அல்லாஹ்வின் அருளால் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினத்தை சந்திக்க இருக்கின்றோம். ஆஷூரா என்றால் பத்தாவது என்று பொருள். எல்லா மாதங்களிலும் பத்தாவது நாள் உண்டு என்றாலும், முஹர்ரம் மாதத்தின் பத்தாவது தினத்திற்கே இந்த பெயர் சொல்லப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் இந்த நாளில் நடந்திருப்பதாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
Ø நூஹ் நபி அலை
அவர்களும் அவர்களோடு ஈமான் கொண்ட மக்களும் ஜீவராசிகளும் வெள்ளத்திலுருந்து
பாதுகாக்கப்பட்ட நாள்.
Ø ஆதம் நபி அலை
அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்கிய நாள்.
Ø யூனுஸ் நபி அலை
அவர்களின் கூட்டத்தாரின் தவ்பாவை ஏற்றுக் கொண்ட நாள்.
Ø இப்ராஹீம் நபி
அலை அவர்கள் பிறந்த நாள்.
Ø மூஸா நபி அலை
அவர்களையும் அவர்களின் கூட்டத்தாரையும் அல்லாஹ் பாதுகாத்த நாள்.
Ø அய்யூப் நபி
அலை அவர்களுக்கு நோய் நிவாரணம் கிடைத்த நாள்.
قال الحافظ
ابن كثير في البداية والنهاية: وقال قتادة وغيره: ركبوا في السفينة في اليوم
العاشر من شهر رجب، فساروا مائة وخمسين يوما واستقرت بهم على الجودي شهرا. وكان
خروجهم من السفينة في يوم عاشوراء من المحرم، وقد روى ابن جرير خبرا مرفوعا يوافق
هذا، وأنهم صاموا يومهم ذلك
وفي رجبٍ حملَ
اللَّهُ نوحًا في السَّفينةِ فصامَ رجبَ وأمرَ من معهُ أن يصوموا فجرت بهمُ
السَّفينةُ سبعةَ أشهرٍ أخرَ ذلكَ يومُ عاشوراءَ أهبطَ على الجوديِّ فصامَ نوحٌ
ومن معهُ والوحشُ شكرًا للَّهِ عزَّ وجلَّ وفي يومِ عاشوراءَ فلقَ اللَّهُ البحرَ
لبني إسرائيلَ وفي يومِ عاشوراءَ تابَ اللَّهُ عزَّ وجلَّ على آدمَ ﷺ وعلى مدينةِ
يونسَ وفيهِ ولدَ إبراهيمُ ﷺ
நூஹ் அலை
அவர்களின் காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது அவர்களும் அவர்களோடு இருந்தவர்களும்
ரஜப் மாதம் பத்தாம் நாள் அந்த கப்பலில் ஏறினார்கள். 150 நாட்கள் அந்த கப்பல்
பயணித்தது. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் ஜூதி மலையில் வந்து நின்றது. அங்கே ஒரு
மாதம் நின்ற பிறகு அனைவரும் முஹர்ரம் பத்தாம் நாள் அந்த கப்பலிலிருந்து
வெளியேறினார்கள்.அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவர்கள் நோன்பு
நோற்றார்கள். (அல்பிதாயா வன்
நிஹாயா)
அந்த நாளில் தான் அல்லாஹ் பனூ இஸ்ராயீல் சமூகத்தை கடலை பிளந்து
காப்பாற்றினான். அந்த நாளில் தான் ஆதம் அலை அவர்களை மன்னித்தான். அந்த நாளில் தான்
யூனுஸ் அலை அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொண்டான். அந்த நாளில் தான் இப்ராஹீம் அலை
அவர்கள் பிறந்தார்கள். (தப்ரானி)
فَتابَ
عَلَيْهِ﴾ أَيْ قَبِلَ تَوْبَتَهُ، أَوْ وَفَّقَهُ لِلتَّوْبَةِ. وَكَانَ ذَلِكَ
فِي يَوْمِ عَاشُورَاءَ فِي يَوْمِ جُمُعَةٍ (قرطبي)
ஆஷூரா தினத்தில்
வெள்ளிக்கிழமையன்று அல்லாஹ் ஆதம் நபி அலை அவர்களுக்கு தவ்பாவை வழங்கினான். (தஃப்ஸீர் குர்துபீ)
فلولا كانت قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ
يُوْنُسَ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا
عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى
حِيْنٍ
தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர்
வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை
கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை
வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம்
நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம்
சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம். (அல்குர்ஆன் : 10:98)
وَرُوِيَ عَنْ
عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ: إِنَّ الْحَذَرَ لَا يَرُدُّ
الْقَدَرَ، وَإِنَّ الدُّعَاءَ لَيَرُدُّ الْقَدَرَ. وَذَلِكَ أَنَّ اللَّهَ
تَعَالَى يَقُولُ: "إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنا عَنْهُمْ
عَذابَ الْخِزْيِ فِي الْحَياةِ الدُّنْيا". قَالَ رَضِيَ اللَّهُ عَنْهُ:
وَذَلِكَ يَوْمُ عَاشُورَاءَ. قرطبي
யூனுஸ் அலை
அவர்களின் சமூகத்திற்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்கியது ஆஷூரா தினத்தில் என்று அலி
ரலி அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)
இவ்வாறு எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்த
அதே நாளில் தான் நபி ஸல் அவர்களின் பேரரான ஹுஸைன் ரலி அவர்கள்
ஷஹீதாக்கப்பட்டார்கள்.
ஈராக்கிலுள்ள
கர்பலா எனும் நகரில் நடைபெற்ற ஒரு போரில் நபி (ஸல்) அவர்களின் பேரரான ஹுஸைன் (ரலி)
அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட சோக சம்பவம் (முஹர்ரம் பத்தாம் நாளில்) நடந்ததால் இதன்
நினைவாக 'ஷியாக்கள்' அந்த
நாளை துக்க நாளாகக் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு
வருடமும் அதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த செய்தி.
ஆனால் அந்த ஷீயாக்களின் கலாச்சாரம் இன்று நம்மிடத்திலும் ஊடுறுவி
இருக்கின்றது. அவர்களைப் போன்று ஹுஸைன் ரலி அவர்களின் நினைவாக தங்களை
காயப்படுத்திக் கொள்ளும் நடைமுறை இல்லா விட்டாலும் அதற்காக துக்கம் அனுஷ்டித்தல்
என்ற நடைமுறை நம்மில் சிலரிடத்தில் வேறு கோணத்தில் இருக்கின்றது.
அதாவது முஹர்ரம் மாதம் பத்து நாட்களில் மீன் சாப்பிடக்கூடாது,வீடு
குடி போகக்கூடாது, கணவன், மனைவி
இல்லறத்தில் ஈடுபடக் கூடாது போன்ற நடைமுறைகள் நம் சமூகத்தில் பல குடும்பங்களில்
இன்றும் இருந்து வருகிறது. இது ஷரீஅத் காட்டித்தராத ஒரு வழிமுறை. மட்டுமல்ல,
ஷரீஅத்திற்கு முற்றிலும் முரணாண செயல். பல கோணங்களில் இது ஷரீஅத்திற்கு
முரண்படுகின்றது.
1. 1. ஷரீஅத்தில் கணவனுக்காக மனைவியைத் தவிர வேறு
எவரும் யாருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேலாக துக்கம் அனுஷ்டிப்பது கூடாது.
இதை ஸஹாபாக்கள் சரியாக கடைபிடித்தார்கள். யாருக்காகவும் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.
عن حميد بن
نافع ، عن زينب بنت أبي سلمة ; أنها أخبرته هذه الأحاديث الثلاثة . قالت زينب :
دخلت على أم حبيبة ، زوج النبي - صلى الله عليه وسلم - حين توفي أبوها أبو سفيان
بن حرب ، فدعت أم حبيبة بطيب فيه صفرة
خلوق أو غيره فدهنت به جارية ، ثم مسحت بعارضيها ، ثم قالت : والله ، ما لي
بالطيب من حاجة . غير أني سمعت رسول الله - صلى الله عليه وسلم - : يقول : "
لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق ثلاث ليال ، إلا على
زوج أربعة أشهر وعشرا
" .
قالت زينب :
ثم دخلت على زينب بنت جحش ، زوج النبي - صلى الله عليه وسلم - حين توفي أخوها ،
فدعت بطيب فمست منه . ثم قالت : والله ما لي بالطيب حاجة . غير أني سمعت رسول الله
- صلى الله عليه وسلم - يقول : " لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر تحد
على ميت فوق ثلاث ليال ، إلا على زوج أربعة أشهر وعشرا " .
ஜைனப் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;
அன்னை) உம்மு
ஹபீபா (ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு
ஹர்ப் (ரலி) (ஷாம் நாட்டில்) இறந்து விட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது
நாள்) உம்மு ஹபீபா (ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு
கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரண்டு
கன்னங்களிலும் தடவினார்கள். பின்னர், ‘அல்லாஹ்வின்
மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும்
எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல்
துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக
நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!’ என்று கூறக்கேட்டுள்ளேன். (எனவேதான் இப்போது
நறுமணம் பூசினேன்.)” என்றார்கள்.
(அன்னை) ஸைனப்
பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி
பூசிக்கொண்டார்கள். பிறகு, ‘இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின்
மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின்
மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு
மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன்
கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள்ளேன்”
என்றார்கள்.
எனவே கணவனை இழந்த மனைவியைத் தவிர எந்த மரணித்திற்காகவும் யாரும்
மூன்று நாட்களுக்கு மேலாக துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.கணவனை இழந்த
மனைவியும் கூட இத்தா இருக்கும் அந்த நாட்களில் அலங்காரம், உயர் ரக ஆடைகள்,நறுமணம்,
ஆபரணங்கள், சுர்மா, மறுமணம் குறித்த பேச்சுக்கள் இவைகளைத் தான் ஷரீஅத் கூடாது என்கிறது.
அந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் விதமாக நல்ல உணவுகளை சாப்பிடக்கூடாது என்று
மார்க்கம் அறிவுறுத்த வில்லை. எனவே ஹுஸைன் ரலி அவர்களின் பெயரால் இன்று
கடைபிடிக்கப்படுகின்ற விஷயங்கள் ஷரீஅத்திற்கு முற்றிலும் முரணானவை.
2. 2. மார்க்கத்தில் ஆகுமான ஒன்றை நாமாக
ஹராமாக்கக்கூடாது
وَلَا
تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا
حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ
عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ
உங்கள் நாவில்
வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்;
இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது
அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை
செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 16:116)
قُلْ
اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ
حَرَامًا وَّحَلٰلًا قُلْ آٰللّٰهُ
اَذِنَ لَـكُمْ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ
(நபியே! அவர்களை
நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில்
சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள்
விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி
உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது
அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று
(அவர்களைக்) கேட்பீராக! (அல்குர்ஆன்
: 10:59)
يٰۤاَيُّهَا
النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ تَبْتَغِىْ مَرْضَاتَ
اَزْوَاجِكَ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
நபியே! நீர்
உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு
ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து
அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக
மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.(அல்குர்ஆன் : 66:1)
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
كَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ
جَحْشٍ، وَيَمْكُثُ عِنْدَهَا، فَوَاطَيْتُ أَنَا وَحَفْصَةُ عَلَى، أَيَّتُنَا دَخَلَ
عَلَيْهَا فَلْتَقُلْ لَهُ: أَكَلْتَ مَغَافِيرَ، إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ
مَغَافِيرَ، قَالَ: «لاَ، وَلَكِنِّي كُنْتُ أَشْرَبُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ
بِنْتِ جَحْشٍ، فَلَنْ أَعُودَ لَهُ، وَقَدْ حَلَفْتُ، لاَ تُخْبِرِي بِذَلِكَ
أَحَدًا»
ஆயிஷா (ரலி) கூறினார்கள்
;
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)
அவர்களிடம், (அவர்களின் அறையில்) தேன் சாப்பிட்டு விட்டு,
அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல்
நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்:
(தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி(ஸல்) அவர்கள்
முதலில் வருவார்களோ அவர், நபி (ஸல்)
அவர்களிடம் ‘கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து,
பிசினின் துர்வாடை வருகிறதே’ என்று கூறிட வேண்டும்.
(வழக்கம் போல்
ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்)
அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள்,
‘இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்யுடம் (அவரின்
அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான்
ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்’
என்று கூறிவிட்டு, ‘இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!’
என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 வது இறைவசனம் அருளப்பெற்றது.) (புகாரி: 4912)
اِتَّخَذُوْۤا
اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ
ابْنَ مَرْيَمَ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا
لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا لَاۤ
اِلٰهَ اِلَّا هُوَ سُبْحٰنَهٗ عَمَّا
يُشْرِكُوْنَ
இவர்கள்
அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும்,
மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்)
கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய
ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும்
ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை.
அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)
-وقد جاء عدي
بن حاتم إلى النبي -وكان قد دان بالنصرانية قبل الإسلام- فلما سمع من النبي هذه
الآية، قال: يا رسول الله! إنهم لم يعبدوهم. فقال: (بلى، إنهم حرموا عليهم الحلال،
وأحلوا لهم الحرام فاتبعوهم، فذلك عبادتهم إياهم).
இந்த வசனம் அருளப்பட்ட நேரத்தில் அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அதீ
பின் ஹாதம் ரலி அவர்கள் அவ்வாறு நஸாராக்களில் எவரும் தங்களுடைய பாதிரிகளையும்,
சந்நியாசிகளையும் வணங்க வில்லையே என்று கேட்டார்கள். அதற்கு
நபியவர்கள் அவர்கள் ஹலாலை ஹராமாக்கினார்கள். ஹராமை ஹலாலாக்கினார்கள். மக்கள்
அவர்களை பின்பற்றினார்கள் என்று கூறினார்கள்.
எனவே இதன் அடிப்படையிலும் இன்று மக்களில்
சிலர் செய்கின்ற காரியங்கள் ஷரீஅத்திற்கு எதிரானது.
3. 3. மார்க்கத்தில் இல்லாத
புதுமையான விஷயங்களை செய்யவோ உருவாக்கவோ கூடாது.
وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ
بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ذٰ لِكُمْ
وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய
வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக
(உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்). (அல்குர்ஆன் : 6:153)
عن مُجاهِدٍ
أنَّه قال في قَولِه: وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، قال: (البِدَعُ والشُّبُهاتُ)
وقال
الشَّاطِبيُّ: (الصِّراطُ المُستَقيمُ هو سَبيلُ اللهِ الَّذي دَعا إليه، وهو
السُّنَّةُ، والسُّبُلُ هيَ سُبُلُ أهلِ الاختِلافِ الحائِدينَ عنِ الصِّراطِ
المُستَقيمِ، وهم أهلُ البِدَعِ
இந்த வசனத்தில் மற்ற வழிகள் என்பதைக் கொண்டு உத்தேசம் மார்க்கத்தில்
அடிப்படை ஆதாரம் இல்லாத புதுமையான விஷயங்கள் என்று இமாம்கள் விளக்கம் தருகிறார்கள்.
عَنْ جَابِرِ
بْنِ عَبْدِ اللهِ، قَالَ
كَانَ رَسُولُ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ،
وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ:
«صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ»، وَيَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ
كَهَاتَيْنِ»، وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ، وَالْوُسْطَى،
وَيَقُولُ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ
الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ
ضَلَالَةٌ
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை
நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல்
உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால்,
எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள்
காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில்
உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை
விடுப்பவரைப் போன்றிருப்பார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று
(நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும்
நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள்.
மேலும்,
“அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின்
வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும்.
செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும்.
(மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு
ஆகும்” என்று கூறுவார்கள். (முஸ்லிம் : 1573)
4. 4. இவைகள் ஷீயாக்களின்
வழிமுறை.
ஷீயாக்களிடமிருந்து நாம் எப்போதும் தள்ளியே இருக்க வேண்டும். அவர்கள்
விஷயத்தில் நாம் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாம் என்ற
பெயரை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கும் ஈமானுக்கும் எதிரான மிகவும் ஆபத்தான
கொள்கைகளை உடையவர்கள் ஷீயாக்கள்.
ஷீயாக்களின் கொள்கைகளில் சில.....
Ø நபி ஸல்
அவர்களுக்குப் பிறகு கலீஃபாக அலி ரலி அவர்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.
Ø பாங்கில்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலல்லாஹ் விற்குப் பிறகு அஷ்ஹது அன்ன மவ்லானா அலிய்யன்
வலியுல்லாஹ் என்று சொல்லும் வழமையும் உண்டு.
Ø நபியின்
குடும்பத்தை நேசிக்கிறோம் என்ற பெயரில் மற்ற ஸஹாபாக்களை கடுமையாக சாடுவார்கள்.அபூபக்கர் ரலி, உமர் ரலி, உஸ்மான் ரலி, ஆயிஷா ரலி போன்ற பல
ஸஹாபாக்களை முனாஃபிக் என்றும் காஃபிர் என்றும் பகிரங்கமாக கூறுவார்கள் நவூதுபில்லாஹ்.
உலகில் ஸஹாபாக்களை முதன் முதலாக விமர்சித்தவர்கள் அவர்கள்.
Ø நபிமார்களைப் போன்றே
அவர்கள் இமாம்களாக ஏற்றுக் கொண்டிருப்பர்களும் மஃஸூம் – பாவங்களிலிருந்து
பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது அவர்களின் கொள்கை.
Ø முத்ஆ என்று
சொல்லப்படுகின்ற அக்ரிமண்ட் திருமணத்தை அனுமதிப்பவர்கள். இன்னும் பல.......
அவர்களின் மோசமான கொள்கைகளை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக! ஷரீஅத் காட்டித்தந்த நேரான பாதையில் என்றும் பயணிக்க அருள்
புரிவானாக!
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடைய பதிவு வந்தது மகிழ்ச்சி
ReplyDeleteதங்களுடைய பதிவு தொடர்ந்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்......
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்
Deleteஷியா பிரிவை பற்றி இன்னும் அதிக தகவல்கள் தந்திருக்கலாம்.
ReplyDeleteகட்டுரை நீண்டு விடும். மட்டுமல்ல, பெரும் பெரும் ஸஹாபாக்களை மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதைப்பற்றி எழுதுவதற்கு கூட அச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் தாங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
ReplyDelete