Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Thursday, March 30, 2023

பிளவு ஆபத்தானது

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:46)

Wednesday, September 2, 2020

ஸலாமின் வழியே ஒற்றுமையை வளர்ப்போம்

 


ஒற்றுமை ஏற்பட இஸ்லாம் வழிகாட்டும் அடுத்த விஷயம் ஸலாம்.ஸலாமைப் பரப்புதல்.

لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم‏؟‏ أفشوا السلام بينكم

நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வீர்களோ அத்தகைய ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (முஸ்லிம் ; 54)

Thursday, August 27, 2020

பணிவின் மூலம் ஒற்றுமையை வளர்ப்போம்

 

சமூகத்தில் ஒற்றுமை மேம்படுவதற்கு இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டுதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமை சிதைந்து போனதற்கும் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் நாம் அலசி வருகிறோம்.அந்த வகையில் ஒற்றுமையை சிதைக்கக்கூடிய ஆபத்தான விஷயங்களில் ஒன்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிற குணம்.

Wednesday, August 26, 2020

அன்பளிப்புகளைக் கொண்டு ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்

 

ஒற்றுமை தான் நமக்கான பலம், ஒற்றுமை தான் நமக்கான அடிப்படை. அந்த ஒற்றுமை சீர்குலைந்து விட்டால் நாம் பலம் குன்றிப் போய் விடுவோம். ஸஹாபாக்களிடம் அந்த ஒற்றுமை இருந்ததினால் அவர்கள் சொற்பமாக இருந்தும் குறுகிய காலத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைக்கு உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் பலத்தில் சிறுபான்மையாகத்தான் இருக்கிறோம். அதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது என்று கடந்த வார ஜும்ஆவில் குறிப்பிட்டோம்.

ஒற்றுமையே நம் பலம்

 


ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு நபி அவர்கள் மதினமாநகரம் சென்றவுடன் அவர்கள் ஆரம்பமாக நான்கு காரியங்களை செய்தார்கள்.1 அல்லாஹ்வை தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்டியெழுப்பினார்கள். 2வது மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மதரஸாவை உருவாக்கினார்கள். இவ்விரண்டும் படைத்தவனோடு தொடர்புடையவை.

Thursday, November 8, 2018

ஒற்றுமை



அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}  அல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.சய்யிதா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன். இந்த சிறப்பிற்குரிய விழாவில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பின் கீழ் பேசுவதற்காக வந்திருக்கிறேன்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا                  
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.