கண்ணியமிக்க ஆண் மகனே! கொஞ்சம் நில்.உண்மையில் நீ சிறந்தவனா? இல்லை இறைவனை மறந்தவனா? என்று எனக்குச் சொல்.
அகராதியில் இல்லாத தட்சனையாம் வரதட்சணை வாங்கி மணமுடித்து மகிழ்வாய் வாழும் ஆண் மகனே! மறுமையிலும் நீ மனம் பெறுவாயா? என்பதை எனக்குச்சொல்.
ச்சீதனம் வாங்கி சிறப்பாய் வாழும் ஆண் மகனே! உனக்கு மறுமையில் கிடைப்பது சீதமா? இல்லை சீல் சலமா? என்று எனக்குச்சொல்.
தங்கம் தங்கமாக கொள்ளையடிக்கும் ஆண் மகனே! உனக்கு மறுமையில் கிடைப்பது தங்க மாலையா? இல்லை நெருப்பு மாலையா? என்று எனக்குச்சொல்.
மூட்டை மூட்டையாக பணத்தைப்பரிக்கும் ஆண் மகனே! உனக்கு மறுமையில் கிடைப்பது பணமா? இல்லை ரணமா? என்று எனக்குச்சொல்.
கல் நெஞ்சம் கொண்ட கயவனே! இன்று உன்னால் எத்தனை குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்,திருமணம் நடக்க வழியில்லாமல் எத்தனை பெண்கள் புத்தி பேதலித்து பைத்தியங்களாக வீதியில் உலா வருகிறார்கள்,தக்க நேரத்தில் திருமணம் நடக்காததால் எத்தனை பெண்களின் கால்கள் விபச்சார விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கி யுள்ளன.இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன.நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ என்ற பயத்தில் எத்தனை இளம்பிஞ்சிக்கள் கருவிலேயே கருவறுக்கப்படுகின்றன,உனக்கு பயந்து எத்தனை முஸ்லிம் மாதர்கள் முருகனுக்கும் அய்யப்பனுக்கும் கழுத்தை நீட்டுகிறார்கள்,இதற்கெல்லாம் இறைவனிடம் என்ன பதில் சொல்லப்போகிறாய்?
கண்ணியவான் என்று பீற்றிக்கொள்ளும் நீ கேவலம் பணத்திற்காக திருமணச்சந்தையில் விலை போகிறாயே இப்போது உன் கண்ணியம் என்ன ஆனது?
பணத்திற்காக விலை போகிற பெண்ணை விபச்சாரி என்கிறாய் ஆனால் பணத்திற்காக உன் வாழ்க்கையை விலை பேசும் உன்னை விபச்சாரன் என்று சொல்லலாமா.....
வீடு தோறும் கரம் ஏந்துபவனை பிச்சைக்காரன் என்கிறாய் ஆனால் பள்ளிவாசல் தோறும் பிச்சை எடுத்த காசை வாங்கும் உன்னை பிச்சைக்காரன் என்று சொல்லலாமா.....
கழுத்தை நெரிப்பவனை கொலைகாரன் என்கிறாய் ஆனால் பல பெண்களை கருவிலேயே கொல்லும் உன்னை கொலைகாரன் என்று சொல்லலாமா.....
பெண்களின் கண்ணீரில் தினம் குளிக்கிற ஆண் மகனே! பதில் சொல் ஏன் மவுனம் சாதிக்கிறாய்?
கை நீட்டி வாங்கி விட்டு கரம் பிடிக்கும் ஆண் மகனே! இனியாவது நீ திருந்தப்பார்,
உன்னால் பெண் சமூகம் வடிக்கும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் உன் வாழ்வை அழிக்கும் சாபம் நிறைந்த நெருப்புப்பொறிகள் என்பதை மறந்து விடாதே.
இப்படிக்கு வேதனையுடன் திருமணம் ஆகாத முதிர்க்கன்னி
No comments:
Post a Comment