரணமே போதுமானது.

நபியின் பிறப்பு, நபி அவர்களின் வருகை நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே கிடைத்த மிகப்பெரிய அருள். அவர்களது வருகையால் தான் இந்த உலகம் ஒழுங்கானது. இந்த சமூகம் சீரானது.

அவர்களின் வருகைக்கு முன்பு வரை சமூகத்திலே அநியாயங்களும் அக்கிரமங்களும் நிறைந்திருந்தது, பலமுள்ளவர்கள் பலவீனர்களை அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருந்தார்கள். பெண் பிள்ளைகள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்று சொல்லி அவர்களை உயிரோடு புதைத்துக் கொண்டிருந்தார்கள். குலங்களை வைத்தும் கோத்திரங்களை வைத்தும் நிறங்களை வைத்தும் தங்களுக்கு மத்தியில் வேற்றுமைகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசத்தியத்தின் இருளில் மூழ்கிப் போயிருந்தார்கள். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கற்களையும் சிலைகளையும் சூரியனையும் சந்திரனையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். இது தான் உண்மையான வாழ்க்கை. இதற்குப் பிறகு வேறு வாழ்க்கை இல்லை என்ற தவறான சித்தாந்தத்தில் இருந்தார்கள். சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் இந்த உலகம் குஃப்ர் என்ற மிக மோசமான இருளில் மூழ்கிப் போயிருந்தது.

இந்த நேரத்தில் தான் இந்த உலகத்திற்கு அருளாக அண்ணலம் பெருமானார் அவர்கள் அவதரிக்கிறார்கள். அவர்களின் வருகைக்குப் பிறகு  தான் அநியாயங்களும் அக்கிரமங்களும் ஒழிக்கப்பட்டு நியாயங்களும் தர்மங்களும் தலை தூக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் கிடைத்தது. பெண் சமூகம் உயர்ந்த சமூகமாக பார்க்கப்பட்டது. உலகத்தில் எவரும் எவரையும் விட உயர்ந்தவர் அல்ல எல்லோரும் சமம் என்ற சமத்துவம் பேசப்பட்டது. அசத்தியக் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு சத்திய கொள்கை களுக்கான விதைகள் இந்த மண்ணிலே தூவப்பட்டது.குஃப்ர் என்ற இருள் அகன்று அகிலமெங்கும் ஈமானிய ஒளி பரவ ஆரம்பித்தது.

உலகத்தில் இத்தனை பெரிய வாழ்வியல் மாற்றங்களும் நிகழ்ந்தது நபி பெருமானார் அவர்களின் இந்த உலக வருகைக்குப் பிறகு தான். அந்த வகையில் பார்க்கின்ற போது நபி அவர்களின் பிறப்பு, அவர்களின் வருகை இந்த உலகத்திற்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இறைவன் ஒரு வசனத்தில் இப்படி சுட்டிக்காட்டுகிறான்

وكنتم على شفا حفرةٍ من النار فأنقذكم منها

நரகப்படுகுழியின் விளிம்பில் நீங்கள் இருந்தீர்கள். அதிலிருந்து இறைவன் உங்களைப் பாதுகாத்தான். (அல்குர்ஆன் : 3 ; 103)

இந்த ஆயத்திற்கு நாம் விளக்கத்தை தேடுகிற போது அல்லாமா தப்ரீ ரஹ் அவர்கள் தன் கிதாபில் فأنقذكم منها "، بمحمد صلى الله عليه   அதாவது நரகத்தின் விளிம்பில் இருந்த உங்களை இறைவன் நபியின் மூலம் பாதுகாத்தான் என்று கூறுகிறார்கள்.

நபி அவர்கள் மதீனா ஹிஜ்ரத் பயணத்திற்கு முன்பு சில ஸஹாபாக்களை அபீசீனிய நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே சென்ற அந்த ஸஹாபாக்கள் குழுவின் சார்பாக ஹள்ரத் ஜஃபர் ரலி அவர்கள் அபீசினியா நாட்டு மன்னர் நஜ்ஜாஷியிடம் பேசிய வார்த்தைகள் அத்தனை வரலாற்று நூட்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

قال جعفر بن أبي طالب وهو يحدث نجاشي الحبشة :

أيها الملك، كنا قوما أهل جاهلية، نعبدالأصنام، ونأكل الميتة، ونأتي الفواحش، ونقطع الأرحام، ونسيء الجوار، ويأكل القوي منا الضعيف، فكنا على ذلك، حتى بعث الله إلينا رسولا منا

மன்னரே நாங்கள் அறியாமைக் காலத்து சமூகமாக இருந்தோம். அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பும் வரை நாங்கள் சிலைகளை வணங்குபவர்களாக, செத்த பிராணியை சாப்பிடுபவர்களாக, அறுவறுப்பான காரியங்களை செய்பவர்களாக, உறவுகளை துண்டிப்பவர்களாக, அண்டை வீட்டாருக்கு தீங்களிப்பவர்களாக, எங்களில் பலமிக்கவர்கள் பலவீனமானவர்களை அடித்து சாப்பிடுபவர்களாக இருந்தோம். (அர்ரஹீகுல் மக்தூம்)

நபி அவர்களால் தான் நாங்கள் மனிதர்களானோம். எங்கள் வாழ்வு தூய்மையானது என்று நபி அவர்களின் வருகையால் இந்த சமூகம் பெற்ற நன்மைகள் என்ன என்பதை குறிப்பிட்டார்கள்.

ஒரு முறை அன்சாரிகளோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது நபி ஸல் அவர்கள் தன்னால் சமூகத்திற்கு கிடைத்த பாக்கியங்கள் குறித்து விவரித்தார்கள்.

لَمَّا أفَاءَ اللَّهُ علَى رَسولِهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ حُنَيْنٍ، قَسَمَ في النَّاسِ في المُؤَلَّفَةِ قُلُوبُهُمْ، ولَمْ يُعْطِ الأنْصَارَ شيئًا، فَكَأنَّهُمْ وجَدُوا إذْ لَمْ يُصِبْهُمْ ما أصَابَ النَّاسَ، فَخَطَبَهُمْ فَقالَ: يا مَعْشَرَ الأنْصَارِ، ألَمْ أجِدْكُمْ ضُلَّالًا فَهَدَاكُمُ اللَّهُ بي، وكُنْتُمْ مُتَفَرِّقِينَ فألَّفَكُمُ اللَّهُ بي، وعَالَةً فأغْنَاكُمُ اللَّهُ بي كُلَّما قالَ شيئًا قالوا: اللَّهُ ورَسولُهُ أمَنُّ، قالَ: ما يَمْنَعُكُمْ أنْ تُجِيبُوا رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ. قالَ: كُلَّما قالَ شيئًا، قالوا: اللَّهُ ورَسولُهُ أمَنُّ، قالَ: لو شِئْتُمْ قُلتُمْ: جِئْتَنَا كَذَا وكَذَا، أتَرْضَوْنَ أنْ يَذْهَبَ النَّاسُ بالشَّاةِ والبَعِيرِ، وتَذْهَبُونَ بالنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلى رِحَالِكُمْ، لَوْلَا الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأنْصَارِ، ولو سَلَكَ النَّاسُ وادِيًا وشِعْبًا لَسَلَكْتُ وادِيَ الأنْصَارِ وشِعْبَهَا، الأنْصَارُ شِعَارٌ والنَّاسُ دِثَارٌ، إنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حتَّى تَلْقَوْنِي علَى الحَوْضِ

அல்லாஹ், தன் தூதர் அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கிய போது உள்ளங்கள் இணக்க மாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தை; தழுவிய)வர் களிடையே (அவற்றைப்) பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலை யடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். எனவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி  அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), 'அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக  நான் காணவில்லையா?' அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர் வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)' என்று கூறினார்கள். நபி அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும் போதெல்லாம், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரம் புரிந்தவர்கள்' என்று அன்சாரிகள் கூறினார்கள். நபி அவர்கள், 'அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்கமாலிருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். நபி அவர்கள் ஒன்றைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள்' என்று கூறினார்கள். நபி அவர்கள், 'நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டு போக நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். எனவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) 'ஹவ்ள் (அல் கவ்ஸர்' என்னும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும் வரை (நிலை குலையாமல்) பொறுமையுடன் இருங்கள்' என்று கூறினார்கள். (புகாரி : 4330)

மனித உள்ளங்கள் ஈமானால் நிரப்பப்பட்டது மனித உள்ளங்களில் குரோதங்கள் அகற்றப்பட்டு அன்பும் பிரியம் பாசமும் புகுத்தப்பட்டது, சமூகத்தில் ஏழ்மையும் வறுமையும் நீக்கப்பட்டு பசுமையும் வனப்பும் ஏற்பட்டது நபியுடைய வருகைக்குப் பிறகு தான் என்பதை நபியின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகிறது.எனவே நபியின் வருகையால் இந்த சமூகம் பெற்ற பாக்கியங்களும் வாழ்வியல் வசந்தங்களும் பசுமைகளும் எண்ணிலடங்காதது.

அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் நபியின் வருகையை மிகப்பெரிய நிஃமத் என்று கூறுகிறான்.

 لقد منَّ الله على المؤمنين إذ بعث فيهم رسولاً من أنفسهم يتلو عليهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ظلالٍ مبين)

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் மீது உபகராம் செய்து விட்டான். அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான்.அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்,இன்னும் அவர்களை பரிசுத்தமாக்குகிறார்,மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.அவர்களோ நிச்சயமாக இதற்கு முன்பு பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தார்கள். (அல்குர்ஆன் : 3 ; 164)

உலகத்தில் எல்லாரும் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள் மரணிக்கிறார்கள். பிறப்பு வாழ்க்கை மரணம் இம்மூன்றும் எல்லோரின் வாழ்விலும் உண்டு. இதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் அடையாளம் காணப்படுவார்கள், அல்லது மரணத்தின் மூலம் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் பிறப்பு யாருக்குமே தெரியாது. ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சி மணப்பாறை அருகே ஆள்துணை கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான்.அந்த நிகழ்விற்குப் பிறகு உலகத்தின் பார்வையே அவன் பக்கம் திரும்பியது.ஒரு வாரமாக உலக மக்களால் பேசப்படும் பொருளாக அவன் தான் இருந்தான்.கடைசியில் 4 நாட்களின் போராட்டத்திற்குப் பிறகு அவனை சடலமாக மீட்பதில் தான் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றது.விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித் அவனது மரணத்தால் தான் உலகத்திற்கு அறியப்பட்டான். அவன் பிறப்பு யாருக்கும் தெரியாது. உலகத்தில் மக்களால் மதிக்கப்படுகின்ற மதிக்கப்பட்ட எந்தத் தலைவர்களாக இருந்தாலும் ஒன்று அவர்களின் வாழ்வின் மூலம் அறியப்படுவார்கள். அல்லது அவர்களின் மரணத்தின் மூலம் அறியப்படுவார்கள். அவர்களின் பிறப்பு யாருக்கும் தெரியாது. அப்படி ஒருவேளை அவர்களின் பிறப்பு அறியப்பட்டிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு தான் அறியப்படும். ஆனால் நபி அவர்கள் இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே அவர்களின் பிறப்பைக் குறித்து இறைவன் உலகத்திற்கு தெரிவித்து விட்டான்.

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)

நபியே நினைவு கூறுங்கள் ; அல்லாஹ் நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கிய போது, நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருக்கிறேன்.பின்னர் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் வருவார்.நீங்கள் அவர் மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்ய வேண்டும் என்று கூறினான். (அல்குர்ஆன் : 3 ; 81)

உங்களுக்குப் பின்னால் ஒரு நபி வருவார். அவர்களை ஈமான் கொள்ள வேண்டும்.அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு தான் அத்தனை நபிமார்களும் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் நபித்துவத்தின் ஒரு அம்சமாகவே அது இருந்தது.

அல்லாமா இப்னு கஸீர் ரஹ் அவர்கள் பிதாயா வன் நிஹாயா என்ற கிதாபிலும் அல்லாமா பைஹகி ரஹ் அவர்கள் தலாயிலுன் நுபுவ்வாவிலும் ஒரு செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

لمَّا اقترفَ آدمُ الخطيئةَ قالَ يا ربِّ أسألُكَ بحقِّ محمَّدٍ لَما غفرتَ لي فقالَ اللَّهُ عزَّ وجلَّ يا آدمُ وكيفَ عرفتَ محمَّدًا ولم أخلُقْهُ قالَ لأنَّكَ يا ربِّ لمَّا خلقتني بيدِكَ ونفختَ فيَّ من روحِكِ رفعتُ رأسي فرأيتُ على قوائمِ العرشِ مكتوبًا لا إلهَ إلَّا اللَّهُ محمَّدٌ رسولُ اللَّهِ فعلمتُ أنَّكَ لم تضِف إلى اسمِكَ إلَّا أحبَّ الخلقِ إليكَ فقالَ اللَّهُ عزَّ وجلَّ صدقتَ يا آدمُ إنَّهُ لأَحَبُّ الخلقِ إليَّ وإذ سألتَني بحقِّهِ فقد غفرتُ لكَ ولولا محمَّدٌ ما خلقتُكَ

ஆதம் அலை அவர்கள் தன் குற்றத்திற்காக தவ்பா தேடும் போது முஹம்மதின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன். என்னை மன்னிக்க மாட்டாயா என்றார்கள். நான் இன்னும் அவரைப் படைக்கவே இல்லை. நீ எப்படி முஹம்மதை அறிந்து கொண்டாய் என்று இறைவன் கேட்பான். அப்போது ஆதம் அலை அவர்கள் என்னை உன் கையால் படைத்து உன் ரூஹை என்னில் ஊதிய போது என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அர்ஷின் தூன்களில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.படைப்புக்களில் உனக்கு மிகவும் பிரியமானவரைத் தவிர வேறு யாரையும் உன் பெயரோடு நீ இணைக்க மாட்டாய். எனவே அவர் உனக்கு மிகவும் பிரியமானவர் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ், ஆம் நீ உண்மையே சொன்னாய். அவர் படைப்பிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர். அவரின் ஹக்கைக் கொண்டு கேட்டதினால் உன்னை நான் மன்னித்து விட்டேன். அவர் இல்லையென்றால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன் என்று கூறினான். (தலாயிலுன் நுபுவ்வா : 5/489)

எனவே உலகத்தில் தோன்றிய ஆதம் அலை முதற்கொண்டு அத்தனை நபிமார்களும் நபியின் பிறப்பைக் குறித்து பேசினார்கள். நபியின் வருகை குறித்து அவர்களுக்கு உணர்த்தப்பட்டிருந்தது. மட்டுமல்ல அத்தனை வேதங்களும் நபியின் பிறப்பைக் குறித்து பேசியது.

عن ابن عباس قال قال رسول الله {صلى الله عليه وسلم} إسمي في القرآن محمد وفي الانجيل أحمد وفي التوراة أحيد وإنما سميت أحيد لأني احيد أمتي عن نار جهنم الخصائص الكبري

என்னுடைய பெயர் குர்ஆனில் முஹம்மதாகும்.இன்ஜீலில் அஹ்மதாகும். தவ்ராத்தில் அஹ்யதாகும்.அஹ்யத் என்று எனக்கு பெயர் வைக்கப்பட்டது நான் என் உம்மத்தை நரகத்திலிருந்து வெளியாக்குவேன் என்பதினால் தான்.(அல்கஸாயிஸுல் குப்ரா)

عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنْ أَبِيهِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ : قَالَ عَبْدُ الْمُطَّلِبِ : قَدِمْتُ الْيَمَنَ فِي رِحْلَةِ الشِّتَاءِ ، فَنَزَلْتُ عَلَى حَبْرٍ مِنَ الْيَهُودِ ، فَقَالَ رَجُلٌ مِنْ أَهْلِ الزَّبُورِ ، - يَعْنِي أَهْلَ الْكِتَابِ - : مِمَّنِ الرَّجُلُ ؟ قُلْتُ : مِنْ قُرَيْشٍ ، قَالَ : مِنْ أَيِّهِمْ ؟ قُلْتُ : مِنْ بَنِي هَاشِمٍ ، قَالَ : يَا عَبْدَ الْمُطَّلِبِ ، أَتَأْذَنُ لِي أَنْ أَنْظُرَ إِلَى بَعْضِكَ ؟ قَالَ : نَعَمْ ، مَا لَمْ يَكُنْ عَوْرَةً ، قَالَ : فَفَتَحَ أَحَدَ مَنْخِرَيَّ ، ثُمَّ فَتَحَ الْآخَرَ ، فَقَالَ : أَشْهَدُ أَنَّ فِيَ إِحْدَى يَدَيْكَ مُلْكًا ، وَفِي الْأُخْرَى نُبُوَّةٌ ، وَإِنَّا نَجِدُ ذَلِكَ فِي بَنِي زُهْرَةَ ، فَكَيْفَ ذَلِكَ ؟ قُلْتُ : لَا أَدْرِي ، قَالَ : هَلْ لَكَ مِنْ شَاعَةٍ ؟ قُلْتُ : وَمَا الشَّاعَةُ ؟ قَالَ : الزَّوْجَةُ ، قُلْتُ : أَمَّا الْيَوْمُ فَلَا ، فَقَالَ : فَإِذَا رَجَعْتَ فَتَزَوَّجْ فِيهِمْ ، فَرَجَعَ عَبْدُ الْمُطَّلِبِ إِلَى مَكَّةَ ، فَتَزَوَّجَ هَالَةَ بِنْتَ وُهَيْبِ بْنِ عَبْدِ مَنَافِ بْنِ زُهْرَةَ ، فَوَلَدَتْ لَهُ حَمْزَةَ ، وَصَفِيَّةَ ، وَتَزَوَّجَ عَبْدُ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ آمِنَةَ بِنْتَ وَهْبٍ ، فَوَلَدَتْ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَوَهْبٌ وَوُهَيْبٌ أَخَوَانِ ، فَقَالَتْ قُرَيْشٌ حِينَ تَزَوَّجَ عَبْدُ اللَّهِ : فَلَجَ عَبْدُ اللَّهِ عَلَى أَبِيهِ

அப்துல் முத்தலிப் சொல்கிறார்கள் ; நான் எமன் தேசத்திற்கு சென்ற போது ஒரு வேதப் பண்டிதர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என்று கேட்டார்.குரைஷி குலத்தில் பனூஹாஷிம்  கிளையிலிருந்து வருகிறேன் என்றேன். அவர் என் உடல் அமைப்பை ஆராய்ந்து விட்டு, “அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில் அரசாட்சியையும் மறுகையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்என்றார். அது எப்படி?” என்று நான் கேட்டேன்.எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும் என்றார். உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார்.தற்போது இல்லை. என்றேன்.அப்படியானால் நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும். என்றார்.

அப்துல் முத்தலிப் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்களது மகனான அப்துல்லாஹ் அவர்கள் ஆமினா பின்த் வஹ்ப் அவர்களை திருமணம் செய்தார்கள்.அவர்களுக்குத்தான் நபி அவர்கள் மகனாக பிறந்தார்கள்.  (ஹாகிம் : 4897)

كان يهوديٌّ قد سكنَ مكةَ ، فلما كانت الليلةُ التي وُلدَ فيها النبيُّ صلى الله عليه وسلم قال: يا معشرَ قريشٍ هل وُلدَ فيكم الليلةَ مولودٌ ؟ قالوا: لا نعلمُ قال: فإنه وُلدَ في هذه الليلةِ نبيُّ هذه الأمةِ، بين كتفيْه علامةٌ ، لا يرضعُ ليلتيْن لأن عفريتًا من الجنِّ وضع يدَه على فمِه ، فانصرَفوا فسألوا فقيل لهم: قد وُلدَ لعبدِ اللهِ بنِ عبدِ المطلبِ غلامٌ، فذهبَ اليهوديُّ معهم إلى أمِّه فأخرجتْه لهم، فلما رأى اليهوديُّ العلامةَ خرَّ مغشيًّا عليه وقال: ذهبت النبوةُ من بني إسرائيلَ يا معشرَ قريشٍ أما واللهِ ليَسْطُوَنَّ بكم سَطْوةً يخرجُ خبرُها من المشرقِ والمغربِ

மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , நபி பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே/ என்றார்கள் குறைஷிகள். அவன் கூறினான்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். இரு நாட்கள் பால் குடிக்காது என்றெல்லாம் கூறினான். இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியமடைந்து விசாரித்த போதுஅப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்ட போது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம் போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான் ;  அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர் களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது. (ஃபத்ஹுல் பாரி : 6/675)

உலகத்தில் பிறக்கிற எல்லாருக்கும் அவர்களின் பிறப்பு ஒரு நிகழ்வு என்றால் நபியின் பிறப்பு ஒரு அற்புதம்,நபியின் பிறப்பு ஒரு சரித்திரம். வல்லோன் அல்லாஹ் அவர்களின் அற்புதமான பிறப்பை உள்ளடக்கியிருக்கிற இந்த மாதத்தில் அவர்களின் மகத்துவங்களை விளங்கும் பாக்கியத்தைத் தருவானாக 

 


11 comments:

  1. அருமை ஜஸா கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. فتبارك الله احسن الخالقين

    ReplyDelete
  3. اللهم صلي على سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ்... நல்ல தகவல்கள்

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ்...

    ReplyDelete
  6. Jazakallah hz barakallahu fee ilmeka va amaleka

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  8. Masha Allah Masha Allah barakallah hazrath

    ReplyDelete