அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ? ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.