Thursday, July 30, 2020

ஹஜ்ஜின் படிப்பினை




அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான, மற்ற மாதங்களில் இல்லாத தனிச்சிறப்பையும் மகத்துவத்தையும் உள்ளடக்கிய மாதமான  துல்ஹஜ் மாத்ததை நாம் அடைந்திருக்கிறோம்.

உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் புறப்பட்டுச் சென்று உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பெரும் ஆசையுடனும் வாழ்நாளின் மிகப்பெரும் இலட்சியத்தை அடையப்போகிறோம் என்ற பெருமிதத்துடனும் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவு செய்வதற்காக ஹரமிலே ஹாஜிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிற வேளை இது.ஹஜ்ஜுக்கு சென்று அந்த புனித இடங்களைக் கண்டு அங்கே உள்ளத்தை பரிகொடுத்தவர்கள், அந்த பசுமையான நினைவுகளை உள்ளத்தில் அசைபோட்டுப் பார்க்கிற நேரம் இது. இதுவரை செல்லாதவர்கள் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க வில்லையே! மரணம் நெருங்கும் முன் அந்த இடங்களை நெருங்கும் நஸீபு நமக்கு கிடைக்குமோ! கிடைக்காதோ! என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற தருணம் இது. ஆக உலகம் முழுக்க வாழும் இஸ்லாமியர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் உணர்வுகளும் ஏதோ வகையில் கஃபதுல்லாஹ்வை வட்டமிட்டுக் கொண்டிருக்கிற பொன்னான நேரம் இது.கண்டதையும் கண்டு கழித்துக் கொண்டிருக்கிற நம் கண்களுக்கு அந்த கஃபதுல்லாஹ்வை காணும் பாக்கியத்தை வல்ல இறைவன் வாழ்வில் ஒரு முறையேனும் தருவானாக.

துல்ஹஜ் மாதத்தின் மகத்தான நாட்களை நாம் அடைந்திருக்கிறோம்.அமல்களால் நற்காரியங்களால் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் உன்னதமான நாட்கள் இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்.

ما من أيَّامٍ أفضلُ عند اللهِ ولا العملُ فيهنَّ أحبُّ إلى اللهِ عزَّ وجلَّ من هذه الأيَّامِ يعني من العشرِ

இந்த பத்து நாட்களை விட மிகச்சிறந்த, அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்களை செய்யக்கூடிய வேறு நாட்கள் இறைவனிடத்தில் இல்லை. (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 2/191)

வருடத்தின் 360 நாட்களுக்கு இல்லாத தனிச்சிறப்பும் மகத்துவமும் மகிமையும் இந்த நாட்களுக்கு உண்டு.அதற்கான காரணத்தை அலசுகிற போது புகாரி ஷரீபின் விரிவுரையாளர் அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் ஃபத்ஹுல் பாரியிலே لاجتماع امهات العبادة இஸ்லாத்தின் தலையாயக் கடமைகள் அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது இந்த நாளில் தான் என்பார்கள்.இந்த நாட்களில் தொழுகை இருக்கிறது,நோன்பு இருக்கிறது, ஸதகா இருக்கிறது, ஹஜ் இருக்கிறது.ஒட்டு மொத்த அமல்களின் சங்கமமாக இருக்கிற காரணத்தினால் இந்த நாட்களுக்கு தனிச்சிறப்பு.

أن الله اختار من الأيام أربعة ومن الشهور أربعة، ومن النساء أربعة، وأربعة يسبقون إلى الجنة وأربعة اشتاقت لهم الجنة.
-------
* أما الأيام فأولها يوم الجمعة فيه ساعة لا يوافقها عبد مسلم يسأل الله شيئا من أمر الدنيا والآخرة إلا أعطاه الله إياه.
- وثانيها يوم عرفة فإذا كان يوم عرفة يباهى الله ملائكته فيقول يا ملائكتى انظروا إلى عبادى جاءوا شعثا غبرا قد أنفقوا الأموال وأتعبوا الأبدان اشهدوا أنى قد غفرت لهم.
- وثالثهما يوم النحر فإذا كان يوم النحر وقرب العبد قربانه فأول قطرة قطرت من القربان تكون كفارة لكل ذنب عمله العبد.
- ورابعها يوم الفطر فإذا صاموا شهر رمضان وخرجوا إلى عيدهم يقول الله تبارك وتعالى لملائكته إن كل عامل يطلب أجره وعبادى صاموا شهرهم وخرجوا من عيدهم يطلبون أجرهم أشهدكم أنى قد غفرت لهم وينادى المنادى يا أمة محمد ارجعوا فقد بدلت سيئاتكم حسنات.
---------
* وأما الشهور فرجب وذو القعدة وذو الحجة والمحرم.
* وأما النساء فالسيدة مريم بنت عمران والسيدة خديجة بنت خويلد والسيدة آسيا امرأة فرعون والسيدة فاطمة بنت رسول الله صلي الله عليه وسلم .
--------
* وأما السابقون فلكل قوم سابق فسيدنا محمد صلي الله عليه وسلم سابق العرب وسيدنا سلمان الفارسى سابق الفرس وسيدنا صهيب سابق الروم وسيدنا بلال سابق الحبشة.
----
* وأما الأربعة الذين اشتاقت لهم الجنة فسيدنا على بن أبى طالب كرم الله وجهه وسيدنا سلمان الفارسى وسيدنا عمار بن ياسر وسيدنا المقداد بن الأسود.
==============
*ذكره حجة الإسلام الإمام الغزالى فى مكاشفة القلوب*.
عن الصحابى الجليل سيدنا عبد الله بن مسعود رضى الله عنه
 

அல்லாஹுத்தஆலா நாட்களில் நான்கையும் மாதங்களில் நான்கையும் பெண்களில் நான்கு பேரையும் தேர்வு செய்து கொண்டான். மேலும் நான்கு நபர்கள் சுவனத்திற்கு முந்திச் செல்வார்கள்.நான்கு நபர்களை சுவனம் விரும்புகிறது. அந்த நான்கு நாட்களில் ஒன்று ஜும்ஆ நாள். 2 வது அரஃபாவுடைய நாள். 3 வது தியாகத்திருநாள். 4 வது ஈகைத்திருநாள்.அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவையாகும். அந்த நான்கு பெண்கள் மர்யம் அலை, ஹதீஜா ரலி, ஆசியா அம்மையார், ஃபாத்திமா ரலி ஆகியோராகும். சுவனத்திற்கு முந்திச் செல்லும் அந்த நான்கு நபர்கள் அரபிகளில் முஹம்மது நபி அவர்களும் பாரசீகத்தில் மான் ஃபாரிஸி ரலி அவர்களும், ரோமானியர்களில் ஸுஹைப் ரலி அவர்களும் அபீஸீனியாவில் பிலால் ரலி அவர்களும் ஆவார்கள். சுவனம் தேடும் நான்கு நபர்கள் அலி ரலி, மான் ஃபாரிஸி ரலி,அம்மார் பின் யாஸிர்,மிக்தாத் பின் அஸ்வத் ரலி ஆகியோராகும். (நூல் ; முகாஷஃபதுல் குலூப், தன்பீஹுல் காஃபிலீன்)

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அமல்கள் செய்வதற்கு பொறுத்தமான அவ்வாறு அமல்கள் செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்குத் தோதுவான மிகச்சிறந்த நாட்கள் துல்ஹஜ் மாதத்தின் இந்த பத்து நாட்கள்.இன்னும் ஒரு சில தினங்களில் இன்ஷா அல்லாஹ் தியாகத் பெருநாள். தியாகத்திருநாள் என்றாலே நம் எல்லோரின் சிந்தனையிலும் வருவது அந்த தியாகத்திருநாளின் மூலக்கருவான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பமும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சோதனைகளும் அந்த சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றிய அவர்களது மன உறுதியும் தான்.

ان ابراهيم كان امة

இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகத் திகழ்ந்தார்கள் (16 ; 120) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த வசனத்தில் இடம்பெற்றிருக்கிற உம்மத் என்ற வார்த்தைக்கு பலவாரான விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் ரஈஸுல் முஃபஸ்ஸரீன் ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் كان عنده من الخير ما كان عند أمة، ஒரு சமூகத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து  செய்ய வேண்டிய பணியை தன்னந்தனியாக அவர்கள் செய்து முடித்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களிடத்தில் இருக்கின்ற மனஉறுதியும் துணிச்சலும் அவர்களிடத்தில் இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தில் இருக்கிற ஈமானையும் ஈமானிய பலத்தையும் அவர்கள் பெற்றிருந்தார்கள் என்று குறிப்பிடுவார்கள்.அதனால் அல்லாஹ் அவர்களை மிகச்சிறந்த வழிகாட்டி என்று அடையாளப்படுத்துகிறான்.

قد كانت لكم اسوة حسنة في ابراهيم والذين معه

நிச்சயமாக இப்ராஹீம் நபி மற்றும் அவர்களுடன் இருந்தவர்களிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் : 60 ; 4)

கொஞ்சம் கூட அச்சுப் பிசகாமல் அடி பிறழாமல் மக்களால் ஒரு சமூகத்தால் பின்பற்றப்பட வேண்டும்,மார்க்கம் சொல்கின்ற உண்மையான   தலைமைத்துவத்துக்குத் தேவையான அத்தனை பண்புகளும் அமையப்பெற்றிருக்க வேண்டும்.அத்தகைய தலைமைக்குத்தான் உஸ்வா என்று சொல்லப்படும்.அந்த உஸ்வா என்று அல்லாஹ் இருவரைத்தான் குறிப்பிடப்பிடுகிறான்.ஒன்று அண்ணலம் பெருமானார் அவர்கள்.மற்றொன்று இப்ராஹீம் அலை அவர்கள்.

அவர்கள் வாழ்வில் நமக்கு எண்ணற்ற பாடங்களும் படிப்பினைகளும் முன்மாதிரிகளும் உண்டு.அதில் ஒரு பாடம் மிக முக்கியமானது.நாம் என்றைக்கும் நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது.வாழ்க்கை என்பது அது சோதனைக்களம். மனித வாழ்வில் சோதனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். சோதனைகளை அல்லாஹ் தருவது நம்மைப் பக்குவப்படுத்துவதற்கும் பன்படுத்துவதற்கும் தான்.அந்த சோதனைகள் வருவது தான் அல்லாஹ் நம்மை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம்.

நோயுற்ற தன் குழந்தை சுகம் அடைய தாய் அக்குழந்தைக்கு மருந்து கொடுக்கிறாள்.மருந்தின் கசப்பினால் மருந்தை குடிக்க முடியாது என்று குழந்தை அழுகிறது அலறுகிறது. கூட சுற்றி நிற்கும் உறவினர்கள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர். வழமையாக தன் குழந்தையின் சிறு அழுகையை கூட தாங்கி கொள்ள முடியாமல், குழந்தை எதைக் கேட்டாலும் அதை உடனே செய்து விடும் தாய், அப்போது குழந்தையின் அந்த அழுகையைப் பொருட்படுத்துவதில்லை.காரணம், அப்போது அவளுக்கு வேண்டியதெல்லாம் தன் குழந்தையின் ஆரோக்கியமும், தன் குழந்தைக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற எண்ணமும் மட்டுமே. கசப்பான மருந்தைக் கொடுப்பதினால் குழந்தையின் தாயுக்கு பாசம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இதேபோல் தான், தன் நேசர்கள் மீது அளவில்லா அன்பு கொண்டுள்ள அல்லாஹ் தன் நேசனை பக்குவப்படுத்த  நாடுகிறான். அப்போது அவன் கொடுக்கும் கசப்பான மருந்து தான் இந்த சோதனைகள்.சோதனைகளைத் தருவதினால் அந்த அடியான் மீது அல்லாஹ்வுக்கு அன்பில்லை என்று சொல்ல முடியாது.சோதனைகள் தான் அல்லாஹ்வின் அன்புக்கான அடையாளம்.

إنَّ اللهَ إذا أَحَبَّ قومًا ابتلاهم ، فمن صبر فله الصبرُ ، و من جزع فله الجزَعُ

நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமூகத்தை நேசித்தால் அவர்களை சோதிக்கிறான். (ஸஹீஹுல் ஜாமிவு ; 1706)

அல்லாஹுத்தஆலா நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகளைக் கொடுத்தான், கொடுக்கப்பட்ட அத்தனை சோதனைகளிலும் கொஞ்சம் கூட தளர்ந்து விடாமல் அவை அனைத்தையும் பொருந்திக் கொண்டார்கள்,அல்லாஹ்வின் பொரு த்தத்தைப் பெற்று خليل ஆக ஆனார்கள்.

முஸ்லிமாகப் பிறந்தவர்கள் அதை எதிர் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.அந்த சோதனைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதை முதலில் உணர வேண்டும்.அதில் பொறுமை கொள்ள வேண்டும்,அல்லாஹ்விற்காக எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்,தன் விரும்பத்தைக் காட்டிலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முதலிடம் தர வேண்டும்.ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வும் நமக்கு இந்த பாடத்தைத் தான் தருகிறது.


عمران بن حصين -رضي الله عنه-، أصابه شلل نصفي فرقد على ظهره ثلاثين عامًا حتى توفي وهو لا يتحرك،  أنهم نقبوا له في السرير، أي: جعلوا فيه فتحة ليقضي حاجته لأنه لا يستطيع الحركة، فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه، أشهدكم أني راضٍ عن ربي الصحابة الصحابة

இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்களோடு ஒன்றாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபித்தோழர். நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் கடுமயான வாத நோய் தாக்கப்பட்டு 30 வருடம் படுக்கை வாழ்க்கை.சுய தேவைகளைைக் கூட எழுந்து செய்ய முடியாத அளவு படுத்த படுக்கையாக இருந்தார்கள்.உடலை அசைக்க கூடமுடியாத கடுமையான நோய்.அப்போது அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டு விட்டேன்,அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டுவிட்டேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில்நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்அவர்களை சந்திக்கிறேன்அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன்நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாகஅவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள். (உஸ்துல் ஃகாபா )


 சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையில் காண்கிறீர்கள்,ஆனால் நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்,அவர்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார்கள்.

سُئِل يحيى بن معاذ: متى يبلغ الإنسان مقام الرضا؟ قال: إذا أقام على نفسه أربعة أصول يعامل بها ربه، يقول إن أعطيتني قبِلت، وإن منعتني رضيت، وإن تركتني عبدت، وإن دعوتني أجبت".

ஒரு மனிதர் எப்போது அல்லாஹ்வை பொருந்திக் கொள்ளும் நிலைக்கு வருகிறார் என்று யஹ்யா பின் முஆத் ரலி அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளக்கூடிய நான்கு அடிப்படைகளை ஒருவர் தன் மீது அமைத்துக் கொள்ளும் போது தான் அந்த நிலைக்கு வர முடியும். 1, எனக்கு நீ கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன். 2,எனக்கு கொடுக்க வில்லையென்றால் நான் பொருந்திக் கொள்வேன். 3,என்னை நீ கை விட்டு விட்டாலும் நான் உன்னை வணங்குவேன். 4, என்னை அழைத்தால் நான் பதில் தருவேன் என்று அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் நம் வாழ்வில் எதை செய்தாலும் அதை பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் விருப்பத்தையே நம் விருப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதில் தான் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிறது.  

وكان عمران بن حصين- رضي الله عنه - من الصابرين صبراً جميلاً على ما ابتلاه الله تعالى به من علَّة بقيتْ في بدنه ثلاثين عاما، ولم تَحُل بينه وبين مواصلة العبادة قائماً وقاعداً وراقداً، وإذا عاده إخوانه وواسَوه في بليته، قال لهم مُغتبطًا مُبتسماً: «إن أحب الأشياء إلى نفسي أحبها إلى الله»

இம்ரான் பின் ஹுஸைன் ரலி அவர்களுக்கு நோய் ஒன்று ஏற்பட்டு 30 வருடங்களாக அவர்களுக்கு இருந்தது. அந்த நேரங்களில் அதை நினைத்து ஒரு தடவை கூட அவர்கள் வருத்தப்பட்டதில்லை. முகம் சுழிக்க வில்லை. அந்த சிரமத்தை வெளிக்காட்ட வில்லை. தன் வணக்கங்களில் எந்தக் குறையும் வைக்க வில்லை. அவர்களை சந்திக்க வரக்கூடியவர்களும் அவர்களின் தோழர்களும் அவர்களின் அந்த நிலையைப் பார்த்து வருந்துவார்கள், கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களோ சிரித்துக் கொண்டே இறைவனுக்கு பிடித்தமானது தான் உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுவார்கள்.

أن عيسى -عليه السلام- مر برجل أعمى أبرص مقعد مضروب الجنبين بفالج وقد تناثر لحمه من الجذام، وهو يقول: الحمد لله الذي عافاني مما ابتلى به كثيرا من خلقه،فقال له عيسي اي شيي من البلاء قد عافاك الله منه فقال  يا نبي الله انا خير ممن لم يجد في قلبه معرفة ربه

ஹள்ரத் ஈஸா அலை அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவருக்கு கண் பார்வை இல்லை.தொழுநோயாளியாகவும் கால் ஊனமாகவும் கைகள் இல்லாதவராக வும் இருந்தார்.ஆனால் அவர் உலகில் அதிகமான மனிதர்கள் எதைக் கொண்டு சோதிக்கப்பட்டிருக்கிறார்களோ அதிலிருந்து நிவாவரணத்தைத் தந்த அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருந்தார். அது என்ன சோதனை என்று ஈஸா அலை அவர்கள் கேட்ட போது அல்லாஹ்வை விளங்காமல் இருப்பது என்று கூறினார். (நுஜ்ஹதுல் மஜாலிஸ்)

அல்லாஹ் கொடுக்கும் சோதனைகளை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அதை பொருந்திக் கொள்ள வேண்டும்.இது தான் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் அந்த தன்மையை நம் அனைவருக்கும் தருவானாக.


4 comments: