அல்லாஹுத்தஆலா மனித சமூகத்திற்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று ஆரோக்கியம்.
நோயில்லாத சுகமான வாழ்க்கை. மனித வாழ்வில் ஆரோக்கியம் எந்தளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆரோக்கியம் தான் ஒரு மனிதனின் மூலதனம். அஸ்திவாரமின்றி ஒரு கட்டிடம் எப்படி எழுந்து நிற்க முடியாதோ அதேபோல் ஆரோக்கிய மின்றி ஒரு மனிதனால் எந்த காரியத்தை செய்ய முடியாது. எதையும் சாதிக்க முடியாது. ஆரோக்கியமின்றி கல்வியில்லை. ஆரோக்கிய மின்றி தொழில் இல்லை, ஆரோக்கியமின்றி பொருளாதாரம் இல்லை, ஆரோக்கியமின்றி நிம்மதி இல்லை. ஆரோக்கியமின்றி எதுவும் இல்லை. தொழுகை நோன்பு ஹஜ் போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஆரோக்கியம் அவசியம்.நோய்களும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து
விட்ட இந்த காலத்தில் சிறு நோக்காடு வந்தாலும் நாம் பதறி விடுகிறோம். எனவே தான் சுகவீனம்
கண்டு விட்டால் மருத்துவம் பார்ப்பதற்கு எத்தனை இலட்சங்கள் செலவு செய்வதற்கும்
நாம் தாயாராக இருக்கிறோம். ஆனால் உண்மையில் மருத்துவம் என்பது நாம் நினைப்பது
போன்று நோய் வந்த பிறகு அந்த நோயைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல.
நோய் வராமல் தடுப்பதும், இருக்கிற ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் தான் உண்மையான
மருத்துவம்.
«إنَّ قواعد طب الأبدان ثلاثة: حفظ الصحة، والحمية
عن المؤذي، واستفراغ المواد الفاسدة
மருத்துவத்தின் மூலக்கூறுகள் என்பது ஆரோக்கியத்தைப்
பாதுகாத்தல், பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்,
அழிவைத் தரும் அடிப்படையை விட்டும் விலகி இருத்தல் இம்மூன்றுமாகும்.
எனவே நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட
நோய் வராமல் பாதுகாப்பதும் கவனமாக இருப்பதும் தான் முக்கியம். அது தான் புத்திசாலித்தனம்.
இஸ்லாம் அதைத்தான் நமக்கு போதிக்கிறது.
فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ
عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ
உங்களில் ஒருவர் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ
இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு
நோற்றுவி)டவும். அல்குர்ஆன் (2 ; 184)
وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ
اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ
تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ
ஆகவே, நீங்கள் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக்கழித்தோ, பெண்ணைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (சுத்தம் செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்
கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப்
பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும் கைகளையும்
துடைத்து "தயம்மும்" செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 4:43)
ரமலானில் நோன்பு வைப்பதை கடமையாக்கியிருக்கிய மார்க்கம்
பயணிகளுக்கு நோன்பை விட்டுக் கொள்ள அனுமதியளிக்கிறது. தொழுகைக்காக ஒழு செய்வதை கடமையாக்கிய
மார்க்கம் நோய் வந்து விட்டாலோ அல்லது நோய் வந்து விடும் என்றோ நோய் அதிகமாகி விட்டும்
என்றோ அச்சம் இருந்தால் ஒழு செய்யாமல் தயம்மும் செய்ய அனுமதியளிக்கிறது. ஐவேளைத் தொழுகைகளில்
நின்று தொழுவதை கடமையாக்கிய மார்க்கம் முடியாதவனுக்கு உட்கார்ந்து தொழுவதை அனுமதியளித்திருக்கிறது.இதுவெல்லாம்
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு இஸ்லாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.
பொதுவாக மார்க்கம் ஒரு பிரச்சனைக்கும் ஒரு இடையூறுக்கும்
தீர்வை சொல்லும் அதே நேரம் அந்த பிரச்சனையும் இடையூறும் வராமல் தடுப்பதற்கான வழிகாட்டு
நெறிமுறைகளையும் வழங்கும். விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனையை சுட்டிக்காட்டும்
மார்க்கம் விபச்சாரம் நிகழாமல் தடுக்கும் வழிமுறைகளை நிறைவாகவே சொல்லியிருக்கிறது.
திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று சொன்ன மார்க்கம் ஒருவனை திருடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
என்றும் சொல்லியிருக்கிறது. தலாக் நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்ட
மார்க்கத்தில் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படாமல் வாழ்க்கை இனிக்கவும் வழிகாட்டுதல்
இருக்கிறது. அதேபோன்று நோயுற்றால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்கான
வழிகாட்டுதல் இஸ்லாத்தில் இருப்பதைப் போன்றே நோய் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு
நடவடிக்கை களும் இஸ்லாத்தில் உண்டு.
பொதுவாகவே அனைத்து விஷயங்களில் ஒரு முஸ்லிம்
கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி நபி ﷺ
அவர்கள் கற்றுத் தந்தார்கள்.
أَطْفِئُوا المَصابِيحَ باللَّيْلِ إذا
رَقَدْتُمْ، وغَلِّقُوا الأبْوابَ، وأَوْكُوا الأسْقِيَةَ، وخَمِّرُوا الطَّعامَ والشَّرابَ
- قالَ هَمَّامٌ: وأَحْسِبُهُ قالَ - ولو بعُودٍ يَعْرُضُهُ.
நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும்
பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள்.
அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி ﷺ
அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
(புகாரி ; 6296)
لا صلاة بحضرة الطعام، ولا وهو يدافعه الأخبثان
உணவுக்கு முந்நிலையிலும் மல ஜலத்தை அடைக்கிக்
கொண்ட நிலையிலும் தொழுகை என்பது இல்லை. (முஸ்லிம் ; 560)
قال ابن القيم رحمه الله: «والأشياء التي
يؤذي انحباسُها ومُدافعتها عشرة: الدم إذا هاج، والمني إذا تبيَّغ، والبول والغائط
والريح والقيء والعطاس والنوم والجوع والعطش
அல்லாமா இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள் ; அடக்கி வைப்பதால்
ஆபத்து ஏற்படும் விஷயங்கள் பத்து. வேகமாக வரும் இரத்தம்,வெளியாகத்துடிக்கும் இந்தியத்துளி,மல ஜலம்,காற்று,வாந்தி,
தும்மல்,தூக்கம்,பசி,தாகம். (ஜாதுல் மஆத் : பக்கம் ; 589)
درهم وقاية خير من قنطار علاج
நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதற்கு லட்சம்
லட்சமாக செலவழிப்பதை விட நோய் வராமல் தடுக்க ஒரு ரூபாய் செலவழிப்பது மேலானது என்று
கூறுவார்கள். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.
எனவே நோய் வந்தால் சிகிச்சை அளிப்பது இரண்டாவது
விஷயம், முதலில் நோய் வராமல்
நம்மைப் பாதுகாக்க வேண்டும். அந்த பாதுகாப்பு நடவடிக்கையைத்தான் இஸ்லாம் நமக்கு ஆரம்பமாக கற்றுத் தருகிறது.
ان رجلا اتي الني صلَّى اللهُ عليهِ وسلَّمَ
فقال يا رسولَ اللهِ أرأيتَ رُقىً نسترْقيها ودواءً نتداوى به وتقاةً نتقِيها هل تردُّ
من قدرِ اللهِ شيئًا قال هي منْ قدرِ اللهِ
ஒரு மனிதர் நபியிடம் வந்து நாங்கள் ஓதிப் பார்க்கிறோம்.மருந்திட்டுக்
கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். இவைகளைப் பற்றி நீங்கள் நினைப்பது
என்ன ? இவைகள் அல்லாஹ்வின்
விதியிலிருந்து எதையும் தடுக்குமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ﷺ
அவர்கள் அவ்வாறு
செய்வதும் அல்லாஹ்வின் விதியில் உள்ளது தான் என்றார்கள். (திர்மிதி : 2148)
பொதுவாக நோய்கள் சம்பந்தமாக நாம் மேற்கொள்கிற நடவடிக்கைகள்
இந்த மூன்றும் தான். 1 வது, குர்ஆன் ஹதீஸில் வந்திருக்கிற துஆக்களை வைத்து ஓதிப்பார்க்கிற
ஆன்மீக சிகிச்சை. 2 வது, ஊசி போடுவது, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது போன்ற உலகியல்
ரீதியான சிகிச்சை. 3 வது, நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிற பாதுகாப்பு வழிமுறைகள்.
இதுவெல்லாம் அல்லாஹ்வின் களா கத்ருக்கு எதிரானதா? அல்லாஹ் நாடினால் நோய் வரும், அல்லாஹ் நாடினால் குணமாகும். யாருடைய வீதியில் எப்போது
நோய் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அவருக்கு அப்போது நோய் வரும். எனவே எல்லாம்
விதியின் படி நடக்கிற போது நோயை குணப்படுத்துவதற்கும் நோய் வராமல் நம்மை பாதுகாப்பதற்கும்
நாம் மேற்கொள்கிற நடவடிக்கைகள் அல்லாஹ் விதிக்கு எதிரான விஷயமா? என்று கேட்டார். நபி ﷺ-
அவர்கள் அதுவும் அல்லாஹ்வின் விதியில் கட்டுப்பட்டது தான் என்று கூறினார்கள்.அதாவது
நோய் வர வேண்டும் என்பது எப்படி விதியில் இருக்கிறதோ அதே போல் மருந்து சாப்பிட்டால்,
ஓதிப்பார்த்தால் நோய் குணமாகும்
என்பதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்காண்டால் நோய் வராது என்பதும் விதியில் தான்
இருக்கிறது என்று கூறினார்கள்.
எனவே நோய் வராமல் நம்மை பாதுகாப்பதில் மிகக்கவனமாக
இருக்க வேண்டும்.
كان في وفد ثقيف رجل مجذوم، فأرسل إليه
النبي -صلى الله عليه وسلم-: "إنا قد بايعناك فارجع
ஸகீஃப் என்ற கோத்திரத்தில் குஷ்ட நோயுள்ள ஒருவர்
இருந்தார். நபி ﷺ
அவர்கள் அவரிடத்தில் நிச்சயமாக
நான் உன்னிடம் பைஅத் செய்து விட்டேன். நீ திரும்பிச் செல் என்று சொல்லி அனுப்பினார்கள்.
(முஸ்லிம் : 2231)
சாதாரணமாக ஒருவருடன் நபியவர்கள் பைஅத் செய்வதாக
இருந்தால் அவரை அருகில் அமர வைத்து அவரது கையைப் பிடித்து பைஅத் செய்வார்கள். ஆனால்
அவர் நோயுடையவர் என்ற காரணத்தினால் அவரை அருகில் அமர வைக்காமல் அவரது கையைப் பிடிக்காமல்
தூரத்திலிருந்தே பைஅத் செய்து விட்டேன் என்று கூறி விட்டார்கள். எல்லாம் இறைவன் கையில்
தான் இருக்கிறது. நடப்பவை அனைத்தும் இறை நாட்டப்படி தான் நடக்கிறது. நோயைத் தருவதும்
அவன் தான், நோயைக் குணமளிப்பவனும்
அவன் தான் என்று உலகிற்கு உரக்கச் சொல்லியிருந்தாலும் நோய் நெருங்காமல் ஒருவர் தன்னைத்
தற்காத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நபி ﷺ
அவர்கள் இதன் மூலம்
சமூகத்திற்கு உணர்த்துகிறார்கள்.
اينما ما تكونوا يدرككم الموت ولو كنتم
في بروج مشيدة
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்தடையும்.
பலமிக்க கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே (4 ; 78) என்று சொன்ன அல்லாஹ் தான்,
ولا تلقوا بايديكم الي التهلكة
உங்கள் கரங்களை அழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள் (2 ; 195( என்றும் சொல்கிறான்.
நமக்கு நாமே அழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
ஒரு இடத்தில் ஒரு ஆபத்து என்றால் அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. ஒரு காரியத்தை செய்தால்
நோய் வந்து விடும் என்றால் அந்த காரியத்தை செய்யக்கூடாது. இதுவெல்லாம் அல்லாஹ்வின்
விதிக்கு மாற்றமான விஷயங்களல்ல என்பதைத்தான் நபியின் செயல்கள் நமக்கு உணர்த்துகிறது.
أنَّ عُمَرَ بنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ
عنْه، خَرَجَ إلى الشَّأْمِ، حتَّى إذَا كانَ بسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الأجْنَادِ،
أبُوعُبَيْدَةَ بنُ الجَرَّاحِ وأَصْحَابُهُ، فأخْبَرُوهُ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ
بأَرْضِ الشَّأْمِ. قَالَ ابنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لي المُهَاجِرِينَ
الأوَّلِينَ، فَدَعَاهُمْ فَاسْتَشَارَهُمْ، وأَخْبَرَهُمْ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ
بالشَّأْمِ، فَاخْتَلَفُوا، فَقَالَ بَعْضُهُمْ: قدْ خَرَجْتَ لأمْرٍ، ولَا نَرَى أنْ
تَرْجِعَ عنْه، وقَالَ بَعْضُهُمْ: معكَ بَقِيَّةُ النَّاسِ وأَصْحَابُ رَسولِ اللَّهِ
صَلَّى اللهُ عليه وسلَّمَ، ولَا نَرَى أنْ تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَقَالَ:
ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُوا لي الأنْصَارَ، فَدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ،
فَسَلَكُوا سَبِيلَ المُهَاجِرِينَ، واخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا
عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لي مَن كانَ هَا هُنَا مِن مَشْيَخَةِ قُرَيْشٍ مِن مُهَاجِرَةِ
الفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ منهمْ عليه رَجُلَانِ، فَقالوا: نَرَى
أنْ تَرْجِعَ بالنَّاسِ ولَا تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَنَادَى عُمَرُ في
النَّاسِ: إنِّي مُصَبِّحٌ علَى ظَهْرٍ فأصْبِحُوا عليه. قَالَ أبُوعُبَيْدَةَ بنُ
الجَرَّاحِ: أفِرَارًا مِن قَدَرِ اللَّهِ؟ فَقَالَ عُمَرُ: لو غَيْرُكَ قَالَهَا يا
أبَا عُبَيْدَةَ؟ نَعَمْ نَفِرُّ مِن قَدَرِ اللَّهِ إلى قَدَرِ اللَّهِ، أرَأَيْتَ
لو كانَ لكَ إبِلٌ هَبَطَتْ وادِيًا له عُدْوَتَانِ، إحْدَاهُما خَصِبَةٌ، والأُخْرَى
جَدْبَةٌ، أليسَ إنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ، وإنْ رَعَيْتَ
الجَدْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ؟ قَالَ: فَجَاءَ عبدُ الرَّحْمَنِ بنُ عَوْفٍ
- وكانَ مُتَغَيِّبًا في بَعْضِ حَاجَتِهِ - فَقَالَ: إنَّ عِندِي في هذا عِلْمًا،
سَمِعْتُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ: إذَا سَمِعْتُمْ به بأَرْضٍ
فلا تَقْدَمُوا عليه، وإذَا وقَعَ بأَرْضٍ وأَنْتُمْ بهَا فلا تَخْرُجُوا فِرَارًا
منه قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ
உமர் இப்னு கத்தாப் (ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின்
நிலையை ஆராய்வதற்காக) ப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்த போது (மாகாண) படைத் தளபதிகளான
அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச்
சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர்
(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை
என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம்
ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்று விடலாமா?
என்று) ஆலோசனை கேட்டார்கள்.
இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம்.
அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர்.
அவர்களை யெல்லாம் இந்தக் கொள்ளை நோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருத வில்லை'
என்று கூறினார்கள்.
அப்போது உமர்
(ரலி), 'நீங்கள் போகலாம்'
என்று சொல்லி விட்டுப் பிறகு,
'என்னிடம் (மதீனாவாசிகளான)
அன்சாரிகளை அழைத்து வாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர் (ரலி) ஆலோசனை கலந்தார்கள்.
அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.
அப்போதும் உமர் (ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டுப் பிறகு, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு)
ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்'
என்று சொல்ல நான் அவர்களை
அழைத்து வந்தேன். அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்),
'மக்களுடன் நீங்கள் திரும்பி
விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை
நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர்.
எனவே, உமர் (ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்பட
இருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில்
புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள்.
அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து விரண்டோடுவதற்காகவா
(ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க,
உமர் (ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால்
நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு
விதியின் பக்கமே விரண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும்
உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி விட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின்
விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும்
அல்லாஹ்வின் விதிப்படி தான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?' என்று கேட்டார்கள்.
அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்
ﷺ
அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால்
அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை
நோய் பரவினால் அதிலிருந்து விரண்டோடுவதற்காக (அவ்வூரை விட்டு) வெளியேறாதீர்கள்'
என்று சொல்ல கேட்டேன்'
என்று கூறினார்கள்.
உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபி ﷺ
அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே
அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (புகாரி
: 5729)
இந்த ஹதீஸில், ஒரு ஊரில் நோய்த் தொற்று இருந்தால் அங்கிருப்பவர்கள்
அந்த ஊரிலிருந்து வெளியேறக்கூடாது என்று சொல்லப்பட்டதற்கு காரணம், அவர்களால் அந்த தொற்று மற்றவர்களுக்கும் பாதிப்பை
ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக. நோய் தொற்று இருக்கிற ஊருக்கு மற்றவர்கள் செல்ல
வேண்டாம் என்று சொல்லப்பட்டதற்கு காரணம் அந்த
தொற்றால் அவர்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
எனவே நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிற, நோய்கள் நம்மை நெருங்காமல் நம்மைத் தற்காத்துக்
கொள்கிற நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பருவ நிலை மாற்றங்களால் தமிழகத்தில் தற்போது பல
மாவட்டங்களில் மக்கள் காய்ச்சல், வைரஸ் நோய்களால்
அதிக அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மருத்துவமனைகளும்
நோயாளிகளைக் கொண்டு நிரம்பி வழிகின்றன. குறிப்பாக
குழந்தைகள் முதியவர்கள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்.ஒரு பகுதியிலுள்ள
ஒரு மருத்துவமனையில் ஒரே நாளில் 100 கும் அதிகமாக குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்
கள்.
நோய்நொடிகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய
இந்த நேரத்தில் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். நம் குழந்தைகளை அதிக
கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும்.உடல் நலத்தை கெடுக்கும் எந்தப் பொருளையும்
நம் பிள்ளைகளுக்கு கொடுத்து விடக்கூடாது. அத்தோடு நோய் வராமல் தடுக்கின்ற
பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சிறுவர்கள், குழந்தைகளை பாதுகாப்பது குறித்து நபி ﷺ
அவர்கள் கூறினார்கள்.
إذا كان جنح الليل أو أمسيتم فكُفُّوا صبيانكم
فإنَّ الشياطين تنتشر حينئذ، فإذا ذهب ساعةٌ من الليل فحُلُّوهم، فأغلقوا الأبواب واذكروا
اسم الله فإن الشيطان لا يفتح بابًا مغلقًا، وأوكوا قُرَبكم واذكروا اسم الله، وخمِّروا
آنيتكم واذكروا اسم الله ولو أن تعرضوا عليها شيئًا، وأطفئوا مصابيحكم
இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது
அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில் ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம்
கழிந்து விட்டால் அவர்களை விட்டு விடுங்கள். மேலும் கதவை தாழிட்டுக் கொள்ளுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை.உங்கள்
தண்ணீர் பையினை சுருக்கிட்டு மூடி விடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்கள்
பாத்திரங்களை மூடி வைய்யுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின்
பெயரைச் சொல்லுங்கள். அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தாவது மூடி விடுங்கள்.
உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள். (புகாரி ; 5623)
குழந்தைகள் அல்லாஹ் நமக்களித்த மாபெரும்
பொக்கிஷங்கள். நம் துக்கங்கள் மறைந்து நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணிகள். எனவே
அவர்களை மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அனைத்துப் பெற்றோர்களுக்கும்
உண்டு. அல்லாஹ் நம் குழந்தைகளைப் பாதுகாப்பானாக!
மிகவும் அருமையான பதிவு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்கள் கல்வி ஞானத்தில் மேன்மேலும் பரக்கத் செய்வானாக!!!
ReplyDeleteஆமீன்
Deleteபாரகல்லாஹ்....! மௌலானா
ReplyDeleteஅருமை ஹஜ்ரத்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்.... ஜஸாகல்லாஹு ஃகைரா
ReplyDeleteமிகவும் பயனுள்ள குறிப்புகள் மாஷா அல்லாஹ் தங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக வாராவாரம் தங்களின் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteجزا ك الله خيرا في الدارين
ReplyDeleteA azzallahu qatrakum wa rafa a makamakum
ReplyDeleteماشاء الله
ReplyDeleteவாழ்த்துக்கள் 💐 ஜஸாகல்லாஹூ கைரா ஹஜ்ரத்.
ReplyDeleteஅருமையான பதிவு மாஷா அல்லாஹ்
ReplyDelete