கண்கள் இரண்டும்
நபி பாதம் காண தேடுதே. திங்கள்
இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே. கண்கள்
இரண்டும் நபி பாதம் காண தேடுதே. மக்கா நகர் மண்ணாய்
பிறந்தேனா நானும். மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா
நானும்-2. என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர் இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2 [கண்கள் இரண்டும்]
மதினாவிலே
ஓர் மரமாகினேனா மா
நபிக்கு தென்றல் காற்றும் தந்தேனா-2 அவர்
கையில் ஏந்தும் வாளாகினேனா அண்ணல் நபி
அன்புக்கு ஆளாகினேனா-2
[கண்கள் இரண்டும்]
கஃபாவிலே ஓர் கல்லாகினேனா காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் கட்டிய கல்லில் இடமாகினேனா-2 [கண்கள் இரண்டும்]
ஒட்டகமாய்
உலகில் பிறந்தேனா நானும் உத்தம
நபியை சுமந்தேனா நானும்-2
பேரித்தங்கனியாய்
கனிந்தேனா நானும்
பெருமானின்
உமிழ் நீரில் கலந்தேனா நானும்-2
[கண்கள் இரண்டும்]
ஆடியோ அல்லது வீடியோ லிக் இருந்தால் நன்றாக இருக்கும் ஹஜ்ரத்
ReplyDelete