Monday, October 25, 2021

ஹதீஸ் எண் 54 ان الصدق يهدي الي البر

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، عن النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إنَّ الصِّدقَ يَهْدِي إِلَى البرِّ، وَإِنَّ البر يَهدِي إِلَى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا». متفق عليه

நிச்சயமாக உண்மை பேசுதல் நல்லது செய்வதின் பக்கம் வழிகாட்டும் நல்லது செய்தல் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக உண்மை பேசுபவர் இதில் உண்மையாளர் என அந்த இடம் பதிவு செய்யப்படுவார் நிச்சயமாக பொய் பேசுதல் தவறுகள் செய்வதை வழிகாட்டும் தவறுகள் நரகத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால் அல்லாவிடம் பொய்யர் என பதிவு செய்யப் படுவார். (புகாரி ; 6094)

நம்முடைய பேச்சிலும் செயல்பாடுகளிலும் ஈமானிலும் பிறரிடத்தில் நாம் செய்து கொள்கின்றன ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளிலும் இவ்வாறு எல்லா விஷயங்களிலும் உண்மையாக இருக்க வேண்டும். அது தான் நன்மையின் பக்கம்  சேர்த்து வைத்து நம்மை சுவனத்திற்கு கொண்டு செல்லும். அல்லாஹ் திருமறையிலே

ياايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் உண்மையாளர்களோடு நீங்கள் இருங்கள் என்று கூறுகிறான்.

யார் பேச்சிலும் மற்ற எல்லா விஷயங்களிலும் உண்மையாக இருக்கிறாரோ அவரை இறைவன் சித்திக்காக எழுதுகிறான். சித்தீக் என்பது மிக உயர்ந்த படித்தரங்களி ஒன்றாகும். அல்லாஹ் திருமறையில் ஒரு இடத்தில்

ومن يطع الله والرسول فأولئك مع الذين انعم الله عليهم من النبيين والدقين والشهداء والصالحين

அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் யார் கீழ்படிந்து நடக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள் சித்தீகீன்கள் ஷஹீதுகள் நல்லவர்களோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் : 4 ; 69)

போர்க்களத்திலே கலந்து கொண்டு எதிரியால் வீழ்த்தப்பட்டு வீர மரணம் அடைபவருக்கான அந்தஸ்து என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த அந்தஸ்தை இறைவனிடத்தில் நபிமார்கள் கேட்டிருக்கிறார்கள். நபித்தோழர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஷஹீதுடைய அந்தஸ்தை விட மேலானதும் உயர்ந்ததும் சித்தீக் என்ற அந்தஸ்தாகும். அந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா நபிமார்களுக்கு அடுத்தபடியாக சித்தீகீன்களை குறிப்பிடுகிறான். அப்படியென்றால் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தில் இருப்பவர்கள் சித்தீகீன்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. யார் எப்போதும் எந்நேரத்திலும் உண்மையை மட்டுமே பேசுகிறார்களோ அவர்களுக்கு அந்த அந்தஸ்தை தருவதாக நபி ஸல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதேபோன்று பொய் என்பது தீமையின் பக்கம் கொண்டு போகும். அது ஒரு மனிதனை நரகத்திற்கு அழைத்துச் சென்று விடும் என்று குறிப்பிட்டார்கள்.

இன்றைக்கு நாம் வாழ்க்கையில் பொய் என்பது மிக சர்வ சாதாரணமாக ஆகிப்போனது. அது தவறு, அது மார்க்கம் தடுத்த விஷயம் என்று உணர்ந்து கொள்ளாமல், அந்த உணர்வு கூட இல்லாமல் மிகவும் சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் அவரை அல்லாஹுத்தஆலா பொய்யர் என்று பதிவு செய்து விடுகிறான்.

மனிதர்களின் உள்ளத்திலும் அவர் பொய்யர் என்பதை அல்லாஹ் பதிவு செய்து விடுகிறான் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது நிச்சயமாக.

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அலை அவர்களை அழைத்து நான் இந்த அடியார நேசிக்கிறேன். நீங்களும் நேசம் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அவர்கள் வானத்தில் உள்ள மற்ற மலக்குமார்களை அழைத்து அவ்வாறு சொல்கிறார்கள். அதன் பிறகு அவரைப் பற்றிய அங்கீகாரத்தை அல்லாஹ் மனித உள்ளங்களில் போட்டு விடுகிறான். ஒருவரை வெறுத்து விட்டால் ஜிப்ரயீல் அலை அவர்களை அழைத்து நான் இந்த அடியானை வெறுத்து விட்டேன். நீங்களும் வெறுத்து விடுங்கள் என்று கூறுகிறான். அவர்கள் மற்றவர்களை அழைத்து அவ்வாறு சொல்கிறார்கள். பிறகு அவரைப் பற்றிய வெறுப்புணர்வை மனித உள்ளங்களில் அல்லாஹ் போட்டு விடுகிறான்.

இந்த இரண்டு நபி மொழியையும் அடிப்படையாகக் கொண்டு யார் பொய் சொல்வதை வழமையாகக் கொள்கிறாரோ அவர் பொய்யர் என்கின்ற உணர்வை மனிதர்களின் உள்ளத்திலே அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான். எனவே அதற்குப் பிறகு அவர் உண்மையை சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். அது பொய்யென்று தான் எடுத்துக் கொள்வார்கள்.

பொய் என்பது அந்தநேரத்தில் அதைக்கொண்டு நாம் தப்பித்துக் கொண்டாலும் அதற்குப் பிறகு நம் நிம்மதி பறிபோய் விடும். இறைவனிடத்திலும் மாட்டிக் கொள்வோம். உண்மையைப் பேசி விட்டால் அது அந்த நேரத்தில் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அதற்குப் பிறகு நிம்மதியோடு இருந்து கொள்ளலாம். இறைவனிடத்திலும் தப்பித்துக் கொள்ளலாம்.

 

தபூக் போர் காலத்தின்போது ஒரு குறிப்பிட்ட மூன்று நபித்தோழர்கள் தக்க காரணமின்றி அதிலே கலந்து கொள்ளாமல் இருந்து விடுவார்கள். போர் முடிந்த பிறகு முனாஃபிக்குகள் பொய் காரணங்களைச் சொல்லி நபியிடத்தில் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மூன்று நபித்தோழர்களும் உண்மையைச் சொல்லி அதன் மூலம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஆனால் பின்பு பொய் சொல்லி தப்பித்துக் கொண்ட அந்த முனாஃபிக்குகளை எச்சரித்தும் உண்மையைச் சொல்லி சோதனைக் குள்ளாக்கப்பட்ட அந்த நபித்தோழர்களைகளை வாழ்த்தியும் அல்லாஹுத்தஆலா வசனங்களை இறக்கி வைத்தான்.

No comments:

Post a Comment