அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம்
நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்த
நேரத்தில் மூன்று சிந்தனைகள் மிக அவசியமானது.
1, அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த ரஜபும் ஒன்று.
அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம்
நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்த
நேரத்தில் மூன்று சிந்தனைகள் மிக அவசியமானது.
1, அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த ரஜபும் ஒன்று.
இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
قَالَ مُوْسٰى
لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ
يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَالْعَاقِبَةُ
لِلْمُتَّقِيْنَ
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128)
அல்லாஹுத்தஆலா மனிதர்களாகிய நம்மை உலகத்திலே படைத்து நமக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கியிருக்கிறான். உண்ண உணவு, உடுத்த உடை இருக்க இருப்பிடம் நாம் நினைக்கும் காரியங்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள பொருளாதாரம், வசதி வாய்ப்புகள் என நாம் பிறந்தது முதல் மரணிக்கிற வரை நம் வாழ்க்கைக்குத் தேவையான நம் வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை காரியங்களையும் அல்லாஹ் நமக்குத் தருகிறான். இதல்லாமல் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் நமக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்.
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا
فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர் களும் மனிதர்களில் உண்டு. (அல்குர்ஆன் : 2:201)
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ
وَاعْمَلُوْا صَالِحًـا اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ
عَلِيْمٌ
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன். (அல்குர்ஆன் : 23:51)
நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் சமூகமாக இருக்கக்கூடிய நமக்கு அல்லாஹுத்தஆலா ஏராளமான நிஃமத்துக்களை வாரி வழங்கியிருக்கிறான். நாம் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப்பட்டுக் கொள்ள தகுந்த, காலம் முழுக்க நன்றி செலுத்தினாலும் ஈடுசெய்ய முடியாத ஒப்பற்ற நிமத்துக்கள்
அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ? ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
كُنَّا إذَا صَعِدْنَا كَبَّرْنَا، وإذَا نَزَلْنَا سَبَّحْنَا
உயரமான இடத்தை நோக்கி ஏறும் போது “அல்லாஹு அக்பர்” என்றும்
لَا اِلهَ اِلَّا اَنْتَ سُبْحنَكَ
اِنِّي كُنْتُ مِنَ الظّلِمِيْنَ
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்.
(குடியுரிமைப் பிரச்சனை நிலவும் நேரத்தில் பேசிய ஜும்ஆ உரை)
இப்பொழுது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலைகள் நமக்கு நன்றாக தெரியும். குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் பூர்வீகமாக வசித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு இனிவரும் நாட்களில் நாட்டை விட்டு துறத்தப்படுகின்ற அல்லது அகதிகளாக ஆக்கப்படுகின்றன மிக மோசமான ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நம்நாடு போய்க்கொண்டிருக்கிறது.அல்லாஹ் அந்த ஆபத்தான சூழ்நிலை வராமல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பானாக.