Monday, February 24, 2014

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?


                                                    ஆண்களே!...3
                                                                                                                                
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? என்று சுவையான பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கின்றது. பட்டி மன்றத்தை கலகலப்போடு நடத்திக் கொண்டிருக்கும் நடுவர் ஹஜ்ரத் அவர்களே!
குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எனதணி இளமைத் துள்ளல்களே! குடும்பத்தை ரண்டாக்கிக் கொண்டிக்கிருக்கும் வருங்காலக் கிழவிகளே! கேம்பல் மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கும் யங் பாய்ஸ்களே! கேம்பலை அலங்கரித்துக் கொண்டிருக்கும் யங் கேல்ஸ்களே! மற்றும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பெரியவர்களே தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லி என் ஆட்டத்தை தொடங்குகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

குடும்ப மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்கள் தான் [கேப்] பாருங்க ஆண்கள்னு  சொல்லும்போதே எவ்ளோ மகிழ்ச்சியா இருக்குது. அவங்க தான் மகிழ்ச்சிக்கு காரணம் என்பதை உறுதிபட உரைக்க வந்திருக்கிறேன். நடுவர் அவர்களே எதிரணியில ஒரு மூனு பேரு உக்காந்துருக்காங்க. அவங்க யாருன்னு தெரியுதா? முதலாவது கத்திரிக்கா, ரண்டாவது புடலங்கா, மூனாவது வெண்டக்கா.

முதல்ல கத்திரிக்கா வந்துச்சு. நிறைய டைலாக்லாம் விட்டுச்சு. ஆனா அது ஒன்னத்துக்கும் உதவாது. பெண்கள் லாம் சமூகத்தின் கண்களாம். அப்ப ஆண்கள் சமூகத்தின் மூக்கா? மாதவராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்யனுமாம். அப்ப ஆடவராய் பிறப்பதற்கு அயோக்கியத்தனமா பன்னனும்? ஏம்மா டைலாக் சொன்னியே கொஞ்சமாவது அதுல அர்த்தம் இருக்கா?

அடுத்து , நாங்களாம் வெளிய போனா பெத்தவங்களுக்கு வயித்துல புளிய கரைக்குதாம். இவங்க வெளிய போனா ஒழுக்கமா போவாங்களாம். ஏம்மா உங்க ஒழுகத்த பத்திதான் எங்களுக்கு தெரியுமே. ஒரு ஆள் சொன்னாரு.....நான் என் மகளுக்கு வெறும் 4000 ரூபாய்ல கல்யாணத்த முடிச்சிட்டேன் அப்டின்னு. அதுக்கு பக்கத்துல இருந்தவரு ; என்னங்க சொல்றீங்க? இந்த காலத்துல மகள கட்டிக் கொடுக்குறதுக்கு அவஅவன் வீட்டயே வித்துகிட்டு இருக்கான், நீங்க எப்டி 4000 ரூபாய்ல முடிச்சீங்க அப்டின்னு கேட்டார். அதுக்கு அந்த ஆளு ; ஒன்னுமில்ல....என் மகளுக்கு 4000 ரூபாய்ல ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்தேன். அதுக்கு பிறகு அவளே ஒரு மாப்பிள்ளைய பாத்துக்கிட்டு அவன் கூடயே ஓடி போய் கல்யாணம் பன்னிக்கிட்டா அப்டின்னார் வெக்கமில்லாம. பாத்தீங்களா.... இதான் இவங்களோட ஒழுக்கம்.

அடுத்து, உலகத்துல முதல் கொல எங்களால தான் நடந்துச்சான்.... ஏம்மா அந்த கொல நடந்ததே உங்கள மாதிரி ஒரு பொண்ணால தான்  தெரியுமா? ஒரு பொண்ணுக்கு ஆசப்பட்டு தான் அந்த ரண்டு பேரும் சண்ட புடிச்சி கடைசில காபீல் ஹாபீல கொன்னான், அது தெரியாம பேசுது நம்ம கத்திரிக்கா. நம்ம பயாஸ் கூட அழகா சொன்னாரு. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு பலமொழி சொல்லுவாங்க. ஆனா இவங்களால ஆவுதோ இல்லயோ அழிவு நிறைய ஏற்படுதுன்னு அதுக்கு இந்த கொலை கூட நல்ல உதாரணங்க.

அடுத்து , நடுவுல இருக்குதே அந்த புடலங்கா வந்துச்சு. பெத்தவங்கள கவனிக்குறதே நாங்க தான் அப்டின்னுச்சு. நீங்க எங்கம்மா கவனிக்கிறீங்க? நீங்க தான் கல்யாணம் கட்டுன கையோட பிச்சிக்கிட்டு பறந்துருவீங்களே. நாங்க தான முழுமையா கவனிக்கிறோம்.

நடுவர் அவர்களே! குழந்தைகள புழு பூச்சின்னு சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? என் வயித்துல ஒரு புழு பூச்சும் இல்லன்னு சொல்வாங்க. புழுங்குறது ஆம்பளப் புள்ள. பூச்சிங்குறது பொம்பளப்புள்ள. எதுக்கு அப்டி சொல்றாங்கன்னு தெரியுமா? புழு ஒரு இடத்துலயே தான் இருக்கும். அப்டியே போனாலும் மறுபடியும் அந்த இடத்துக்கே வந்துறும். ஆனா பூச்சி ஒரேயடியா பறந்து போயிடும். இவங்க ஒரேயடியா பறந்து போறதுனால தான் இவங்கள பாத்து பூச்சின்னு சொல்றாங்க. அதனால பெத்தவங்க கூட கடைசி வரைக்கும் இருந்து அவங்கள கவனிக்கிறது நாங்க தான் பாத்துக்கோங்க.

அடுத்து மூனாவதா உக்காந்துருக்குற வெண்டக்கா வந்துச்சு, நல்ல பசங்களும் டைனோஸரும் ஒன்னுன்னு சொல்லுச்சு. நடுவர் அவர்களே நாங்க டைனோஸர்னா அவங்க யாரு தெரியுமா? வைரஸ். வரவே கூடாது, வந்துடுச்சின்னா உடனே கிளீர் பன்னிடனும். இல்லன்னா பெரிய ஆபத்தா போயிடும். நடுவர் அவர்களே நீங்க எதுக்கும் கொஞ்சம் தள்ளியே உக்காருங்க. அப்பறம் வைரஸ் ஒட்டிக்கப் போகுது.

அடுத்து, ஆம்பளைங்க பெத்தவங்கள கவனிக்கிறது இல்ல. கவனிச்சா ஏன் அவங்க முதியார் இல்லத்து போறாங்க அப்டின்னு கேட்டுச்சி நம்ம புடலங்கா. நடுவர் அவர்களே இன்னைக்கி நிறைய ஆம்பளைங்க பெத்தவங்கள  கவனிக்கனுந்தான் ஆசப்படுறாங்க. ஆனா பொண்டாட்டிய வர்ர இவங்க  விடுறதில்லயே. நொய் நொய்யுன்னு ஏதாவது மாமியார் கூட சண்டயப் போறதுடு, அதனால இந்த பஜாரி கூட இருக்குற விட முதியோர் இல்லமே மேல்னு போயிடுறாங்க. நடுவர் அவர்களே எங்கயாவது நீங்க மாமனார் மருமகன் சண்டய பாத்துருக்கீங்களா? பாக்க முடியாது, ஆனா எல்லா வீட்டுலயும் மாமியார் மருமகள் சண்ட இருக்கும். அப்ப இவங்களால தான குடும்பத்துல நிம்மதியே கெட்டுப்போகுது.

அடுத்து , எங்களப்பாத்து.... நீங்க இரக்கமில்லாம வரதட்சணை வாங்குறதனால தான் பொம்பளப் புள்ளைய பெத்தவங்க கவலப் படுறாங்கன்னு சொல்லிச்சி நம்ம வெண்டக்கா. ஏம்மா நாங்களாம்மா வாங்குறோம். மாப்பிள்ள பெத்த நீங்க தானம்மா கேக்குறீங்க அத குடுங்க இத குடுங்கன்னு.

அப்டியே ஒன்னும் வாங்காம நாங்க கல்யாணம் பன்னுனாலும் உங்க ஓட்ட வாய் சும்மாவா இருக்குது. அடியே...மாப்பிள்ளைட்ட ஏதோ குற இருக்குதுடீ அதான் ஒன்னும் வாங்கல போல அப்டின்னு பொரலிய கிளப்பி விடுறது. இவங்க ஓட்ட வாயிக்கு பயந்தே..... தாங்க இன்னைக்கி நிறைய பேரு வாங்குறாங்க.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லி முடிக்கிறேன்,ஒரு ஆள் நொண்டிக்கிட்டே..... டாக்டர்ட போனாரு, என்னங்க என்ன ஆச்சி ஏன் நொண்டுறீங்கன்னு  டாக்டர் கேட்டாரு. கால்ல அடி பட்டுடிச்சு, நடக்க முடியல சார் அப்டின்னு அவர் சொன்னாரு. தனியாவா வந்தீங்க...உங்க WIFE  ப துணைக்கு கூப்புட்டு வர வேண்டியது தான அப்டின்னு டாக்டர் சொன்னாரு. அப்ப அவர் என்ன சொன்னாருன்னு தெரியுமா? சார் என்னால கால் வலியையே தாங்க முடியல இதுல தலைவலி வேற எதுக்கு சார் அப்டின்னு சொன்னாரு.  எனவே ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்துக்கும் தடையா இருப்பதே பெண்கள் தான் என்று கூறி விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.

 






No comments:

Post a Comment