Thursday, July 22, 2021

குர்பானிக்குப் பின்....

 


அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ?  ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நபி ஸல் அவர்களின் மொத்த வாழ்வையும் நாம் அலசிப் பார்த்தால் எந்த அமலைச் செய்தாலும்  அதற்குப் பிறகு ஒரு துஆ செய்யும் அழகான நடைமுறை இருப்பதைப் பார்க்கலாம்.எந்த அமலாக இருந்தாலும் அதற்குப் பிறகு ஒரு துஆ இருக்கும். ஒழுவிற்குப் பிறகு துஆ, பாங்கிற்குப் பிறகு துஆ, தொழுகைக்குப் பிறகு துஆ, சாப்பிட்ட பிறகு துஆ, தண்ணீர் குடித்த பிறகு துஆ, நிக்காஹ் முடித்தால் அதற்குப்  பிறகு துஆ, இப்படி எந்த அமலாக இருந்தாலும் அதற்குப் பிறகு ஒரு துஆ இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் வழிகாட்டி இருக்கிறது.நபி ஸல் அவர்களின் அழகான வாழ்வும் இதைத்தான் உணர்த்துகிறது.

ஒரு அமலுக்கு பிறகு துஆ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியதில் இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அந்த அமலைக் கொண்டு அந்த துஆவிற்கு கபூலியத் கிடைக்கும். அந்த அமலின் துணை கொண்டு அந்த துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடும்.

இன்றைக்கு நாம் எத்தனையோ துஆக்களை கேட்கிறோம். எத்தனையோ தேவைகளை இறைவனுக்கு முன் சமர்ப்பிக்கிறோம். ஆனால் அதில் பல துஆக்கள் ஏற்கப்படுவதில்லை. பல துஆக்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஏனென்று நாம் யோசித்திருக்கிறோமா ? துஆக்கள் கபூலாகாமல் போவதற்கு சில காரணங்களை இஸ்லாம் சொல்கிறது. அதேபோன்று துஆ கபூலாகுவதற்கு சில வழிமுறைகளை சொல்லித் தருகின்றது. அதில் ஒன்று ஒரு அமலை செய்து அந்த அமலின் வழியாக நம் தேவைகளை இறைவனிடத்தில் கேட்பது.

وقال الشيخان إن كل دعاء يحتاج إلى عمل صالح يرفعه إلى الله، مستشهدين بقول الله تعالى " إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ" (فاطر: 10)، موضحين أن كل دعاء فى القرآن كان يسبقه عمل صالح

தூய்மையான வார்த்தைகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது. (அல்குர்ஆன் : 35;10)

ஒரு துஆவிற்கு அங்கீகாரம் கிடைக்க ஒரு அமல் அவசியம். அமல் தான் துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் கபூலியத்தைப் பெற்றுத் தருகிறது என்று சொல்லும் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள், அதற்கு இந்த வசனத்தை சான்றாக காட்டுகிறார்கள்.

وأكد الشيخان أن الله يستحى أن يرد دعاء عبد كان شفيعه فيه عمل صالح، وهو منهج أوضحه الله فى سورة الفاتحة " إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6)"

ஒரு அமலுக்குப் பிறகு கேட்கப்படும் துஆவை நிராகரிப்பதற்கு இறைவனே வெட்கப்படுகிறான்.அமலுக்குப் பிறகு துஆ கேட்க வேண்டும் என்ற வழிமுறையை இறைவன் ஃபாத்திஹா சூராவின் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான். உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்என்ற வார்த்தைக்குப் பிறகு எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக!” என்ற துஆவை இடம் பெறச் செய்திருக்கிறான் என்று இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

فقد روى الترمذي  عن أبي أمامة – رضي الله عنه – قال: قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال: ((جوف الليل الأخير، ودبر الصلاة المكتوبة

எந்தப் பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் அதிகம் கபூலாகும் என்று கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள் இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனையும் கடமையான தொழுகைக்குப் பிறகு கேட்கப்படும் பிரார்த்தனையும் என்று கூறினார்கள். (திர்மிதி ; 3499)

அதனால் தான் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு துஆ கேட்பதை நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். அந்த துஆவிற்கு அதிகம் கபூலியத் உண்டு என்ற காரணத்தினால் தீன் துன்யாவினுடைய மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே நம் முன்னோர்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் பெரும்பாலும் இமாம்கள் ஓதுகிறார்கள். வியாபாரத்தில் வெற்றி, பொருளாதாரத்தில் பரக்கத், நோய் நொடிகளில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை, கவலைகள் கடன்களில்லாத மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, ஆபத்துக்களில்லாத பாதுகாப்பான வாழ்க்கை, நம் பாவங்களை மன்னித்து நம் மீது அல்லாஹ் கிருபை செய்ய வேண்டும் என்பது, நம் இறுதி முடிவு ஈமானிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது, நம் மவ்த்தும் மவ்த்திற்கு பிறகுண்டான வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது, நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவனம் கிடைக்க வேண்டும் என்பது, நாமாக தனியாக கேட்டால் கூட  இவ்ளோ விஷயங்களை கேட்போமோ என்று தெரியாது. அந்தளவு மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே பொருக்கி எடுத்து அதை ஒரு கோர்வையாக கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு ஓதப்படுகிறது. நாம் ஒவ்வொரு ஃபர்ளான தொழுகையிலும் கலந்து கொண்டு அந்த துஆக்களில் பங்கெடுத்துக் கொண்டாலே  ஈருலகத்தின் எண்ணற்ற பாக்கியங்கள் நமக்கு கிடைத்து விடும். காரணம் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு கேட்கப்படும் துஆவிற்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் உண்டு.

நமக்கு ஏதாவது தேவை இருக்கிறது. அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். அந்த தேவை நிறைவேற வேண்டும் எனறால் உடனே உக்காந்து துஆ கேட்கக் கூடாது,ஒழு செய்து 2 ரக்கஅத் தொழுது அப்பறம் துஆ கேட்க வேண்டும். அந்த துஆ கபூலாகும்.

وروى الترمذي أن رسول الله صلى الله عليه وسلم قال: من كانت له حاجة إلى الله تعالى، أو إلى أحد من بني آدم فليتوضأ، وليحسن الوضوء، ثم ليصل ركعتين، ثم ليثن على الله عز وجل، وليصل على النبي صلى الله عليه وسلم ثم ليقل: لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك، وعزائم مغفرتك، والغنيمة من كل بر، والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا حاجة هي لك رضا، إلا قضيتها يا أرحم الراحمين. رواه الترمذي وابن ماجه

யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வ அஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரிவ், வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்ம். லா ததஃலீ தம்பன் இல்லா கஃபர்தஹு, வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு, வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்என்று கூறட்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி ; 479)

فقد روى البُخاريّ ومسلم من حديث عبدالله بن عُمر بن الخطَّاب - رضِي الله عنْهُما - قال: سمعتُ رسولَ الله - صلَّى الله عليْه وسلَّم - يقول: ((انطلق ثلاثةُ رهْطٍ ممَّن كان قبلكم، حتَّى أوَوا المبيتَ إلى غارٍ فدخلوه، فانحدرتْ صخرةٌ من الجبل فسدَّت عليهم الغار، فقالوا: إنَّه لا يُنجيكم من هذه الصَّخرة إلاَّ أن تدعوا الله بصالِح أعمالكم، فقال رجُل منهم: اللَّهُمَّ كان لي أبَوانِ شيْخان كبيران، وكنت لا أغْبق قبلهما أهلاً ولا مالاً، فنأى بي في طلب شيءٍ يومًا فلم أرُح عليهما حتَّى ناما، فحلبتُ لهُما غبوقَهما فوجدتُهما نائمَين، وكرهت أن أغبقَ قبلَهما أهلاً أو مالاً، فلبثْتُ والقدح على يدي أنتظِر استيقاظَهُما حتَّى برق الفجْر، فاستيْقَظا فشرِبَا غبوقَهما، اللَّهُمَّ إن كنتُ فعلتُ ذلك ابتِغاء وجْهِك، ففرِّج عنَّا ما نحن فيه من هذه الصَّخرة، فانفرجت شيئًا لا يستطيعون الخروج))، قال النَّبي - صلَّى الله عليْه وسلَّم -: ((وقال الآخَر: اللَّهُمَّ كانتْ لي بنتُ عمّ، كانت أحبَّ النَّاس إليَّ، فأردتُها عن نفسِها، فامتنعتْ منِّي حتَّى ألمَّت بها سَنةٌ من السنين، فجاءتْني فأعطيتُها عشرين ومائة دينار على أن تُخلي بيْني وبين نفسِها، ففعلتْ، حتَّى إذا قدرتُ عليْها قالت: لا أحلّ لك أن تفضَّ الخاتم إلاَّ بحقِّه، فتحرَّجت من الوقوع عليْها، فانصرفتُ عنْها وهي أحبُّ النَّاس إليَّ، وتركت الذَّهَب الَّذي أعطيتُها، اللَّهُمَّ إن كنتُ فعلت ابتغاء وجهِك، فافْرُج عنَّا ما نحن فيه، فانفرجت الصَّخرة غير أنَّهم لا يستطيعون الخروج منها))، قال النَّبيُّ - صلَّى الله عليْه وسلَّم -: ((وقال الثَّالث: اللَّهُمَّ إنّي استأجرتُ أُجراءَ فأعطيْتُهم أجرَهم غير رجُل واحدٍ ترَك الَّذي له وذهب، فثمَّرت أجْرَه حتَّى كثُرَت منه الأموال، فجاءني بعد حين فقال: يا عبد الله، أدِّ إليَّ أجْري، فقلتُ له: كلُّ ما ترى من أجرِك، من الإبل والبقر والغنم والرَّقيق، فقال: يا عبد الله، لا تستهزئْ بي، فقلت: إنِّي لا أستهزئُ بك، فأخَذه كلَّه فاستاقَه، فلم يترك منْه شيئًا، اللَّهُمَّ فإن كنت فعلتُ ذلك ابتِغاء وجْهِك، فافرجْ عنَّا ما نحن فيه، فانفرجتِ الصَّخرة، فخرجوا يَمشون

(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துஆர்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துஎனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்குஎனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்குஎனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2272)

இதற்கு முந்தைய ஹதீஸில் ஒரு தேவையை முன்னிறுத்தி இறைவனிடம் பிரார்த்திக்க விரும்பினால் இரண்டு ரக்கஅத் தொழ வேண்டும் என்பதை நபி ஸல் அவர்கள் வழிகாட்டினார்கள். இந்த ஹதீஸில் அந்த மூவரும் தாங்கள் செய்த ஒரு நற்காரியத்தை முன்னிறுத்தி அதை வஸீலாவாக வைத்து துஆ கேட்டதினால் அதற்கு கபூலியத் கிடைத்து அதனால் அவர்கள் அந்த சிக்கலிலிருந்து விடுதலை பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம். எனவே ஒரு அமலுக்குப் பிறகு துஆவை ஆக்கிக் கொண்டால் அந்த துஆவிற்கான அங்கீகாரத்தை அந்த அமல் பெற்றுத் தரும் என்பதை இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்கிறோம்.

ஒரு அமல் செய்த பிறகு துஆ செய்ய வேண்டும் என்கிற வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதற்கான மிக முக்கியமான இரண்டாவது நோக்கம், அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது. பொதுவாக ஒரு அமலை செய்தவுடன் நம் கடமை முடிந்து விடுவதில்லை. அந்த அமலைக் குறித்த சிந்தனையும் அதை நாம் சரியாக செய்தோமா இல்லையா என்கின்ற கவலையும் அல்லாஹ்விடத்தில் அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்குமா இல்லையா என்கின்ற அச்சமும் ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும்.

இப்ராஹீம் அலை அவர்கள் கஃபதுல்லாஹ்வை கட்டியெழுப்பியவுடன் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

وأضافا أن إبراهيم وإسماعيل توجها إلى الله بالدعاء وهم يرفعان قواعد البيت الحرام "وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ"، متشفعين بعملهم عند الله لإجابة الدعاء.

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்) (அல்குர்ஆன் : 2 ; 127)


وكان بعض السلف لما قرأ هذه الآية جعل يبكي ويقول: ما بالُ خليل الله يرفع قواعد البيت ويخاف ألا يُقبل منه

முன்னோர்களில் சிலர் இந்த வசனத்தை ஓதுகின்ற பொழுது, இப்ராஹிம் நபியவர்களே தன்னுடைய அமலை ஏற்றுக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறார்கள். தன் அமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற கவலை அவர்களுக்கே இருந்தது என்றால் என்னுடைய நிலைமை என்னவென்று அழுவார்கள்.

நாம் இன்றைக்கு பெரும்பாலும் ஒரு அமலை செய்து விட்டால் நம் கடமை முடிந்து விட்டது என்று இருந்து விடுகிறோம். அதைப் பற்றிய சிந்தனையோ கவலையோ இருப்பதில்லை. ஆனால் ஸஹாபாக்கள், இமாம்கள் அமலை செய்த பிறகு அதிகம் கவலைப்படுவார்கள். அதிகம் பயப்படுவார்கள்.

فعن عائشة ـ رضي الله عنها ـ قالت: سألت رسول الله - صلى الله عليه وسلم - عن هذه الآية: (وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ) [المؤمنون: 60]

أهم الذين يشربون الخمر ويسرقون؟! قال: (لا يا ابنة الصديق! ولكنهم الذين يصومون ويصلّون ويتصدقون، وهم يخافون أن لا يقبل منهم، أولئك الذين يسارعون في الخيرات).

அவர்களின் உள்ளங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுப்பார்கள். (அல்குர்ஆன் : 23 ; 60)

இந்த வசனத்தை குறித்து அன்னை ஆயிஷா ரலி அவர்கள், இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது மது குடிப்பவர்களையும் திருடுபவர்களையுமா என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் சித்தீக்கின் மகளே! இல்லை இல்லை, அவர்கள் தொழுவார்கள். நோன்பு நோற்பார்கள். தர்மங்கள் செய்வார்கள். ஆனால் அவைகளெல்லாம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று பயந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் தான் நன்மைகளின் பக்கம் விரைபவர்கள்; என்று கூறினார்கள். (திர்மிதி ;  (3175

قال عبد العزيز بن أبي رواد: "أدركتهم يجتهدون في العمل الصالح، فإذا فعلوه وقع عليهم الْهَمّ، أيُقبل منهم أم لا"،

அப்துல் அஜீஸ் பின் அபீ ருவாத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  (இவர் சஹாபாக்கள் காலத்தில் வாழ்ந்தவர், எண்ணற்ற சஹாபாக்களைக் கண்டவர்) நிறைய சஹாபாக்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அதிக ஈடுபாட்டுடனும் அதிக முயற்சியுடனும் நல்லமல்களை புரிவார்கள். ஆனால் அவர்கள் அமல்களை செய்து முடித்த பிறகு அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

وقد رأى وهب بن الورد قوماً يضحكون في يوم عيد، فقال: "إن كان هؤلاء تقبل منهم صيامهم فما هذا فعل الشاكرين، وإن كان لم يتقبل منهم صيامهم فما هذا فعل الخائفين".

அல்லாமா வஹ்ப் ரஹ் அவர்கள் பெருநாளன்று சிரித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்ட பொழுது, இவர்கள் ரமலானைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஒன்று இவர்களது அமல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் இவ்வாறு சிரிப்பது நன்றி செலுத்துபவர்களின் காரியமல்ல. ஒருவேளை நிராகரிக்கப்பட்டிருந்தால் அதை நினைத்து அச்சம் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வாறு சிரிப்பது அஞ்சுபவர்களின் காரியமும் அல்ல என்று கூறினார்கள்.

எனவே அமல் செய்ததோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அதன் கபூலியத்தைக்குறித்த சிந்தனையும் கவலையும் நமக்கு வேண்டும். ஏனென்றால் செய்த அமல்களின் நிலை என்ன அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் நமக்கு வழங்க வில்லை.

وعن فضالة بن عبيد قال: لأن أكون أعلم أن الله قد تقبل مني مثقال حبة من خردل أحبُّ إليَّ من الدنيا وما فيها؛ لأن الله يقول: {إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ

நான் செய்த அமல்களில் ஒரு கடுகின் வித்து அளவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான் என்று நான் அறிந்து கொள்வது இந்த உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விட எனக்கு பிரியமானது என்று ஃபுளாலா பின் அபீத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

كان ابن مسعود يقول: "لأن أَكُونُ أَعْلَمُ أَنَّ اللَّهَ تَقَبَّلَ مِنِّي عَمَلًا أحب إليّ من أن يكون لي ملء الأرض ذهبا".

நான் செய்த அமல்களில் ஒன்றை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டான் என்று நான் அறிந்து கொள்வது தங்கத்தால் இந்த பூமி நிரம்ப இருப்பதை விட எனக்கு மேலானது என்று இப்னு மஸ்வூத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وكان علي -رضي الله عنه- يقول: "كونوا لقبول العمل أشد اهتمامًا منكم بالعمل، ألم تسمع الله يقول: (إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ) [المائدة:27].

அமல்களை செய்வதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய முக்கியத்துவத்தை விட அந்த அமல் அல்லாஹ்விடத்தில் கபூலாகுவதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 وروى ابن جرير عن عامر بن عبدالله العنبري أنه حين حضرته الوفاة بكى، فقيل له ما يبكيك فقد كنت وكنت ؟ فقال يبكيني أني أسمع الله يقول {إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِين

ஆமிர் பின் அப்துல்லாஹ் அம்பரீ ரஹ் அவர்கள் மரண வேலையின் போது கண்ணீர் விட்டு அழுதார்கள். நீங்கள் இப்படி இப்படி நல்ல காரியங்களை செய்தீர்கள் தானே! பின்பு எதற்கு அழுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது, அல்குர்ஆனில் இறையச்சம் உள்ளவர்களிடமிருந்து தான் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறான். நான் இறையச்ச முள்ளவனா? என்னுடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று நினைத்து அழுகிறேன் என்றார்கள்.

"فلما تُوفي عثمان بن مظعون -رضي الله عنه- قالت أمه: شهادتي عليك أبا السائب لقد أكرمك الله"، فقال لها رسول الله -صلى الله عليه وسلم-: "وما يدريك أن الله أكرمه؟ فوالله وأنا رسول الله ما أدري ما يُفعل بي، ثم قال: وإني لأرجو له الخير" (رواه البخاري -رحمه الله-).

உஸ்மான் பின் மள்வூன் ரலி அவர்கள் மரணித்த போது அவர்களின் தாயார் சாயிபின்  தந்தையான உஸ்மானே! அல்லாஹ் உன்னை நிச்சயம் சங்கை செய்து விட்டான் என்பதற்கு நான் சாட்சி என்று கூறினார்கள். அதைக்கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள், அவரை அல்லாஹ் சங்கை செய்து விட்டான் என்று உங்களுக்கு தெரியுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். ஆனால் என்னிடத்தில் அல்லாஹ் எவ்வாறு நடந்து கொள்வான் என்று எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு, நான் அவர் விஷயத்தில் நல்லதையே ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். (புகாரி ; 7018)

 وَقَالَ ابْنُ عَوْنٍ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: «لَا تَثِقْ بِكَثْرَةِ الْعَمَلِ، فَإِنَّكَ لَا تَدْرِي أَيُقْبَلُ مِنْكَ أَمْ لَا، وَلَا تَأْمَنْ ذُنُوبَكَ، فَإِنَّكَ لَا تَدْرِي كُفِّرَتْ عَنْكَ أَمْ لَا، إِنَّ عَمَلَكَ مُغَيَّبٌ عَنْكَ كُلَّهُ، مَا تَدْرِي مَا اللَّهُ صَانِعٌ فِيهِ، أَيَجْعَلُهُ فِي سِجِّينٍ أَمْ يَجْعَلُهُ فِي عِلِّيِّينَ»

அதிக நன்மைகளை செய்து விட்டோம் என்கின்ற நம்பிக்கையில் நீ இருக்காதே! ஏனென்றால் அதை உன்னிடமிருந்து அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்று உனக்கு தெரியாது. உன் பாவங்களை நினைத்து அச்சம் இல்லாமலும் இருக்காதே! ஏனென்றால் அந்த பாவங்களை அல்லாஹ் மன்னித்தானா இல்லையா என்று உனக்கு தெரியாது என்று இப்னு அவ்ன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரே ஸஃப்பில் நின்று தொழக்கூடிய இருவருக்குமிடையில் வானம் பூமிக்கு மத்தியிலுள்ள வித்தியாசம் இருக்கும். ஒருவருடைய தொழுகை வானத்தின் பக்கம் உயர்ந்து அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். இன்னொருவரின் தொழுகை கந்தை ஆடையைப் போன்று சுருட்டி அவர் முகத்தில் வீசி எறியப்படும். எனவே ஒரு மூஃமின் இறையச்சத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அமல்களை செய்த பிறகு அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆவும் செய்ய வேண்டும் என்று இமாம்கள் கூறுகிறார்கள்.

நாம் இங்கே குர்பானியையும் ஹாஜிகள் அங்கே ஹஜ்ஜையும் நிறைவேற்றியிருக்கிற இந்த நேரத்தில் அந்த அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அதிகம் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் நம் எல்லோரின் அமல்களையும் கபூல் செய்வானாக!

15 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்...

    அருமையான சிந்தனை ...

    அல்லாஹ் கபூல் செய்வானாக...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    தங்களின் சேவையை அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. எல்லாம்வல்ல இறைவன் நம் துஆக்களையும் நம்முடைய அமல் களையும் பரிபூரணமாக பொருந்திக்கொள்வானாக

    ஆகச்சிறந்த நினைவூட்டல்
    ஜஸாக்குமுல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. பாரக்கல்லாஹ் உங்களுடைய கட்டுரை காலத்துக்கு பொதுவானதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் இந்த சொற்பொழிவைக் கேட்டு மக்கள் அனைவரும் பயன் அடையட்டும் ஆக ஆமீன்

    ReplyDelete
  6. Barakallah

    Alhamdulillah

    ReplyDelete
  7. சூழ்நிலைக்கேற்ற தலைப்பு......அருமையான குறிப்பு.....அல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  9. நல்ல சிந்தனை நல்ல சிந்தனையாளரிடமிருந்து

    ReplyDelete
  10. சிறந்த கருத்து

    ReplyDelete
  11. ஆமீன் ஆமீன் யாராப்பல் ஆலமீன்

    ReplyDelete