அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம்
நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்த
நேரத்தில் மூன்று சிந்தனைகள் மிக அவசியமானது.
1, அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த ரஜபும் ஒன்று.
الزَّمانُ قَدِ اسْتَدارَ كَهَيْئَتِهِ يَومَ خَلَقَ اللَّهُ السَّمَواتِ
والأرْضَ، السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثَةٌ
مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ وذُو الحِجَّةِ والمُحَرَّمُ، ورَجَبُ مُضَرَ، الذي
بيْنَ جُمادَى وشَعْبانَ
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: வானங்களும்
பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள்
புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும்
ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். (புகாரி ; 3197)
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى
الْقُلُوْبِ
இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட
அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை
அறிவிக்கிறது. (அல்குர்ஆன்
: 22:32)
அல்லாஹ் கண்ணியப்படுத்திய பொருளை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். அல்லாஹ்
கண்ணியப்படுத்திய மனிதர்களை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். இது அவர் இறையச்சம்
உள்ளவர் என்பதற்கான அடையாளம். அல்லாஹ் மனிதர்களில் சிலரை கண்ணியமானவர்களாக
ஆக்கியிருக்கிறான். அவர்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். பொருள்களில் சிலதை
கண்ணியமானதாக ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும் கண்ணியமாகவே பார்க்க வேண்டும்.
பூமியில் சில இடங்களை கண்ணியமான இடங்களாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவைகளின்
கண்ணியத்தை விளங்கி நாம் செயல் பட வேண்டும். அதேபோன்று சில மாதங்களை கண்ணியமிக்க
மாதங்களாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும்
கண்ணியப்படுத்த வேண்டும்.
وعن قتادة رحمه الله قال: " واصطفى من الشهورِ رمضانَ والأشهرَ الحُرمَ،
واصطفى من الأيّامِ يومَ الجمعةِ، واصطفى من اللَّيالي ليلةَ القدرِ؛ فعظِّموا ما
عظَّم اللهُ؛ فإنّما تعظَّم الأمورُ بما عظَّمها اللهُ عند أهلِ الفهمِ والعقلِ
மாதங்களிலிருந்து ரமலான் மற்றும் மீதமுள்ள கண்ணியத்திற்குரிய மூன்று
மதங்களையும் நாட்களிலிருந்து ஜும்ஆ நாளையும் இரவுகளிலிருந்து லைலத்துல் கத்ர்
இரவையும் அல்லாஹுத் தஆலா தேர்ந்தெடுத்துள்ளான். எனவே அதை நீங்களும் கண்ணியப்படுத்துங்கள்.
விளக்கமுடையவர்களும் அறிவுடையவர்களும் தான் அல்லாஹ் வினால் கண்ணியப்படுத்தப்பட்ட
விஷயங்களை கண்ணியப் படுத்துவார்கள் என கதாதா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
எப்படி கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை அல்லாஹ்
கூறுகிறான்.
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ
சங்கையான மாதம் குறித்து உங்களிடம் அவர்கள் கேட்கிறார்கள். அதில் போரிடுவது
மிகப்பெரிய (குற்றம்) து என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் : 2 ; 217)
போரிடுவது, சண்டையிடுவது, அநீதம் செய்வது போன்ற காரியங்களை பொதுவாக மார்க்கம் தடுத்திருந்தாலும்
குறிப்பாக இந்த சங்கையான மாதங்களில் தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுமாதரியான
காரியங்களில் இந்த மாதங்களில் அறவே ஈடுபடக்கூடாது. ஏனென்றால் மற்ற மாதங்களில்
பாவங்களில் ஈடுபடுவதை விட இம்மாதங்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
وعن هذا قال حبرُ الأمّةِ عبدُ اللهِ بنُ عبّاسٍ -عليهما الرِّضوان- في
تفسير قوله تعالى: ﴿فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ﴾-كما روى الطّبريّ في
(تفسيره)-: في كلِّهنّ، ثمّ اختصَّ من ذلك أربعةَ أشهرٍ فجعلهنَّ حراماً، وعَظّم
حُرُماتِهنَّ، وجعل الذنبَ فيهنَّ أعظمَ، والعملَ الصالحَ والأجرَ أعظمَ
இந்த மாதத்தை இறைவன் கண்ணியமான மாதமாக ஆக்கியிருக்கிறான். இம்மாதத்தில்
அநீதம் செய்யாதீர்கள் என்று தடுத்திருக்கிறான். எனவே மற்ற மாதங்களை விட இந்த
மாதத்தில் செய்யப்படும் பாவம் மிக மோசமானதாக பார்க்கப்படும். அதே போன்று மற்ற
மாதங்களை விட இந்த மாதத்தில் செய்யப்படும் நற்காரியங்கள் மிக உயர்ந்ததாகக்
கருதப்படும் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நான்கு மாதங்களும் இஸ்லாம் வருவதற்கு
முன்பு வாழ்ந்து கொண்டிருந்த அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்து
மக்களிடத்திலும் கன்னிமானதாகவே இருந்தது. அந்த மாதங்களில் அம்மக்கள் யாரிடத்திலும்
சண்டையிட மாட்டார்கள். யாருக்கும் அநீதம் செய்ய மாட்டார்கள். யாரையும் கொலை செய்ய
மாட்டார்கள்.யாரையும் அடித்து துன்புறுத்த மாட்டார்கள். தன் தந்தையையோ மகனையோ கொலை
செய்தவரைப் பார்த்தால் கூட அவரைப் பழி வாங்க மாட்டார்கள்.
இந்த மாதத்திற்கு அஸம் என்ற பெயர் உண்டு.
அஸம் என்றால் செவிடு என்று பொருள்.
الأصم: لأنهم كانوا يتركون القتال فيه، فلا يسمع فيه قعقعة السلاح، ولا يسمع
فيه صوت استغاثة
இந்த மாதத்தில் அரபிகள் போரை விட்டு விடுவார்கள். எனவே இந்த மாதத்தில்
ஆயுதங்களின் சப்தத்தை கேட்க முடியாது. யாருக்கும் எந்த அநீதம் செய்யப்படாத
காரணத்தினால் எவரின் உதவி தேடும் குரலையும் இந்த மாதத்தில் கேட்க முடியாது. எனவே
இந்த மாதத்திற்கு அஸம்மு - செவிடு என்று பெயர்.
أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ يُقَالُ لَهُ:
"عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ" كَانَ لَهُ ابْنٌ، وَأَنَّ
الْمُشْرِكِينَ أَسَرُوهُ، فَكَانَ فِيهِمْ، وَكَانَ أَبُوهُ يَأْتِي رَسُولَ
اللَّهِ ﷺ فَيَشْكُو إِلَيْهِ مَكَانَ ابْنِهِ وَحَالِهِ الَّتِي هُوَ
بِهَا وَحَاجَتَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْمُرُهُ بِالصَّبْرِ،
وَيَقُولُ لَهُ: "إِنَّ اللَّهَ سَيَجْعَلُ لَكَ فَرَجًا"(١٣) فَلَمْ
يَلْبَثْ بَعْدَ ذَلِكَ إِلَّا يَسِيرًا أَنِ انْفَلَتَ ابْنُهُ مِنْ أَيْدِي
الْعَدُوِّ فَمَرَّ بِغَنَمٍ مِنْ أَغْنَامِ الْعَدُوِّ، فَاسْتَاقَهَا فَجَاءَ
بِهَا إِلَى أَبِيهِ، وَجَاءَ مَعَهُ بِغِنًى(١٤) قَدْ أَصَابَهُ مِنَ الْغَنَمِ،
فَنَزَلَتْ فِيهِ هذه الآية: ﴿وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ﴾ ابن كثير
அவ்ஃப் பின் மாலிக் ரலி அவர்களுடைய மகனை முஷ்ரிக்குகள் கைதியாக பிடித்துச்
சென்று விட்டார்கள். அவர் நபி ﷺ அவர்களிடத்தில் வந்து விஷயத்தைக் கூறினார். பெருமானார் ﷺ அவர்கள் பொறுமையாக இரு. அல்லாஹ் உன்னிடத்தில் உன் மகனை
திருப்பிக் கொண்டு வந்து உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவான் என்று ஆறுதல்
கூறினார்கள். சில தினங்களிலேயே அவருடைய மகன் எதிரிகளிடமிருந்து தப்பித்து மதீனா
வந்து விட்டார். வரும் பொழுது அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளும் அவரோடு சேர்ந்து
வந்து விட்டன. அவர் விஷயமாகத்தான்
وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا
எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான்.
(அல்குர்ஆன் : 65:2) என்ற வசனம் இறங்கியது. (இப்னு கஸீர்)
அவருடைய மகனை முஷ்ரிக்குகள் பிடித்துச் சென்ற போது அது கண்ணியமான
மாதங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அவரை எதிரிகள் எதுவும் செய்ய வில்லை. அந்த
மாதங்கள் கழியும் வரை தங்களது ஆடுகளைக் கொடுத்து மேய்க்கும் படி சொல்லி
விட்டார்கள். தப்பிப்பதற்கான அவகாசத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அதற்கான ஒரு
சந்தர்ப்பம் கிடைத்து விடவே அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். இரண்டு மூன்று
மாதங்களாக அவரிடத்தில் பழகி விட்ட அந்த ஆடுகள் அவர் ஓடி வருவதைப் பார்த்து அவரோடு
அவைகளும் மதீனா வந்து விட்டன.
2, இந்த மாதத்தில் பரக்கத்தைக் கேட்கும்படி நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்.
பரக்கத் என்பது அனைவரும் எதிர் பார்க்கின்ற விஷயம்.
அனைத்திலும் பரக்கத் இருக்க வேண்டும்
என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது. அந்த பரக்கத் கிடைக்க வில்லை என்பது
தான் அனைவரின் குமுறலாக இருக்கின்றது. ஆனால் அல்லாஹுத்தஆலா பரக்கத்தை தந்து கொண்டு
தான் இருக்கின்றான். நாம் தான் அந்த பரக்கத்தை உணர்வதில்லை. அதனால் என் வாழ்வில்
பரக்கத்தே இல்லை என்று வெதும்பிக் கொண்டிருக்கின்றோம்.
பரக்கத்தைக் குறித்த தெளிவான பார்வை நமக்கு
வேண்டும்.
قل عدده وكثر
نفعه
குறைவாக இருக்கும் அதிக பலன்களைத் தரும். இது
தான் பரக்கத்
فهي شيء
معنوي، وقيمة معنوية لا ترى بالعين، ولا تقاس بالكم، ولا تحويها الخزائن، لكن يجد
الإنسان آثارها، يجد آثار هذه البركة: آثارها في نفسه، آثارها في صحته، آثارها في
ماله، آثارها في ولده، يجد آثارها في الجو الذي يعيش فيه، هذه هي البركة.
பரக்கத் என்பது அளவில் இல்லை. பரக்கத்தை கண்ணால்
பார்க்க முடியாது. அதன் பலன்களை அனுபவித்துத் தான் உணர முடியும்.
وعن ابن عمر
قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - وأتى صاحب بز ، فاشترى منه قميصا
بأربعة دراهم ، فخرج وهو عليه ، فإذا رجل من الأنصار فقال : يا رسول الله ، اكسني
قميصا كساك الله من ثياب الجنة . فنزع القميص فكساه إياه ، ثم رجع إلى صاحب
الحانوت ، فاشترى منه قميصا بأربعة دراهم وبقي معه درهمان ، فإذا هو بجارية في
الطريق تبكي ، فقال : " ما يبكيك ؟ " . قالت : يا رسول الله ، دفع لي
أهلي درهمين أشتري بهما دقيقا فهلكا ، فدفع النبي - صلى الله عليه وسلم - إليها
الدرهمين الباقيين ، ثم ولت وهي تبكي . فدعاها فقال : [ ص: 14 ] " ما يبكيك
وقد أخذت الدرهمين ؟ " . فقالت : أخاف أن يضربوني ، فمشى معها إلى أهلها ،
فسلم فعرفوا صوته ، ثم عاد فسلم ، ثم عاد فثلث فردوا . فقال : " أسمعتم أول
السلام ؟ " . فقالوا : نعم ، ولكن أحببنا أن تزيدنا من السلام ، فما أشخصك
بأبينا وأمنا ؟ قال : " أشفقت هذه الجارية أن تضربوها " . قال صاحبها :
هي حرة لوجه الله ; لممشاك معها ، فبشرهم رسول الله - صلى الله عليه وسلم - بالخير
وبالجنة ، وقال : " لقد بارك الله في العشرة ، كسا الله نبيه قميصا ورجلا من
الأنصار قميصا ، وأعتق منها رقبة ، وأحمد الله هو الذي رزقنا هذا بقدرته
நபி ஸல் அவர்கள் ஒரு நாள் 10 திர்ஹம்கள்
வைத்திருந்தார்கள். அதில் 4 திர்ஹம்களைக் கொண்டு சட்டை ஒன்றை வாங்கினார்கள். வரும்
வழியில் ஒருவர் உதவி கேட்க அந்த சட்டையை அவரிடம் கொடுத்து விட்டு 4 திர்ஹம்கள்
கொடுத்து இன்னொரு சட்டையை வாங்கிக் கொண்டார்கள். வழியில் ஒரு அடிமைப்பெண் அழுது
கொண்டிருந்தாள். என் வீட்டுக் காரர்கள் பொருட்களை வாங்கி வர என்னிடம் 2 திர்ஹம்
கொடுத்தார்கள். அதை தொலைத்து விட்டேன் என்று கூறினாள். நபியவர்கள் கையில் மீதம் வைத்திருந்த
அந்த 2 திர்ஹம்களை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டார்கள். மீண்டும் அந்தப்பெண்
அழுது கொண்டிருக்க காரணம் கேட்ட போது தாமதானதற்காக என் வீட்டார் என்னை அடிப்பார்கள்
என்று பயப்படுகிறேன் என்று கூறினாள். நபியவர்கள் அந்த வீடு வரை சென்று அந்த பெண்ணுக்காக
பேசினார்கள். அந்த வீட்டார்கள் அந்த அடிமைப் பெண்ணை உரிமை விட்டு விட்டார்கள்.
அந்த காட்சியைப் பார்த்த நபி ஸல் அவர்கள் இந்த பத்து திர்ஹமில் அல்லாஹ் பரக்கத்
செய்து விட்டான்.அதன் மூலம் அல்லாஹ் தன் நபிக்கு ஒரு சட்டையை வழங்கினான். ஒரு மதீனத்து
தோழருக்கு சட்டையை வழங்கினான். ஒரு அடிமைப் பெண்ணை உரிமை விட்டு விட்டான்
என்றார்கள். (அல் முஃஜமுல்
கபீர்)
இது தான் பரக்கத்.
3, ரஜப் மாதத்தில் துஆ
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم إذا دخل رجبُ قال : اللَّهمَّ بارِكْ لنا
في رجبَ وشعبانَ وبلِّغنا رمضانَ
நபி ஸல் அவர்கள் ரஜப் மாதம் வந்து
விட்டால் இந்த துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.(ஷுஃபுல் ஈமான் ; 3/1399)
ரஜப் மாதம் வந்து
விட்டால் இப்படி துஆ செய்ய வேண்டும் என்பதை நபி ஸல் அவர்கள் கற்றுத் தந்தார்கள்.
நம் வாழ்வில் பல்வேறு பாக்கியங்கள்
துஆக்களின் மூலமாகத்தான் நமக்கு கிடைக்கின்றது. பல மனிதர்களுக்கு பாக்கியங்கள் கிடைக்க
துஆக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.
Ø பெரும் அழிவுகளிலிருந்து நம் சமூகம் காக்கப்படுவதற்கு என் சமூகத்தை ஒட்டுமொத்தமாக
அழித்து விடாதே என்ற நபியவர்களின் துஆ தான் காரணம்.
Ø ஹழ்ரத் அபூஹுரைரா ரலியின் தாயாருக்கு ஈமான் கிடைப்பதற்கு நபியவர்களின் துஆ
தான் காரணம்.
Ø ஸஹாபாக்களில் பலருக்கு வாழ்வில் ஏற்றங்கள் கிடைப்பதற்கு துஆக்கள் தான்
காரணமாக இருந்தது.
Ø தவ்ஸ் என்ற கூட்டத்திற்கு ஈமான் கிடைப்பதற்கு நபியவர்களின் துஆ தான் காரணம்.
الطُّفَيلُ بنُ عمرٍو الدَّوسيُّ إلى نبيِّ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم
فقال : يا رسولَ اللهِ إنَّ دوسًا قد عصَتْ وأبَتْ فادعُ اللهَ عليهم فقال صلَّى
اللهُ عليه وسلَّم : ( اللَّهمَّ اهدِ دَوْسًا وائتِ بهم
துஃபைல்
அத்தவ்ஸீ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்க
மறுக்கின்றனர். பாவத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களை அல்லாஹ் அழித்திட துஆச்
செய்யுங்கள்!” என்றார்கள்.ஆனால், அல்லாஹ்வின்
தூதரோ “அல்லாஹ்வே! தவ்ஸ் கோத்திரத்தாருக்கு ஹிதாயத்தைத் தருவாயாக! அவர்களை என்
முன்னால் முஸ்லிம்களாக வரச் செய்வாயாக!” என்று துஆச் செய்தார்கள்.(இப்னு
ஹிப்பான்)
நபியவர்களின் துஆவினால்
தவ்ஸ் கூட்டத்தார் அனைவருக்கும் ஹிதாயத் கிடைத்தது. அந்த கூட்டத்தில் இருந்து வந்தவர்கள்
தான் ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள்.
துஆக்கள் தான் சில
பாக்கியங்களை நமக்கு பெற்றுத் தருகின்றது. ரலமான் என்ற பெரும் பாக்கியம் நமக்கு
கிடைக்க வேண்டுமென்றால் இப்போதிருந்தே துஆ செய்ய வேண்டும்.
மாஷா அல்லாஹ் ஜஸாகல்லாஹு கைர் ஹழ்ரத்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் நண்பா தங்களது கட்டுரை ரொம்ப நன்றாக உள்ளது. அல்லாஹ் போதுமானவன் தங்களுக்காக துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள். வஸ்ஸலாம் அன்புடன் மௌலவி முஹம்மது காலித் மன்பஈ ஹழ்ரத் கந்தர்வக் கோட்டை இமாம்
ReplyDeleteجزاك الله يا صديقي
Deleteதங்களின் பயான் குறிப்பிற்காக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து எதிர் பார்த்துக் காத்திருந்தோம்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்!
தங்களின் குறிப்புகள் எப்போதும் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருக்கும்
ரஜப் மாத சிந்தனையாக மூன்று பாயின்டும் அருமை! மாஷா அல்லாஹ்!!
جزاك الله خيرا كثيرا في الدارين.
மாஷா அல்லாஹ் ஹஜ்ரத்
ReplyDeleteماشاء اللہ
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
ReplyDeleteதங்களது அனைத்து பயான் குறிப்புகளும் அருமை அல்ஹம்துலில்லாஹ்..
ஹஜ்ரத் அவர்களிடம் சிறிய வேண்டுகோள்... வாய்ப்பிருப்பின் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையில் அல்லாமல் வியாழன் மாலை அல்லது இரவே குறிப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.
Baarakkallah
ReplyDelete