அல்லாஹுத்தஆலா நம்மை உலகத்தில் படைத்து நமக்கு அழகானதொரு வாழ்க்கையைக் கொடுத்து அந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அமைத்துத் தந்திருக்கிறான். அந்த வாழ்கையை அனுபவிப்பதற்குத் தேவையான அறிவையும் தெளிவையும் சாதுர்யத்கையும் வழங்கியிருக்கிறான். மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் அவ்வப்போது தருகிறான். அப்படி அல்லாஹ் தருகிற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சரியாக முறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் உண்மையில் புத்திசாளிகள். வெற்றியாளர்கள். கிடைக்கிற சந்தர்ப்பங்களை நவுவ விடுபவர்கள் புத்திசாளிகளாகவும் இருக்க முடியாது. வெற்றியாளர்களாகவும் திகழ முடியாது.