Saturday, September 28, 2013
வரதட்சணையின் பல முகம்
1.பவுன் கணக்கில் நகையை வாங்குவது தங்க தட்சணை.
2.பணம் வாங்குவது திருமணச்செலவு முழுவதையும் பெண் வீட்டார் மீது போடுவது ரொக்க தட்சணை.
3.வரதட்சனைப்பணத்தை வைத்து வேலை வாங்குவது, வெளி நாடுகளுக்கு செல்வது வேலை தட்சணை .
4.வீடு வாகனம், இதர சொத்துக்கள் பெறுவது சொத்து தட்சணை.
5.ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை முடிப்பது பொய் தட்சனை 6.வரதட்சனை கொடுக்க முடியாதவர்கள் எப்படியாவது திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கிக்கொடுப்பது கடன் தட்சணை. 7.அப்படியும் கடன் வாங்க முடியாதவர்கள் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பது வட்டி தட்சணை
8.என்னுடைய மகன் பெரிய டாக்டர்,பெரிய எஞ்சினியர், பெரிய லாயர் என்று மாப்பிள்ளையின் தந்தை பேரம் பேசுவது பெருமை தட்சணை.
9.மாப்பிள்ளையைப்பற்றி தரகர் பெரிதாகப்பேசி பெண் வீட்டாரிடம் அதிக கூலி பெற நினைப்பது தரக தட்சணை .
10.பெண் பிள்ளையைப்பெத்தவர் அனைத்தையும் கொடுத்து விட்டு கடைசியில் ஒன்றும் இல்லாமல் வீதிக்கு வருவது வீதி தட்சணை.
11.வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர் என்று கூறி தங்க வளையல் கேட்பது வளையல் தட்சணை.
12.ஒரு ஜான் பிள்ளையென்றாலும் ஆண் பிள்ளையென்று ஆணவம் பேசுவது ஆணவ தட்சணை.
13.நாங்கள் வரதட்சணை கேக்க வில்லை உங்க புள்ளைக்கு நீங்க போடுறத போடுங்க என்று கூறுவது மறைமுக தட்சணை.
14.தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காக தன் வாழ்வை தியாகம் செய்து வாழ நினைப்பது தியாக தட்சணை.
15.வரதட்சணை வாங்காதே என்று கூறும் உலமாக்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அதைக்கவனத்தில் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருப்பது காரிய தட்சணை.
16.கையை நீட்டி பிச்சை கேட்பவனை பிச்சைக்காரன் என்று கூறும் சமூகம் கையை நீட்டாமல் வாங்கும் இவனை மாப்பிள்ளை என்று கூறுவது சமூக தட்சணை.
17.ஈத் போன்ற பண்டிகைகளை முன்னிட்டி பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது பண்டிகை தட்சணை.
18.முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டுக்கு தள்ளிவிடுவது பிரசவ தட்சணை.
19.குழந்தை பிறந்தால் காது குத்துவது,மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது குழந்தை தட்சணை.
20. மனைவியை வீட்டு வேளைகளுக்கு மட்டும் பயன் படுத்த நினைப்பது வேளைக்காரி தட்சணை.ஆக மொத்தத்தில் முடிவு பெறாத தட்சணை இந்த தட்சணை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment