இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு
சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன்.
கண்ணியமானவர்களே வரதட்சணை என்ற பெயரை சொல்வதற்கே நாவு கூசுகிறது.அந்த அளவுக்கு
அது ஒரு கடுமையான வார்த்தை.ஆனால் இன்னைக்கு வரதட்சணை இல்லாத திருமணமே கிடையாதுன்னு
சொல்ற அளவுக்கு இந்த கொடிய உயிர் கொல்லி நோய் சமுதாயம் முழுக்க
பரவியிருக்கு.வருவதற்கு தட்சணை, அதாவது ஒரு பெண் கணவன் வீட்டிற்கு வருவதற்கு தட்சணை
கேட்கிறார்கள்.அதுக்குத்தான் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது.