Friday, January 10, 2025

பேராசை அழிவையே ஏற்படுத்தும்

பரக்கத்தைக் கேட்கின்ற, தேடுகின்ற மாதம் இந்த ரஜப் மாதம். பரக்கத் என்பதற்கான சரியான பொருளை இஸ்லாம் கூறியிருக்கிறது. அதை கடந்த வாரம் பார்த்தோம். அந்த பரக்க்த்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் இஸ்லாம் நிறையவே சொல்லித் தந்திருக்கின்றது. அதில் ஒன்று தான் எதிலும் பேராசை கொள்ளாமல் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் தன்மை.

இன்று அதிகமான மனிதர்களிடத்தில் பேராசை என்ற தன்மை இருப்பதைக் காணலாம்.

سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

«لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا، وَلاَ يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். (புகாரி)

ஆசை இருக்கலாம். பேராசை இருக்கக்கூடாது.

ஆசைக்கும், பேராசைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அவசியமானது; அழகானது. பேராசை என்பது அனாவசிய மானது; ஆபத்தானது.

அவசியமானதை அடைவதற்காக கவனம் செலுத்துவது, அதற்காக முயற்சிப்பது, அதற்காக உழைப்பது, அதற்காக சிரமப்படுவது போன்றவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள். அது அளவில் குறைவானதாகவோ, கூடுதலாகவோ இருந்தாலும் சரியே.

அத்தியாவசியமில்லாத ஒன்றை பெறுவதற்காக அலைந்து திரிவது. அதற்காக முயற்சிப்பது, அதைப் பெறுவதற்காக ஏமாற்று வேலைகளை செய்வது இதை மார்க்கம் பேராசை என்று குறிப்பிடுகிறது. இதை இஸ்லாம் கூடாது என்று சொல்கிறது.

உதாரணமாக, உயிர் காக்கும் உயரிய மருத்துவ சேவை பெற பல லட்சங்கள் தேவைப்படலாம். அந்தப்பணத்தை திரட்ட முயற்சி செய்வது என்பது அவசியமான, அத்தியாவசியமான ஆசையாகும். அதே நேரத்தில் தேவையை விட அதிகமாக தன் வசம் பொருள் இருந்த போதிலும், தேவையே இல்லாமல் அற்பக்காசுக்காக அடுத்தவரிடம் கூனிக்குறுகி நின்று, சுயமரியாதையை இழந்து அதைத் தேடுவது அல்லது குறுக்கு வழியில் அதை பெற முயற்சிப்பது என்பது பேராசையாகும்.

இந்த பேராசை என்பது பரக்கத்தை நம்மிடமிருந்து இல்லாமல் ஆக்கி விடும்.

سأَلْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فأعطاني ثمَّ سأَلْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فأعطاني ثمَّ سأَلْتُه فأعطاني ثمَّ سأَلْتُ فأعطاني ثمَّ قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ( يا حكيمُ بنَ حِزامٍ إنَّ هذا المالَ حُلْوةٌ خضِرةٌ فمَن أخَذه بسخاوة نفسٍ بورِك له فيه ومَن أخَذه بإشرافِ نفسٍ لم يُبارَكْ له فيه وكان كالَّذي يأكُلُ ولا يشبَعُ واليدُ العليا خيرٌ مِن اليدِ السُّفلى ) قال حكيمٌ: فقُلْتُ: يا رسولَ اللهِ والَّذي بعَثك بالحقِّ لا أرزَأُ أحدًا بعدَك شيئًا حتَّى أُفارقَ الدُّنيا قال عروةُ وسعيدٌ: فكان أبو بكرٍ يدعو حكيمًا فيُعطيه العطاءَ فيأبى ثمَّ كان عمرُ بنُ الخطَّابِ يُعطيه فيأبى فيقولُ عمرُ: إنِّي أُشهِدُكم يا معشرَ المسلِمينَ على حكيمِ بنِ حزامٍ أنِّي أعرِضُ عليه حقَّه الَّذي قُسِم له مِن هذا الفَيءِ فيأبى يأخُذُه قال: فلم يرزَأْ حكيمٌ أحدًا مِن النَّاسِ بعدَ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم حتَّى توفِّي قال عروةُ وسعيدٌ: فكان أبو بكرٍ يدعو حكيمًا فيُعطيه العطاءَ فيأبى ثمَّ كان عمرُ بنُ الخطَّابِ يُعطيه فيأبى فيقولُ عمرُ: إنِّي أُشهِدُكم يا معشرَ المسلِمينَ على حكيمِ بنِ حِزامٍ أنِّي أعرِضُ عليه حقَّه الَّذي قُسِم له مِن هذا الفَيءِ فيأبى يأخُذُه قال: فلم يرزَأْ حكيمٌ أحدًا مِن النَّاسِ بعدَ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم حتَّى توفِّي

 

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவிக்கிறார்கள் ; 

நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான்.உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ எனக் கூறினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபூ பக்ர்(ரலி) ( தம் ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்கள். (புகாரி)

 

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي، فَقَالَ: «خُذْهُ إِذَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ شَيْءٌ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»

உமர்(ரலி) அறிவிக்கிறார்கள் ;

நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’ என்றார்கள்.

பேராசைப் படாமல் நமக்கு இறைவன் வழங்கும் பொருளில் தான் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கின்றான்.

 

உமர் ரலி அவர்களுக்கு இருந்த போதுமென்ற குணம்

عن سالم بن عبد الله قال: لما ولي عمر رضي الله عنه قعد على رزق أبي بكر رضي الله عنه الذي كانوا فرضوا له، فكان بذلك فاشتدت حاجته، فاجتمع نفر من المهاجرين منهم: عثمان، وعلي، وطلحة، والزبير رضي الله عنهم. فقال الزبير؛ لو قلنا لعمر في زيادة نزيدها إياه في رزقه، فقال علي؛ وددنا قَبل ذلك، فانطلقوا بنا، فقال عثمان: إنّه عمر فهلُّموا فلنستبرىء ما عنده من وراء، نأتي حفصة فنسأله ونستكتمها. فدخلوا عليها وأمروها أن تخبر بالخبر عن نفر ولا تسمِّي له أحداً إلا أن يقبل، وخرجوا من عندها.

فلقيت عمر في ذلك فعرفت الغضب في وجهه، وقال: من هؤلاء؟ قالت: لا سبيل إلى علمهم حتى أعلم رأيك، فقال: لو علمت من هم لسؤت وجوههم، أنت بيني وبينهم، أنشدك بالله: ما أفضل ما أقتنى رسول الله صلى الله عليه وسلم في بيتك من الملبس؟ قالت؛ ثوبين مُمَشَّقين كان يلبسهما للوفد ويخطب فيهما للجمع. قال: فأيُّ الطعام ناله عندك أرفع؟ قالت: خبزنا خبزة شعير فصببنا عليها وهي حارة أسفل عُكَّة لنا، فجعلناها هشَّة دسمة، فأكل منها وتطعَّم منها إستطابة لها. قال: فأيُّ مبسط كان يبسطه عندك كان أوطأ؟ قالت: كساء لنا ثخين كنا نربِّعه في الصيف فنجعله تحتنا، فإذا كان الشتاء بسطنا نصفه وتدثَّرنا بنصفه. قال: يا حفصة، فأبلغيهم عني أن رسول الله قَدَّر فوضع الفُضول مواضعها وتبلغ بالتزجية، وإني قدرت فوالله وضعنَّ الفُضول مواضعها لأتبلغنَّ بالتزجية، وإنما مثلي ومثل صاحبيَّ كثلاثة سلكوا طريقاً، فمضى الأول وقد تزود زاداً فبلغ ثم اتَّبعه الآخر فسلك طريقه فأفضى إليه، ثم اتَّبعه الثالث فإن لزم طريقهما ورضي بزادهما لحق بهما وكان معهما، وإن سلك غير طريقهما لم يجامعهما

உமர் ரலி அவர்கள் ஆட்சிக்கு வந்த போது அதற்கு முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த அபூபக்கர் ரலி அவர்களுக்கு நியமித்திருந்த மாத உதவித்தொகையே இவர்களுக்கும் நியமிக்கப்பட்டது. இருந்தாலும் உமர் அலி அவர்களின் தேவைகள் அதிகமாக இருப்பதை உணர்ந்த சில நபித்தோழர்கள் (உஸ்மான்,அலி,தல்ஹா,ஜுபைர்) உமர் ரலி அவர்களுக்கு அந்த மாத உதவித் தொகையை அதிகப்படுத்தி கொடுக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அவர்களிடத்தில் சென்று நேரடியாக அதைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு துணிவில்லை. எனவே அவர்களின் மகள் ஹஃப்ஸா ரலி அவர்களிடத்தில் சென்று இந்த விஷயத்தை எடுத்து சொல்லி நீங்கள் உங்கள் தந்தையிடத்தில் இது குறித்து பேசுங்கள். நாங்கள் சொன்னதாக சொல்ல வேண்டாம். எங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொன்னார்கள். அதைக்கேட்ட ஹஃப்ஸா ரலி அவர்கள் உமர் அலி அவர்களிடத்தில் இதைக் குறித்து சொன்னபொழுது கடுமையான கோபம் அவர்களுக்கு ஏற்பட்டது. அன்னை ஹஃப்ஸா ரலி அவர்களிடம் நபியவர்களின் உணவு உடை தங்குமிடம் போன்ற விஷயங்களை எல்லாம் விசாரித்து அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள். அதற்கு பின்னால் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அபூபக்கர் ரலி அவர்களும் எவ்வளவு எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அப்படி இருக்கிற பொழுது நானும் அவ்வாறு தானே இருக்க வேண்டும். நான் மட்டும் எப்படி வசதியான வாழ்வை தேர்ந்தெடுப்பேன். எனக்கும் என்னுடைய இரண்டு தோழர்களுக்கும் உதாரணமாகிறது ஒரு பாதையில் செல்லக்கூடிய மூன்று நபர்களைப் போன்றது. ஒருவர் தனக்கான கட்டுச் சாதத்தை எடுத்துக்கொண்டு சரியான இடத்தை அடைந்து விட்டார். இரண்டாவது நபரும் அவரைப் பின்பற்றி அதே இடத்தை அடைந்து கொண்டார். மூன்றாவது மனிதரும் அவர் சென்ற பாதையைத்தான் பின்பற்ற வேண்டும். அந்த இருவரின் பாதையை பின்பற்றினால் மட்டுமே அவர்களோடு சேர முடியும். அதல்லாத வேறொரு பாதையை தேர்வு செய்து கொண்டால் இருவரோடு சேர முடியாது என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இன்று அந்த போதுமென்ற துணம் மக்களிடம் இல்லாமல் போனது.பேராசை மிகைத்து விட்டது.

பேராசை தான் அனைத்து தவறுகளுக்கும் அடிப்படையானது. அந்த தன்மை தான் மனிதர்களை குறுக்கு வழிகளில் பணம் ஈட்டுவதைத் தூண்டுகிறது.இன்று நடைபெறுகின்ற வழிப்பறி, திருட்டு, ஏமாற்று, பிறர் நிலத்தை அபகரித்தல், ஷரீஅத்திற்கு முரணான வியாபாரங்கள் இதுபோன்ற தவறான பொருளீட்டல் அனைத்திற்கும் மூலக்காரணம் இந்த பேராசை தான்.

 

பேராசை அழிவை ஏற்படுத்தும்

وَأخرج ابْن عَسَاكِر عَن لَيْث قَالَ: صحب رجل عِيسَى بن مَرْيَم فَانْطَلقَا فَانْتَهَيَا إِلَى شاطىء نهر فَجَلَسَا يتغديان ومعهما ثَلَاثَة أرغفة فأكلا الرغيفين وَبَقِي رغيف

فَقَامَ عِيسَى إِلَى النَّهر يشرب ثمَّ رَجَعَ فَلم يجد الرَّغِيف

فَقَالَ للرجل: من أكل الرَّغِيف قَالَ: لَا أَدْرِي فَانْطَلق مَعَه فَرَأى ظَبْيَة مَعهَا خشفان فَدَعَا أَحدهمَا فَأَتَاهُ فذبحه وشواه وأكلا ثمَّ قَالَ للخشف: قُم بِإِذن الله فَقَامَ فَقَالَ للرجل: أَسأَلك بِالَّذِي أَرَاك هَذِه الْآيَة من أكل الرَّغِيف قَالَ: لَا أَدْرِي ثمَّ انتهيا إِلَى الْبَحْر فَأخذ عِيسَى بيد الرجل فَمشى على المَاء ثمَّ قَالَ: أنْشدك بِالَّذِي أَرَاك هَذِه الْآيَة من أَخذ الرَّغِيف قَالَ: لَا أَدْرِي

ثمَّ انتهيا إِلَى مفازة وَأخذ عِيسَى تُرَابا وطيناً فَقَالَ: كن ذَهَبا بِإِذن الله

فَصَارَ ذَهَبا فَقَسمهُ ثَلَاثَة أَثلَاث فَقَالَ: ثلث لَك وَثلث لي وَثلث لمن أَخذ الرَّغِيف

قَالَ: أَنا أَخَذته

قَالَ: فكله لَك وفارقه عِيسَى فَانْتهى إِلَيْهِ رجلَانِ فأرادا أَن يأخذاه ويقتلاه قَالَ: هُوَ بَيْننَا أَثلَاثًا فَابْعَثُوا أحدكُم إِلَى الْقرْيَة يَشْتَرِي لنا طَعَاما

فبعثوا أحدهم فَقَالَ الَّذِي بُعِثَ: لأي شَيْء أقاسم هَؤُلَاءِ المَال وَلَكِن أَضَع فِي الطَّعَام سما فاقتلهما

وَقَالَ ذَانك: لأي شَيْء نعطي هَذَا ثلث المَال ولَكِن إِذا رَجَعَ قَتَلْنَاهُ

فَلَمَّا رَجَعَ إِلَيْهِم قَتَلُوهُ وأكلا الطَّعَام فماتا

فَبَقيَ ذَلِك المَال فِي الْمَفَازَة وَأُولَئِكَ الثَّلَاثَة قَتْلَى عِنْده

 

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஓரு பிரயாணத்தின் போது ஓரு மனிதன் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறிச் சேர்ந்து கொண்டான். இருவரும் ஓரு ஆற்றங்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ஓரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர். இருவரிடத்திலும் மூன்று ரொட்டிகள் இருந்தன. இருவரும் ஆளுக்கொரு ரொட்டியைச் சாப்பிட்டனர். ஓரு ரொட்டி மீதி இருந்தது.

ஈஸா அலை அவர்கள் தண்ணிர் குடிப்பதற்க்காக அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்றார்கள். திரும்பி வந்து பார்த்த போது அந்த ஓரு ரொட்டியைக் காணவில்லை. “ரொட்டியை யார் எடுத்தது....?”   என்று அம்மனிதனிடம் கேட்டார்கள்….? “எனக்குத் தெரியாது”  என்று கூறினான். ஈஸா அலை அவர்கள் எதுவும் பேசாமல் அவனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்கள்.

சிறிது தூரம் சென்றபோது ஓரு மான் அதனுடைய இரு குட்டிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஈஸா அலை அவர்கள் அவ்விரு குட்டிகளில் ஓன்றை அழைத்தார்கள்.  அது வந்தது, அதனைப்பிடித்து  அறுத்து சமைத்து இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் அதன் எழும்புகளையும், மீதியுள்ள பகுதிகளையும் ஓன்று சேர்த்து, “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எழுந்திருப்பாயாக...!”  என்று கூறினார்கள். அது உயிர் பெற்று எழுந்து ஓடிவிட்ட்து.. அப்பொழுது அம்மனிதனிடம் இந்த அற்புதத்தை உனக்கு காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன். அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்....என்று கேட்டார்கள். “எனக்கு தெரியாது” என அவன் கூறினான்.

பிறகு இருவரும் அங்கிருந்து சென்றனர் வழியில் ஓரு ஆறு குறுக்கிட்டது. ஈஸா அலை அவர்கள் அம்மனிதனின் கைப் பிடித்துக் கொண்டு ஆற்று நீரின் மீது (தரையில் நடப்பது போன்று) நடந்து சென்றார்கள். ஆற்றைக் கடந்த பின் “இந்த அற்புததை காண்பித்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்க்கிறேன்”. அந்த ஓரு ரொட்டியை எடுத்தது யார்....என்று கேட்டார்கள். “எனக்கு தெரியாது” என அவன் கூறினான்.

பின்னர் இருவரும் அங்கிருந்து நடந்து சென்று ஓரு வனாந்திரத்திற்க்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தபோது நபி ஈஸா அலை அவர்கள் அங்கிருந்த மண்ணையும் மணலையும் குவியலாக ஆக்கி  “அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தங்கமாக மாறிடுவாயாக....!”  என்று கூறினார்கள். அது தங்க குவியலாக மாறிவிட்டது. அதனை மூன்று பங்குகளாக ஆக்கி  “ஓரு பங்கு எனக்கு...  மற்றொரு பங்கு உனக்கு... மூன்றாவது பங்கு அந்த ரொட்டியை எடுத்தவனுக்கு. “  என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதன் நான் தான் அந்த ரொட்டியை எடுத்தேன். என்று கூறினான்.  அப்படியானால் இவை அனைத்தையும் நீயே எடுத்துக் கொள்.! என்று கூறிவிட்டு அவனைப் பிரிந்து சென்று விட்டார்கள்.

அம்மனிதன் அப்பொற்க்குவியலைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே உக்கார்ந்திருந்தான். அப்பொழுது அவ்விடத்திற்க்கு இரண்டு மனிதர்கள் வந்து சேர்ந்தனர்.  பொற்க்குவியலையும் அம்மனிதனையும் பார்த்த அவர்கள் அவனைக் கொன்று விட்டு அவ்விருவரும் அப்பொருளை எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டனர். இதனை அறிந்த அம்மனிதன் “இந்த பொற்க்குவியலை நம் மூன்று பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம்.” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தியப்பின் “உங்கள் இருவரில் ஓருவர் ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்க்கு ஏதேனும் உணவு வாங்கி வரவேண்டும்.” என்று கூறி அவர்களில் ஓருவனை அனுப்பி வைத்தனர்.

உணவு வாங்கி வரச் சென்றவன், அவ்விருவரையும் கொன்றுவிட்டு அந்த பொற்க்குவியலைத் தானே அடைந்து கொள்ள வேண்டுமென்று எண்ணி உணவில் விஷத்தைக் கலந்து எடுத்துச் சென்றான். இவன் உணவு வாங்கச் சென்றபின் அவர்கள் இருவரும் அவனுக்கு ஏன் இதில் மூன்றிலொரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் வந்தவுடன் அவனைக் கொன்று விட்டு நாம் இருவர் மட்டும் இப்பொருளைப் பங்கிட்டுக் கொள்ளலாம் எனத் திட்டம் வகுத்திருந்தனர். 

அதன்படி உணவு வாங்கச் சென்றவன் வந்தவுடன் இருவரும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டு அந்த உணவைச் சாப்பிட்டனர். சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் அவ்வழியாக வந்த போது மூவரும் பிணங்களாகக் கிடப்பதை கண்டு தங்கள் தோழர்களிடம் “இது தான் உலகம். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுஙகள்.” என்று கூறிச் சென்றார்கள்.(அத்துர்ருல் மன்ஸூர்)

 

  

No comments:

Post a Comment