Tuesday, March 4, 2014

கதை - சகுணம்.


                                                                                                                                     
ஒரு நாட்டுல ஒரு அரசன் இருந்தான்.அவன் ஒரு நாள் கீழ விழுந்து அவன் கால் ஒடஞ்சிப்போச்சி.அப்ப அவனோட மந்திரிங்க  என்ன ஆச்சி, எப்டி கீழ விழுந்தீங்கன்னு கேட்டாங்க.

அதுக்கு அந்த அரசன் சொன்னான் ; நான் காலையில எழுந்திருச்சி அப்டியே மேலயிருந்து இறங்கி வந்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு கால் வழுக்கி விழுந்துட்டேன். கால் ஒடஞ்சிப்போச்சி அப்டின்னு சொன்னான்.

உடனே அந்த மந்திரிங்க அரசரே இன்னைக்கி முதல்ல எழுந்திருச்சவுடன நீங்க யாரப்பாத்தீங்கன்னு கேட்டாங்க.

நான் இறங்கி வரும் போது வெளியே கேட்டுக்கு பக்கத்துல ஒரு சலவைத்தொழுலாளி தான் நின்னுகிட்டு இருந்தான். அவனத்தான் பாத்தேன் அப்டின்னு அந்த அரசன் சொன்னான்.

உடனே அந்த மந்திரிங்க ; அரசர் அவர்களே! நீங்க விழுந்ததுக்கு அவன் தான் காரணம். காலைல எழுந்த வுடன் முதன்முதல்ல அவன் முகத்துல முழிச்சதனாலத்தான் நீங்க கீழ விழுந்துட்டீங்கன்னு சொன்னாங்க

உடனே அரசன், அந்த சலவைத்தொழிலாளியை கொண்டு வாங்க அவனை தூக்கில போடுங்கன்னு சொன்னான்.

ஆனா தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த சலவைத்தொழிலாளி கொஞ்சம் கூட கவலையில்லாம சிரிச்சிக்கிட்டு இருந்தான்.

அப்ப அரசன் கேட்டான் ; ஏண்டா உனக்கு நான் தூக்கு தண்டன விதிச்சிருக்கேன். கொஞ்ச நேரத்துல நீ சாகப்போற ஆனா கொஞ்சம் கூட சாகப்போறோம்னு பயம் இல்லாம சிரிச்சிக்கிட்டு இருக்குறியே அப்டின்னு கேட்டான்.

அதுக்கு அவன் சொன்னான் ; அரசரே காலைல முதன் முதல்ல என்னப்பாத்ததுனாலத்தான் உங்க கால் போச்சின்னு சொல்றீங்க.ஆனா இன்னைக்கி காலைல நான் முதன் முதல்ல உங்களத்தான் பாத்தேன்.உங்க முகத்துலதான் முழிச்சேன். ஆனா இங்க என் தலையே போப்போதேன்னு நினைச்சிதான் சிரிக்கிறேன் அரசரேன்னு சொன்னான்.
அதுக்கு பிறகு அந்த அரசன் அவன தூக்குல போடாம மன்னிச்சி விட்டுட்டான்.


No comments:

Post a Comment