Thursday, April 6, 2023

அவதூறு

 

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்:24:4.)

ஒருவருடைய மானம் புனிதமானது என்று கூறுகிறது இஸ்லாம்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ - أَوْ بِزِمَامِهِ - قَالَ : " أَيُّ يَوْمٍ هَذَا ؟ " فَسَكَتْنَا، حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ، قَالَ : " أَلَيْسَ يَوْمَ النَّحْرِ ؟ " قُلْنَا : بَلَى، قَالَ : " فَأَيُّ شَهْرٍ هَذَا ؟ " فَسَكَتْنَا، حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ : " أَلَيْسَ بِذِي الْحِجَّةِ ؟ " قُلْنَا : بَلَى، قَالَ : " فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ ".

(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்என்றோம்.  அடுத்து இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள்.

நாங்கள் ஆம்என்றோம். நபி அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறி விட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்என்றார்கள்.  (புகாரி-67)

இஸ்லாம் தடை செய்துள்ள பல்வேறு தீமையின் அம்சங்களில் அவதூறும் ஒன்று, இந்த அவதூறானது இஸ்லாத்தை அழிப்பதற்காக எதிரிகள் கையிலெடுக்கும் ஆயுதம்.  நபிமார்கள் சத்தியத்தை எதுத்துரைக்கும் போது பல்வேறு விதங்களில் எதிரிகள் எதிர்த்தார்கள். அவதூறு சொற்களால் வசைபாடினார்கள், அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை (அல்குர்ஆன்:51:52.)

இஸ்லாம் பிறர் மானம் காப்பதை மிகவும் வலியுறுத்தி கூறுகிறது.  ஒரு முஸ்லிம் பிறர் மான விவகாரத்தில் தலையிட்டு அவனது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபவதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ". قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُنَّ ؟ قَالَ : " الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ ".

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று நபி அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)என்று (பதில்) கூறினார்கள். (புகாரி ; 2766)

இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது. பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது. உறுதி செய்யப்படாத யூகங்கள் அனைத்தும் பொய்யே என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِيَّاكُمْ وَالظَّنَّ ؛ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلَا تَحَسَّسُوا ، وَلَا تَجَسَّسُوا، وَلَا تَحَاسَدُوا، وَلَا تَدَابَرُوا ، وَلَا تَبَاغَضُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.  (புகாரி ; 6064)

உறுதி செய்யப்படாத எத்தனையோ செய்திகளை, தங்களுக்குப் பிடிக்காதவர்கள் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதை மக்களிடையே பரப்பிடும் சீர்கெட்ட கலாச்சாரம் இக்காலகட்டத்தில் மலிந்து விட்டது. ஒரு காலத்தில் ஒருவர் மீது அவதூறு சொல்வதாக இருந்தால் நான்கு பேருக்கு மத்தியில் மட்டும் பேசிக் கொள்ளும் நிலையில் இருந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. இருக்கவே இருக்கிறது பேஸ்புக், ட்விட்டர் போன்ற நவீன இணைய ஊடகங்கள்.

யாரும் எவர் மீதும் எதையும் ஆதாரமின்றி எழுதலாம், அதை ஆயிரக்கணக்கான மக்களிடையே பரப்பலாம். வாயளவில் பேசிக் கொள்ளும் காலத்தில் அந்தச் சபையோடு அவதூறு முடிவு பெறும் என்று இருந்த நிலை மாறி, நவீன ஊடகங்களோ காலம் முழுக்க அந்த அவதூறை அழியாமல் தாங்கி, பாதுகாத்துக் கொள்ளும் சூழல் தற்போது உள்ளது. ஒருவர் பரப்பிய அவதூறு ஓராயிரம் பேருக்கும் ஓராயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரையிலும் என வரைமுறை யற்ற வகையில் அவதூறு பரவிடும் காலம் இது.

மனிதன் ஆதிகாலம் முதலே ஒரு நபரைப் பற்றி இன்னொருவருடன் புறம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அது பிற்காலத்தில் திண்ணைப் பேச்சாகவும் வடிவம் பெற்றது. இப்படித்தான் ஒரு நபரைப் பற்றிய செய்திகள் ஊர் முழுவதும் பரவத் தொடங்கின. தற்போதுள்ள ஸ்மார்ட்போன் யுகத்தில் பிறரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும், அவதூறு பரப்புவதற்கும் சமூக வலைதளங்கள் இன்னும் நல்ல வாய்ப்பை அமைத்துத் தந்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கத்தில் மக்கள் செய்திகளையும் உணர்வுகளையும் பிறருடன் பரிமாறுவதற்கே பெரும்பாலும் அதைப் பயன்படுத்தினர். ஆனால், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் போலி தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பத் தொடங்கினர். உண்மையான செய்திகளைவிட, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் போலித் தகவல்களை மக்கள் அதிகம் நம்புகின்றனர்.

சைபர் சட்டப்பிரிவு வழக்கறிஞரான சத்திய நாராயணன் கூறுகிறார்.

``ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவர் மீதான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்புவது என்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு எதிரான நடவடிக்கையை இரண்டு விதமாக எடுக்கலாம். முதலாவதாக அவதூறைப் பரப்பியவர் மீதான சட்டப்படி நடவடிக்கை. இவர் மீது இந்தியச் சட்டப் பிரிவு 469-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டமானது ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அவதூறு பரப்பியவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை.

இரண்டாவதாக எந்த ஊடகத்தின் (சமூக வலைதளம்) வாயிலாக அல்லது சேவை வழங்குநரின் மூலமாக அவதூறு பரப்பப்பட்டதோ அதிலிருந்து அந்த கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்கலாம். இதில் வெளியீட்டு ஊடகங்களுக்கு (சமூக வலைதளம்) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ல் பிரிவு 79-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இவர்கள் மத்திய அரசாங்கம் வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், அரசின் சார்பில் போலியான அவதூறு நிரூபிக்கப்பட்டால் அதை உடனடியாக தங்களது வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِين.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 49:6)

இந்த வசனம் இறங்கியதன் பின்னணி

ﻗﻴﻞ: ﺇﻥ ﻫﺬﻩ اﻵﻳﺔ ﻧﺰﻟﺖ ﻓﻲ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻌﻴﻂ. ﻭﺳﺒﺐ ﺫﻟﻚ ﻣﺎ ﺭﻭاﻩ ﺳﻌﻴﺪ ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻌﺚ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﻘﺒﺔ ﻣﺼﺪﻗﺎ»ﺇﻟﻰ ﺑﻨﻲ اﻟﻤﺼﻄﻠﻖ، ﻓﻠﻤﺎ ﺃﺑﺼﺮﻭﻩ ﺃﻗﺒﻠﻮا ﻧﺤﻮﻩ ﻓﻬﺎﺑﻬﻢ- ﻓﻲ ﺭﻭاﻳﺔ: ﻹﺣﻨﺔ ﻛﺎﻧﺖ ﺑﻴﻨﻪ ﻭﺑﻴﻨﻬﻢ-، ﻓﺮﺟﻊ ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ ﺃﻧﻬﻢ ﻗﺪ اﺭﺗﺪﻭا ﻋﻦ اﻹﺳﻼﻡ. ﻓﺒﻌﺚ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺎﻟﺪ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﻭﺃﻣﺮﻩ ﺃﻥ ﻳﺘﺜﺒﺖ ﻭﻻ ﻳﻌﺠﻞ، ﻓﺎﻧﻄﻠﻖ ﺧﺎﻟﺪ ﺣﺘﻰ ﺃﺗﺎﻫﻢ ﻟﻴﻼ، ﻓﺒﻌﺚ ﻋﻴﻮﻧﻪ ﻓﻠﻤﺎ ﺟﺎءﻭا ﺃﺧﺒﺮﻭا ﺧﺎﻟﺪا ﺃﻧﻬﻢ ﻣﺘﻤﺴﻜﻮﻥ ﺑﺎﻹﺳﻼﻡ، ﻭﺳﻤﻌﻮا ﺃﺫاﻧﻬﻢ ﻭﺻﻼﺗﻬﻢ، ﻓﻠﻤﺎ ﺃﺻﺒﺤﻮا ﺃﺗﺎﻫﻢ ﺧﺎﻟﺪ ﻭﺭﺃﻯ ﺻﺤﺔ ﻣﺎ ﺫﻛﺮﻭﻩ، ﻓﻌﺎﺩ ﺇﻟﻰ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺒﺮﻩ، ﻓﻨﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ، ﻓﻜﺎﻥ ﻳﻘﻮﻝ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﺘﺄﻧﻲ ﻣﻦ اﻟﻠﻪ ﻭاﻟﻌﺠﻠﺔ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ. (تفسير ابن كثير)

வலீது பின் உக்பா ரலி என்பவரை நபி அவர்கள் ஜகாத்தை வசூல் செய்வதற்காக பனூ முஸ்தலக் கோத்திரத்தாரிடம் அனுப்பினார்கள். பனூ முஸ்தலக் கோத்திரத்தாருக்கும் இவருக்கும் மத்தியில் இஸ்லாத்திற்கு முன்னுள்ள கொலை சம்பந்தமான ஒரு பகை இருந்தது. இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய பிறகு அந்தப் பகை நீங்கி விட்டது. ஆயினும், இவருக்கு மனதுக்குள் பீதியோ பகையோ இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் கோத்திரத்தார் இதனை ஞாபகத்தில் வைக்காமல் மறந்து விட்டனர். ஜகாத் பணத்தை வசூல் செய்ய வருகிறார் என்பதை அவர்கள் அறிந்து, வாகனங்களுடனும் அவர்களை வரவேற்க கூட்டமாக வந்தார்கள்.

தம்மைக் கொல்லத்தான் வருகிறார்கள் என இவர் எண்ணி, பீதி அடைந்து திரும்பி ஓடி வந்து விட்டார். குற்றமுள்ள நெஞ்சு அல்லவா? என்றாலும் நபி அவர்களிடம் திரும்பி வந்து உண்மையைக் கூறாமல், அவர்கள் மதம் மாறி விட்டார்கள்.  ஜகாத்தை கொடுக்க மறுத்து விட்டார்கள். என்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள் என்று தகவல் கொடுத்தார். எனவே அவர்களுடன் போரிட வேண்டுமென நாடினார்கள். அச்சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டது.

நபி அவர்கள் உடனே போர் தொடுக்காமல், காலித் பின் வலீது ரலி அவர்களின் தலைமையில் ஒரு படையை தயார் படுத்தினார்கள். படைகளுடன் செல்வதை அவர்கள் அறியா வண்ணம் இரவில் செல்ல வேண்டும். இஸ்லாமியப் பண்பாடுகள் இருந்தால் ஜகாத்தை வசூல் செய்து வர வேண்டும். அவர்களிடம் இஸ்லாமிய அடையாளம் இல்லாமல் இருந்தால் காஃபிர்களுடன் நடந்து கொள்வதைப் போன்று அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு அனுப்பினார்கள். நபி அவர்களின் கட்டளைப்படி மக்ரிப் நேரத்தில் சென்றனர். அவர்கள் மக்ரிலும் இஷாவிலும் பாங்கு சொல்வதைச் செவியேற்றனர். இறைவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்காரியங்களில் அவர்கள் முனைந்திருப்பதையும் கண்டனர். ஆகவே, அவர்களிடம் ஜகாத்தை வசூல் செய்து கொண்டு திரும்ப வந்து, நபி அவர்களிடம் விஷயத்தைக் கூறினார்கள். (இப்னு கஸீர்)

1 comment: